சனி, 10 அக்டோபர், 2015

டில்லி முதல்வர் கேஜ்ரிவால் அமைச்சரை நீக்கி விட்டு சிபியை விசாரணைக்கும் உத்தரவு...

புதுடில்லி: கட்டுமான நிறுவன அதிபரிடம் லஞ்சம் கேட்ட அமைச்சரை, பதவியிலிருந்து, 'டிஸ்மிஸ்' செய்துள்ள, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அந்த ஊழல் விவகாரம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில், சுற்றுச்சூழல், உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராக இருப்பவர், அசிம் அஹமது கான்; மதியா மஹால் என்ற தொகுதியின், ஆம் ஆத்மி கட்சி, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் மீது, கடந்த ஒரு வாரமாகவே, ஊழல் புகார் கூறப்பட்டு வந்தது. முடக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கட்டுமானம் ஒன்றின் உரிமையாளரிடம், 'கட்டுமானத்தை தொடர வேண்டுமானால், பணம் தர வேண்டும்' என, அமைச்சர் வௌிப்படையாக மிரட்டும், 'ஆடியோ' கேசட்டை, ஆங்கில, 'டிவி' சேனல்கள் ஒலிபரப்பி வந்தன.ஆனால், சம்பந்தப்பட்ட அமைச்சர், 'எனக்கும், அந்த பேச்சுக்கும் சம்பந்தமில்லை; வேறு யாருடைய குரலோ அது' என, கூறி வந்தார்.நேற்று காலை, பத்திரிகையாளர்கள் கூட்டத்தை, திடீரென கூட்டிய முதல்வர்கெஜ்ரிவால், பதவியிலிருந்து அந்த அமைச்சரை நீக்குவதாக அதிரடியாக அறிவித்தார்.இவரது அரசு ஷீலா திஷிட் அவர்களை எதிர்த்து ஏன் ஊழல் வழக்கு பதியவில்லை என்பது விநோதமாக உள்ளது 


அவர் அறிவித்ததாவது: அமைச்சர் அசிம் அஹமது கான் மீதான ஊழல் புகார், நேற்று இரவு தான் எங்களுக்கு தெரிய வந்தது. தீர விசாரித்ததில், ஆடியோ கேசட்டில் இடம் பெற்றுள்ளது, அவர் குரல் தான் என்பதை உறுதி செய்தோம். அதையடுத்து, அவரை பதவியிலிருந்து நீக்க முடிவு செய்து, அதற்கான அறிவிப்பை இப்போது வௌியிடுகிறோம். இந்த முடிவை நாங்களாகத் தான் எடுத்துள்ளோம்; எங்களுக்கு எந்த இடத்திலிருந்தும் நெருக்கடி வரவில்லை. அமைச்சர் பொறுப்பிலிருந்து, அசிம்
அஹமது கான் நீக்கப்படுகிறார். அவர் செய்த முறைகேடுகள் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தி, உண்மை வௌிப்படுத்த வேண்டும்; அதற்காக, பரிந்துரை செய்துள்ளோம்.ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை தப்ப விட மாட்டோம். அமைச்சர்களாக இருந்தாலும் சரி; எம்.எல்.ஏ., அல்லது அதிகாரிகளாக இருந்தாலும் சரி; ஆதாரங்களுடன் வாருங்கள்; அவர்களை பதவியிலிருந்து, டிஸ்மிஸ் செய்கிறேன்.

நேர்மையான, ஊழலற்ற ஆட்சியை நடத்துவது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறேன். நாங்கள் எடுத்துள்ளது போன்ற நடவடிக்கையை, மத்தியில் ஆளும், பா.ஜ., மேற்கொள்ள வேண்டும்.பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள, பா.ஜ.,வைச் சேர்ந்த, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, ம.பி.,யின் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரை, பதவியிலிருந்து நீக்க வேண்டும்.இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.

அசிம் அஹமது கான் வகித்த துறை, ஆம் ஆத்மியின், பள்ளிமரான் தொகுதி, எம்.எல்.ஏ.,வான, இம்ரான் ஹுசேனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக