சனி, 19 ஜனவரி, 2013

தமிழக பல் மருத்துவ கவுன்சில் தலைவர் குணசீலன் கைது!

சென்னை: பல் மருத்துவ மேற்படிப்புக்கு லஞ்சம் அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், தமிழக பல் மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் குணசீலன் ராஜனை, சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.சென்னை அருகே ஒரு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பல் மருத்துவ கல்லூரியில் பட்ட மேற்படிப்பு தொடங்குவதற்கு அனுமதி வழங்க 25 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சில நாட்களுக்கு முன்னர், இந்திய பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினர் டாக்டர் முருகேசன் கைது செய்யப்பட்டார். மேலும், அந்த கல்லூரியின் நிர்வாகி ராமபத்திரன் மற்றும் கருணாநிதி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பழனி ஆகிய 3 பேரையும் சிபிஐ அதிகாரிகள் கடந்த 7ம் தேதி கைது செய்தனர்.இந்நிலையில் அவர்களை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் கிடைத்த தகவல் அடிப்படையில், இந்திய மருத்துவ கவுன்சிலர் உறுப்பினரும் தமிழக பல் மருத்துவ கவுன்சில் தலைவருமான டாக்டர் குணசீலன் ராஜன், நேற்று காலை சிபிஐ அலுவலகத்திற்கு சென்று தம் மீதான புகார் குறித்து விளக்கம் அளித்தார்.இதனையடுத்து அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக