திங்கள், 14 ஜனவரி, 2013

நாடெங்கும் ஓடும் பஸ்களில் பாலியல் பலாத்காரம்

சண்டிகார்:டில்லியைப் போலவே, பஞ்சாபிலும், ஒரு மருத்துவ மாணவி, பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில், டிசம்பரில், மருத்துவ மாணவி ஒருவர், ஒடும் பஸ்சில், வெறிக் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிகிச்சை பலனின்றி, அந்த மாணவி, உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, டில்லியில், பெரும் போராட்டம் வெடித்தது.இந்த சம்பவம் ஏற்படுத்திய சோகச் சுவடு மறைவதற்குள், தற்போது, பஞ்சாபிலும், இதேபோன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள, குல்கா என்ற ஊரைச் சேர்ந்த இளம் பெண், அங்குள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்.நேற்று முன் தினம் மாலை, அருகில் உள்ள ஊருக்கு சென்று விட்டு, தன் சொந்த ஊருக்கு, பஸ்சில் திரும்பிக் கொண்டிருந்தார். ஆனால், இவரது ஊரில், பஸ் நிற்காமல் சென்றது. இதுகுறித்து, கண்டக்டரிடம், அந்த மாணவி, புகார் செய்தார் கண்டக்டரும், அதை பொருட்படுத்தவில்லை. மறைவான இடத்தில் பஸ்சை நிறுத்தி விட்டு, அங்குள்ள ஒதுக்குப்புறமான இடத்துக்கு, கண்டக்டரும், டிரைவரும், மாணவியை கடத்திச் சென்றனர்.மேலும் ஐந்து பேர், அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். ஏழு பேரும், அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதன்பின், அவரை, பஸ்சில் மீண்டும் ஏற்றி, அவரது சொந்த ஊருக்கு அருகே விட்டு விட்டு, தப்பி ஓடி விட்டனர்.பாதிக்கப்பட்ட மாணவி, போலீசில் புகார் செய்ததை அடுத்து, ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்; மற்ற இருவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம், பஞ்சாபில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு சம்பவம்:
மகாராஷ்டிரா, அகமது நகர் மாவட்டம், ஷீரடி பகுதியில், கடந்த, 11ம் தேதி, சிறுமியின் உடல் ஒன்று, அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில், நாசிக்கை சேர்ந்த, சுனில் சுரேஷ், 32, என்பவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.சுனில் சுரேஷ், 2002ம் ஆண்டில், இதேபோன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் நல்ல முறையில் நடந்து கொண்டதால், அந்த தண்டனை காலம், 2012 மே மாதம் முடிவடைந்தது. இந்நிலையில், மீண்டும் ஒரு சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றுள்ளார்.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக