திங்கள், 14 ஜனவரி, 2013

மணிரத்னம் அதிரடி காமெண்ட்: “தமிழர்கள் லட்சணத்துக்கு துளசியின் முதுகே ஜாஸ்தி!”

Viruvirupu,
“முகம் தெலுங்குக்கு, முதுகு தமிழுக்கு!”

“முகம் தெலுங்குக்கு, முதுகு தமிழுக்கு!”
டைரக்டர் மணிரத்னம் மீது செம ஏற்றத்தில் உள்ளார்கள், சில சினிமா நிருபர்கள். இவர்கள் அவரிடம் தடாலடியாக கேள்வி கேட்க, அவர் அதிரடியாக பதில் சொன்னதில் ஏற்பட்டுள்ள ஊடல் இது.
விவகாரம் என்னவென்றால், சமீபத்தில், கடல் படத்தின் ஆடியோ ரிலஸை ஹைதராபாத்தில் வைத்து நடத்தினார் மணி ரத்தினம். ஹீரோ கௌதம் கார்த்திக், துளசி நாயர் (ராதா மகள்) ஆகியோரின் முகங்கள் அதுவரை வெளியே காட்டியிராத நிலையில், அவர்களையும் தெலுங்கு தேசத்தில்தான் அறிமுகப் படுத்தினார் மணி ரத்தினம்.
அதற்குமுன், கடல் படத்தின் ஸ்டில் ஏதாவது கொடுங்களேன் என்று நடையாக நடந்த சில நிருபர்களுக்கு, மணி ஆபீஸில் இருந்து கொடுக்கப்பட்ட ஸ்டில்லில் துளசி நாயரின் முதுகுதான் தெரிந்தது, முகம் தெரியவில்லை.
கடல் படத்தின் ஆடியோ ரிலஸை ஹைதராபாத்தில் முடித்துக்கொண்டு வந்த மணியிடம் சீனியர் நிருபர் ஒருவர், “என்னங்க தெலுங்குகாரர்களுக்கு ஹரோயின் முகத்தை காட்டுறீங்க, நமக்கு முதுகு தெரியும் ஸ்டில் கொடுக்கிறீங்க” என்று கேட்டதற்கு மணிரத்னம் கூறிய பதில்தான் விவகாரம்.
“ஆமா, தமிழ் நாட்ல என் படம் ரிலீஸானா தியேட்டரில் ரெண்டாம் நாளே கூட்டமில்லை. எனக்கு முதுகு காட்டிவிட்டு போகும் ரசிகர்களுக்கு, துளசியின் முதுகே போதும்” என்பதுதான் அவரது பதில்!
இருவர் படத்தில்: “உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு”… கடல் படத்தில், “முகம் தெலுங்குக்கு, முதுகு தமிழுக்கு!”… சூப்பர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக