வெள்ளி, 18 ஜனவரி, 2013

ராஜிவ் காந்திக்கு, ஜெயலலிதா முதல்வராக்குவதற்கு கடிதம் எழுதினார்

சென்னை: எம்.ஜி.ஆர்., நோய்வாய்ப்பட்டு செயல்படாமல் உள்ளார். எனவே, என்னை முதல்வராக்குவதற்கு உதவ வேண்டும் என, அப்போதைய பிரதமராக இருந்த ராஜிவ் காந்திக்கு, ஜெயலலிதா கடிதம் எழுதினார்,'' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.
தி.மு.க.,வின் கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில், சென்னை மயிலை மாங்கொல்லையில் நடந்த, பொங்கல் விழாவில், அவர் நேற்று பேசியதாவது:நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், எம்.ஜி.ஆர்., சிலையை திறந்து வைத்து, என்னை மிகக் கேவலமாக, முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார். முதல்வர் பதவிக்காக, எம்.ஜி.ஆரிடம்., நான் கெஞ்சியதாகவும், அவர் பிச்சை போட்டார் எனவும், ஜெயலலிதா கூறியுள்ளார்.எம்.ஜி.ஆரின்., சிலையை திறந்து வைத்து, அவரது அருமை, பெருமைகளை பேசாமல், என்மீது வசை பாடியுள்ளார். முதல்வராக எம்.ஜி.ஆர்., இருந்தபோது, ராஜிவ்காந்திக்கு, ஜெயலலிதா கடிதம் எழுதியது, பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. அக்கடிதத்தில், எனது செல்வாக்கைக் கண்டு, எம்.ஜி.ஆர்., பொறமை படுகிறார். இதனால், எனக்கு முக்கியத்துவம் கொடுக்க மறுக்கிறார். நோய்வாய்ப்பட்டு, செயல்பாடாமல் எம்.ஜி.ஆர்., உள்ளார். எனவே, என்னை முதல்வராக்க உதவுங்கள் என, ராஜிவ்காந்திக்கு எழுதிய கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந்நிலையில், நான் முதல்வர் பதவிக்கு கெஞ்சினேன் என, அபாண்டமாக குற்றம் சாட்டுகிறார். நாட்டில் நிலவும் மின்வெட்டு, அடிப்படை வசதிகள் பற்றாக்குறையை போக்க, நடவடிக்கை எடுக்காமல், என்மீது குற்றச்சாட்டுகளை, முதல்வர் வீசுவது தேவையற்றது. மக்கள் நலனை காப்பதற்கு, அவர் முக்கியத்துவம் கொடுத்தால் நல்லதாக இருக்கும்.வள்ளுவர் சிலை சிதிலமடைந்து வருவதை சுட்டிக்காட்டி, நடவடிக்கை எடுக்க வைத்ததால், என்மீது ஆத்திரப்படுகிறார். தேவையற்ற ஆத்திரத்தை கைவிட்டு, நாட்டு நலனில் முதல்வர் ஜெயலலிதா அக்கறை செலுத்துவதே சிறந்தது.இவ்வாறு, கருணாநிதி பேசினார்.தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலர் கனிமொழி எம்.பி., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்கமம் என்ற பெயரில் கனிமொழி நடத்தி வந்த நிகழ்ச்சிகள், சில ஆண்டுகளாக நின்று விட்டன. தற்போது, கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை என்ற பெயரில், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை அவர் துவங்கியுள்ளா dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக