சென்னை: பல் மருத்துவ மேற்படிப்புக்கு லஞ்சம் அளிக்கப்பட்டது தொடர்பான
வழக்கில், தமிழக பல் மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் குணசீலன் ராஜனை,
சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.சென்னை அருகே ஒரு மேல்மருவத்தூர்
ஆதிபராசக்தி பல் மருத்துவ கல்லூரியில் பட்ட மேற்படிப்பு தொடங்குவதற்கு
அனுமதி வழங்க 25 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சில நாட்களுக்கு முன்னர்,
இந்திய பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினர் டாக்டர் முருகேசன் கைது
செய்யப்பட்டார். மேலும், அந்த கல்லூரியின் நிர்வாகி
ராமபத்திரன் மற்றும் கருணாநிதி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பழனி ஆகிய 3
பேரையும் சிபிஐ அதிகாரிகள் கடந்த 7ம் தேதி கைது செய்தனர்.இந்நிலையில்
அவர்களை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த
விசாரணையில் கிடைத்த தகவல் அடிப்படையில், இந்திய மருத்துவ கவுன்சிலர்
உறுப்பினரும் தமிழக பல் மருத்துவ கவுன்சில் தலைவருமான டாக்டர் குணசீலன்
ராஜன், நேற்று காலை சிபிஐ அலுவலகத்திற்கு சென்று தம் மீதான புகார் குறித்து
விளக்கம் அளித்தார்.இதனையடுத்து அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து 8 மணி
நேரம் விசாரணை மேற்கொண்டனர் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
சனி, 19 ஜனவரி, 2013
சந்தானத்தின் சாயம் வெளுத்தது கண்ணா
கண்ணா லட்டு.. கதை என் கற்பனையில் உதித்த முத்து! என் சொத்து!!” -நடிகர் சந்தானம் viruviruppu.com
“நாமும் படம் தயாரிக்கலாம் என்று தோன்றியபோது, பல்வேறு கதைகள் பற்றியும்
மற்றையவர்கள் சொன்னார்கள். அதே நேரத்தில் நானும் ஒரு கையை யோசித்தபோது,
என் மனதில் உதித்த கதைதான், கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற பெயரில்
உருவாகியுள்ளது. மூன்று பேர் ஒரு பெண்ணை காதலித்தால் எப்படி இருக்கும்
என்று நான் யோசித்தேன். அதை படமாக்கினோம். இப்போது படம் வெற்றிகரமாக
ஓடிக்கொண்டு இருக்கிறது” என்று கூறியுள்ளார், நடிகர் சந்தானம்.“இந்தக் கதை மாத்திரமல்ல, மொத்தம் 4 கதைகளை யோசித்தேன். அவற்றில் ஒன்று வெளியாகிவிட்டது. மற்றைய மூன்றில் இரு கதைகளில் ஹீரோவுக்கும் எனக்கும் சமமான ரோல். நான்காவது கதையில் நான்தான் ஹீரோ. இந்த மூன்று படங்களையும் தயாரிப்பது தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன” என்றும் கூறியுள்ளார்
காங்கிரஸ் துணைத் தலைவராக ராகுல் காந்தி
அகில இந்திய காங்கிரஸ்
கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
என்றும், கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அடுத்தப்படியாக கட்சியில்
ராகுல் காந்தி செயல்படுவார் என்றும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் திவேதி
தெரிவித்துள்ளார்.ராஜஸ்தான்
மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில்
ராகுலை துணைத் தலைவராக நியமிக்க ஏ.கே.அந்தோணி முன்மொழிந்தார்.
இதையடுத்து ராகுல் காந்தி தலைமையில் 2014 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறது காங்கிரஸ் கட்சி.
ராகுல் காந்தியை துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.
ராகுல் காந்தியை துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.
செவ்வாய் கிரகத்தில் 1600 கி.மீ நீளம், 7 கி.மீ அகலம் கொண்ட நதி
மனிதர்கள்
உயிர்வாழ நிறைய சாத்தியகூறுகள் உள்ள கிரகமாக கருதப்படும் செவ்வாய்
கிரகத்தில் 1600 கி.மீட்டர் நீளம், 7 கி.மீட்டர் அகலத்தில் பாய்ந்த ஒரு
நதியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.ஜரோப்பிய
வின்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ள இந்த நதி சில குறிப்பிட்ட
இடங்களில் 1000 அடி ஆழம் கொண்டதாக இருக்கிறது. தற்போது வற்றிய நிலையில்
காணப்படும் இந்த நதி, சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கும் 1.8 பில்லியன்
ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பாய்ந்திருக்கக்கூடும் என
கருதப்படுகின்றது.ரூயேல்
வாலிஸ்" என இந்த வற்றிய நதிக்கு பெயரிட்ட ஜரோப்பிய வின்வெளி ஆய்வு மையம்,
இந்த நதிக்கு நிறைய கிளை நதிகள் இருந்ததையும் உறுதி செய்துள்ளது
வெள்ளி, 18 ஜனவரி, 2013
புஷ்பா கந்தசாமியின் கதை திருட்டு பாக்கியராஜ் கோபம்
கண்ணா லட்டு தின்ன ஆசையா' கதைக்காக யாரும் பணம் தரவில்லை
சென்னை
: சமீபத் தில் வெளியான, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம், 1981ல் வெளிவந்த
கே.பாக்யராஜின் ‘இன்று போய் நாளை வா’ படத்தை தழுவி எடுக்கப்பட்டதாகக்
கூறப்படுகிறது. இதுதொடர்பாக டைரக்டர் கே.பாக்யராஜ் சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் அவர் நிருபர்களுக்கு
நேற்று அளித்த பேட்டி:
‘இன்று போய் நாளை வா’ படத்தின் கதை உரிமை
என்னிடம்தான் உள்ளது. தெலுங்கு, கன்னடம், இந்திக்கு படத்தின் கதையை
நான்தான் விற்றேன். இப்போது தயாரிப்பாளரிட மிருந்து புஷ்பா கந்தசாமி யும்,
ராம.நாராயணனும் கதை உரிமையை பெற்றிருப்பதாகச் சொல்லி, ‘கண்ணா லட்டு தின்ன
ஆசையா’ படத்தை எடுத்துள்ளனர். இதுபற்றி கடந்த மாதம் 19ம் தேதி
ராம.நாராயணன், சந்தானம் ஆகியோருக்கு கடிதம் அனுப்பினேன். பதில்
அளிக்கவில்லை. இதனால் வழக்கு தொடர்ந்துள்ளேன். நீதிபதியின் அறிவுறுத்தலின்
பேரில் டைட்டில் கார்டில் என் பெயரை போட்டிருக்கிறார்கள். படத் தின்
கலெக்ஷன் ரிப்போர்ட்டை தர வேண்டும் என்று கேட்டிருக்கிறேன்.
ராஜிவ் காந்திக்கு, ஜெயலலிதா முதல்வராக்குவதற்கு கடிதம் எழுதினார்
சென்னை: எம்.ஜி.ஆர்., நோய்வாய்ப்பட்டு செயல்படாமல் உள்ளார். எனவே, என்னை
முதல்வராக்குவதற்கு உதவ வேண்டும் என, அப்போதைய பிரதமராக இருந்த ராஜிவ்
காந்திக்கு, ஜெயலலிதா கடிதம் எழுதினார்,'' என்று தி.மு.க., தலைவர்
கருணாநிதி கூறினார்.
தி.மு.க.,வின் கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில், சென்னை மயிலை மாங்கொல்லையில் நடந்த, பொங்கல் விழாவில், அவர் நேற்று பேசியதாவது:நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், எம்.ஜி.ஆர்., சிலையை திறந்து வைத்து, என்னை மிகக் கேவலமாக, முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார். முதல்வர் பதவிக்காக, எம்.ஜி.ஆரிடம்., நான் கெஞ்சியதாகவும், அவர் பிச்சை போட்டார் எனவும், ஜெயலலிதா கூறியுள்ளார்.எம்.ஜி.ஆரின்., சிலையை திறந்து வைத்து, அவரது அருமை, பெருமைகளை பேசாமல், என்மீது வசை பாடியுள்ளார். முதல்வராக எம்.ஜி.ஆர்., இருந்தபோது, ராஜிவ்காந்திக்கு, ஜெயலலிதா கடிதம் எழுதியது, பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. அக்கடிதத்தில், எனது செல்வாக்கைக் கண்டு, எம்.ஜி.ஆர்., பொறமை படுகிறார். இதனால், எனக்கு முக்கியத்துவம் கொடுக்க மறுக்கிறார். நோய்வாய்ப்பட்டு, செயல்பாடாமல் எம்.ஜி.ஆர்., உள்ளார். எனவே, என்னை முதல்வராக்க உதவுங்கள் என, ராஜிவ்காந்திக்கு எழுதிய கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

வியாழன், 17 ஜனவரி, 2013
‘நீங்கள் சூரியனை காப்புரிமை செய்ய முடியுமா’
அறிவை விடுதலை செய்! ஆரன் ஸ்வார்ட்ஸ் தற்கொலை!!
ஸ்வார்ட்ஸ், இன்று இணையத்தில் மிகப் பரவலாக பயன்படுத்தப்படும்;
இணையதளங்களில் வெளியாகும் புதிய பதிவுகளை பின் தொடர உதவும்; ஆர்எஸ்எஸ்
(RSS) தொழில்நுட்பத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தவர். திறந்தவெளி
நூலகம் மற்றும் இன்னும் பிற இணைய சேவை நிறுவனங்களின் பங்குதாரர்
ஸ்வார்ட்ஸ், இன்று இணையத்தில் மிகப் பரவலாக பயன்படுத்தப்படும்; இணையதளங்களில் வெளியாகும் புதிய பதிவுகளை பின் தொடர உதவும்; ஆர்எஸ்எஸ் (RSS) தொழில்நுட்பத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தவர். திறந்தவெளி நூலகம் மற்றும் இன்னும் பிற இணைய சேவை நிறுவனங்களின் பங்குதாரர். இணைய தனிநபர் சுதந்திரம், சுதந்திரமான தகவல் பரிமாற்றம், அறிவுசார் சொத்துடமை எதிர்ப்பு போன்றவற்றிற்காக போராடி வந்தார். இதற்கு ஆதரவான இணைய குழுக்களில் இயங்கி வந்தார். அவர் உருவாக்கிய “முன்னேற்றத்தை கோருவோம்” (Demand Progress) என்ற அமைப்பு அமெரிக்காவின் இணைய தணிக்கை சட்டங்களான சோப்பா/பிப்பாவுக்கு எதிரான இயக்கத்தை நடத்தி வந்தது.
“அறிவுசார் ஆவணங்கள் சில தனியார் நிறுவனங்களின் லாபவெறிக்கு மட்டும் பயன்படுவது தவறு, அது அனைவருக்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும்” என்பது அவரது கருத்து.
ஃபியூஸ் போன ரஜினிக்கு மவுசு காட்டும் குமுதம்!
வினவு
அவரது திரைப்படத்தில் பாம்பையோ இல்லை பந்தையோ வைத்து ஊதி ஊதியே
வில்லன்களை பந்தாடுவார் இல்லையா? அது போல அரசியலிலும் எந்த கஷ்டங்களும்
இன்றி பதவியை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் ரஜினி சொல்ல வரும் கருத்து.
தமிழ்
மக்களின் சுயமரியாதையை ஒழித்து அடிமைத்தனத்தைக் கற்றுத் தருவதில் பல
பத்திரிகைகள் நம்பர் 1க்குப் போட்டி போடுகின்றன. 20.1.13 தேதியிட்ட குமுதம்
ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழ், “காத்திருக்கும் அரசியல் புயல்” என்று
ரஜினியைக் குறித்து ஒரு அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. கவர்
ஸ்டோரி என்றால் அது ஏதோ மிகப்பெரும் செய்தி அலசல் என்று நினைத்து
விடாதீர்கள். இது “சுவாமி வம்பானந்தா” என்ற கிசுகிசு மாமாவின் பக்கத்தில்
வருகிறது. ஜூனியர் விகடனின் கழுகுக்குப் போட்டியாக களமிறக்கப்பட்ட இந்த
மாமா, சிஷ்யை எனும் பெண்பால் பாத்திரத்தின் மூலம் கவர்ச்சியுடன் வாரம்
இரண்டு முறை மேல் மட்ட கிசுகிசுக்களை வாந்தி எடுக்கும் இழிவான ஜன்மம்.
ரஜினி, தனது பிறந்த நாளைக் கொண்டாடிய ரசிகர்களை, புத்தாண்டில் சந்தித்து பேசினாராம். அப்போது இந்த வம்பானந்தா கூட இருந்த ரசிகர்களை சந்தித்து இந்த சேதிகளை தயாரித்து எழுதுகிறார். ரசிகர்களை சந்தித்த ரஜினி முழுக்க அரசியலைப் பேசிக் கொண்டு இருந்தாராம். ரசிகர்களுக்கு தெரிந்த அரசியல் அறிவில் கடுகளவு கூட தெரிந்திராத ரஜினி என்ன பேசியிருப்பார்? குஜராத்தில் நான்காவது முறையாக முதல்வர் பதவியைப் பிடித்த மோடியை உதாரணம் காட்டிய ரஜினி, “மோடி மக்களுக்காக நல்லது பல செய்தாலும் படுத்துக் கொண்டே ஜெயிக்க முடியவில்லை, கஷ்டப்பட்டுத்தான் ஜெயித்திருக்கிறார், இதுதான் இன்றைய அரசியல் சூழ்நிலை” என்றாராம்.
இவர்கள் கிசுகிசுவாகவும், பரபரப்பிற்காகவும் செய்திகளை கேட்டோ இல்லை இட்டுக்கட்டியோ எழுதினாலும் உண்மையை ஒளித்து வைக்க முடியாது என்பதற்கு இதுவே சான்று. நரவேட்டை மோடியை சிலாகித்துச் சொல்லுமளவு ரஜினியின் இதயமும் பாசிசத்தின் செல்வாக்கில் இருப்பது ஒருபுறம். இன்னொரு புறம் அத்தகைய மோடி கூட படுத்துக் கொண்டே ஜெயிக்கவில்லை என்பதன் மூலம் ரஜினி என்ன கூற வருகிறார்?
அரசியல் என்பது நோகாமல் நொங்கெடுத்து வயிறார தின்ன வேண்டும் என்பதுதான் அவரது விருப்பம்.

dreamliner டிரீம்லைனர் போயிங் விமானங்கள் முடக்கம்
புதுடெல்லி:அமெரிக்க விமான போக்குவரத்து துறை ஆணையத்தின் எச்சரிக்கையை
அடுத்து, ஏர் இந்தியா இயக்கி வரும் 6 டிரீம்லைனர் போயிங் விமானங்கள்
முடக்கப்பட்டுள்ளன. விமானத்தில் உள்ள பேட்டரியில் கோளாறு காரணமாக திடீரென
தீப்பற்றிக் கொள்வதால், உலகம் முழுவதும் சப்ளை செய்யப்பட்ட 50க்கும்
மேற்பட்ட டிரீம் லைனர்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் போயிங் விமான தயாரிப்பு நிறுவனம், டிரீம்லைனர் என பெயரிடப்பட்ட 787 விமானத்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. எரிபொருள் செலவை கட்டுப்படுத்த குறைந்த எடையில், முழுக்க முழுக்க எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த விமானங்களுக்கு உலகின் பல நாடுகள் வரவேற்பு அளித்தன. இந்தியாவின் ஏர் இந்தியா நிறுவனமும் 6 விமானங்களை வாங்கி பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், டிரீம்லைனர் விமானத்தில் உள்ள லித்தியம் பேட்டரியில் அடிக்கடி கோளாறு ஏற்படுவது தெரிய வந்தது.

பெண்கள் மது அருந்துவது அவரவர் விருப்பம்! அதில் தலையிடக் கூடாது! நடிகை த்ரிஷா பதில்!
சமர் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு
சென்னையில் 17.01.2013 வியாழன் அன்று நடந்தது. படத்தின் நாயகன் விஷால்,
நாயகி த்ரிஷா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.இந்த படத்தில் த்ரிஷா மது அருந்துவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதுபற்றி த்ரிஷாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது,
நான்
மது அருந்துவதுபோல் காட்சி இடம்பெற்றால் அந்த படம் வெற்றி அடைகிறது என்று
பலர் என்னிடம் தெரிவித்தார்கள். நான் இதனை இந்தப் படத்தின் இயக்குநரிடம்
சொன்னேன். அதனால்தான் இந்தப் படத்தில் நான் மது அருந்துவது போல் காட்சி
அமைத்தார். மது அருந்துவதுபோல் நான் நடிப்பது எனக்கு சிரமமாக தெரியவில்லை.
ஏனென்றால் நான் அந்த காட்சிகளில் பெப்சிதான் குடிக்கிறேன். அது உண்மையான
மது அல்ல என்றார். இந்த
காலத்து பெண்கள் மது அருந்துவது சரியா? தவறா என்ற கேள்விக்கு, அது அவரவர்
விருப்பம் சார்ந்தது. ஒருவருடைய தனிப்பட்ட விருப்பத்தில் நாம் தலையிடக்
கூடாது என்றார். nakheeran.com
ரிசானா.. சுயநலமான மத சிந்தனையில் பொய் புரட்டு
ரிசானாவின் இரத்த விலை? -ஜே.பி. ஜோசப்பைன் பாபா
ரிசானா
ரபீக் என்ற பெண்ணின் தண்டனை வழியாக சவுதிஅரசாங்கம் மனிதஉயிரின் விலைக்கு
பெரும் சவால் இட்டுள்ளது.மனித நேயமே அற்று இறைவன் பெயரால் ஷரியத் என்ற
மதச்சட்டம் வழியாக தண்டனை என்ர பெயரில் ஒரு இளம் பெண்ணை படுகொலை
செய்துள்ளது. கடந்த 2005ல் ஒரு பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை
செய்தார் என்று க்தனது 17வது வயதில் சவுதி ஜெயிலில் அடைக்கப்பட்டவர்.
2012டிசம்பர் வரை தான் விடுதலையாகி விடுவோம் என நம்பியிருந்த அப்பெண்
அவசரமாக பொறுபான தகவல் பெற்றோருக்கோ அப்பெண்ணினின் சொந்த தேசம் இலங்கைக்கோ
தெரிவிக்காது கொலை செய்தது மிகவும் கண்டிக்க தக்கது.ஒரு பக்கம் இலங்கை அரசு
இராணுவ கெடுபிடி மறுபக்கம் ஈழப்போராளிகள் அச்சுறுத்தல்! இந்த சூழலில்
ஒன்பதாம் வகுப்புடம் படிப்பை நிறுத்தி விட்டு தன் ஏழ்மையான குடும்பத்தை கரை
சேர்க்க எண்ணி, மொழி தெரியாத முற்றிலும் வேறுபட்ட ஒரு இன மக்களிடம் வீட்டு
வேலை செய்ய வெளிநாடு செல்ல துணிந்து சென்ற ரிசானாவை காத்திருந்தது
கழுத்து அறுக்கப்பட்டு மரணிக்கும் கொடும் முடிவே.
நபர்கள் கொண்ட சவுதி குடும்பத்தில் வீட்டு பணியாளராக
அமர்த்தப்படுகின்றார். ஒரே மாதத்தில் அவ்வீட்டிலுள்ள 4 மாத குழந்தையை
கழுத்தை நெரித்து கொன்று விட்டார் என கைது செய்யப்படுகின்றார். இந்த
குழந்தை எவ்வாறாக மரித்தது என்று போஸ்டுமார்டம் கூட செய்யாது அடைக்கம்
செய்த சவுதி காவல்துறை, ரிசானா தான் கொலை செய்தாள் என 2007ல் மரண தண்டனை
விதிக்கின்றது.இந்த வீட்டிலிருக்கும் வேறு நபர்கள் இந்த குழந்தையை கொன்றனரா
அல்லது இந்த குழந்தைக்கு மரபனுவாகவே வேறு ஏதும் நோய் இருந்ததா என்று
பரிசோதிக்க இயலாத சவுதி அரசு, மதச்சட்டத்தின் பெயரில் 7 வருடம் சிறையில்
கழித்த இளம் பெண்னைபடுகொலை செய்தது அதிர்ச்சியாக உள்ளது.
ஊராட்சி ஒன்றியம்Õ என்ற பெயரில் படமாகிறது
அரசியல்பற்றி ஒன்றும் தெரியாமல் தூண்டுதலின் பேரில் தேர்தலில் நிற்கும்
இளைஞன் கதை ‘ஊராட்சி ஒன்றியம்Õ என்ற பெயரில் படமாகிறது. இதுபற்றி இயக்குனர்
கே.எம்.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:புதுக்கோட்டை மாவட்டத்தில்
நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் கதை. உள்ளூர் அரசியல்
என்பதில் பெரிய அளவில் குத்து, வெட்டு இருக்காது. ஆனால் கூட இருந்தே
குழிபறிக்கும் அரசியல் நடக்கும். ஊதாரித்தனமாக சுற்றித்திரியும் இளைஞனை
வலுக்கட்டாயமாக அரசியலுக்குள் இழுத்து தேர்தலில் நிற்க வைப்பதுடன் ஜெயிக்க
வைக்கின்றனர். அரசியல்பற்றி தெரியாததால் பதவிக்கு வந்தும்
விளையாட்டுத்தனமாகவே இருக்கிறான் இளைஞன். பதவி மட்டுமே இவனிடம் இருக்க
அதிகாரமெல்லாம் வேறு சிலரிடம் இருக்கிறது. இதனால் தனது காதலி உள்பட
எல்லாவற்றையும் இழக்கிறான் இளைஞன். அதன்பிறகு அவன் எடுக்கும் முடிவுதான்
கதை. அதாவது மலையாளத்தில் மோகன்லால் நடித்த பூமியிலே ராஜாக்கன்மார் என்ற படத்தின் சாயல் போல தெரிகிறது ம்ம்ம் சாயல் இல்லிங்கோ இன்ஸ்பி ரேஷனுங்கோ
அரசியல் கதை என்றாலும் தாம் தூம் என்று பில்டப் காட்சிகள்
இருக்காது. யதார்த்தமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஹீரோ ஸ்ரீதர்,
ஹீரோயின் தமலி. வில்லனாக லியாகத் அலிகான், தண்டபாணி நடிக்கின்றனர்.
ஆர்.சுந்தர்ராஜன், கஞ்சா கருப்பு, உமாரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
சுரேஷ் சுப்ரமணியம் ஒளிப்பதிவு. எஸ்ஆர்.பிரசாத் இசை. கோவை தண்டபாணி,
இரா.சக்தி வேல், கேஎம்கே தயாரிப்பு. tamilmurasu.org
மம்தா அலம்பல்! தொழிலதிபர் மாநாட்டில் பாட்டு பாட சொல்லி
ஹால்டியா: மேற்கு வங்க மாநிலத்திற்கு முதலீடு திரட்டுவதற்காக, முதல்வர்,
மம்தா பானர்ஜி கூட்டிய, தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து
கொண்டவர்களை, பெயர் சொல்லி அழைத்தும், பாட்டு பாட சொல்லி வற்புறுத்தியும்,
மம்தா செய்த அலம்பல்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன.குஜராத் முதல்வர்,
நரேந்திர மோடியின் வழியை பின்பற்றி, பல மாநில முதல்வர்களும், தங்கள்
மாநிலத்திற்கு தேவையான நிதியை, முதலீட்டை திரட்டுவதற்காக, தொழிலதிபர்கள்
மாநாடுகளை கூட்டுவது, சமீப காலத்திய வழக்கமாக உள்ளது.மேற்கு வங்க
முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான, மம்தா பானர்ஜிக்கும்,
தொழிலதிபர் மாநாட்டை நடத்தி, நிதி திரட்ட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
இதற்காக, மாநிலத்தின் துறைமுக நகரமான ஹால்டியாவின், நட்சத்திர ஓட்டலில்
ஏற்பாடு செய்யப்பட்டது.நாட்டின் முன்னணி தொழிலதிபர்களுக்கு அழைப்பு அனுப்
பப்பட்டிருந்தது; மாநாட் டிற்கு, "பெங்கால் லீட்ஸ்' என, பெயரும்
வைக்கப்பட்டிருந்தது. மாநிலத்தின் தொழில் வளம், தொழில்களுக்கான வாய்ப்பு,
மாநில அரசு வழங்கும் சலுகைகள் போன்றவற்றை பட்டியலிடுவதற்கு பதிலாக, "மம்தா
பானர்ஜியின், "பந்தா'வை காட்டும் நிகழ்ச்சியாகவே அது அமைந்திருந்தது' என,
தொழிலதிபர்கள் சிலர் குறைபட்டு கொண்டனர்.
"வயலின் வாசிங்க'
துன்சேரி பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தின் தலைவர், தனுகாவை மேடைக்கு அழைத்து, வயலின் கருவியை இசைக்குமாறு கேட்டு கொண்டார். அவரும், சங்கோஜத்துடன் வயலின் இசைத்து, முதல்வரின் அன்பை பெற்றார். மதுவுக்கு மயங்கும் வண்டுகள் போல் அதிகார போதைக்கு ஏங்கும் மம்தாக்கள் உங்கள் மாநிலத்துக்கு வந்த டாடா நானோ கார் திட்டத்தை தாங்கள் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று குலைத்து விட்டு , அதை குஜராத்துக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு , இப்போது தொழில் அதிபர்களுடன் கொண்டாட்டமா ...டாடாவுக்கு நிலத்தை கொடுத்ததற்கு தானே தாண்டவமாடினீர்கள் .. இன்று அவர்களுடன் நாட்டியமாடி நிலத்தை கொடுக்க போகிறீர்கள் ... அம்மாவும் திதி யும் முந்தைய ஆட்சியை திட்ட வேண்டியது ... பின் அவர்கள் செய்ததையே பின் பற்ற வேண்டியது... .

புதன், 16 ஜனவரி, 2013
பாகிஸ்தானில் ராணுவ புரட்சி வெடிக்குமா?
பிரதமரை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி. இவர் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க மறுத்ததால் பிரதமர் பதவி இழந்தார். யூசுப் ரசா கிலானி. அவருக்கு பின் பிரதமர் பதவியேற்ற ராஜா பர்வேஸ் அஷ்ரப், சர்தாரி வழக்கை விசாரிக்க நடவடிக்கை எடுத்தார். அதனால் பதவி தப்பியது. ஆனால், மின்துறை அமைச்சராக இருந்த போது ரூ.2,200 கோடி ஊழல் புரிந்த வழக்கில் மீண்டும் அஷ்ரப் சிக்கினார். இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், அஷ்ரப்பை கைது செய்ய உத்தரவிட்டது.
திறந்தவெளி சிறைச்சாலையாகும் தமிழகம்!
“ஆட்சிக்கு வந்தவுடன், அம்மா திருந்திவிட்டார், இவர் பழைய ஜெயலலிதா
அல்ல” என்று பார்ப்பன கோயபல்சு பத்திரிகைகள் அவருக்கு ஒளிவட்டம் போட்டன.
ஆனால் பாசிச ஜெயாவோ, தான் ஒரு பார்ப்பன பாசிஸ்டுதான் என்பதை மீண்டும்
நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார். vinavu.com
தொடர் குற்றங்களில் ஈடுபடும் தொழில்முறைத் திருடர்கள், ரவுடிகள், போதைப் பொருட்களைக் கடத்துபவர்கள், கள்ளச் சாராயம் காச்சுவோர் போன்றோரைத் தண்டிப்பது; வெளியில் இருந்தால் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதால், அத்தகையோரைக் குற்றமிழைப்பதிலிருந்து தடுத்து வைப்பது என்று கூறிக் கொண்டுதான் பிணை ஏதுமின்றி ஓராண்டு காலத்துக்குச் சிறையிலடைக்கும் வகையில் குண்டர் சட்டம் கொண்டுவரப்பட்டது. தொடர்ச்சியாகக் குற்றங்களில் ஈடுபடுவோரைக் குற்றச் செயல்களிலிருந்து தடுப்பதற்கான இச்சட்டத்தை இப்போது, ஒருவர் முதன்முறையாகக் குற்றம் செய்தால்கூட ஏவலாம் என்றும், பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்போரை இச்சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டிக்கலாம் என்றும் இச்சட்டத்தைத் திருத்தி விரிவாக்கியுள்ளது பாசிச ஜெயா கும்பல்.
கத்திப்பாரா மேம்பாலத்தில் ‘வணிக வளாகம்! ஸ்கை எஸ்டேட்’ திட்டம்
நன்நடத்தையால் விடுதலையாகி மீண்டும் சிறுமியை கற்பழித்து கொலை
நன்நடத்தையால் சிறையிலிருந்தவிடுதலையாகி, மீண்டும் 9 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்தவனை போலீசார் கைது செய்துள்ளனர்.மகாராஷ்டிரா
மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தை சேர்ந்தவன் சுனில் சுரேஷ் (32). கடந்த
2002-ம் ஆண்டு நாசிக் மாவட்டத்தில் ஒரு சிறுமியை கற்பழித்து கொலை செய்த
குற்றத்திற்காக இவனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கபட்டது.இந்த
தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர்நீதி மன்றத்தில், மேல்முறையீடு செய்ததன்
பேரில், மரண தண்டனையை 17 வருட கடுங்காவல் தண்டனையாக குறைத்து
உத்தரவிடப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் நன்நடத்தையை காரணம் காட்டி சிறை
நிர்வாகம் சுரேஷை விடுதலை செய்தது.கடந்த
மாதம் 28-ம் தேதி, ஷிர்டி ரெயில் நிலையம் அருகே 9 வயது சிறுமியை கொடூரமாக
கற்பழித்து, சிறுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சுரேஷ் போலீசாரிடம்
சிக்காமல் தப்பித்துவந்தான்.இந்நிலையில்
ஷிர்டி ரயில் நிலையம் அருகே சுற்றி திரிந்த சுரேஷை சந்தேகத்தின் பேரில்
கைது செய்த போலீசார், விசாரணையின் போது சுரேஷ்தான் அந்த கொடூர குற்றத்தை
செய்தான் என்பததெரிந்துகொண்டனர்.இதையடுத்து, அவனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்தொடர்ந்து 2 சிறுமிகளை கற்பழித்து கொன்ற சுரேஷிற்கு அதிக பட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கப்படுமென தெரிகிறது
செவ்வாய், 15 ஜனவரி, 2013
சவூதியில் மரண தண்டனைக்கு காத்திருக்கும் 45க்கும் அதிகமான வெளிநாட்டு பணிப்பெண்கள்
.சவூதி அரேபியாவில் 45க்கும் மேற்பட்ட வீட்டுப் பணிப்பெண்கள் மரண
தண்டனைக்காகக் காத்திருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில்
வெளிநாட்டு பணியாளர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக சர்வதேச அளவில்
விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அதில்
வீட்டு உரிமையாளர்களின் கற்பழிப்பு முயற்சியிலிருந்த தப்புவதற்காக அவர்கள்
மீது தாக்குதல் நடத்திய பணிப்பெண்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு
சிறைவைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு மரண தண்டனைக்கு
உள்ளானோரில் அதிகமானோர் இந்தோனேஷிய நாட்டவர் என்பதோடு இவர்களில் இலங்கை,
பிலிம்பைன்ஸ், இந்தியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாட்டவர்களும் உள்ளதாக
மனித உரிமை அமைப்புகள் நம்புகின்றன. இந்தோனேஷியாவின் 27 வயதான மூடி
துர்சிலாவர்தி பின்டி என்ற பெண் தனது தொழில் வழங்குனரை கொன்றதாகக் குற்றம்
சாட்டப்பட்டு சிறையிலுள்ளார். இவர் மரண தண்டனையை சந்திக்க வுள்ளார். கடந்த
2010 ஆம் ஆண்டு மேற்படி பெண்ணை தொழில் வழங்குனர் கற்பழிக்க முற்பட்டபோதே
அந்த நபர் கொல்லப்பட்டுள்ளார்.சவூதியில் மரணதண்டனைக்கு உள்ளான இலங்கையின்
ரிஸானா நபீக்கின் சம்பவத்தை அடுத்து சவூதி அரேபியா மீது சர்வதேச அளவில்
கண்டனங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது ooddram.com
24மணித்தியாலத்திற்குள் பாகிஸ்தான் பிரதமரை கைது செய்யுமாறு உத்தரவு!
மோடியை விட பயங்கரவாதியான சுஷ்மா சுவராஜ்
10 பாகிஸ்தான் வீரர்களின் தலையை வெட்டி எறிய வேண்டாமா?” சுஷ்மா ஆவேசம்!
“பாகிஸ்தான் ராணுவத்தினரால் துண்டிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரரின் தலையை
மரியாதையாக எம்மிடம் ஒப்படைக்கவில்லை என்றால், அங்கு 10 பாகிஸ்தான்
வீரர்களின் தலையை வெட்டியெறிய வேண்டாமா?” இவ்வாறு ஆவேசமாக பேசியுள்ளார்,
மக்களவை எதிர்கட்சி தலைவர் (பா.ஜ.க.) சுஷ்மா சுவராஜ்.
காஷ்மீர் மாநிலத்தில், எல்லைக்கட்டுப்பாடு கோட்டை தாண்டி வந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் தொடுத்தது. இதில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரு இந்திய ராணுவ வீரர்களை கொன்ற பாகிஸ்தான் ராணுவம், அவர்களில் ஹேம்ராஜ் என்பவரது தலையை வெட்டி எடுத்துச் சென்றனர்.
நேற்று பிற்பகல் இந்திய ராணுவம் சார்பில் பாகிஸ்தான் ராணுவத்துடன் பேசிய பிரிகேடியர் டி.எஸ்.சான்டு, “இந்திய வீரர் ஹேம்ராஜின் தலையை துண்டித்து எடுத்து சென்றதற்காக பாகிஸ்தான் ராணுவம் பகிரங்க மன்னிப்பு கோரும் வரை பதிலடி கொடுக்க இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு” என்று எச்சரித்தார்.
இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள ஹேம்ராஜின் வீட்டுக்கு நேரில் சென்றனர், பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர். (மேலேயுள்ள போட்டோ)
அங்கு ஹேம்ராஜின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மா, “ஹேம்ராஜின் தலையை அவர்கள் கொடுக்காவிட்டால் அங்கு 10 பாகிஸ்தான் வீரர்களின் தலையை வெட்டியெறிய வேண்டாமா? இதற்கு ஒரு பதிலடி தராமல் நாம் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள கூடாது” என்றார்.

காஜல்: கால்ஷீட் வேணும்னு கேட்டா ஒன் சி தாங்க
கால்ஷீட் வேணும்னு கேட்டா ஒன் சி தாங்கன்னு கறாரா சொல்றதோட மத்த
செலவெல்லாம் தனின்னு சொல்றாராம் காஜல் . இதுல கலங்கிப்போற தயாரிப்புங்க
அபவுட்டர்ன் ஸ்டெப் போடுறாங்களாம்... போடுறாங்களாம்... சம்பளம் ரொம்ப
உசத்திட்டீங்களேன்னு யாராவது நடிகைகிட்ட கேட்டா, ஒரு காலத்துல என்னை ராசி
இல்லாதவன்னு சென்டிமென்ட் பாத்து வேணாம்னு ஒதுக்க¤னவங்ககிட்டதான்
கேக்கறேன். இது தப்பில்லேன்னு வேலுநாயக்கர் பாணியில பஞ்ச் அடிக்கிறாராம்...
அடிக்கிறாராம்...
புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (81)
புலிகளினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து துயர்துடைப்பதற்கு உள்நாட்டு – வெளிநாட்டுப் பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்! புலிகள் வடக்கு கிழக்கைத் தமது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில் அங்கு வாழ்ந்த மக்களுக்கு புலிகளின் இரும்புச் சப்பாத்துகளின் ‘சுவை’ புரிந்திருக்கும். அந்த வாழ்க்கையிலிருந்து தப்பி வெளிநாடுகளுக்கு ஓடிப்போனவர்களுக்கு அந்தப் பயங்கரமான வலியின் வேதனை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. அதனால்தான் யுத்தத்தில் சிக்காமலும், புலிகளின் அதிகார தர்பாரில் அகப்படாமலும் புலம்பெயர் நாடுகளில் வாழும் பலர், புலிகளுக்கு விசுவாசமாகவும், பொழுதுபோக்காகத் தமிழ் தேசியம் பேசுபவர்களாகவும் இப்பொழுதும்கூட இருக்கிறார்கள்.
இந்தச்
சிறை வாழ்க்கையில் ஒருவர் மிகவும் கூடுதலாகப் பாதிக்கப்படுவது முதலில்
மனோரீதியாகத்தான். மனிதன் தான் தோன்றிய காலத்திலிருந்து சக மனிதர்களுடன்
இணைந்த ஒரு கூட்டு வாழ்க்கையையே வாழ்ந்து வந்திருக்கிறான். இன்றைய உச்சகட்ட
முதலாளித்துவ வளர்ச்சி நிலையால் கிராமிய வாழ்க்கை, கூட்டுக் குடும்ப
வாழ்க்கை மட்டுமின்றி, தனிப்பட்ட குடும்பங்களே சிதைவடைந்த நிலையிலும்கூட,
தனக்கு உறவானவர்கள் இல்லாவிட்டாலும் தான் வாழும் சூழலில் வாழும் இதர
மனிதர்களுடன் ஏதோ ஒரு வகையில் உறவு கொண்டதாகவே அவனது வாழ்வு அமைந்துள்ளது.
அதிலும் குடும்பம்
என்பது இன விருத்திக்காக மட்டுமின்றி, பரஸ்பர உறவுகளை, உதவிகளை,
நம்பிக்கைகளைக் கட்டியெழுப்புவதற்கு மட்டுமின்றி, ஒரு மனிதனின் உடலியல்
உளவியல் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. அதனால்தான் மனித சமூகத்தின் மிக
அடிப்படையான அலகு குடும்ப அமைப்பே என ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு மனிதனை
அழிப்பதானால், எல்லாவற்றையும்விட அவனை அவனது குடும்பத்தில் இருந்து
பிரித்து வைத்தாலே போதும். அவன் உருக்குலைந்து போவான். ஆதிகாலத்தில் மன்னர்
ஆட்சிகள் நிலவிய காலத்தில் சமூக ரீதியிலான குற்றம் இழைப்பவர்களை அவர்களது
குடும்பங்களிலிருந்து தனிமைப்படுத்தி அவர்களைத் தண்டிப்பதற்காக மன்னர்கள்
இந்த சிறை வாழ்க்கை முறையை உருவாக்கியதாக வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்ள
முடிகிறது. அதற்கு முன்னர் மக்கள் கணக் குழுக்களாக வாழ்ந்த காலத்தில்,
இரண்டு குழுக்களுக்கிடையே நடைபெறும் யுத்தத்தில் வெற்றிபெற்ற குழுவினர்
தோற்றவர்களைக் கொன்று விடுவது வழமையாக இருந்தது. பின்னர் அவர்களைக்
கொல்லாது தமது அடிமைகளாக மாற்றித் தமக்கான உடலுழைப்பில் ஈடுபடுத்தினர்.
ஆனால் நாம் வாழும் இந்த
நவீன காலத்தில் பல நாடுகளில் அதிகாரத்தில் இருப்பவர்கள் இராணுவ ரீதியாக
மட்டுமின்றி, அரசியல் ரீதியாகத் தமக்கு எதிராக இருப்பவர்களையும் சிறையில்
அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்துவது ஒரு வழிமுறையாக வந்துவிட்டது. இந்த
விடயத்தில் புலிகள் இரண்டு வழி முறைகளையும் ஏககாலத்தில் கையாண்டனர். ஒரு
வழி மன்னராட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட தமக்கு எதிரானவர்களைச் சிறைகளில்
அடைக்கும் வழிமுறை. உதாரணமாக புலிகளுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடாத
என் போன்றவர்கள் மீது கையாளப்பட்ட முறை.
இன்னொரு முறை,
மன்னராட்சிக் காலத்துக்கு மிகவும் முந்திய முறையாகும். அதாவது தமக்கு
எதிரான போட்டி இயக்கத்தவர்களை முற்றாக அழித்து விடுவது. ரெலோ,
ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், என்.எல்.எப்.ரி பிற்காலத்தில் ஈ.பி.டி.பி என்பன
போன்ற மாற்று இயக்கங்கள் மீது இந்த முறையையே புலிகள் கையாண்டனர்.
சிங்கப்பூரின் முதல் பெண் சபாநாயகர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்
சிங்கப்பூரின் முதல் பெண் சபாநாயகராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் பதவியேற்றுள்ளார்.இந்திய
வம்சாவழியைச் சேர்ந்த ஹலிமா யாகோப் என்ற பெண் சிங்கப்பூர்
நாடாளுமன்றத்தின் முதல் பெண் சபாநாயகராகி சரித்திரம் படைத்துள்ளார். இவர்
ஏற்கனவே சபாநாயகராக இருந்த மைகேல் பால்மர் என்பவருக்கு பதிலாக
பொறுப்பேற்றுள்ளார். மைகேல் பால்மர் திருமணத்திற்கு பிந்தைய முறைகேடான உறவு
சர்ச்சைகளால் சபாநாயகர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்
போலி பத்திர விவகாரம் அல்லது மன்னார்குடி மோசடி விவகாரம்
கடலை வியாபாரி ராமலிங்கத்தை ஏதோ ஒரு கேஸில் உள்ளே போட ஏன் இந்த துடிப்பு?
Viruvirupu
ரூ.27,500 கோடி அமெரிக்க கருவூலப்பத்திரங்கள் போலியானவை என்று பார்க்ளேஸ் வங்கி சொன்னாலும், இன்னமும் எழுத்து பூர்வமாக கொடுக்கவில்லை என்று தெரிகிறது. அது வந்து சேர்ந்தால், மத்திய அரசால் அவர் கைது செய்யப்படுவார் என்கிறார்கள். (எப்படி? அந்த பத்திரங்களை வைத்து யாரையும் ஏமாற்றவிவையே?)
தமிழக அரசு தன் பங்குக்கு அவர் மீதுள்ள பழைய வழக்கை தூசி தட்டத் தொடங்கியுள்ளது.
ராமலிங்கம் பழைய வியாபாரத்தின்போது மன்னார்குடியைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவரை ரூ. 5,500க்கு மோசடி செய்திருந்தார் என்பதே பழைய வழக்கு. (அந்த தொகை 4 லட்சம் என்று வேறு ஒரு தகவல் உண்டு) இந்த தொகையை அவர் திருப்பி கொடுக்காததால் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
அந்த வழக்கில் ராமலிங்கம், “என்னிடம் எதுவுமே இல்ரை” என்று கோர்ட்டு மூலம் திவால் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இப்போது, ரூ.27,500 கோடி அமெரிக்க கருவூலப்பத்திரங்கள் நிஜமானவை. அவை என்னுடையவைதான் என்கிறார். அதை வைத்துக்கொண்டு, இவரை பிடித்து உள்ளே போடலாமா என விசாரித்து வருகிறது, தாராபுரம் போலீஸ்.
மொத்தத்தில், போலி பத்திர விவகாரம் அல்லது மன்னார்குடி மோசடி விவகாரம் என ஏதாவது ஒரு வழக்கில் ராமலிங்கத்தை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருவது புரிகிறது.
இதற்குள் ‘வேறு கதை’ ஏதோ ஒன்று நிஜமாக உள்ளது.
திங்கள், 14 ஜனவரி, 2013
Photo Journalism சத்தில் நிலைத்துவிட்ட பெயர் ரகுராய்
போட்டோ ஜர்னலிசம், இந்திய பத்திரிகைகளுக்கு உயிரோட்டமாக இருந்து வருவது
மறுக்க முடியாத உண்மையாகும். எழுத்துகளால் வடிக்க முடியாத உணர்வுகளை,
ஃபோட்டோ ஜர்னலிசம், சுலபமாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வலிமை
உடையது.இந்தியாவிலுள்ள புகைப்பட கலைஞர்களில் ஒருவரான ரகுராய், கடந்த 47 ஆண்டுகளாக, பத்திரிகைகளுக்கு அளித்த பங்கு சாதாரணமானதல்ல.இன்றைய
நவீன இந்தியாவின் சமூக வளர்ச்சியை தனிப்பட்ட முறையில், துணிச்சலுடன்
புகைப்படங்களாக எடுத்து வெளியிட்ட வகையில், இந்திய ஃபோட்டோ ஜர்னலிசத்தில்
அவருக்கு தனியிடம் உண்டு
நாடெங்கும் ஓடும் பஸ்களில் பாலியல் பலாத்காரம்
சண்டிகார்:டில்லியைப் போலவே, பஞ்சாபிலும், ஒரு மருத்துவ மாணவி, பஸ்
டிரைவர் மற்றும் கண்டக்டரால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்,
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில், டிசம்பரில், மருத்துவ
மாணவி ஒருவர், ஒடும் பஸ்சில், வெறிக் கும்பலால் பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டார். சிகிச்சை பலனின்றி, அந்த மாணவி, உயிரிழந்தார். இதைத்
தொடர்ந்து, டில்லியில், பெரும் போராட்டம் வெடித்தது.இந்த சம்பவம்
ஏற்படுத்திய சோகச் சுவடு மறைவதற்குள், தற்போது, பஞ்சாபிலும், இதேபோன்ற
அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில்
உள்ள, குல்கா என்ற ஊரைச் சேர்ந்த இளம் பெண், அங்குள்ள மருத்துவ கல்லூரியில்
படித்து வருகிறார்.நேற்று முன் தினம் மாலை, அருகில் உள்ள ஊருக்கு சென்று
விட்டு, தன் சொந்த ஊருக்கு, பஸ்சில் திரும்பிக் கொண்டிருந்தார். ஆனால்,
இவரது ஊரில், பஸ் நிற்காமல் சென்றது. இதுகுறித்து, கண்டக்டரிடம், அந்த
மாணவி, புகார் செய்தார் கண்டக்டரும், அதை பொருட்படுத்தவில்லை.
மறைவான இடத்தில் பஸ்சை நிறுத்தி விட்டு, அங்குள்ள ஒதுக்குப்புறமான
இடத்துக்கு, கண்டக்டரும், டிரைவரும், மாணவியை கடத்திச் சென்றனர்.மேலும்
ஐந்து பேர், அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். ஏழு பேரும், அந்த மாணவியை
பாலியல் பலாத்காரம் செய்தனர். இதன்பின், அவரை, பஸ்சில் மீண்டும் ஏற்றி,
அவரது சொந்த ஊருக்கு அருகே விட்டு விட்டு, தப்பி ஓடி
விட்டனர்.பாதிக்கப்பட்ட மாணவி, போலீசில் புகார் செய்ததை அடுத்து, ஐந்து
பேரை போலீசார் கைது செய்துள்ளனர்; மற்ற இருவரை தேடி வருகின்றனர். இந்த
சம்பவம், பஞ்சாபில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்
ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு சம்பவம்:
மகாராஷ்டிரா,
அகமது நகர் மாவட்டம், ஷீரடி பகுதியில், கடந்த, 11ம் தேதி, சிறுமியின் உடல்
ஒன்று, அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பாம்பன் பாலத்தில் மோதியது இந்திய கடற்படையின் எண்ணைக் கப்பல்!
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலத்தில், கப்பல் ஒன்று மோதியதால்
ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தக் கப்பல், கடந்த 9-ம் தேதி,
ராமேஸ்வரம் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் பாம்பனில் தரைதட்டிய இரண்டு
கப்பல்களில் ஒன்று. தரைதட்டிய கப்பல்கள் பாலத்தில் மோதும் அபாயம் உண்டு
என்று 9-ம் தேதியில் இருந்தே அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.
ஆனால், கப்பல் மீட்கப்படாமல் விடப்பட்டிருந்தது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 9-ம் தேதி, ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மழையுடன் பலத்த காற்று நேற்று வீசியது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதில் பாம்பன் ரயில் பாலத்தை கடப்பதற்காக காத்திருந்த இரண்டு சரக்குக் கப்பல்கள் தரைதட்டின.
இதில் ஒன்று, இந்திய கடற்படைக்கு சொந்தமான எண்ணெய் கப்பல். மும்பைக்கு செல்லும் வழியில் ராமேஸ்வரம் கடலால் சென்றுகொண்டிருந்தது. பாம்பன் பாலம் அருகே இந்தக் கப்பல் தரை தட்டியது. பாம்பன் ரயில் பாலத்திலிருந்து 100 மீட்டர் தூரத்தில் தரைதட்டிய நிலையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது.

மணிரத்னம் அதிரடி காமெண்ட்: “தமிழர்கள் லட்சணத்துக்கு துளசியின் முதுகே ஜாஸ்தி!”
Viruvirupu,
விவகாரம் என்னவென்றால், சமீபத்தில், கடல் படத்தின் ஆடியோ ரிலஸை ஹைதராபாத்தில் வைத்து நடத்தினார் மணி ரத்தினம். ஹீரோ கௌதம் கார்த்திக், துளசி நாயர் (ராதா மகள்) ஆகியோரின் முகங்கள் அதுவரை வெளியே காட்டியிராத நிலையில், அவர்களையும் தெலுங்கு தேசத்தில்தான் அறிமுகப் படுத்தினார் மணி ரத்தினம்.
அதற்குமுன், கடல் படத்தின் ஸ்டில் ஏதாவது கொடுங்களேன் என்று நடையாக நடந்த சில நிருபர்களுக்கு, மணி ஆபீஸில் இருந்து கொடுக்கப்பட்ட ஸ்டில்லில் துளசி நாயரின் முதுகுதான் தெரிந்தது, முகம் தெரியவில்லை.
கடல் படத்தின் ஆடியோ ரிலஸை ஹைதராபாத்தில் முடித்துக்கொண்டு வந்த மணியிடம் சீனியர் நிருபர் ஒருவர், “என்னங்க தெலுங்குகாரர்களுக்கு ஹரோயின் முகத்தை காட்டுறீங்க, நமக்கு முதுகு தெரியும் ஸ்டில் கொடுக்கிறீங்க” என்று கேட்டதற்கு மணிரத்னம் கூறிய பதில்தான் விவகாரம்.
“ஆமா, தமிழ் நாட்ல என் படம் ரிலீஸானா தியேட்டரில் ரெண்டாம் நாளே கூட்டமில்லை. எனக்கு முதுகு காட்டிவிட்டு போகும் ரசிகர்களுக்கு, துளசியின் முதுகே போதும்” என்பதுதான் அவரது பதில்!
இருவர் படத்தில்: “உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு”… கடல் படத்தில், “முகம் தெலுங்குக்கு, முதுகு தமிழுக்கு!”… சூப்பர்!
டைரக்டர் மணிரத்னம் மீது செம ஏற்றத்தில் உள்ளார்கள், சில சினிமா
நிருபர்கள். இவர்கள் அவரிடம் தடாலடியாக கேள்வி கேட்க, அவர் அதிரடியாக பதில்
சொன்னதில் ஏற்பட்டுள்ள ஊடல் இது.
விவகாரம் என்னவென்றால், சமீபத்தில், கடல் படத்தின் ஆடியோ ரிலஸை ஹைதராபாத்தில் வைத்து நடத்தினார் மணி ரத்தினம். ஹீரோ கௌதம் கார்த்திக், துளசி நாயர் (ராதா மகள்) ஆகியோரின் முகங்கள் அதுவரை வெளியே காட்டியிராத நிலையில், அவர்களையும் தெலுங்கு தேசத்தில்தான் அறிமுகப் படுத்தினார் மணி ரத்தினம்.
அதற்குமுன், கடல் படத்தின் ஸ்டில் ஏதாவது கொடுங்களேன் என்று நடையாக நடந்த சில நிருபர்களுக்கு, மணி ஆபீஸில் இருந்து கொடுக்கப்பட்ட ஸ்டில்லில் துளசி நாயரின் முதுகுதான் தெரிந்தது, முகம் தெரியவில்லை.
கடல் படத்தின் ஆடியோ ரிலஸை ஹைதராபாத்தில் முடித்துக்கொண்டு வந்த மணியிடம் சீனியர் நிருபர் ஒருவர், “என்னங்க தெலுங்குகாரர்களுக்கு ஹரோயின் முகத்தை காட்டுறீங்க, நமக்கு முதுகு தெரியும் ஸ்டில் கொடுக்கிறீங்க” என்று கேட்டதற்கு மணிரத்னம் கூறிய பதில்தான் விவகாரம்.
“ஆமா, தமிழ் நாட்ல என் படம் ரிலீஸானா தியேட்டரில் ரெண்டாம் நாளே கூட்டமில்லை. எனக்கு முதுகு காட்டிவிட்டு போகும் ரசிகர்களுக்கு, துளசியின் முதுகே போதும்” என்பதுதான் அவரது பதில்!
இருவர் படத்தில்: “உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு”… கடல் படத்தில், “முகம் தெலுங்குக்கு, முதுகு தமிழுக்கு!”… சூப்பர்!
ஞாயிறு, 13 ஜனவரி, 2013
அல்லாஹ் மீது சத்தியமாக நான் கழுத்தை நசிக்கவில்லை ரிசானாவில் இறுதி வாக்கு மூலக் கடிதம் வெளியானது- கடிதம் இணைப்பு
பாடசாலை சிறுமியாக ரிசானா இருந்த போது...
நான் குழந்தையின் தொண்டயை மெதுவாக தடவினேன். குழந்தை கண் மூடியிருந்தபடியால் குழந்தை தூக்கமென நினைத்தேன. அல்லாஹ் மீது சத்தியமாக குழந்தையை கொல்ல நான் கழுத்தை நசிக்கவில்லை என சவூதி அரசாங்கத்தினால் கழுத்து வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட ரிசானா நபீக் இறுதியாக தனது வாக்குமூலக் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். இவ்வாறு அவர் எழுதியதாக கொலை செய்த சவூதியினால் வெளியிடப்பட்டதாக வெளியாகியுள்ள கடித்ததையும் உங்களுக்காக இணைத்துள்ளோம்.
30.01.2007,
அல் தவாத்மி சிறைச்சாலை,
அல் தவாத்மி,
இலங்கையில் எனது முகவரி எம்எஸ்.நபீக், சாலி நகர் மூதூர்
எனது உண்யைமான வயது 19, நான் பிறந்த திகதி 02.02.1988 எனது வயதை எனது சப் ஏஜன்ட் அஜிர்தீன் என்பவர் 2.2.1982 எனக்குறிப்பிட்டு கடவச்சீட்டை வழங்கினார்.
நான் 01.04.2005ல் சவூதி அரேபியாவுக்கு வந்தேன். நான் சவூதி அரபியாவில் ஒன்றரை மாதங்கள் வீட்டில் வேலை செய்தேன்.
இந்த வீட்டில் சமைத்தல், களுவுதல், 4 மாதக் குழந்தையை பார்த்தல் போன்ற ஆகியவற்றை செய்து கொண்டு இருந்தேன்.
குறித்த சம்பவ தினம் ஞாபகமில்லை. அது ஒரு ஞாயிற்றக்கிழமை பகள் 12.30 மணியிருக்கும் அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை. அங்குள்ள 4மாதக்குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன் வழமை போல அன்றும் பாலூட்டிக்கொண்டிருக்கும் போது குழந்தையின் மூக்கின் மூலம் பால் வெளியேவர ஆரம்பித்தது.
அப்போது நான் குழந்தையின் தொண்டயை மெதுவாக தடவினேன். குழந்தை கண் மூடியிருந்தபடியால் குழந்தை தூக்கமென நினைத்தேன்.
குழந்தையின் தாய் எனது எஜமானி 1.30 மணியளவில் வந்து சாப்பிட்டு விட்டு பிள்ளை பார்த்தார். அதன் பின்னர் அந்த எஜமானி எனக்கு செருப்பால் அத்துவிட்டு குழந்தையை எடுத்தக்கொண்டு போனார்.

ஆண்கள் பெண்களின் கவர்சிகரமான ஆடைகளை அணிந்து போராட்டத்தில்
Skirted, they walked, 25 of them, all in their mid-20s,
inviting intense and intriguing glares and glances, to disprove the
common notion that anything ''skirted'' is inviting to be ''raped.''
பெங்களூரு : பெண்கள் கவர்ச்சியாக உடை உடுப்பதால்தான் ஆண்கள் பெண்கள் மீது வெறி கொள்கிறார்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு செய்தியாக இளைஞர்கள இன்று பெண்களின் கவர்சிகரமான ஆடைகளை அணிந்து வித்தியாசமான கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
http://www.deccanherald.com/content/304804/men-skirts-pledge-support-women.html
சென்னையில் 1000 உணவகங்களில் இட்லி ரூ.1! தயிர் சாதம் ரூ.3!
ஏழை மற்றும் கூலித் தொழிலாளர்களின் வசதிக்காக சென்னை முழுவதும் ஆயிரம்
சிற்றுண்டி உணவகங்களை திறக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதற்கட்டமாக சென்னை நகரில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் ஒரு சிற்றுண்டி உணவகம் என்ற அடிப்படையில் 200 சிற்றுண்டி உணவகங்களை தொடங்க முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த உணவகங்களில் இட்லி ஒன்று 1 ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.
இந்த திட்டத்திற்காக 500 மெட்ரிக் டன் அரிசியை, கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்ற சலுகை விலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் சென்னை மாநகராட்சிக்கு வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இது ஒரு நல்ல திட்டம். மற்றைய நகரங்களுக்கும் இதே திட்டத்தை நீடித்தால் நல்லது. viruviruppu.com

வாழ்கை என்பது ஒரு process அது ஒரு result அல்ல.. quantum physics
நமது சமுதாயம் மிகவும் கோபக்கார சமுதாயமாகும். ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள
இனம்புரியாத அசுகை அல்லது வெறுப்பு மிகவும் வேதனை அளிக்க கூடிய அளவு
காணப்படுகிறது.
இதைப்பற்றி சொன்னால் பலரும் கடந்தகால கொடிய யுத்தம் தான்
காரணம் என்று கூறி சுலபமாக தப்பிக்க பார்கிறார்கள்.உண்மை அதுவல்ல.இன்னும் சரியாக சொல்லப்போனால் இந்த யுத்தம் உருவானதற்கே நமது ஆழ்மனதில் ஊறி
இருந்த குரோத மனப்பான்மை தான் காரணமாக இருக்குமோ என்று
எண்ணத்தோன்றுகிறது.நமது ஆழ்மனதில் உள்ள உணர்சிகள் அல்லது எண்ணங்கள்தான் யதார்த்த நிகழ்வுகளாக
உருவெடுக்கின்றன. எமது இல் என்ன உள்ளதோ பெரும்பாலும் அதுவே
யதார்த்த நிகழ்காலமாக உருவாகிறது.எம்மிடம் தான் கோபம் வெறுப்பு பொறாமை அவநம்பிக்கை போன்ற நெகடிவ் எண்ணங்கள் தாராளமாக உண்டே?இதைத்தானே சமயங்களும் சொன்னது? தற்போது விஞ்ஞானமும் சொல்கிறது.
quantum physics என்று தற்போது அழைக்கப்படும் விஞ்ஞானம் இந்த பேருண்மையை விளக்க முற்படுகிறது.எண்ணங்கள் எதுவுமே வீணாவதில்லை ஒவ்வொரு எண்ணமும் எல்லையற்ற சக்தியை
தன்னகத்தே கொண்டுள்ளது. இதைதான் மனம்போல வாழ்வு என்று தெளிவாக முன்னோர்
சொன்னார்.வாழ்வு என்பது எதோ இரு சக்திகளின் இணைவுதான். இரவும் பகலும் போலவோ அல்லது
பூனையும் பூனையும் போன்ற எதோ இரு ஜீவராசிகள் இணையும்போது தான் வாழ்வு
உண்டாகிறது. இந்த இணைவு என்பது தாம்பத்தியம் மட்டும் அல்ல. ஒரு சிறுவனும்
இன்னொரு சிறுவனும் கூட சிறிது பேசி மகிழும் அந்த சில வினாடிகள்
அவ்விருவரும் வாழ்கின்றனர்.இரு ஜீவராசிகள் ஒன்றினால் ஒன்று ஈர்க்கப்படும்போது ஏற்படும் மகிழ்வே வாழ்வு
எனப்படுகிறது. அனேகமாக இரு அறிஞர்கள் அல்லது இரு ரசிகர்கள் போன்ற இருவர்
சேர்ந்து பகிரும் சில வினாடிகளோ வருடங்களோ வாழ்வுதான் நமக்கு அதாவது நம் மக்கள் சிரிப்பதற்கு கூட ஏதோ ஏதோ கணக்கு
கூட்டல் எல்லாம் போடுவார்கள்.ஆரிய கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்ணாய்
இரு என்று வளர்க்கப்பட்ட நாம் ஆரியகூதும் ஆட தெரியாமல் காரியத்தையும்
கோட்டை விட்டதும் தான் ஊர் அறிந்த விடயமாச்சே? ஆனால் இன்னும் ஏதாவது பாடம் இதில் கற்றோமா என்றால்......வாழ்கை என்பது ஒரு process வாழ்கை என்பது ஒரு result அல்ல.
process இல் ஈடுபடுபவருகே வாழ்கை வசப்படுகிறது. Result என்பது முடிவில்
வருவது ரிசல்ட்இலேயே சதா தன கவனத்தையும் சக்தியையும் குவிப்பவற்கு வாழ்க்கை
அவரை விட்டு போய்விடும். அவர்தான் ரிசல்ட் டை நோக்கி ஒடுபவராசே? அதாவது
முடிவை நோக்கி ஓடுபவர்.வாழ்கை என்பது ஒரு வகையில் ஆரியகூத்துதான் காரியத்தில் கண்ணாயிருப்பது என்பது சரியாகசொல்லபோனால் முடிவை நோக்கி ஒடுதலாகும். radhamanohar.blogstpot.com