புதன், 7 அக்டோபர், 2015

மாஞ்ச நூல் விற்பனை தடை ! ஆனால் தற்காலிகம்தான்!

அண்மையில் சிறுவன் ஒருவன் மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி பலியானதையடுத்து மாஞ்சா நூலுக்கு எதிரான நடவடிக்கைகளை சென்னை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். மாஞ்சா நூல் விற்றாலோ, மாஞ்சா நூலில் பட்டம் செய்து விட்டாலோ 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கூறியுள்ளார். மேலும், சென்னையில் இன்று முதல் 60 நாட்களுக்கு மாஞ்சா நூல் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மாஞ்சா நூல் தொடர்பான புகார்களை தெரிவிப்பற்காக 044 - 2561 5086 என்ற சிறப்பு எண் வசதியும் செய்யப்பட்டுள்ளதாக ஜார்ஜ் கூறினா maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக