நடிகர் சங்க தேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெற
இருக்கிறது. இதில் சரத்குமார் அணியும், விஷாலும் அணியும் மோதுகின்றனர்.
இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றோடு முடிந்தது. தற்போது நடிகர் சங்க
தேர்தல் சூடுபிடித்து வருகிறது. சரத்குமார் அணியும், விஷால் அணியும் மாறி
மாறி தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சரத்குமார் அணி சார்பாக, ராதிகா சரத்குமார், சிம்பு ஆகியோர்
விஷால் பற்றியும் அவருடைய அணி பற்றிய குற்றச்சாட்டுகளையும் தெரிவித்தனர்.
இதில் சிம்பு கூறும்போது, நடிகர் சங்கத்தை விஷால் பிரிக்க நினைப்பதாகவும்,
நடிகர் சங்கத்தை பற்றி தவறான கருத்துக்களை பரப்பி வருவதாகவும் கூறினார்.
இரண்டு அணிகள் வேண்டாம் என்றும், நடிகர்கள், நடிகைகள் தங்கள் அணியில் வந்து சேரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.இதற்கு பதிலளித்த விஷால், ‘சமாதானம் என்னும் பேச்சுக்கே இடம் இல்லை. 18ம் தேதி தேர்தல் வருகிறது. அதை நாங்கள் சந்திக்க தயார். எங்களை பற்றி பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினாலும் எங்களுக்கு கவலை இல்லை. நாடக கலைஞர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அது கண்டிப்பாக நடக்கும்’ என்றார்.மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக