வியாழன், 17 ஜனவரி, 2013

பெண்கள் மது அருந்துவது அவரவர் விருப்பம்! அதில் தலையிடக் கூடாது! நடிகை த்ரிஷா பதில்!

சமர் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் 17.01.2013 வியாழன் அன்று நடந்தது. படத்தின் நாயகன் விஷால், நாயகி த்ரிஷா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.இந்த படத்தில் த்ரிஷா மது அருந்துவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதுபற்றி த்ரிஷாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, நான் மது அருந்துவதுபோல் காட்சி இடம்பெற்றால் அந்த படம் வெற்றி அடைகிறது என்று பலர் என்னிடம் தெரிவித்தார்கள். நான் இதனை இந்தப் படத்தின் இயக்குநரிடம் சொன்னேன். அதனால்தான் இந்தப் படத்தில் நான் மது அருந்துவது போல் காட்சி அமைத்தார். மது அருந்துவதுபோல் நான் நடிப்பது எனக்கு சிரமமாக தெரியவில்லை. ஏனென்றால் நான் அந்த காட்சிகளில் பெப்சிதான் குடிக்கிறேன். அது உண்மையான மது அல்ல என்றார். இந்த காலத்து பெண்கள் மது அருந்துவது சரியா? தவறா என்ற கேள்விக்கு, அது அவரவர் விருப்பம் சார்ந்தது. ஒருவருடைய தனிப்பட்ட விருப்பத்தில் நாம் தலையிடக் கூடாது என்றார். nakheeran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக