செவ்வாய், 15 ஜனவரி, 2013

மோடியை விட பயங்கரவாதியான சுஷ்மா சுவராஜ்

10 பாகிஸ்தான் வீரர்களின் தலையை வெட்டி எறிய வேண்டாமா?” சுஷ்மா ஆவேசம்!

ஒரு பதிலடி தரவேண்டும்!Viruvirupu,
ஒரு பதிலடி தரவேண்டும்!
“பாகிஸ்தான் ராணுவத்தினரால் துண்டிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரரின் தலையை மரியாதையாக எம்மிடம் ஒப்படைக்கவில்லை என்றால், அங்கு 10 பாகிஸ்தான் வீரர்களின் தலையை வெட்டியெறிய வேண்டாமா?” இவ்வாறு ஆவேசமாக பேசியுள்ளார், மக்களவை எதிர்கட்சி தலைவர் (பா.ஜ.க.) சுஷ்மா சுவராஜ்.
காஷ்மீர் மாநிலத்தில், எல்லைக்கட்டுப்பாடு கோட்டை தாண்டி வந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் தொடுத்தது. இதில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரு இந்திய ராணுவ வீரர்களை கொன்ற பாகிஸ்தான் ராணுவம், அவர்களில் ஹேம்ராஜ் என்பவரது தலையை வெட்டி எடுத்துச் சென்றனர்.
நேற்று பிற்பகல் இந்திய ராணுவம் சார்பில் பாகிஸ்தான் ராணுவத்துடன் பேசிய பிரிகேடியர் டி.எஸ்.சான்டு, “இந்திய வீரர் ஹேம்ராஜின் தலையை துண்டித்து எடுத்து சென்றதற்காக பாகிஸ்தான் ராணுவம் பகிரங்க மன்னிப்பு கோரும் வரை பதிலடி கொடுக்க இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு” என்று எச்சரித்தார்.
இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள ஹேம்ராஜின் வீட்டுக்கு நேரில் சென்றனர், பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர். (மேலேயுள்ள போட்டோ)
அங்கு ஹேம்ராஜின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மா, “ஹேம்ராஜின் தலையை அவர்கள் கொடுக்காவிட்டால் அங்கு 10 பாகிஸ்தான் வீரர்களின் தலையை வெட்டியெறிய வேண்டாமா? இதற்கு ஒரு பதிலடி தராமல் நாம் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள கூடாது” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக