வெள்ளி, 9 அக்டோபர், 2015

கிரிஜா, திவ்வியா ! தமிழ் தொலைகாட்சி வரலாற்றிலேயே மிகவும் தைரியமான தொகுப்பாளினிகள்! அந்தரங்க டிவி...

சென்னை: இரவு 11 மணிக்கு மேல் டிவி சேனல்களை மாற்றிக்கொண்டே செல்வோர் இந்த இரு தொகுப்பாளினிகளை பார்க்காமல் கடந்து சென்றிருக்கவே முடியாது. கேப்டன் டிவியில் ஒளிபரப்பாகும் 'சமையல் மந்திரம்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கிரிஜஸ்ரீ மற்றும் திவ்யா ஆகிய இருவரும் தமிழகத்து இளசு முதல் பெருசுவரை ரொம்பவே ஃபேமஸ். ஆண்களே பேச யோசிப்பதையும், பச்சையாகவே பேசிவிடுவது.., கவர்ச்சி ஆடை.. என இவர்கள் இருவரிடமும் ஏதோ ஒரு ஈர்ப்பு இருப்பதால்தான், அந்த நிகழ்ச்சி டிஆர்பி ரேட்டிங்கில் சக்கைபோடு போடுகிறது. அதிலும், நிகழ்ச்சி முடிந்ததும், நேயர்களை பார்த்து திவ்யா கொடுக்கும் கிரக்கமான முத்தத்திற்காகவே, டிவி முன்பு போர்வையை போர்த்திக்கொண்டு 11.30 மணிவரை கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கிடப்போர் பலர்.

டாக்டர்கள் மாத்ருபூதம் மற்றும் ஷர்மிளா ஆகியோர் பல ஆண்டுகள் முன்பு, ஒரு சேனலில், பாலியல் கேள்வி-பதில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு நீண்டகாலமாக நிலவிய வெற்றிடத்தை தற்போது கிரிஜஸ்ரீயும், திவ்யாவும்தான் டாக்டர் ஒருவருடன் சேர்ந்து நிரப்பிவருகிறார்
டாக்டரான, ஷர்மிளாவே சர்ச்சைக்குள்ளான நிலையில், திருமணமாகாத இவ்விரு பெண்களும் எந்த மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் வீட்டில் இதற்கு என்ன சொல்கிறார்கள் என்பது போன்ற பல கேள்விகளுக்கு தமிழ் பத்திரிகையொன்றுக்கு இருவரும் பேட்டியொன்றில் பதில் அளித்துள்ளனர். முதலில் திவ்யா என்ன சொல்கிறார் என பார்க்கலாம்
திவ்யா கூறியுள்ளதாவது: இதுல கிடைச்ச ரீச், எனக்கு வேறு எதிலும் கிடைக்கவில்லை. இந்த நிகழ்ச்சி பணிக்காக முதலில் இணைந்தபோது, இது எனக்கு சரிபட்டுவராது, ஓடிவிடலாம் என்ற பிளானோடத்தான் வந்தேன். ஆனால் இப்போது பிரச்சினை இல்லை.
டபுள் மீனிங் டயலாக்குகள் பேசுவதெல்லாம், பிறரை பார்த்து கற்றுக்கொண்டதுதான். டான்ஸ் ஆட வேண்டுமென்றால் கற்பதில்லையா?, அதைப்போலத்தான், டபுள் மீனிங்கில் பேசுவதையும் கற்றுக்கொண்டேன். நிகழ்ச்சியை பார்த்ததும், எனது பெற்றோரும், தோழிகளும் எதிர்த்தனர்.
ஏன்டி, இந்த மாதிரி ஷோவெல்லாம் பண்ற.." என தோழிகள் கேட்டனர். "இந்த ஷோவை பண்ணிதான் சம்பாதிக்கனும் என்று அவசியம் இல்லை. வேணும்னா, சினிமா, சீரியலில் நடித்து சம்பாதித்துக்கொள்" என்று எனது பெற்றோர் கூறினர். ஆனால், நான் முழு திருப்தியோடுதான் செய்கிறேன்.
செக்ஸ் பண்ணாம யாருமே இந்த உலகத்திற்கு வந்திருக்க முடியாது. எனவே செக்ஸ் தப்பு கிடையாது. ஆனால் அதை தப்பான காரியத்துக்கு யூஸ் செய்வோருக்குதான் செக்ஸ் தப்பு. இந்த ஷோவில் தொகுப்பாளியாக சேர்ந்த புதிதில், வெளியில் பல கேலி, கிண்டலுக்கு ஆளானேன். பொது இடங்களில் என்னை பார்க்கும் சிலர், "என்ன மேடம் சூட்டிங் போகலியா.. 11 மணி ஆச்சே" என்று சொல்லி சிரிப்பார்கள்
என்னை பற்றி தப்பான அபிப்ராயம்தான் முதலில் நிறைய பேரிடம் இருந்தது. இதை பார்த்ததும், மனசு கஷ்டமா இருந்தது. தப்பான ஏதாவது காரியம் செய்துவிட்டோமா?, தப்பான நிகழ்ச்சியில், கமிட் ஆகிவிட்டோமா? என்றெல்லாம் நினைத்தேன். அதேநேரம், இந்த நிகழ்ச்சியை நடத்துவது, பர்சனலா எனக்கு தப்பா தெரியவில்லை.
அதை ஒரு ஷோவா பாருங்க. செக்ஸ் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். நாங்கள் அதை வெளிப்படையா பேசுறோம். வீட்ல யாரும் வெளிப்படையா பேசுவதில்லை. எனவே எல்லோரும் வெளிப்படையா பேசுங்க.
எனக்கு இப்போது, பெண்களும் நிறையபேர் ரசிகைகளாக உள்ளனர். என்னை அவர்கள், அக்கா, தங்கையாக நினைக்கிறார்கள். காமம் என்பது அனைவருக்குமே லிமிட்டாக இருக்கனும். எங்கள் ஷோவில், பேசும் பல ஆண் நேயர்கள், தங்களுக்கு கைப்பழக்கம் இருப்பதாக கூறி தீர்வுகளை கேட்கிறார்கள். காமம் அதிகமாக இருப்பதுதான் இதற்கு காரணம்.
காமம் என்பது, பார்ட் ஆப் லைப்பா இருக்கனும். வைப்கிட்ட மட்டும் ஆண்கள், ரொமான்டிக்கா இருந்தாபோதும். பிற பெண்களை, அக்கா, தங்கச்சி போல பார்க்க கற்றுக்கொள்ளனும். என்னைப்பொருத்தளவில் ஆடையில், கவர்ச்சி இருக்கலாம். ஆனால், ஆபாசமா போனா தப்புதான்
சன்னி லியோனின் ஸ்ட்ரக்சர் எனக்கு பிடிக்கும். ஷகிலாவிடம் நடிப்பு பிடிக்கும். நான் தமிழில் அவர் நடித்த படங்களை வைத்துதான் நடிப்பு பிடிக்கும் என்று சொல்கிறேன். மலையாளத்தில் அவர் நடித்ததை நான் பார்க்கவில்லை (சிரிப்பு). இவ்வாறு திவ்யா தெரிவித்துள்ளார். நீங்கள் கட்சி ஆரம்பித்தால் என்ன பெயர் வைப்பீர்கள் என்ற கேள்விக்கு, "நான் கட்சி ஆரம்பித்தால் இளைஞர்கள் 'எழுச்சி' கூட்டம் என்று பெயர் வைப்பேன்" என்கிறார் நமட்டு சிரிப்புடன்.
கிரிஜஸ்ரீ அளித்த பேட்டி விவரம்: பாலியல் நிகழ்ச்சி என்பது ஒரு டிஃபரன்ட் கான்செப்ட். என்னை நிரூபிக்கச் செய்ய அந்த நிகழ்ச்சியால் முடியும் என்பதால் அதில் பங்கேற்றேன். செக்ஸ் தப்பான விஷயமா என்ன?.. நிச்சயமா கிடையாதுல்ல. எல்லா ஆண்களும், பெண்களும் செக்சில் ஈடுபடுகிறார்கள். அதில் என்ன தப்பு இருக்கு? இது ஒரு விழிப்புணர்வுதானே..
எல்லாத்துலயும் மசாலா டபுள் மீனிங் வார்த்தைகள், எந்த சினிமாவுலையாவது இல்லையா. எல்லா விஷயத்திலும் இருக்கு. எங்கள் நிகழ்ச்சியிலும், மசாலாவை கலந்துதான் சொல்ல வேண்டியுள்ளது. அப்போதுதான் சில நல்ல விஷயங்கள் ரீச் ஆகுது.
நிகழ்ச்சியில் கமிட் ஆனபோது, என்னை சுற்றியிருந்த எல்லோருக்கும், பயம் இருந்தது. வருங்காலத்துல ஒரு லைப் இருக்கு. ஒரு பொண்ணு அதை யோசிக்க வேண்டும், கேர்ஃபுல் என்றெல்லாம் பிரண்ட்ஸ் அட்வைஸ் செய்தனர். ஷோவை பார்த்துவிட்டு, எனக்கு யாரென்று தெரியாதவர்கள் எல்லாம், தொடர்புகொண்டு, நல்ல எண்ணத்தில் எனக்கு அட்வைஸ் செய்தனர்.
அட்வைஸ் செய்த ரசிகர்களை பெற நான் அதிருஷ்டம் செய்திருக்க வேண்டும். ஆனால் நிகழ்ச்சியில், நாங்க கொடுக்கும் சொலியூசன் என்று ஒன்னு இருக்குல்ல.. அது பலருக்கும் பயன்படுவதால், இப்போதெல்லாம் அட்வைஸ் செய்வதை விட்டுவிட்டனர்.
செக்ஸ் என்பது முழுமையாக காதலுடன் தொடர்புடையது. எந்த உணர்ச்சியும், காதலும் இன்றி, ஒரு ஆணையோ, பெண்ணையோ தொடுவதற்கு பதிலாக மரத்துடன் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம். நிகழ்ச்சியை பார்த்துவிட்டு என்னிடம் தப்பா பேசுறவங்க இருக்கத்தான் செய்கிறார்கள். நல்லதுன்னா கெட்டதும் இருக்கும். எனவவே அது என்னை பாதிக்காது.
காமம் என்பதில் தப்பில்லை. ஆனால், இஷ்டமில்லாத பெண்ணிடம் போய் செருப்படி வாங்க கூடாது. நான் உடுத்தும் ஆடை கூட ஒரு சிலருக்கு தப்பா தெரியும். ஆனால் கவர்ச்சி என்பதெல்லாம் கண்ணில் உள்ளது. எனக்கு பெண் தோழிகள் ஒருவரும் இல்லை. சுத்தியும் ஆண்கள்தான். எல்லோரும் தங்கச்சியா பார்க்கும் தோழர்கள். சன்னிலியோன் மற்றும், ஷகிலா இருவரிடமும் எனக்கு பிடித்தது அவர்களின் தைரியம்தான். நாங்கள் இப்படித்தான் என்பதை வெளிப்படையாக சொல்லும் தைரியம்தான் அவர்களிடம் பிடித்தது. இவ்வாறு கிரிஜஸ்ரீ தெரிவித்துள்ளார்.

Read more a tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக