சனி, 19 ஜனவரி, 2013

சந்தானத்தின் சாயம் வெளுத்தது கண்ணா

கண்ணா லட்டு.. கதை என் கற்பனையில் உதித்த முத்து! என் சொத்து!!” -நடிகர் சந்தானம் viruviruppu.com
“நாமும் படம் தயாரிக்கலாம் என்று தோன்றியபோது, பல்வேறு கதைகள் பற்றியும் மற்றையவர்கள் சொன்னார்கள். அதே நேரத்தில் நானும் ஒரு கையை யோசித்தபோது, என் மனதில் உதித்த கதைதான், கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற பெயரில் உருவாகியுள்ளது. மூன்று பேர் ஒரு பெண்ணை காதலித்தால் எப்படி இருக்கும் என்று நான் யோசித்தேன். அதை படமாக்கினோம். இப்போது படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது” என்று கூறியுள்ளார், நடிகர் சந்தானம்.
“இந்தக் கதை மாத்திரமல்ல, மொத்தம் 4 கதைகளை யோசித்தேன். அவற்றில் ஒன்று வெளியாகிவிட்டது. மற்றைய மூன்றில் இரு கதைகளில் ஹீரோவுக்கும் எனக்கும் சமமான ரோல். நான்காவது கதையில் நான்தான் ஹீரோ. இந்த மூன்று படங்களையும் தயாரிப்பது தொடர்பாக தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன” என்றும் கூறியுள்ளார்

படம் ரிலீசுக்கு முன் சந்தானம் டி.வி. பேட்டி யொன்றில் பாக்யராஜின் இன்று போய் நாளைவா படத்தின் உரிமையை ராம நாராயணனிடம் இருந்தது. அதனால் அவருடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறேன் என்று கூறி இருந்தார். அந்த பேட்டி விவரங்களை பாக்யராஜ் கோர்ட்டில் சமர்பித்து கதை தன்னுடையது என்று உரிமை கோரியுள்ளார்.
இப்போது, “லட்டு கதை என் கற்பனையில் உதித்த முத்து! என் சொத்து கண்ணா!!” என்கிறார்.
அவரது கற்பனையில் உதித்து ரெடி பண்ணி வைத்திருப்பதாக கூறும் மற்றைய மூன்று கதைகளும் எவை என்பதை அறிய சினிமா (ஒரிஜினல்) கதாசிரியர்கள் ஆவலாக இருப்பார்கள். 

1 கருத்து:

  1. சந்தானத்தின் நடிப்பே நகைச்சுவை மன்னன் கௌண்டமனியிடம் சுட்டவை... இதில இந்த கதை வேறு...

    பதிலளிநீக்கு