வியாழன், 8 அக்டோபர், 2015

ஒட்டுக்கு பணம் தப்பில்லை! பிகாரில் 80 வீத மக்கள் கருத்து!

பாட்னா: பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவதில் தவறில்லை என்ற, 80 சதவீத பீஹார் மக்களின் கருத்தால், மாநில தேர்தல் கமிஷன் அதிர்ச்சி அடைந்துள்ளது. பீஹார் மாநிலத்தில், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கே, 243 தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், வரும் 12ல், துவங்கி, நவ., 5 வரை, ஐந்து கட்டங்களாக நடக்கிறது. இதில், 6.50 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். இந்நிலையில், பாட்னாவில் உள்ள, சந்திரகுப்த மேலாண்மை நிறுவனம் நடத்திய ஆய்வில், பணம் மற்றும் பரிசுகளை வாங்கிக் கொண்டு ஓட்டளிப்பதில் தவறில்லை என, 80 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வறிக்கையால், பீஹார் மாநில தேர்தல் கமிஷன் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதையடுத்து, மக்களிடையே நேர்மையான முறையில் ஓட்டளிக்கும்படி, பத்திரிகைகள், ரேடியோ, சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய, மாநில தேர்தல் கமிஷன், அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  தினமலர்.com  திருடுனத எல்லாத்துக்கும் பங்கு போட்டு குடுக்கணும் ,, ஆமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக