செவ்வாய், 6 அக்டோபர், 2015

மாட்டிறைச்சி வதந்தியால் வாலிபர் தற்கொலை: தாத்ரியில் மீண்டும் பதட்டம்

மாட்டிறைச்சி சமைப்பதாக கிளம்பிய வதந்தியை அடுத்து, முதியவர் அக்லாக் கொல்லப்பட்ட தாத்ரி நகராட்சியின் பிசாரா கிராமத்தில் இன்று மாட்டிறைச்சி வதந்தியால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.25 வயதான பிரகாஷ் என்ற வாலிபர் இன்று காலை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரது வீட்டில் மாட்டிறைச்சி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வதந்தி பரவியதை அடுத்தே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவருக்கு போலீசார் தொல்லை கொடுத்ததாகவும் உள்ளூர் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர் ஆனால், பிரகாஷின் சடலத்தைக் கைப்பற்றி அதை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீசாரோ, இது இயற்கையான மரணம் என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தாத்ரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக