சனி, 19 ஜனவரி, 2013

காங்கிரஸ் துணைத் தலைவராக ராகுல் காந்தி

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும், கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அடுத்தப்படியாக கட்சியில் ராகுல் காந்தி செயல்படுவார் என்றும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் திவேதி தெரிவித்துள்ளார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ராகுலை துணைத் தலைவராக நியமிக்க ஏ.கே.அந்தோணி முன்மொழிந்தார். இதையடுத்து ராகுல் காந்தி தலைமையில் 2014 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறது காங்கிரஸ் கட்சி.
ராகுல் காந்தியை துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக