வெள்ளி, 9 அக்டோபர், 2015

பீகார் : நிதிஷ் கூட்டணி பெரும்பான்மை...கருத்துகணிப்பில்.. 137 இடங்களுடன் வெற்றி...

பீகார் சட்டசபைக்கு வரும் 12, 16, 28, நவம்பர் 1, 5-ந்தேதிகளில் 5 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பாரதீய ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. இதனால் பீகாரில் உள்ள 243 தொகுதிகளிலும் இரு அணிகளுக்கும் இடையில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 49 தொகுதிகளில் வரும் சனிக்கிழமையுடன் (10–ந் தேதி) பிரசாரம் நிறைவடையவுள்ளது. இதையடுத்து முதல் கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில் உச்சக்கட்ட பிரசாரம் நடந்து வருகிறது. இந்த நிலையில் பீகார் தேர்தல் யார் வெற்றி பெறுவார்கள் என்று தேர்தலுக்கு முன்பான கருத்துகணிப்புகள் வெளியாகியுள்ளன. இரண்டு பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் மேற்கொண்ட கருத்துகணிப்பில் தற்போதைய முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான  கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் தெரியவந்துள்ளது. இந்த ராகுல் பிரசாரத்துக்கு வராமல் இருந்தால் பிகாரில் இவர்கள் வெற்றி நிச்சயம்


தனிபெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வேண்டும் என்றால் 122 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. சிஎன்என், ஐபிஎன் / ஐ.பி.என்7 ஆய்வில் நிதிஷ் கூட்டணி 46 சதவீத வாக்குகளை பெற்று  137 இடங்களுடன் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.

அதேசமயம் இந்தியா டிவியின் தேர்தலுக்கு முந்தைய ஆய்வு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 119 இடங்களை பெறும் என்று கணித்துள்ளது. இந்த ஆய்வில் நிதிஷ் கூட்டணி 116 இடங்களை பெறும் என கூறப்பட்டுள்ளது. மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக