வியாழன், 17 ஜனவரி, 2013

ரிசானா.. சுயநலமான மத சிந்தனையில் பொய் புரட்டு

ரிசானாவின் இரத்த விலை? -ஜே.பி. ஜோசப்பைன் பாபா

ரிசானா ரபீக் என்ற பெண்ணின் தண்டனை வழியாக சவுதிஅரசாங்கம்  மனிதஉயிரின் விலைக்கு பெரும் சவால் இட்டுள்ளது.மனித நேயமே அற்று இறைவன் பெயரால் ஷரியத் என்ற மதச்சட்டம் வழியாக தண்டனை என்ர பெயரில் ஒரு இளம் பெண்ணை படுகொலை செய்துள்ளது. கடந்த 2005ல் ஒரு பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்தார் என்று க்தனது 17வது வயதில் சவுதி ஜெயிலில் அடைக்கப்பட்டவர். 2012டிசம்பர் வரை தான் விடுதலையாகி விடுவோம் என நம்பியிருந்த அப்பெண் அவசரமாக பொறுபான தகவல் பெற்றோருக்கோ அப்பெண்ணினின் சொந்த தேசம் இலங்கைக்கோ தெரிவிக்காது கொலை செய்தது மிகவும் கண்டிக்க தக்கது.ஒரு பக்கம் இலங்கை அரசு இராணுவ கெடுபிடி மறுபக்கம் ஈழப்போராளிகள் அச்சுறுத்தல்! இந்த சூழலில் ஒன்பதாம் வகுப்புடம் படிப்பை நிறுத்தி விட்டு தன் ஏழ்மையான குடும்பத்தை கரை சேர்க்க எண்ணி, மொழி தெரியாத முற்றிலும் வேறுபட்ட ஒரு இன மக்களிடம் வீட்டு வேலை செய்ய வெளிநாடு செல்ல துணிந்து சென்ற  ரிசானாவை காத்திருந்தது கழுத்து அறுக்கப்பட்டு மரணிக்கும் கொடும் முடிவே. நபர்கள் கொண்ட சவுதி குடும்பத்தில் வீட்டு பணியாளராக அமர்த்தப்படுகின்றார். ஒரே மாதத்தில் அவ்வீட்டிலுள்ள 4 மாத குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று விட்டார் என கைது செய்யப்படுகின்றார். இந்த குழந்தை எவ்வாறாக மரித்தது என்று போஸ்டுமார்டம் கூட செய்யாது அடைக்கம் செய்த சவுதி காவல்துறை, ரிசானா தான் கொலை செய்தாள் என 2007ல் மரண தண்டனை விதிக்கின்றது.இந்த வீட்டிலிருக்கும் வேறு நபர்கள் இந்த குழந்தையை கொன்றனரா அல்லது இந்த குழந்தைக்கு மரபனுவாகவே வேறு ஏதும் நோய் இருந்ததா என்று பரிசோதிக்க இயலாத சவுதி அரசு, மதச்சட்டத்தின் பெயரில் 7 வருடம் சிறையில் கழித்த இளம் பெண்னைபடுகொலை செய்தது அதிர்ச்சியாக உள்ளது.
தற்போது  மரணப்பட்ட நாலுமாத குழந்தையின் சகோதர குழந்தை கூட தீர்க்க இயலாத நோயில் அகப்பட்டு மருத்துவம் பெற்று வருவதாகத் தான் செய்திகள் உள்ளன.பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோரிடம் இரத்த பணம் தருவதாக கெஞ்சியும் மன்னிக்க விரும்பாததால் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று சப்பை கட்டுகின்றது சவுதி அரசு. ஆனால்நாலே  மாதமானதாய்ப்பால் கொடுத்து வளர்க்க வேண்டிய குழந்தையை புட்டிப்பால் கொடுத்தது மட்டுமல்லாது குழந்தையை பராமரிக்க பணிந்தது குழந்தைகளை பராமரிக்கும் தாதியிடம் அல்லவெறும் 17 வயதான வீட்டு பணியாளரான இன்னொரு குழந்தையிடம்.ஆனால் சவுதி அரசாங்கம் தாயின் பொறுப்பற்றதனத்தை தண்டிக்காது, இரக்கமே அற்ற  நாலு மாத குழந்தை யின் தாயி மன்னிக்க இயலாது என்று கூறியதாக காரணம் காட்டி ஏழைத்  தாயின் 24 வயது மகளை கொலை செய்ய தூண்டியுள்ளார். எந்த பேச்சு வார்த்தைக்கும் குழந்தையின் பெற்றோர்கள் வரவில்லை என்பதை சுட்டி காட்டி ரிசானாவுக்கு தண்டனை வழங்கியிருப்பது சவுதியில் நீதி சரியாக பேணப்படுகின்றது என்றல்ல பொருள். அங்கு இருக்கும் ஒரு சாதாரண இரக்கமற்ற பெண்ணால் கூட அடுத்த நாட்டில் இருந்து வேலையாட்களாக வருபவர்களை தண்டிக்க இயலும் என்பதே!இந்த நிகழ்வை காணும் போது சவுதிக்காரர்கள் மனதில் இரக்கமே இல்லையா என ஆச்சரியம் கொள்ளவைக்கின்றது. ரிசானாவுடன் இன்னும் 45 மேலுள்ள இளம் பணியாளர் பெண்கள் மரண தண்டனை காத்து சிறையில் வாடுகின்றனர். இதில் பெருபாண்மையானவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எத்தியோப்பியா நாட்டு பெண்கள் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  இவர்களில் சிலரின் மேல் சாட்டும் குற்றம் பாலியலாக துன்புறுத்த வந்த தங்கள் வீட்டு யஜமானர்களை கொன்றனர்கள் என்பதே. சவுதி போன்ற நாட்டில் வேலை செய்யும் பல பெண்கள் கண்ணீர் தோராத கதைகளுடன் வாழ்கின்றனர் என்பது நாம் அறிந்ததே. அரபிகள் வீட்டு பணிப் பெண்களை பாலியலாக துன்புறுத்தியுள்ளதாகவும் அங்குள்ள யஜமான பெண்கள் கூட சில வீட்டு வேலையாட்களான ஆண்களை கெடுக்க நினைத்து நடக்காத சந்தர்பங்களில் அவர்களை சட்டத்தால் பழி தீர்த்து கொள்ளும் சம்வங்களும் கேட்டுள்ளோம்.
40-60 வருடங்கள் முன்பு ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக செல்வ செழிப்புடன் இருந்த இலங்கை என்ற தீவு இன்று போரால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு மக்களின் துயரின் ஒரு சிறு சம்பவம் மட்டுமே இது. சிறுதேனும் நல்ல வாய்ப்பு வசதி இருந்தால் 17 வயது மகளை பெற்றோர்கண் காணா நாட்டுக்கு அனுப்பியிருக்க மாட்டார்கள். இந்த பெண்ணுக்கு கொடுத்த தண்டனையால் இப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்த சகோதரகளும் வாழ் நாள் முழுதும் துக்கத்தில் கழிக்க தள்ளப்பட்டு விட்டனர். அந்த பெற்றோருக்கு தங்கள் மகளுக்கு நடந்த கொடும் செயலுக்கு தாங்களூம் காரணமாகி விட்டோமோ என்ற  குற்ற உணர்ச்சி  ஒருபோதும் மறையப்போவதில்லை. தாங்களும் தங்கள் அருமை மகள் மரணத்திற்க்கு காரணமாகி விட்டோமோ என கதறி துடித்திருப்பார்கள். இப்படியாக ஏழை மக்கள் கலங்கி தவிப்பதையா படைத்தவர் தான் விரும்புவாரா!
கண்ணகிக்கு நீதி தவறிய பாண்டிய மன்னனால் ஒரு முறை மதுரை எரிந்தது. சவுதியோ குழந்தையின் பெற்றோரை கைகாட்டி எங்கள் மதச்சட்டம் என்று கூறி தப்பிக்க பார்க்கின்றது. இலங்கை அரசு மட்டுமல்ல, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், ஐக்கிய நாட்டு சபை, மனிதநேய அமைப்புகள் என உலகத்தில் இருந்து வந்த அனைத்து  கோரிக்கையும்  சவுதி நாடு புரக்கணித்து உள்ளது.  சவுதிக்கு வேலையாட்கள் அனுப்புவதை எல்லா நாட்டில் இருந்தும் தடை செய்ய வேண்டும். சவுதியை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்த வேண்டும். ரிசானாவின் தாய் குழந்தையில் தாயை மன்னித்து விட்டதாக அறிவித்து தன் மன்னிக்கும் மனதை வெளிப்படுத்தியுள்ளார். ரிசானாவும் ஒரு இஸ்லாமிய பெண் தான். பல இஸ்லாமிய சகோதர்கள் சவுதி செய்தது தவறு என்று உணர்த்திய போது ஒரு சிலர் மதபிரசங்கம் செய்கின்றனர். கடவுள் என்ற பெயரில் மனிதநேயமில்லா செயல்களை யார் செய்தாலும் எந்த மதம் செய்தாலும் தண்டிக்கும் துணிவு ஒவ்வொருவருக்கும் வர வேண்டும். இங்கு சுயநலமான மத சிந்தனையில் பொய் புரட்டு பேசுவது வருந்த தக்கது. வாளால் வெட்டி தண்டனையை நிறைவேற்றியவனும் கடவுளுக்கு சேவை செய்ததாக பரைசாற்றியுள்ளான்.  இந்த தண்டனையால் மனிதம் மதத்தால் படுகொலைசெய்யப்பட்டது என்பது மட்டுமே உண்மை. ஒரு இளம் பெண்ணுக்கு நீதி மறூக்கப்பட்டது வழியாக ஒரு தாயின் தீராத  அழுகைக்கு காரணம் ஆகிவிட்ட சவுதியை இறைவனும் மன்னிக்க போவதில்லை. nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக