வியாழன், 8 அக்டோபர், 2015

ஆண்டுக்கணக்காக அண்ணன் தலைவன் கணவன் செயலாளர் வேறென்ன வேண்டும்?

radika2  நடிகர் சங்கத்தின் தேர்தல் விவகாரம்: கருணாநிதியின் மலையாளியும்... ராதிகாவின் ரெட்டி காருவும்!-(வீடியோ) radika2தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் தேர்தல் விவகாரம் உச்சக்கட்ட மோதலாக உருவெடுத்துள்ளது. இரு தரப்பும் மாறி மாறி மீடியாக்கக்குத் தீனியைத் தருகின்றன.
சரத்குமார் தரப்பும் விஷால் தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டே போகின்றன. நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக சரத்குமார் தரப்பு நேற்று மீடியாவைச் சந்தித்தது. நடிகை ராதிகாதான் முன்னணியில் இருந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
குறிப்பாக நடிகர் விஷாலை பற்றி பேசும்போது மட்டும் ‘விஷால் ரெட்டி’ என்ற அழுத்தம் திருத்தமாக ராதிகா கூறியபடியே இருந்தார்.

அது மட்டுமல்ல… இதற்கு முன் ஒரு பேட்டியின்போது, அந்தத் தம்பிக்கு தமிழ் தெரியுமோ தெரியாதோ? என்று வேறு வருத்தப்பட்டார்.
விஷாலை ரெட்டி சமூகத்தைச் சேர்ந்தவர் என்று ராதிகா அடையாளப்படுத்துவது ஏன் ? இங்கு தெரியவருவது ஒரு விஷயம்தான்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை விஷால் எங்கிருந்து வந்தார், அவரது பின்புலம் என்ன, அவர் எந்தச் சமூகத்தைச் சார்ந்தவர் என்று யாரும் ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. ஒரு நடிகர் நடிக்கிறார் அவ்வளவுதான்!
இதுவரை விஷால், தான் இந்தச் சமூகத்தைச் சார்ந்தவன் என்று அடையாளம் காட்டிக் கொண்டதாகவும் தெரியவில்லை. விஷாலும் அருமையாக தமிழ் பேசுகிறார்.
மூச்சுக்கு முன்னூறு முறை சரத்குமார் தரப்பு, ‘நடிகர் சங்கத்தில் சாதி புகுந்து விட்டது, அரசியல் புகுந்து விட்டது’ என்று சொல்கிறது. ஆனால் இங்கு விஷாலை ரெட்டி என்று அழைப்பதன் மூலம் நடிகை ராதிகா எதனை அடையாளப்படுத்த முயற்சிக்கிறார்?
இங்கு விஷாலை ரெட்டி என்று அழைக்கும் நடிகை ராதிகா, கார்த்தியின் பெயருக்குப் பின்னாலும் சாதியைச் சேர்த்திருக்கலாமே… தெலுங்கு சாதியும் தமிழ் சாதியும் பின்னிப் பிணைந்து உங்களை எதிர்க்கிறது என்று மக்களுக்குத் தெரிந்துவிடும் என்ற பயமோ?
எந்த ஒரு அமைப்பிலும் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதிமுறை. தயாரிப்பாளர் சங்கத்தில் தேர்தல் நடக்கிறது. இயக்குநர்கள் சங்கத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது.
தமிழ் சினிமாவை மையமாக வைத்து இயங்கும் 27 யூனியன்களிலும் முறையாக தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக தென்னிந்திய திரைப்பட சங்கத்தில் மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை. தலைவராக உங்கள் கணவரும், செயலாளராக உங்கள் சகோதரரும் இருந்து வருகின்றனர்.
இன்று பிரச்னை என்று வந்துவிட்டது. தேர்தலில் நிற்பது உறுதி என்று விஷால் தரப்பினர் தெரிவித்து விட்டனர். பின்னர் ஏன் சமரச முயற்சி? தேர்தலில் யாருக்கு பலம் இருக்கிறதோ அவர்கள் ஜெயிக்கட்டுமே!
தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர்- கருணாநிதி மோதல் உச்சக்கட்டமாக இருந்த காலகட்டத்தில், எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘மலையாளி ‘ என்று அழைத்தார் தமிழினத் தலைவர்.
radika_vc1  நடிகர் சங்கத்தின் தேர்தல் விவகாரம்: கருணாநிதியின் மலையாளியும்... ராதிகாவின் ரெட்டி காருவும்!-(வீடியோ) radika vc1ஆனால் அந்த கருணாநிதியை எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்த வரை மக்கள் அரியணை ஏற அனுமதிக்கவில்லை. கருணாநிதி ஏவிய அந்த அஸ்திரத்தை மக்களே முறியடித்து விட்டனர் என்பதை நடிகை ராதிகா புரிந்துகொள்ள வேண்டும்.
அண்மையில் 80களின் திரை நட்சத்திரங்களின் சந்திப்பு விழா கொண்டாடினீர்கள். அதில் பங்கேற்ற நடிகர் வெங்கடேஷ் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
இன்னும் பல நடிகைகள் இன்ன சாதியைச் சேர்ந்தவர்கள் என்று நீங்கள் ஆராய்ந்து கொண்டுதான் நட்பு பாராட்டீனீர்களா? அவ்வளவுகூட வேண்டாம்… நேற்று நீங்கள் அளித்த பிரஸ்மீட்டில் உங்கள் அருகில் இருந்த ஊர்வசி எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
ஆக… உங்களை எதிர்த்தால், ரஜினிகாந்தை கூட சிவாஜி ராவ் கெயிக்வாட் என்று நீங்கள் அடையாளப்படுத்துவீர்கள் அப்படிதானே…!
- இப்படிக்கு ஒரு சாமானியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக