சனி, 12 ஜனவரி, 2013

இதுதான் சரியான நேரம் சொல்கிறார் சோனாலி முகர்ஜி...

இந்த சம்பவம் நடந்தது, கடந்த 2003ம்ஆண்டு ஏப்ரல் 22ம் தேதியாகும்.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தைச் சேர்ந்த 17 வயதான கல்லூரி மாணவி சோனாலி முகர்ஜிக்கு அன்று ஒரு கருப்பு தினம், வாழ்க்கை சிதைந்து போய் சோகமான திசைக்கு மாறிப்போன மோசமான தினம்.
மகளை நன்கு படிக்க வைத்து பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்ட பெற்றோரின் கனவை நனவாக்க, நன்கு படித்தார். கூடுதலாக அழகும் கொண்டிருந்தார், அது ஒன்றும் தப்பில்லையே.
ஆனால் அதே பகுதியைச் சேர்ந்த பிரம்மதேவ், தபாஸ்மித்ரா, சஞ்சய் பஸ்வானுக்கு அது தப்பான எண்ணத்தை வளர்த்துவிட்டது, விரட்டி, விரட்டி தொந்திரவு செய்தார்கள்.
என்சிசி மாணவியான சோனாலி அவர்களை துணிச்சலுடன் விரட்டியதுடன், இனியும் தொந்திரவு தொடர்ந்தால் போலீசிடம் புகார் செய்வேன் என்று எச்சரித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த மூவரும், "அழகாய் இருக்கிறோம் என்ற ஆணவத்தில்தானே எங்களை எடுத்தெறிந்து பேசுகிறாய், உன்னை என்ன செய்கிறோம் பார்'' என்று எச்சரித்தவர்கள், அன்று இரவு மொட்டை மாடியில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த சோனாலியின் முகத்தில், கப்பலின் இரும்புத் துருவை அகற்றுவதற்கு பயன்படும் பயங்கரமான ஆசிட்டை ஊற்றி விட்டனர். 
Anniyan Bala - Chennai,இந்தியா

Anniyan Bala அது என்ன சட்டம். மைனர் என்றால் செய்த தப்புகள் மறைந்துவிடுமா.? அவனுக்கு அது முடியுமென்றால் அதற்கு அதற்குரிய தண்டனையும் தேவைதான் 

செல்போன் வீடியோவால் சிக்கிகொண்ட தாத்தா சிறுமி கற்பழிப்

மும்பையில் தொலைந்து போன செல்போனின் உதவியால் மசூதி அசரத் ஒருவர் நீண்ட நாட்களாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.மும்பையில் உள்ள சிவாஜி நகரை சேர்ந்தவர் நியாஸ் அகமத் ஹசான் ராசா (70) இவர் அதே பகுதியில் இருக்கும் மசூதியில் அசரத்தாக இருக்கிறார். ஓய்வு நேரத்தில் அப்பகுதி குழந்தைகளுக்கு அரேபிய மொழி கற்றுகொடுப்பார்.அவரிடம் சிறு குழந்தைகள் பலர் அரேபிய மொழி கற்றுவந்தனர்.>இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நியாஸ் அகமத் தனது செல்போனை தொலைத்துவிட்டார். தொலைந்து போன செல்போன் அப்பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் சிக்கியது, அந்த நபர் செல்போனில் இருந்த வீடியோக்களை பார்க்கும் போதுதான் நியாஸின் சுயரூபம் தெரிந்துள்ளது.

“எனக்கு கார் தந்து, சீர் தந்த ஜெயலலிதா மடியில் விழுந்தேன்!”

நாஞ்சில் சம்பத் கொடுத்த ஷாக் “எனக்கு கார் தந்து, சீர் தந்த ஜெயலலிதா மடியில் விழுந்தேன்!”

Viruvirupu  “எனக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் எனும் பதவி தந்து, கார் தந்து, சீர் தந்த, ஜெயலலிதாவின் மடியில் விழுந்தேன்” என்று கூறி அதிர வைத்திருக்கிறார் அ.தி.மு.க.வின் புதிய கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்.
கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் “நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை” பொதுக்கூட்டம் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் நடந்தது. அதில் கலந்து கொண்டி நாஞ்சில் சம்பத், “இந்திய அரசியலில் தலை நிமிர்ந்து நிற்கும் புரட்சித் தலைவி அமமா, இந்தியாவின் தலைமகளாவார். காலம் கனிந்து விட்டது.
எந்த தலைமையை ஏற்றுக் கொண்டதற்காக அடக்குமுறைகளை சந்தித்தேனோ, அந்த தலைமையே என் உயிருக்கு உலை வைக்க நினைத்தபோது, கழுகு விரட்டிய மாடப்புறா சிபிச்சக்கரவர்த்தி மடியில் விழுந்தது போல, நான் அம்மாவின் (ஜெயலலிதா) மடியில் விழுந்தேன்” என்றார்.
வெயிட் எ மினிட். மடியில் விழுந்தீரா? ஐயகோ, இதை வைத்தே உங்களுக்கு டிக்கெட் கிழித்து விடுவார்களே அ.தி.மு.க.வில்.
கழுகு விரட்டிய மாடப்புறாவை சிபிச்சக்கரவர்த்தியின் காலில் விழ வைத்து, “அம்மா காலடியில் விழுந்தேன்” என்று சொல்லியிருக்கலாமே அண்ணே! அ.தி.மு.க.வில் ‘அம்மா மடியில் விழும்’ வழக்கம் ஏதும் கிடையாது என்பதை அறியாதவராக உள்ளீரே ஐயா! இதற்குள் அம்மாவுக்கு புகார் தட்டி விட்டிருப்பார்களே ரத்தத்தின் ரத்தங்கள்!
பேச்சின் ஆரம்பத்தில் இப்படி அ.தி.மு.க. கொள்கை தெரியாமல் மடியில் விழுந்துவிட்ட நாஞ்சில் சம்பத், தொடர்ந்து பேசிய பேச்சும் சுவாரசியமாகவே உள்ளது. இதோ அதையும் படியுங்கள்.
“எனக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் எனும் பதவி தந்து, கார் தந்து, சீர் தந்து, 52 மாவட்டங்களுக்கும் சென்று வா, நாளை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் எனும் குருச்சேத்திர போரில் வெற்றி ஈட்டி வா! என்று அம்மா என்னை அனுப்பி வைத்துள்ளார். காலம் மாறும், காரிருள் உடையும், உறக்கம் கலையும், உணர்வுகள் பூக்கும், சரித்திரம் மாறும், நாளை இந்தியாவின் பிரதமராக ஜெயலலிதாவை அமர வைக்க நாடே தயாராகி விட்டது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக சில பரமபத விளையாட்டுகளை விளையாடி, அ.தி.மு.க. அரசுக்கு அவப்பெயர் உருவாக்க கருணாநிதி திட்டமிடுகிறார். ஆனால் அது நடக்காது!” என்றார்.
கருணாநிதி பரமபத விளையாட்டு விளையாடி விட்டு போகட்டும். இப்போது உங்கள் கட்டத்தில், ‘மடியில் விழுந்த பாம்பு’ நிற்கிறதே. காலில் விழுந்தாவது தப்பித்துக் கொள்ளுங்கள்!

கமல் சார் தன் வீட்டில் மல்லாந்து படுத்து யோசித்து

1db48097-7eba-48b8-a2b1-6a00420b701eOtherImage
ஒரு சிச்சுவேஷன் சாங்குடன் ஆரம்பிப்போம்.
கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப் போனேன்…
காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப்போனேன்…
தப்புக் கணக்கைப் போட்டுத் தவித்தேன் தங்கமே ஞானத் தங்கமே…
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞானத் தங்கமே…
நலம் புரிவாய் எனக்கு… நன்றி உரைப்பேன் உனக்கு…
புதிய படம் தொடர்பாக கமலும் ஊடகங்களும் போடும் வழக்கமான ஆட்டம் இந்தமுறை கொஞ்சம் கைமீறிப் போய்விட்டதுபோலவே தோன்றுகிறது. படத்தின் பெயருக்கு பிரச்னை வரும்போது கலைஞனுக்கே உரிய வீராவேசத்துடன் குட்டிகர்ணம் அடிப்பவர் இப்போது தொழில்நுட்பப் புரட்சியை முன்னெடுப்பவராக இன்னொரு அவதாரம் எடுத்திருக்கிறார். தியேட்டருக்கு முன்பாகவே டி.டி.ஹெச்.சில் வெளியிடுவதை ஏதோ தொழில்நுட்பப் புரட்சி போல் பேசிவருகிறார். டி.டி.எச். தொழில்நுட்பம் என்பதும் திரைப்படங்கள் தியேட்டரில் வெளியான ஒரு சில நாட்களில் சின்னத்திரையில் வெளியாவதும் பல வருடங்களாகவே நடைமுறையில் இருக்கும் ஒரு விஷயமே. திரையரங்கில் வெளியிடுவதற்கு முன்பாகவே டி.வி.யில் வெளியிடுவது எந்தவகையில் தொழில்நுட்பப் புரட்சியாகும் என்றே தெரியவில்லை. வேண்டுமானால் மார்க்கெட்டிங் புரட்சி என்று சொல்லலாம். அதுகூட முடியாது. ஏனென்றால், அது புத்திசாலித்தனமான மார்க்கெட்டிங் வழிமுறையே அல்ல.

இந்திய வீரர்கள் கொலை U N விசாரணைக்கு தயார் பாகிஸ்தான் அமைச்சர் ஹினா ரப்பானி சொல்கிறார்

காஷ்மீரில் உள்ள கட் டுப்பாட்டு எல்லை அருகே இந்திய ராணுவ வீரர்கள் 2 பேரை பாகிஸ்தான் ராணுவத்தி னர் படுகொலை செய் துள்ளனர். இறந்த வீரர் களில் ஒருவரின் தலையை எடுத்துச்சென்றுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இந் தியா தனது கடும் கண் டனத்தைத் தெரிவித்தது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல் மான் குர்ஷித், இந்தியா வில் உள்ள பாகிஸ்தான் தூதரை அழைத்து இது பற்றி கண்டனத்தை தெரி வித்தார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பாகிஸ் தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப் பானி கர், இந்திய வீரர் கள் கொல்லப்பட்டதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை என்று தெரி வித்தார். இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் தனது பதிலை ஏற்கெனவே கூறிவிட்டது. 2003இல் போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்கவே விரும்புகிறோம். எனவே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது. நாங்கள் விசா ரணை நடத்தியதில், அதுபோன்ற சம்பவத் தில் பாகிஸ்தான் வீரர் கள் ஈடுபடவில்லை என தெரியவந்துள்ளது. இதுபோன்ற கொலைச் செயல் பாகிஸ்தானின் கொள்கையல்ல. இந்த தாக்குதல் தொடர்பாக மூன்றாவது தரப்பு விசாரணைக்கு தயாராக இருக்கிறோம். அய்.நா. பார்வையாளர் கள் வந்து இதுபற்றி முழு விசாரணை நடத்தலாம் என்று ரப்பானி கூறினார்.

Best new year Joke அன்புக்கு கட்டுப்பட்டே திரையரங்குகளில் விஸ்வரூபம். கமலஹாசன்

;விஸ்வரூபம் திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் தமிழகம் முழுவதும் வெளியாகும் என்று நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார். சென்னையில் 11.01.2013 வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் கட்டுப்பட்டே விஸ்வரூபம் படத்தை முதலில் திரையரங்கில் வெளியிட இருப்பதாகவும் தமிழகம் முழுவதும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். திரையரங்குகளில் வெளியிடும் அதே வேளையில் டிடிஎச்சில் பாட்னர்களையும் தான் ஏமாற்றப்போவதில்லை என்று கமலஹாசன் தெரிவித்துள்ளார். சம்மந்தப்பட் டிடிஎச் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறியுள்ள கமலஹாசன், அவர்களுடன் பேசி முடிவு எடுத்தபின் விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் கூறினார். விஸ்வரூபம் திரைப்படம் 10ஆம் தேதி அன்று டிடிஎச்சிலும், 11ஆம் தேதி திரையரங்கிலும் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடும் தேதியை 25ஆம் தேதிக்கு மாற்றியுள்ள கமலஹாசன், இனி டிடிஎச்சில் வெளியிடும் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த்: லோக்சபா தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை

தஞ்சாவூர் :""வரும் லோக்சபா தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை,'' என, தஞ்சையில் நடந்த, தே.மு.தி.க., பொதுக்கூட்டத்தில், விஜயகாந்த் உறுதியாக தெரிவித்தார்.ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று காலை தி.மு.க., தலைவர் கருணாநிதியை, விஜயகாந்த் பாராட்டி பேசியதை வைத்து, தி.மு.க.,வுடன் கூட்டணி வரும் போல் தெரிகிறது என, தே.மு.தி.க., தொண்டர்கள் நினைத்திருந்தனர். ஆனால், மாலையே விஜயகாந்த்தின் நடவடிக்கை மாறியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.தஞ்சையில், தஞ்சை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட, தே.மு.தி.க., சார்பில் பொங்கல் விழா பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவி வழங்கும் விழா, நாஞ்சிக்கோட்டை ரோட்டில் நேற்றிரவு நடந்தது.

சிவகாமி IAS: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் ராமதாசை கைது செய்ய வலியுறுத்தல்

வேலூர்: ""ஜாதி, மோதல்கள் உருவாக்கும் வகையில் பேசி வரும், ராமதாசை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்,'' என, சமூக சமத்துவப் படை கட்சி தலைவர் சிவகாமி கூறினார்.சமூக சமத்துவப் படை கட்சியின் நிர்வாகிகள் கூட்டம், வேலூரில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்துக்கு பின், கட்சி தலைவர் சிவகாமி கூறியதாவது: தருமபுரி மாவட்டத்தில் தலித் இளைஞருக்கும், வன்னிய இனப்பெண்ணுக்கும் ஏற்பட்ட காதல் திருமணத்தை காரணம் காட்டி, 1,500 பேர் திரண்டு, தலித் இன மக்கள் வசிக்கும், சில கிராமங்களில் உள்ள வீடுகளை, பெட்ரோல் குண்டு வீசி, தரைமட்டமாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், கலவரம் நடந்து வருகிறது. தமிழகத்தில், ஜாதி வெறியை தூண்டும் வகையில் செயல்படும், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், காடு வெட்டி குரு ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டேவை சந்தித்து, மனு கொடுக்க உள்ளோம். "வன்கொடுமை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்' என, பா.ம.க., மற்றும் சில கட்சிகள் கூறுகின்றன. அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கூடாது. இவர்கள் மீது, தமிழக அரசு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி கலவரத்தை தூண்டியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி, வரும், 22ம் தேதி, தருமபுரியில் இருந்து நடை பயணம் புறப்பட்டு, பாதிக்கப்பட்ட கிராமங்கள் வழியாகச் சென்று, அந்த மக்களுக்கு ஆறுதல் கூறி, வரும், 29ம் தேதி, தமிழக கவர்னரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். dinamalar,com

வெள்ளி, 11 ஜனவரி, 2013

நடிகை ஹேமாஸ்ரீ கொலை : கணவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

பெங்களூர்: கன்னட நடிகை ஹேமாஸ்ரீ கொலை வழக்கில் அவரது கணவர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கன்னட படங்களில் நடித்திருப்பவர் ஹேமாஸ்ரீ. கடந்த அக்டோபர் மாதம் அனந்தபுரில் உள்ள ஒரு ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் குறித்து தந்தை நாகராஜ் போலீசில் புகார் செய்தார். அதில் ‘என் மகள் சாவில் மர்மம் இருக்கிறது. அவரை கணவர் சுரேந்திர பாபுதான் கொலை செய்திருப்பார். இதுபற்றி விசாரிக்க வேண்டும்Õ என்று புகாரில் கூறி இருந்தார். இதையடுத்து சுரேந்திர பாபுவை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இந்த சம்பவத்தில் போலீசார் குற்றப்பத்திரிகையை தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். வரதட்சணை கொடுமை, கொலை முயற்சி, சாட்சியங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது: சம்பவத்தன்று ஹேமாஸ்ரீ வீட்டில் இருந்தபோது அவரது அறைக்கு சென்ற சுரேந்திர பாபு ஒரு துணியில் மயக்கமருந்து வைத்து அதை ஹேமாஸ்ரீ மூக்கில் காட்டி மயங்க வைத்திருக்கிறார். இதற்கு சதிஷ் என்பவரும் உடந்தையாக இருந்தார். மயக்கம் அடைந்த ஹேமாஸ்ரீயை காரின் பின் சீட்டில் படுக்க வைத்து அனந்தபுரில் ரெட்டிபள்ளியில் உள்ள ஒஐ ஓட்டலுக்கு அதிகாலை 4.30 மணிக்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே சொல்லி வைத்திருந்தபடி இரண்டு பேர் அங்கு தயாராக இருந்தனர். அவர்கள் உதவியுடன் ஹேமாஸ்ரீயை அறைக்கு கொண்டு சென்றனர். பின்னர் 7 மணி அளவில் சுரேந்திர பாபு தன் மனைவி மயங்கி கிடப்பதாகவும் உதவி செய்யும்படியும் ஓட்டல் ஊழியர்களிடம் கேட்பதுபோல் நாடகமாடி இருக்கிறார். உடனடியாக ஹேமாஸ்ரீயை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் ஹேமாஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கணவரே ஹேமாஸ்ரீயை கொலை செய்திருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதால் கன்னட படவுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜயகாந்த்: கலைஞரிடம் இருந்த பெருந்தன்மை ஜெயலலிதாவிடம் இல்லை

;முன்னாள் தமிழக முதல்வர் கலைஞரிடம்  இருந்த பெருந்தன்மை இந்நாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இல்லை'' என்று எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
.ஸ்ரீவில்லி புத்தூர் வந்து இருந்த எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் செய்தியாளர்களிடம்  '' திமுக ஆட்சியில் தமிழக முதல்வர் கருணாநிதியையும் அவரது குடும்பத்தினரையும் ஜெயலலிதா கடுமையாக விமர்சித்தார்;முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்த பெருந்தன்மை இந்நாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இல்லை'' என்று எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அப்போதைய முதல்வர்  கலைஞர் மிகவும் பெருந்தன்மையாக நடந்து கொண்டார். ஆனால் தற்போதோ அரசைக் குறித்து விமர்சித்தால் அவதூறு வழக்கு தொடருவார்கள். என் மீது தொடரப் படும் வழக்குகளைச் சட்டப் படி சந்திப்பேன்'' என்று தெரிவித்தார்

ராமலிங்கம் மீது மோசடி வழக்கு- வருமான வரித்துறை நடவடிக்கை!

ரூ.27,000 கோடிக்கு அமெரிக்க பத்திரங்களை வைத்திருந்த தாராபுரம் தொழிலதிபர் ராமலிங்கம் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய வருமானவரித்துறை முடிவெடுத்துள்ளது. பத்திரங்கள் அனைத்தும் போலிப்பத்திரங்கள் என்று தெரியவந்துள்ளதையடுத்து இந்த நடவடிக்கை!தொழிலதிபர் ராமலிங்கம் என்ற இந்த நபர் 2010ஆம் ஆண்டு பரணிதர் ரிபைனரி என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைப் பதிவு செய்தார். அதில் அவரது மனைவியையும் பங்குதாரராக சேர்த்துக் கொண்டார்.தொடக்கத்தில் அந்த கம்பெனிக்காக ரூ.15 லட்சம் முதலீடு செய்தார். தொடங்கப்படாத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூலம் வருவாய் ரூ.19 லட்சம் ஈட்டியதாக கணக்குக் காட்டியுள்ளார் ராமலிங்கம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. ரூ.27,000 கோடிக்கான அமெரிக்க கருவூல பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. இந்தப் பத்திரங்களை அவர் பிரேசில் நாட்டில் வாங்கியதாக தெரிவித்திருந்தார். இது போலியென்று சந்தேகம் எழவே பத்திரங்களை அதிகாரிகள் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க வங்கிகளுக்கு அனுப்பி வைத்தனர்.இதில் பார்க்ளேஸ் வங்கி அந்தப் பத்திரங்கள் போலியானவை என்று கூறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விரைவில் எழ்த்து பூர்வமாக போலி என்று வங்கி தரவுள்ளதாகவும் தெரிகிறது.அந்த உத்திரவாதம் வரும் வரை விசாரணை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பத்திரங்கள் உண்மையானவை என்று ராமலிங்கம் தொடருந்து பேட்டியளித்துவருவது குறிப்பிஅத்தக்கது.மேலும் சீனாவிலிருந்து தங்கப்பத்திரங்களை வாங்கியுள்ளதாகவும் இதனை வைத்துதான் அமெரிக்க பத்திரங்களை பரிமாற்றம் செய்துள்ளதாகவும் வருமானவரித்துறையினர் கருதுகின்றனர். ஆனால் இந்தத் தங்கப்பத்திரங்களும் போலியானவையாக இருக்கலாம் என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.இதற்கிடையே ராமலிங்கத்திற்குச் சொந்தமான பரணிதர் நிறுவனத்திடமிருந்து சுமார் 2 கோடியைக் கடனாகப் பெற்றதாக வரவு செலவுக் கணக்கில் காண்பித்துள்ளது.>எனவே மிகப்பெரிய மோசடித்திட்டத்தை தீட்டியுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.ஆனால் எல்லாம் சட்டப்படியே செய்துள்ளேன் என்று ராமலிங்கம் தொடர்ந்து கூறிவருகிறார்   tamil.webdunia.com

உயர்கல்வியில் அன்னிய நிறுவனங்கள்

வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை, இந்தியாவில் அனுமதிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதா, பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது. இந்த மசோதா நிறைவேறினால், இந்தியாவில் உயர் கல்வியில் பெரிய அளவிலான முன்னேற்றங்கள் ஏற்படும்,'' என, மத்திய திட்டக்குழு உறுப்பினர், நரேந்திர ஜாதவ் கூறினார்.குஜராத், காந்தி நகரில், கல்வி நிறுவனங்களுக்கானசர்வதேச மாநாட்டின் நிறைவு விழா, நேற்று காலை நடந்தது. இதில், மத்திய திட்டக் குழுவின், கல்வித் துறைக்கான உறுப்பினர் நரேந்திர ஜாதவ் பேசியதாவது:
பன்னிரெண்டாவது ஐந் தாண்டு திட்டத்தில், கல்வித் துறைக்கு, மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இந்த ஐந்து ஆண்டுகளிலும், கல்வித் துறையை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல, பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இதற்கு, தேசிய வளர்ச்சிக் கவுன்சிலும் அனுமதி வழங்கி விட்டது.

RSS முன்வைக்கும் ‘பாரதப் பண்பாட்டின்’ யோக்கியதை

தில்லி மாணவி மீதான பாலியல் வன்முறை பல்வேறு தரப்பினரையும் ஏதாவது ஒருவகையில் எதிர்வினையாற்றத் தூண்டியுள்ளது. பரவலான ஜனநாயக சக்திகள் பெண்களைக் குதறும் பாலியல் வன்முறைகளையும் அவற்றைக் களைவது பற்றியுமான விவாதங்களை முன்னணிக்குக் கொண்டு வந்துள்ளனர். சமீப காலமாக தேசிய ஊடகங்களில் இருந்து உள்ளூர் செய்திப் பத்திரிகைகள் வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி முக்கியத்துவம் கொடுத்து எழுதி வருகின்றன.
பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களைத் தடுக்க அதிக பட்ச தண்டனை வழங்குவதா அல்லது இக்குற்றங்களின் சமூக அடிப்படை என்னவென்பதைப் பார்த்து அவற்றைக் களைவதற்கு முன்னுரிமை வழங்குவதா, பாலியல் விழிப்புணர்ச்சிக் கல்வி வழங்கினால் குற்றங்களைத் தடுக்க முடியுமா என்று பரவலாக விவாதங்கள் நடந்து வருவது அனைவரும் அறிந்தது தான். இப்படி நாடெங்கும் மக்களின் விவாதப் பொருளாக மாறி அமளி துமளி ஆகிக் கொண்டிருந்த போது ஓரமாக உட்கார்ந்து ‘மிச்சர் தின்று கொண்டிருந்த’ இந்துத்துவ சங்கப் பரிவாரங்களும் இப்போது வாயைத் திறக்கத் துவங்கியுள்ளன.

Mumbai Jeyasri Nominated for Oscar.. Tamil Song in Life of Pi



பாம்பே ஜெயஸ்ரீக்கு ஆஸ்காருக்காக நாமினேட் பண்ணப்பட்டுள்ளது, ஒரு தமிழ் பாடல்!
கனடா நாட்டு இசையமைப்பாளர் Mychael Dannaவின் இசையில், Life of Pi படத்தில் இடம்பெறும் “கண்ணே கண்மணியே கண்ணுறங்காய்” என்ற தமிழ் பாடலுக்காக பாம்பே ஜெயஸ்ரீ ஆஸ்காருக்காக நாமினேட் பண்ணப்பட்டுள்ளார்! இந்தப் பாடலை எழுதியதும் பாம்பே ஜெயஸ்ரீயே! மிகவும் அட்டகாசமான தாலாட்டு பாடல்!
ஆஸ்காரில் இந்தப் பிரிவில், 5 பேரே நாமினேட் பண்ணப்பட்டுள்ளார்கள். இதனால் பாம்பே ஜெயஸ்ரீக்கு, ஜெயிப்பதற்கு மினிமம் 20 சதவீத சான்ஸ் உள்ளது. அதேநேரத்தில், Life of Pi சவுன்ட் ட்ராக்குகள் வட அமெரிக்காவில் (அமெரிக்கா, கனடா) ரொம்ப பிரபலம் என்பதால், அதிக சான்ஸ் உள்ளது. வாழ்த்துக்கள்.

இந்தியாவில் எடுக்கப்பட்ட 4 படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை

புதுடில்லி : சினிமா உலகின் கனவு விருதாகவும் உயரிய விருதாகவும் திகழும் ஆஸ்கார் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள படங்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. பரிந்துரை செய்யப்பட்டுள்ள 36 விருதுகளில் இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ள 4 படங்களும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. 85 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெவேரி ஹில்ஸ் பகுதியில் பிப்ரவரி 24-ம் தேதி நடைபெற உள்ளன. இவ்விழாவில் விருதுகள் முறையாக அறிவிக்கப்பட உள்ளன.

பாம்பே ஜெயஸ்ரீக்கு ஆஸ்கார் நாமினேஷன்! தமிழ் பாடலுக்காக!


Viruvirupu
ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்காரை ஜெயித்து வந்ததுபோல இந்த ஆண்டு மற்றொருவரும் தமிழகத்துக்கு ஆஸ்காரை அள்ளிவர சான்ஸ் அமைந்துள்ளது. இந்த ஆண்டு பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் பெயர், ஆஸ்கார் விருதுக்காக நாமினேட் பண்ணப்பட்டுள்ளது. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மானைவிட இந்த நாமிநேஷன் மகா விசேஷம்!
காரணம், பாம்பே ஜெயஸ்ரீக்கு ஆஸ்காருக்காக நாமினேட் பண்ணப்பட்டுள்ளது, ஒரு தமிழ் பாடல்!
கனடா நாட்டு இசையமைப்பாளர் Mychael Dannaவின் இசையில், Life of Pi படத்தில் இடம்பெறும் “கண்ணே கண்மணியே கண்ணுறங்காய்” என்ற தமிழ் பாடலுக்காக பாம்பே ஜெயஸ்ரீ ஆஸ்காருக்காக நாமினேட் பண்ணப்பட்டுள்ளார்! இந்தப் பாடலை எழுதியதும் பாம்பே ஜெயஸ்ரீயே! மிகவும் அட்டகாசமான தாலாட்டு பாடல்!
ஆஸ்காரில் இந்தப் பிரிவில், 5 பேரே நாமினேட் பண்ணப்பட்டுள்ளார்கள். இதனால் பாம்பே ஜெயஸ்ரீக்கு, ஜெயிப்பதற்கு மினிமம் 20 சதவீத சான்ஸ் உள்ளது. அதேநேரத்தில், Life of Pi சவுன்ட் ட்ராக்குகள் வட அமெரிக்காவில் (அமெரிக்கா, கனடா) ரொம்ப பிரபலம் என்பதால், அதிக சான்ஸ் உள்ளது. வாழ்த்துக்கள்.

வியாழன், 10 ஜனவரி, 2013

பங்காரு அம்மாவின் சொத்தைப் பல் மோசடி!

வினவு
ammaசங்கரமடம் மேட்டுக்குடி மக்களிடம் கொள்ளை அடித்துக் கொழுப்பது போல, கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களின் ஆன்மீக நம்பிக்கையை மூலதனமாக்கி தமது வியாபாரத்தை நடத்துகின்றனர் பங்காரு அடிகளார் குடும்பத்தினர்.
    மேல்மருவத்தூர் அம்மா பங்காரு அடிகளாரை நிறுவிய தலைவராகவும், அவரது மனைவி லஷ்மி பங்காரு அடிகளாரை தலைமை நிர்வாக அதிகாரியாகவும் கொண்டு ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியின் நிர்வாக இயக்குனராக பங்காரு அடிகளாரின் இரண்டாவது மகன் செந்திலின் (சின்ன அம்மா) மனைவி ஸ்ரீலேகா செயல்பட்டு வருகிறார். 2012-ம் ஆண்டு எம்டிஎஸ் எனப்படும் பல் மருத்துவ மேற்படிப்புக்கான அனுமதி பெறுவதற்காக இந்திய பல் மருத்துவக் கழகத்திடம் கல்லூரி நிர்வாகம் விண்ணப்பத்திருக்கிறது.
    அக்டோபர் 2012-ல் நடந்த ஆய்வில் கல்லூரியில் அடிப்படை வசதிகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இல்லாததை சுட்டிக் காட்டி அனுமதி மறுத்திருக்கிறது இந்திய பல் மருத்துவக் கழகம்.  டிசம்பர் 28-ம் தேதி கூடிய கல்லூரியின் நிர்வாகக் குழு இந்திய பல் மருத்துவக் கழகத்தின் உறுப்பினர் ராயப்பேட்டையைச் சேர்ந்த பல் மருத்துவர் டாக்டர் எஸ் முருகேசன் என்பவருக்கு லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்க முடிவு செய்திருக்கிறது.

    சினிமா துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

    ;அனைத்திந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி அகில இந்திய தலைவர் டி.கே. சத்தியசீலன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,தமிழகத்தில் நிலவி வரும் மின்சார பற்றாக்குறை, காவிரி பிரச்னை மற்றும் விவசாயிகளின் வேதனைகளை பற்றி கண்டு கொள்ளாத சினிமா துறையினர் தங்கள் சுயநலத்துக்காக மத்திய அரசின் சேவை வரியை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்து ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
    நடிகர், நடிகைகள் நடித்த படத்தை பார்க்கும் பொதுமக்களே கேளிக்கை வரி செலுத்தும்போது இவர்கள் ஏன் செலுத்த கூடாது.
    சினிமா துறையில் இருக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் சினிமா துறையினர் எவ்வளவு பேர் வருமான வரி கட்டுகின்றனர். எத்தனை படம் நடித்துள்ளனர், எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள். எவ்வளவு செலவு காட்டினார்கள்.
    இதில், பொதுமக்களுக்கு செய்ததாக எவ்வளவு கணக்கு காட்டி உள்ளனர், எவ்வளவு அரசுக்கு வரி கட்டி உள்ளனர் என்ற விவரத்தை ஆர்டிஐ மூலம் கேட்க உள்ளோம். இது கிடைத்தவுடன் தமிழக சினிமா துறையினரின் அரசுக்கு கட்டும் வரியை பற்றி பொதுமக்களுக்கு தெரியப்படுத்த உள்ளோம்.
    பொதுமக்கள் வரி பணத்தில் சுமார் ரூ.700 கோடியில் கட்டப்பட்ட புதிய சட்டமன்ற வளாகத்தை பொதுமக்கள் நலன் கருதி உடனே திறக்க வேண்டும்.

    மீண்டும் அ.தி.மு.க.-வில் இணைய திட்டமிட்டிருக்கிறாராம்.

    கண்ணா லட்டு தின்ன ஆசையா’ கதை யாருடையது என்ற இழுபறியில், இராம.நாராயணன், கே.பாலசந்தர் மகள் புஷ்பா கந்தசாமி, பாக்யராஜ் என்று பெரிய தலைகள் எல்லாம் இழுத்து விடப்பட்டு இருக்க, இதற்குள் உள்ள நிஜமான விவகாரம் அந்த ‘கதை’ அல்ல என்கிறது ஒரு சோர்ஸ். அப்படியானால் என்ன விவகாரம்? பணமா? அதுவும் கிடையாதாம். நிஜ விவகாரம் அரசியல் தானாம்! “எனது கதையைதான் படமாக்குகிறார்கள் என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன்” என்று போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார், கே.பாக்யராஜ். ஆனால், சந்தானம் தரப்பில் இருந்து கிடைத்த தகவலின்படி, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ கதை, தம்முடைய கதைதான் என்பது பாக்யராஜூக்கு ஏற்கனவே தெரியுமாம்.
     அவ்வப்போது சந்தானத்தை சந்திக்கும் போதெல்லாம், இந்த சீனை எப்படி எடுத்தீங்க, அந்த சீன் எப்படி வந்திருக்கு என்றெல்லாம் பாக்யராஜ் விசாரித்து வந்தததாகவும் சந்தானம் தரப்பினர் கூறுகிறார். கதைக்கு வழக்கு போடுவதென்றால், அவர் எப்போதோ போட்டிருக்கலாம். அல்லது, இப்போது எழுப்புகிற பிரச்சனையை அப்போது அவர் எழுப்பியிருந்தால் கூட பேச்சு வார்த்தை நடத்தியிருக்கலாம். ஆனால் படம் வெளியாகிற கடைசி நேரத்தில் இப்படி செய்துவிட்டாரே என்று பாக்யராஜின் செயலை கவலையோடு அலசுகிறது சந்தானம் வட்டாரம் இதில் மற்றொரு விவகாரம், பாக்கியராஜின் ‘டார்கெட்’, சந்தானம் அல்ல, இராம.நாராயணன்தான் என்கிறார்கள். அங்கேதான் வருகிறது அரசியல்.

    தாராபுரம் கடலை வியாபாரியின் அமெரிக்க பத்திரங்கள் போலி? நெட்டில் டவுன்லோடு செய்தார்?

    Viruvirupu
    லண்டனைச் சேர்ந்த ‘பார்க்லேஸ்’ வங்கி, தாராபுரம் கடலை வியாபாரி ராமலிங்கத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட, அமெரிக்க பத்திரங்கள் போலியானவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. மொத்தம் ரூ.27,500 கோடி பெறுமதியாக அமெரிக்க பண பரிவர்த்தனை பத்திரங்கள் (பில் ஆஃப் எக்ஸ்சேஞ்ச்) அவரிடம் இருந்து வருமாகவரி துறையினரால் கைப்பற்றப்பட்டிருந்தன.
    கடலை வியாபாரி ராமலிங்கம் வைத்திருந்ததாக இவர்கள் கைப்பற்றிய அமெரிக்க பத்திரங்கள் இணையத்திலிருந்து டவுன்லோடு செய்யப்பட்டவை என்றும், பார்க்லேஸ் வங்கி தகவல் தெரிவித்திருப்பதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    இந்த விவகாரத்தில் ராமலிங்கத்திடம் முதல் கட்ட விசாரணையை முடித்த வருமான வரித்துறை அதிகாரிகள், அவரை நாளை மீண்டும் விசாரணை நடத்த சம்மன் கொடுத்து உள்ளனர். பத்திரங்கள் நிஜமானவைதான் என்றே ராமலிங்கம் இன்னமும் கூறுகிறார்.
    இதில் பதில் தெரியாத கேள்விகள் பல உள்ளன. பத்திரம் போலி என்றால், தமிழ்நாட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொடங்க அனுமதி கேட்டு, மத்திய ரசாயனத் துறை அலுவலகத்துக்கு ராமலிங்கம் அனுப்பி வைத்த 2,500 கோடி ரூபாய் தொகை செக் விவகாரம் என்ன? அது, இந்திய ரூபாவில், இந்திய வங்கி செக்.
    அதையும் இணையத்தில் டவுன் லோடு செய்தாருங்களா?

    பத்தாண்டுகளுக்கு பிறகு, பயணிகள் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன

    புதுடில்லி:  பயணிகளை அதிகம் பாதிக்காத வகையில், உயர்த்தப்பட்டுள்ள கட்டணங்கள் மூலம், 6,600 கோடி ரூபாய் திரட்ட, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கூடுதலாக கிடைக்கும் தொகை மூலம், மிக மோசமான நிலையில் இருக்கும், ரயில் சேவைகள் இனியாவது மேம்படுமா என, பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.ரயில்வே துறை, 16 ஆண்டுகளுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்ததும், அமைச்சராக நியமிக்கப்பட்ட, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பவன்குமார் பன்சால், "கட்டணங்கள் உயர்த்தப்படும்' என, அடிக்கடி அறிவித்தபடி இருந்தார்."பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில், பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும், ரயில்வே பட்ஜெட்டில், ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படலாம்' என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று அதிரடியாக கட்டணங்கள் உயர்வு அறிவிப்பு வெளியானது. பார்லிமென்ட் கூட்டம் முடிந்த பின், கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.21ம் தேதி முதல்...டில்லியில் நேற்று மதியம், பத்திரிகையாளர்களை சந்தித்த, அமைச்சர் பவன்குமார் பன்சால், கட்டண மாற்றங்களை அறிவித்தார். அவர் கூறியதாவது:ரயில் பயணிகள் கட்டணம் மட்டுமே, இப்போது உயர்த்தப்பட்டுள்ளன. சரக்கு கட்டணங்களில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    டெல்லி பலாத்காரம் 2 மணி நேர திற்கு பின்புதான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்

    எல்லோர் முகத்திலும் கரி...By ப. இசக்கி
    ஓரே ஒரு ஆள், எல்லோர் முகத்திலும் கரியைப் பூசிவிட்டார். ஆம், தில்லியில் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவியின் சகோதரர் சில உண்மைகளை அம்பலப்படுத்தி விட்டார். அவர் கூறியது, அவரது சொந்தக் கற்பனையோ, சுயநலக் கருத்தோ அல்ல.தொலைக்காட்சியில் முகம் தெரியவும், வாக்கு வேட்டைக்கும் நீலிக்கண்ணீர் வடிக்க அவர் அரசியல்வாதியும் அல்ல. அவர் ஒரு சாதாரண பிரஜை. பலாத்காரம் செய்யப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தனது சகோதரி இறப்பதற்கு முன்பு தன்னிடம் கூறிய உண்மையைத்தான் அவர் இப்போது போட்டு உடைத்திருக்கிறார்."அந்த (பலாத்கார) சம்பவத்திற்குப் பிறகு அருகில் இருந்தவர்களிடமும், அந்த வழியாகச் சென்றவர்களிடமும் தனக்கு உதவி செய்யுமாறு என் தங்கை கேட்டிருக்கிறார். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை. சம்பவம் நடைபெற்ற சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகுதான் எனது தங்கை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்த இடைப்பட்ட நேரத்தில் அவருடைய உடலிலிருந்து ரத்தம் ஏராளமாக வெளியேறியிருந்தது.விபத்து, தாக்குதல் என எதிர்பாராமல் பாதிக்கப்படுபவர்களுக்குத் தயக்கம் இல்லாமல் உடனடியாகப் பொதுமக்கள் உதவிசெய்ய முன்வர வேண்டும். இந்த விஷயத்தில் பொதுமக்களின் மனோபாவம் மாற வேண்டும்'' என்று கூறியிருக்கிறார். இது நம் ஒவ்வொருவரின் முகத்திலும் அறைந்ததுபோல இல்லையா?

    புதன், 9 ஜனவரி, 2013

    இதுவரை தமிழகம் கண்டிராத பச்சோந்தி

    வினவு ,  சாதிப் பெயரைப் போட்டுக் கொள்வதே இழிவானது என்று கருதும் தமிழகத்தை, மிகவும் கேவலமான நிலைக்கு இழுத்துச் செல்ல முயற்சிக்கின்ற இந்த அருவெறுக்கத்தக்க ஜந்துக்கள் தலையெடுப்பதற்கு முன்னர் நசுக்கப்பட வேண்டும். திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்று சொல்லிக் கொண்டு  அரசியலில் களமிறங்கிய ராமதாசு, இதுவரை தமிழகம்  கண்டிராத பச்சோந்தி என்று அம்பலப்பட்டு, சொந்த சாதியினர்  மத்தியிலேயே மதிப்பிழந்து போனதால், தனது அடுத்த  ஆயுதமாக ஆதிக்க சாதிவெறியைக் கையிலெடுத்திருக்கிறார்.  51 சாதிச் சங்கங்களைக் கூட்டி “அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவை”யை உருவாக்கியிருக்கிறார். சாதி கடந்த  திருமணங்கள் அனைத்தையுமே தடுக்க வேண்டுமென்பதும்,  வன்கொடுமைச் சட்டத்தை முற்றிலுமாக முடக்க வேண்டும் என்பதும்தான் அவர்களது கோரிக்கை.
    வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் புகார் கொடுப்பதற்கு இனி  ஒருவனுக்கும் தைரியம் வரக் கூடாது. பள்ளி, கல்லூரிக்குச்  செல்லும் பெண் குழந்தைகளிடம் சாதியைப் பற்றித்  தெளிவாகச் சோல்லுங்கள்” என்று வெறியுடன்  பேசியிருக்கிறார் ராமதாசு. “ஆலய நுழைவுப் போராட்டம்  நடத்த வந்தார்கள். ஒரு லோடு செங்கல் எடுத்துத்  தாக்கினோம். வாலைச் சுருட்டிக் கொண்டார்கள்” என்று  ரெட்டியார் சங்கமும், “கலப்புத் திருமணம்தான் நம் முதல்  எதிரி” என்று மறுமலர்ச்சி முஸ்லிம் லீகும்  பேசியிருக்கின்றனர். இந்து மக்கள் கட்சியும் இதில் கலந்து  கொண்டு, இந்து என்பவன் எவன் என்று காட்டியுள்ளது.

    பார்ப்பன ஜூவியின் சங்கர மட பாசம் !

    ஜூனியர் விகடன்காஞ்சி சங்கர மடத்தின் தீவிர பக்தரான வளசை ஜெயராமன் என்ற பீடிகையுடன் ஒரு ஜந்துவை தேடிப்பிடித்து அது உளறியதை வைத்து இரண்டு பக்கத்தில் சங்கர மடத்தின் இமேஜை ஜாக்கி வைத்து தூக்க நினைக்கிறது ஜூவி
      ஜெயேந்திரன் - மோகன் பகவத்“எனக்கு வாய்ப்பு கிடைத்தால் மு.க.ஸ்டாலினை தலைவராக முன்மொழிவேன்” என்று கருணாநிதி உதிர்த்ததை வைத்து அழகிரியின் வாயில் ஏதாவது பிடுங்கி பரபரப்பு ஏற்ற வேண்டும் என்று பத்திரிகைகள் தொங்கிய நாக்குகளுடன் காத்திருந்தன. போலவே “தி.மு.க ஒன்றும் சங்கர மடம் அல்ல” என்று அழகிரி கூற பத்திரிகைகள் அனைத்தும் கிசுகிசு அரசியல் அக்கப்போரை அவிழ்த்து விட்டுவருவது நீங்கள் அறிந்ததே. இது குறித்து தனியாக எழுதுவோம்.
      இங்கே சங்கர மடத்திற்கு ஆதரவாக துண்டு போட்டு கச்சேரி நடத்தும் ஜூனியர் விகடனை மட்டும் பார்ப்போம். அழகிரியின் சங்கர மட டயலாக்கிற்கு பதிலடியாக இன்று வந்த ஜூவியின் முதல் கட்டுரை,         ”கோட்டா சிஸ்டம் எல்லாம் சங்கர மடத்தில் கிடையாது” என்று தலைப்பில் வந்திருக்கிறது.
      இட ஒதுகீட்டை கிண்டல் செய்யும் ஆதிக்க சாதி வெறியர்கள் பயன்படுத்தும் வார்த்தை “கோட்டா”. புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரியில் இருந்து சென்னை ஐஐடி வரை இட ஒதுக்கீட்டில் பயில வந்தால் கோட்டா மாணவர்கள் என்று கிண்டல் செய்வார்கள். இதனாலேயே பல பிற்படுத்தப்ட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தற்கொலையும் செய்திருக்கிறார்கள். இது அப்பட்டமான பார்ப்பனத் திமிரன்றி வேறல்ல. இதையே ஜூவியும் பூணூல் பாசத்துடன் தலைப்பில் வைத்திருக்கிறது.

      சவூதியில் பணிப்பெண் ரிசானா நபிக்கிற்கு மரணத் தண்டனை நிறைவேற்றம்!

      சவூதியில் பணிப்பெண்ணாக கடமையாற்றி சிசுவொன்றை கொலை செய்ததாகத் தெரிவித்து மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையின் ரிசானா நபிக்கிற்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு  சற்றுமுன் அறிவித்தது.போலியான வயதை காட்டி ஏஜென்சிகள் மூலம் சவுதியில் பணிப்பெண் வேளையில் சேர்ந்த ரிசானா எஜமானியின் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது அது மூச்சு திணறி இறந்தது ஆனால் அதை கொலை என்று ஒப்புகொள்ளுமாறு வற்புறுத்தி வாங்கிய வாக்கு மூலம் காரணமாகவே அவருக்கு இந்த தண்டனை வழங்க பட்டதாக தெரிகிறது
      2005 ஆம் ஆண்டு தனது வேலைதருனர்களின் குழந்தையை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு சவுதி அரேபியாவின் தவாத்மி பிரதேசத்தில் சிறை வாசம் அனுபவித்து வந்த ரிசானாவின் விடுதலைக்காக பல தன்னார்வ சமூக சேவை நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு கோரிக்கைகளை முன்வைத்த போதும் இன்று காலை ரிசானா நபீக்கிற்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

      வஞ்சம் தீர்க்க வருகிறார் தமன்னா சம்பளம் ஒன்றரை கோடியில்



      அஜித் நடிக்கும் புதிய படத்திற்கு எடுத்த எடுப்பிலேயே ஒன்றரை கோடி ரூபாய் பெற்றதன் மூலம் தான் தென்னகத்தின் அதிக சம்பளம் வாங்கும்  கதாநாயகி என்ற அந்தஸ்த்தை நிலை நாட்டி உள்ளார் தமன்னா
      கலை குடும்பத்தின் இளைய வாரிசு மேல் கொண்ட காதலின் காரணமாக ஓரங்கட்டப்பட்டு ஓட விரட்டப்பட்ட தமன்னா அந்த குடும்பம் தனக்கு இளைத்த தீங்கை புட்டு புட்டு வைக்கப்போவதாக கூறியுள்ளாராம் 

      Rape ஆயுள் தண்டனை சட்டமசோதா! மத்திய அரசு

      பாலியல் விவ காரத்தில் மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற கருத்துக்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள தால், ஆயுள் தண்டனை விதிக்க நாடா ளுமன்ற கூட்டத்தில் சட்டமசோதா கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
      மத்திய இணை அமைச்சர் நாரா யணசாமி, டில்லியில் இருந்து நேற்று முன்தினம் இரவு விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத் தில் செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டி:
      காவிரி நதிநீர் ஆணைய உத்தரவை அரசிதழில் வெளியிடுவதற்கு தமிழகம், கேரளா, புதுவை மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், கரு நாடகா மட்டும் வழக்கு விசாரணை முடியும் வரை வெளியிடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சட்ட நிபுணர்களின் கருத்துக்களை மத்திய நீர்வளத்துறை கேட்டு வருகிறது. அவர்களின் கருத் துக்கு பிறகு அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். உச்சநீதி மன்றம் விதித்துள்ள கெடுவுக்குள் வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
      பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டம் நிறைவேற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. டில்லியில் உள்துறை அமைச்சர் தலைமையில் நடந்த டிஜிபிக்கள், தலைமைச் செயலாளர்கள் கூட்டத் தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது.
      மேஜர் வயதை 18 இல் இருந்து 14 அல்லது 16ஆக குறைக்கலாமா என ஆலோசனை நடத்தப்பட்டது. பாலி யல் விவகாரத்தில் மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற கருத்துக்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித் தன.
      ஒருமித்த கருத்து ஏற்படாததால் ஆயுள் தண்டனை விதிக்க சட்ட வரைவு மசோதா, நாடாளுமன்ற கூட் டத் தொடரில் கொண்டுவரப்படும். மேலும் வழக்கு விசாரணையை ஒரு மாதத்தில் முடித்து தீர்ப்பு வழங்க சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக் கப்படும்.

      நடிகை குஷ்பு ஓரங்கட்டப்படுகிறாரா? பேச்சாளர் பட்டியலில் "மிஸ்சிங்'

      சென்னை: தி.மு.க., நடத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, தென் சென்னையிலும், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், விருத்தாசலத்திலும் பேசுகின்றனர். பேச்சாளர்கள் பட்டியலில், நடிகை குஷ்பு பெயர் இடம் பெறவில்லை  இம்மாதம் 25ம்தேதி, தி.மு.க., சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு, வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடக்கிறது. கருணாநிதி தென் சென்னையிலும், அன்பழகன் காஞ்சிபுரத்திலும், ஸ்டாலின் விருத்தாசலத்திலும், அழகிரி மதுரையிலும், கனிமொழி தஞ்சாவூரிலும், வி.பி.துரைசாமி ஈரோட்டிலும் பேசுகின்றனர்.  தி.மு.க., நட்சத்திர பட்டாளங்களில் நடிகர் குமரிமுத்து மட்டுமே, இடம் பெற்றுள்ளார். நடிகர்கள் மத்திய அமைச்சர் நெப்போலியன், வாகை சந்திரசேகர், பாக்யராஜ் போன்றவர்கள் இடம் பெறவில்லை. தி.மு.க., சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள், கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில், நடிகை குஷ்பு இடம் பெறுவார். ஆனால், பொதுக்கூட்டங்கள் பட்டியலில், குஷ்பு பெயர் இடம் பெறவில்லை. இதனால், கட்சியிலிருந்து குஷ்பு ஓரங்கட்டப்படுகிறாரா என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. dinamalar,com

      Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
      வேறு ஒன்றுமில்லை..கட்சிக்குள் நடக்கும் போட்டிதான் காரணம். குஷ்புவை எல்லோருமே தங்களது கோஷ்டி என்று சொல்லி தாங்கள் அழைக்கும் கூட்டத்திற்குத்தான் வரவேண்டும் என்று குடுமிப்பிடி சண்டை போடுவதால்..அது மேடை போட்டு உலகிற்கு தெரிய வேண்டாமே என்றுகூட இருக்கலாம். தலீவரின் நேரடி பார்வையில் பின்னர் வேறு ஓர் தேதியில் மிகப்பிரம்மாண்டமான கூட்டத்தில் அழைக்கப்படுவார். தினமலரின் செய்தியை படித்து மனம் நொந்த தொண்டர்களுக்காக விரைவில் அறிவிப்பு வரலாம். திமுக மொழிப்போர் தியாகிகளுக்கு எதற்காக விழா எடுக்கின்றார்கள்? கட்சிக்காக உயிர் விட்ட உத்தமர்களின் வாரிசுகள் ஒதுக்கப்பட்டு..குஷ்பு போன்றோர் முன்னிலை படுத்தும் காட்சியை காண்கின்றோம்..மிசா காலத்தில் உயிர் விட்ட தொண்டர்களின் வாரிசுகளுக்கு ஏதும் செய்யாத கட்சி..ஆனால் பாருங்கள்..ஹிந்தி பேசும் குஷ்பு போன்றோருக்கு உண்டான வரவேற்புக்களை..தொண்டர்களும் சரி தலைமைக்கு போட்டியாக குஷ்புவை ஆதரிக்கும் போக்கினை காணும்போது..என்றைக்குமே குஷ்பு போன்றோரை கட்சி கழற்றிவிடவே...டாது..என்ன..தொண்டர்களுக்கும்..மக்களுக்கும்..மிக தெளிவாக மொழிப்போர் பற்றிய செய்திகளை ..பேச்சுக்களை குஷ்பு மூலம் கேட்கும் வாய்ப்பு பறிபோனது. ஹ்ம்ம் மரியாக்களுக்கு இது ஓர் சோதனைகாலமோ? இடி போல செய்தியை போட்டு தினமலர் எனக்கென்ன என்று அக்கடான்னு இருக்கு..இடி தாங்கும் வலிமையை திமுகவினருக்கு ஆண்டவனே தாருமையா..என்று வேண்டிகொள்வோமே

      விஸ்வரூபம் திரையரங்குகளில் வெளியாகும்

      கமலின் விஸ்வரூபம் தமிழகம் முழுவதும் முதலில் டி.டி.எச்-ல் ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பு ரத்தாகிறது. தற்போது விஸ்வரூபம் திரைப்படம், முதலில் திரையரங்குகளில் வெளியாகும்” இந்த அறிவிப்பு கமலிடம் இருந்து வெளியாகவில்லை. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வத்திடம் இருந்து வெளியாகியுள்ளது.
      இதற்கு கமல் தரப்பில் இருந்து மறுப்பு ஏதும் இந்த நிமிடம்வரை வரவில்லை என்பதால், இதுதான் இன்றைய ஸ்டான்ட் என்று எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
      விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு 8 மணி நேரம் முன்பாக டீ.டி.எச்-ல் வெளியாகும் என்று நடிகர் கமல் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
      கமல் தரப்பும், திரைப்பட உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகத்தினரும் கடந்த இரு தினங்களாக இரவு பகலாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் முடிவில் திரைப்படத்தை முதலில் திரையரங்குகளில் திரையிடுவது என்று முடிவானது. இந்தத் தகவலை சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
      திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகும் தேதி குறித்து முடிவெடுக்க இன்றும் (புதன்கிழமை) பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறவுள்ளது. ஜனவரி 25 அல்லது 26-ம் தேதி விஸ்வரூபம் திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. Viruvirupu

      முல்லைப் பெரியாறு அணை அருகே, புது அணை;;மத்திய அரசு தடை

      தேனி: வன உயிரின சரணாலயத்தை சுற்றி, "சுற்றுச்சூழல் பாதுகாப்பு வளைய' பரப்பை விரிவுபடுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், முல்லைப் பெரியாறு அணை அருகே, புது அணை கட்ட திட்டமிட்டுள்ள, கேரள அரசின் கனவில் மண் விழுந்துள்ளது. சாம்பல் நிற அணில்கள் சரணாலயம், மேகமலை வன உயிரின சரணாலயம், பெரியாறு புலிகள் சரணாலயம் என, மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி முழுதும், "மிகவும் பாதுகாக்கப்பட்ட' வனப்பகுதியாக மாறியுள்ளது. தேனி, மேகமலை வன உயிரின சரணாலயம், 68 ஆயிரம் ஹெக்டேரில் அமைந்துள்ளது. வன உயிரின சரணாலயங்களை சுற்றி, "சுற்றுச்சூழல் பாதுகாப்பு வளையம்' என, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, சரணாலயத்தை சுற்றி 2 கி.மீ., வரை கட்டடம், தொழிற்சாலை, ரோடு உள்ளிட்ட பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு வளையம் : வனப்பகுதிகளை பாதுகாக்கும் வகையில், "சுற்றுச்சூழல் வளையத்தை' 8 கி.மீ., அளவுக்கு விரிவுபடுத்த ஆலோசிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், கூடுதலாக 2 அல்லது 3 கி.மீ., வரை, "பாதுகாப்பு வளையத்தை' விரிவுபடுத்த, சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு செய்து, ஆய்வுப் பணிகள் நடக்கின்றன. இதனால், சரணாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில், கட்டுமானப் பணிகள் தடை செய்யப்படும். பெரியாறு அணை அருகே, புது அணை கட்ட, கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
      இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம், பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதிக்குள் (சுற்றுச்சூழல் வளைய விரிவாக்கத்தால்) வந்து விடும். இதனால், கேரளாவின் புது அணை கனவில் மண் விழுந்துள்ளது. மேலும், தமிழக எல்லையோர வனப்பகுதியில், கேரள மருத்துவக் கழிவுகளை கொட்டுவதும் தடை செய்யப்படும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். dinamalar.com

      Jehan Mohan Reddyயின் 143 கோடி சொத்துக்கள் பறிமுதல் அமலாக்க பிரிவினர்

      ஐதராபாத்:நிதி மோசடி வழக்கில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான, 143 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், ஆந்திராவின், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, ஏற்கனவே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில், சி.பி.ஐ., தாக்கல் செய்த, முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், ஜெகன் மோகன் மீதான, நிதி மோசடி வழக்குகள் குறித்து, மத்திய அமலாக்க பிரிவு, விசாரணையை துவங்கியது. ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையும், மறைந்த காங்., தலைவருமான, ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது, ராம்கி பர்மா சிட்டி (இந்தியா) நிறுவனம், மாநில அரசிடமிருந்து, சட்டத்துக்கு புறம்பாக ஆதாயம் அடைந்திருப்பதும், இந்த விவகாரத்தில், ஜெகன் மோகன் ரெட்டிக்கு தொடர்பிருப்பதும், விசாரணையில் தெரிந்தது. இந்த விவகாரத்தில், பெருமளவு நிதி மோசடி நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ராம்கி பர்மா சிட்டி நிறுவனத்தின், 135 ஏக்கர் நிலம் மற்றும் வங்கி டிபாசிட் , ஜெகனுக்கு சொந்தமான, ஜகதி பள்ளிகேஷன்ஸ் பி.லிட்., நிறுவனத்தின் வங்கி டிபாசிட் மற்றும் ஜெகன் கூட்டாளிகளுக்குச் சொந்தமான சொத்துக்கள் உட்பட, 143 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகள், நேற்று, பறிமுதல் செய்து, முடக்கி வைத்தனர்.இந்த விவகாரம், ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யின்   dinamalar,com

      நிதானய,,அழிந்த சிங்களத் திரைப்படத்தின் பிரதி இந்தியாவில் கிடைத்துள்ளது




      காமினி ஃபொன்சேகா, மாலினி ஃபொன்சேகா இருவரும் நடித்த திரைப்படம் நிதானய
      காமினி ஃபொன்சேகா, மாலினி ஃபொன்சேகா இருவரும் நடித்த திரைப்படம் நிதானயஇலங்கை திரைப்பட வரலாற்றின் தலைசிறந்த படங்களில் ஒன்றினுடைய அசல் படச்சுருள் அழிந்துவிட்ட நிலையில், அத்திரைப்படச் சுருளின் நகல் ஒன்று புனே திரைப்பட ஆவணக் காப்பகத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. சிறந்த படம்< இலங்கையின் திரைவானில் மின்னிய பெரு நட்சத்திரங்களான காமினி ஃபொன்சேகா, மாலினி ஃபொன்சேகா என்று இருவரும் தோன்ற இலங்கையின் தலைசிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் கைவண்ணத்தில் 1972ல் வெளியான சிங்களத் திரைப்படம் நிதானய.
      சிங்களத்தில் நிதானய என்றால் புதையல் என்று பொருள்.அசல் அழிந்துபோய்விட்ட என்னுடைய திரைப்படத்தின் பிரதி இருக்கிறது என 94 வயதில் என் காதில் விழுகிறபோது மகிழ்ச்சியாக இருக்கிறது.> இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவிலும், பிரிட்டிஷ் சர்வதேச திரைப்பட விழாவிலும் விருதுகளைப் வென்ற இப்படம், இலங்கை திரையுலகின் முதல் அரைநூற்றாண்டுச் சரித்திரத்தின் மிகச் சிறந்த படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

      செவ்வாய், 8 ஜனவரி, 2013

      கண்ணா லட்டு தின்ன இன்று போய் நாளை வா


      கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் கதை பாக்கியராஜிடம் இருந்து திருடப்பட்டது .
      சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பாக்கியராஜின் கதை வசனம் நடிப்பில் உருவாக்கி பெரும் வெற்றி பெற்ற இன்று  போய் நாளை வா என்ற படத்தின் திரைக்கதையை அப்படியே தனது கதை என்று பொய் சொல்லி ராம நாராயணனுக்கு விற்று விட்டார் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரின் மகளான புஷ்பா கந்தசாமி . இவர் கவிதாலயாவின் பங்குதாரர் ஆவார் . இந்த படத்தின் கதையை முன்பு ஒரு தடவை புஷ்பா கந்தசாமி பாகியரஜிடம் விலைக்கு கேட்டிருக்கிறார் ஆனால் அவர் கொடுக்க மறுத்து விட்டார் , தனது மகன் சந்தனுவுக்கு மிகவும் பொருத்தமான படமாக இதை தயாரிக்க எண்ணி இருந்தார் திருடிய
      தற்போது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார் , எத்தனை வெற்றிப்படங்களை எடுத்த பாலச்சந்தர் குடும்பம் இப்படி ஒரு தில்லு முல்லு செய்து இருப்பது மகா கேவலம் 

      நடிகர்கள் அக்மார்க் சுயநலத்தோடு இப்போது உண்ணாவிரத களமிறிங்கியிருக்கின்றனர்.

      தமிழ் திரையுலகு உண்ணாவிரதம்ரஜினி – கமலுக்கு ரேசன் அரிசி வழங்கு அரிதாரம் பூசிய நட்சத்திரங்கள் தங்களது தேவைக்காக ஏதோ கால் டாக்சி புக் செய்வது போல ப.சிதம்பரத்திடம் பேசி தீர்த்து விடுகிறார்கள் என்றால் இங்கே யாருக்கு ஜனநாயகம் இருக்கிறது?

        தமிழ் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் ரஜினி
        மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் முதல் வருடம் 10 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ள நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு 12.36 சதவீதம் சேவை வரி விதித்திருக்கிறது. இதை முற்றிலும் நீக்கக் கோரி  தமிழ் திரையுலகினர் நேற்று சென்னையில் உண்ணா விரதம் இருந்தனர்.
        முதலில் சேவை வரி குறித்து வினவில் வந்த இந்தக் கட்டுரையை படித்து விடுங்கள். 94ல் 3 -4 வகைகளுக்கு இருந்த சேவை இன்று 120 வகைகளாக பெருகி அன்று 400 கோடி ரூபாயாக இருந்த வரி வருவாய் இன்று கிட்டத்தட்ட 1 இலட்சம் கோடி ரூபாய் வரை ஆண்டுக்கு வருமானம் தரும் அட்சய பாத்திரமாக வளர்ந்திருக்கிறது. இதை மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் அன்று கொண்டு வந்தார்கள். இன்று விரிவுபடுத்தியிருக்கிறார்கள்.
        சேவை வரியின் தேவை என்ன? முதலாளிகள் தரும் வருமான வரி முன்னர் 70-80 சதவீதமாக இருந்தது இன்று 33 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும் முதலாளிகளுக்கு பல்வேறு வரி சலுலகைகளும் உண்டு. மில்லியனிலும், பில்லியனிலும் இலாபம் பார்த்து வந்த முதலாளிகளை இப்படி குளிப்பாட்டியதால் ஏற்படும் வரி பற்றாக்குறையை ஈடு கட்டவே இந்த சேவை வரியைக் கொண்டு வந்தார்கள். இதன்படி மக்கள் தமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பல்வேறு சேவைகளுக்கு வரி கட்ட வேண்டியிருக்கும்.
        எதெல்லாம் சேவை வரியில் அடங்கும்? இதை எதிர்மறையாக வைத்திருக்கிறார்கள். இன்னின்ன சேவைகள் தவிர மற்றவை அனைத்தும் சேவை வரிக்குள் வரும் என்று இலக்கணம் வைத்திருக்கிறார்கள். அதன்படி நமது கருமாதி தவிர அனைத்துக்கும் சேவை வரி கட்டவேண்டும். சேவைகள் கொடுக்கும் நிறுவனங்களும், முதலாளிகளும் சேவை வரியை மக்களிடமிருந்தே வசூலித்துக் கொடுக்கின்றன. இப்படித்தான் நம்மிடமிருந்து மறைமுகமாக சேவை வரி வசூலிக்கப்பட்டு செல்கிறது.

        2 கோடி ரூபா லஞ்சம்..மேல்மருவத்தூர் பங்காரு அடிகள் நிர்வாகிகள் சி.பி.ஐ கைது

        மேல்மருவத்தூர் நிர்வாகிகள் லஞ்சம் கொடுத்த போது கைது! பெண் நிர்வாகி தப்பியோட்டம்!
        Viruvirupu
        லஞ்சம் கொடுக்க முயன்றபோது, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி நிர்வாகிகள் இருவர் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆதிபராசக்தி பெண் நிர்வாகி ஒருவர் தப்பியோடி, தலைமறைவாகி விட்டார்.
        அடிப்படை வசதிகள் அற்றதாக அனுமதி நிராகரிக்கப்பட்ட ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரிக்கு குறுக்கு வழியில் அனுமதி பெற லஞ்சம் கொடுக்க முயன்ற போதே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி நிர்வாகிகள் வசமாக சிக்கினர்.
        மொத்தம் 2 கோடி ரூபா லஞ்சத் தொகை பேசப்பட்டு, முதல் தவணையாக ரூ. 25 லட்சத்துடன் ரெடியாக வந்திருந்தார்கள் இவர்கள்.
        மேல்மருத்தூர் ஆதிபராசக்தி அமைப்பின் உரிமையாளர், பங்காரு அடிகள். இவர் தம்மை ஆதிபராசக்தியாக பிரகடனம் செய்துகொண்டு, அருள் வழங்கி வருகிறார். பங்காரு அடிகளுக்கு ஆதிபராசக்தி தொழிலைவிட வேறு பல தொழில்களும் உள்ளன. பல்வேறு கல்லூரிகளை நடத்துவதும் அந்த தொழில்களில் அடக்கம்.
        இவற்றில் ஒன்றுதான், இந்த ஆதிபராசக்தி பல் மருத்துவ கல்லூரி.
        இந்த பல் மருத்துவ கல்லூரியில் உயர்படிப்புக்கு அனுமதி கோரி ஆதிபராசக்தி நிர்வாகத்தினர் மருத்துவ கவுன்சிலிடம் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் கல்லூரியில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என்பதால் மருத்துவ கவுன்சில் அனுமதி தரவில்லை. இதைத் தொடர்ந்து குறுக்கு வழியில் அனுமதி பெற முடிவு செய்தனர். 
        பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினர் டாக்டர் முருகேசன் என்பவருடன் பேரம் பேசப்பட்டது. ரூ.2 கோடியில் பேரம் படிந்தது. அதில் முதல் தவணையாக ரூ.25 லட்சம் சென்னை ராயப்பேட்டையில் வைத்து கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
        இந்தத் தகவல் சி.பி.ஐ.-க்கு தெரிய வந்திருந்தது.
        ஆதிபராசக்தி நிர்வாகிகள் பயபக்தியுடன் பணத்தை எடுத்து டாக்டர் முருகேசனிடம் நீட்டிய போது, அநீதி கண்டு அந்த பகவான் வரவில்லை, சாட்சாத் சி.பி.ஐ.யே வந்துவிட்டது!

        விஸ்வரூபம் No DTH முடிவை மாற்றிக்கொண்டார்

         தற்போதைய நிலவரப்படி விஸ்வரூபம் வெளியிடும் திகதி தள்ளிபோனதாக தெரிகிறது அனேமாக இந்த மாத இறுதிக்குள் திரை அரங்குகளில் வெளிவரும் என்று தெரிகிறது . எதிர்பார்த்த அளவு dth பதிவுகள் வராமையே கமலின் இந்த மனமாற்றத்திற்கு காரணம் என்று தெரிகிறது .
        விஸ்வரூபம் சினிமாவை டி.டி.எச்சில் வெளியிடுவதால் திரையரங்குகளில் வெளியிடமாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் உறுதியுடன் இருந்துவிட்டனர்.  இதனால் பெரிய தியேட்டர்கள் கிடைக்காமல் சில சிறிய தியேட்டர்களில் ரிலீஸாகவிருந்தது விஸ்வரூபம்.
        இந்நிலையில் கமல், திரையரங்கு உரிமையாளர்களுடன் நடத் திய பேச்சுவார்த்தையை அடுத்து டி.டி.எச்சில் வெளியிடும் முடிவை மாற்றிக்கொண்டார் என்று தெரிகிறது

        Brazil connection 27,500 கோடி தாராபுரம் கடலை வியாபாரி,,டைரி

        Viruvirupu
        “கொப்பரை, நிலக்கடலை மற்றும் சாக்கு வியாபாரத்திலும் அந்த பணம் வரவில்லை”
        “கொப்பரை, நிலக்கடலை மற்றும் சாக்கு வியாபாரத்திலும் அந்த பணம் வரவில்லை”
        ரூ.27,500 கோடி அமெரிக்க பில்கள் பறிமுதல் செய்யப்பட்ட தாராபுரம் நிலக்கடலை வியாபாரியிடம் இருந்து கைப்பற்றிய டைரியில் உள்ள பிரேசில் நபரின் முகவரி, இந்த விவகாரத்தில் புதிய வெளிச்சம் ஒன்றை காட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
        தாராபுரம் வியாபாரி ராமலிங்கம், “பறிமுதல் செய்யப்பட்ட பில்கள் அனைத்தும் சொந்த வருவாயில் வாங்கியவை. நான் யாருடைய பினாமியும் அல்ல” என்பதிலேயே இன்னமும் உள்ளார். ஆனால், “கொப்பரை, நிலக்கடலை மற்றும் சாக்கு வியாபாரத்திலும் அந்த பணம் வரவில்லை” என்றும் சொல்கிறார்.
        இந்த பணபரிமாற்ற விவகாரத்தில் பிரேசில் நபர் ஒருவருக்கும், ராமலிங்கத்துக்கும் தொடர்பிருப்பதாக கூறப்பட்டது. ராமலிங்கம் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது ஒரு டைரியை கைப்பற்றினர்.
        அதில் பிரேசில் நபரின் பெயர், முகவரி இடம்பெற்றுள்ளது. எனவே, பிரேசில் நபரிடம் விசாரணை நடத்த இன்டர்போல் உதவியை நாட வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.  பிரேசில் நபரின் பெயர் டேனியல்.
        பிரேசில் நபர், தாராபுரத்தில் உள்ள இவரை பினாமியாக வைத்திருக்க சான்ஸ் இல்லை. இவர் வேறு யாரோ இந்தியாவில் உள்ள நபரின் பினாமியாக இருக்கலாம் என்பதும், பிரேசில் நபரிடம் விசாரணை நடத்தினால் அந்த விஷயம் வெளிப்படும் என்பதும்தான், சி.பி.ஐ.-யின் தற்போதைய ரூட் என்கிறார்கள்

        பெண் களுக்கு தண்டனை தந்தே ஆக வேண்டுமாம் BJP அமைச்சர் கைலாஸ் விஜய்வர்குயா

         Women will be punished like Sita if they cross their limits: Kailash Vijayvargiya   When asked to comment on recent sexual harassment cases in the country, with Madhya Pradesh in particular, Vijayvargiya said: “Ek hi shabd hai - maryada. Maryada ka ulanghan hota hai, toh Sita-haran ho jata hai. Laxmanrekha har vyakti ki khichi gayi hai. Us Laxmanrekha ko koi bhi par karega, toh Ravan samne baitha hai… woh Sita-haran karke le jayega”. (Whenever people cross their limitations, deterioration is bound to happen. It applies to everyone in the society. Whoever breaches the line, he/she will confront a Ravan)
        மத்திய பிரதேச அரசின் தொழிற்துறை அமைச்சர் கைலாஸ் விஜய்வர்குயா இன்று வெளியிட்ட அறிக்கையில் பெண்கள் வீட்டின் கட்டுப்பாடு களை மீறி நடந்தால் அவர்கள் சீதைக்கு ஏற்பட்ட துண்பங்களை சந்திக்கவேண்டியிருக்கும் என்றார். ராமாயணத்தில் லட்சுமணன் கிழித்த கோட்டை தாண்டிய தால் தான் சீதைக்கு இவ்வளவு சிரமம் ஏற் பட்டது, இந்த கால கட்டத்தில் பெண் களுக்கு இது ஒரு சரியான பாடமாகும், பெண்களும் வீட்டின் கட்டுப்பாடுகளை மீறி தாங்களாக முடிவெடுக் கும் நேரத்தில் வீட்டார் அதை கண்டித்து பெண் களுக்கு தண்டனை தந்தே ஆக வேண்டும், மேலும் சட் டங்களால் பெண் களுக்கு எதிரான வன் கொடுமைகளை கட்டுப்பாட்டில் கொண்டு வர இயலாது ஆகையால் வீட்டில் உள்ளவர் கள் தங்கள் பெண்களை கட்டுப் பாட்டோடு வளர்க்க வேண்டும் என்று கூறினார்.    பி.ஜே.பி கட்சியினர் தொடர்ந்து பெண் களுக்கு எதிரான கருத் துக்களை வெளியிட்டு வரும் வேளையில் பி.ஜே.பி ஆட்சியாளும் மத்திய பிரதேசத்தில் ஒரு அமைச்சர் இது போன்ற ஒரு அறிக்கையை விடுத் திருப்பது வட இந்திய பெண்களின் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது

        SMS செருப்பை இரண்டு முறை, தரையில் தட்டி னால் போதும்


        ரோபாட் காலணி செயல்படும் விதம்பற்றி ஒரு மாணவி விளக்கி கூறிய காட்சி. (உள்படம்: காலணியின் அடிப்பகுதியில் உள்ள நுட்பமான மின்சுற்றுகள்)
        செருப்புப் பிய்ந்து போகும் ஜாக்கிரதை!
        பாதுகாப்புக்கு ரோபோ செருப்பு!

        தானே, ஜன.7 மகாராஷ்டிராவை சேர்ந்த, ஏழாம் வகுப்பு மாணவர்கள், பெண் களுக்கு அருமையான, "ரோபோ' செருப்பை கண்டுபிடித்துள்ளனர். இந்த செருப்பை, இரண்டு முறை, தரை யில் தட்டினால் போதும், மொபைல் போனில் இருந்து எஸ்.எம்.எஸ்., தானாக சென்று, போலீசை உஷார்படுத்தும். மேலும், அந்த செருப் பால் ஒரு மிதி கொடுத் தால், வன்முறையாளர் களுக்கு, "எலக்ட்ரிக் ஷாக்' கிடைக்கும்.
        டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் கொடு மைக்கு ஆளாக்கப் பட்ட பிறகு, பெண்கள் பாதுகாப்பு குறித்து, நாடு முழுவதும் பெரிய அளவில் விவாதம் எழுந்துள்ளது. எனினும், பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் ஏராளமாக நடந்த வண்ணமாகவே உள்ளன. மகாராஷ்டிர மாநிலம், தானே நகரின் பள்ளி மாணவர்கள், பெண்களுக்கு பாது காப்பு அளிக்கும், "ரோபோ' செருப்பை தயாரித்துள்ளனர். சாதா ரணமாக பெண்கள் அணியும் செருப்பில், சிறிய எலக்ட்ரானிக் சாதனம் பொருத்தப் படும். அது, காலுக்கோ, நடக்கவோ எந்த சிரம மும் கொடுக்காது.
        பெண்களுக்கு ஏதாவது சிக்கல் எழும் போது, போலீஸ் மற்றும் உறவினர்களை உஷார் படுத்த வேண்டும் என் றால், செருப்பை இரண்டு முறை, தரையில் தட்டி னால் போதும். அந்த எலக்ட்ரானிக் கருவியில் இருந்து புறப்படும் சிக்னல்கள், மொபைல் போனை, "ஆன்' செய்து, போலீஸ் மற்றும் போன் உரிமையாளர்களின் உறவினர்களை உஷார் படுத்த, எஸ்.எம்.எஸ்., செய்தி அனுப்பி விடும். இந்த அருமையான, எலக்ட்ரானிக் செருப்பை உருவாக்கி யது, ஏழாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாண வியர் சிலர். அவர் களுக்கு, பிளஸ் 1 படிக் கும் சில மாணவர்கள் உதவியுள்ளனர். மாண வர்களுக்கு நடத்தப் பட்ட போட்டியில், இந்த ரோபோ செருப்பை தயாரித்துள்ள மாணவி யர், அதன் செயல்பாட் டையும் செய்து காட் டினர்.
        "தரையில் இரண்டு முறை தொடர்ந்து தட்டி யதும், எஸ்.எம்.எஸ்., சென்றதுடன், அந்த செருப்பை அணிந்தபடி, எதிராளியை மிதித்தால், அந்த நபருக்கு, "எலக்ட் ரிக் ஷாக்' ஏற்படும். சிறிது நேரத்திற்கு எது வும் செய்ய முடியாமல், அந்த நபர் திணறுவார்; அந்த நேரத்தில் தப்பித்து கொள்ளலாம்' என, அந்த மாணவ, மாண வியர் விளக்கினர்.

        கலாநிதி மாறனுக்கு எதிரான 2 வழக்குகளை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்


        கலாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு எதிராக காவல் துறையினர் பதிவு செய்த 2 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.திரைப்பட விநியோகம் தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனத் தினர் தன்னிடம் ரூ.6 கோடியே 75 லட்சத்தை மோசடி செய்து விட்டதாக திரைப்படத் தயாரிப்பாளர் சக்தி சிதம்பரம் காவல் துறையினரிடம் புகார் அளித்திருந்தார்.அதேபோல் திரைப்பட விநியோகம் தொடர்பான விவகாரத்தில் தனக்குத் தர வேண்டிய ரூ.20 லட்சத்தைத் தராமல் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் தன்னை ஏமாற்றி விட்டதாக நரேஷ் பாபு என்பவர் மற்றொரு புகார் அளித்திருந்தார்.இந்தப் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீசார், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஆர்.எம். ரமேஷ், செம்பியன் சிவகுமார், எஸ். கண்ணன் ஆகியோர் மீது இரண்டு தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்தனர். இந்நிலையில் பொய்யான புகார்களின் அடிப்படையில் தங்கள் மீது இந்த இரண்டு வழக்குகளையும் போலீசார் பதிவு செய்துள்ளதாகவும், இந்த இரு வழக்குகளையும் நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி கலாநிதி மாறன் உள்ளிட்ட 4 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்

        திங்கள், 7 ஜனவரி, 2013

        விஸ்வரூபம் அவாள் இவாள் என்று பிராமண தமிழை தூக்கி பிடித்து

        கமலஹாசன் தான் ஒரு கைதேர்ந்த நடிகன் என்பதை தனது pro  பார்ப்பனியத்தை மறைப்பதில் நன்றாகவே காட்டுகிறார் அவரது விஸ்வரூபம் வழக்கம்போல அவாள் இவாள் என்று பிராமண தமிழை தூக்கி பிடித்து பலூன் ஊதும் வேலையை அழுத்தமாக காட்டியுள்ளது , தனது பார்பனிய பற்று பாசத்தை மறைக்கவே இவர் சமயத்தில் பகுத்தறிவு வேஷம் போடுகிறார் அதிலும் தற்போது முஸ்லிம்களின் எதிர்ப்பை வேறு சமாளிக்க தந்தை பெரியாரை விட தான் எதோ கடவுள் மறுப்பாளன் பகுத்தறிவு வாதி என்றெல்லாம் விஜய் டிவியில் பிலிம் காட்டுகிறார்
        அய்யா கடவுள் எங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை பார்ப்பனீயம் தான் பிரச்சனை . அதற்குள் ஒழிந்து கொண்டிருக்கும் ஜாதி வெறி தான் பிரச்சனை அதை மேலும் மேலும் போற்றி வளர்த்துகொண்டிருக்கும் கேவலத்தை தந்திரமாக செய்கிறார் கமலஹாசன் , பிராமண தமிழ் பேசுவோர் தொகை மிக சிறிய அளவுதான் ஆனால் தமிழ் சினிமாவில் அந்த கொச்சை தமிழை பயன்படுத்தும் அளவு இருக்கிறதே கொடுமை .
        பாலசந்தர் தொடக்கம் உள்ள எல்லோரும் அதே நரிதந்திரத்தை அரங்கேற்றுகிறார்கள் .கமலஹாசனின் விஸ்வரூபத்திலும் அதேதான் பார்ப்பானியம் எப்பொழுதும் முஸ்லிம்களுடன் பகைமையை வளர்த்து அப்பாவி மக்களை தள்ளிவிட்டு தான் குளிர் காய்கிறது , 

        தமிழகத்தில் 400 தியேட்டர்களில் விஸ்வரூபம் ரிலீஸாகும்

        “படம் ரிலீஸ் ஆகட்டும்... வருவாங்க பாருங்க”கமலின் விஸ்வரூபம் ரிலீஸ்: வட இந்திய நிறுவனம் பல்டி! தமிழகத்தில் அன்டர் கன்ட்ரோல்!!

        Viruvirupu
        “படம் ரிலீஸ் ஆகட்டும்… வருவாங்க பாருங்க”
        கமலில் விஸ்வரூபம் டி.டி.எச்.சில் வெளியாவதால், தியேட்டர் உரிமையாளர் சங்கம் தூக்கிய போர்க்கொடியையும் மீறி, தமிழகத்தில் சுமார் 400 தியேட்டர்களில் படம் ரிலீஸாகும் என்ற நிலை தற்போது உள்ளது. ஆந்திராவில் பிரபல இயக்குனர் தாசரி நாரயண ராவ் விஸ்வரூபத்தை எடுத்து ரிலீஸ் செய்கிறார். அவரின் கட்டுப்பாட்டில் பல தியேட்டர்கள் உள்ளன.
        ஆனால், வட இந்தியாவில் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
        அங்கு பிரச்னை இருப்பதை ஒப்புக்கொண்டுள்ள கமல், “ஒரு மிகப்பெரிய மல்டிப்ளக்ஸ் நிறுவனம் விஸ்வரூபம் படத்தை வட இந்தியாவில் ரிலீஸ் செய்வதாய் குடுத்த வாக்கிலிருந்து பின்வாங்கியுள்ளது” என்கிறார். இதனால், தான் நினைத்த அளவுக்கு அங்கே தியேட்டர்கள் கிடைக்கிவில்லை எனவும், அதனால் வட இந்தியாவில் 11-ம் தேதி தியேட்டர் ரிலீஸ் இருக்காது என்றும் கூறினார்.

        ஐடி: சம்பளக் குறைப்பும், ஆட்குறைப்பும்…

        வினவு
        வேலை-இழப்புஅமெரிக்க ஊழியர்களின் வாழ்க்கையை பறித்து கொழுத்தன இந்திய ஐடி நிறுவனங்களின் லாபத்திற்கு அமெரிக்க ரத்தம் போதாமல் போய் விட இப்போது கவனத்தை இந்திய ஊழியர்கள் மீது திருப்பியிருக்கிறார்கள்.
          2013-ல் இந்திய ஐடி நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு சம்பள உயர்வுகளை தொடர்ந்து குறைக்கவிருக்கின்றன. கல்லூரிகளிலிருந்து புதிய ஊழியர்களை எடுக்கும் திட்டங்களையும் குறைத்திருக்கின்றன.
          சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இரட்டை இலக்க சதவீதங்களில் சம்பள உயர்வு வழங்கி வந்த இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு சம்பள உயர்வுகளை தொடர்ந்து இறுக்கிப் பிடித்து வருகின்றன. இந்த போக்கு 2013-ம் ஆண்டிலும் தொடரும் என்று மென்பொருள் சேவைகள் வழங்கும் இன்பினிட் டெக்னாலஜிஸ், மாஸ்டெக், மஹிந்திரா சத்யம், இன்போடெக் என்டர்பிரைசஸ் போன்ற நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
          இந்திய ஐடி துறையின் மொத்த ஆண்டு வருமானம் சுமார் ரூ 5.5 லட்சம் கோடி. ஐடி நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.5 லட்சம் மாணவர்களை கல்லூரிகளிலிருந்து நேரடியாக எடுத்துக் கொள்கின்றனர்.  பொதுவாக, இந்திய ஐடி நிறுவனங்கள் நிதி ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் சம்பள உயர்வுகளை கொடுப்பது வழக்கம். கல்லூரி மாணவர்களுக்கு நியமன கடிதங்களை நவம்பர்-டிசம்பரில் வழங்குவார்கள்.

          அழகிரி அறிவிப்பு: துரை தயாநிதி Delhi அரசியலுக்கு வருகிறார்!

          போங்கய்யா.. நீங்களும், லோக்கல் பாலிட்டிக்ஸூம்...“என்னுடைய மகன் துரை தயாநிதியும் தீவிர அரசியலில் ஈடுபடுவார்” என்று கூறியுள்ள அஞ்சாநெஞ்சர், “அவர் விரும்பினால் எம்.பி. தேர்தலில் நிறுத்தப்படுவார்” என்றும் கூறியுள்ளார்.
          மத்திய அமைச்சரும் தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி வாரமிருமுறை வெளியாகும் இதழுக்கு அளித்த பேட்டியில், “துரை தயாநிதி தீவிர அரசியலில் ஈடுபடுவதில் எந்தத் தவறும் இல்லை. அவரை நிம்மதியாய் தொழில் செய்யவிடாமல் தொல்லை கொடுக்கிறார்கள். எனவே அவர் அரசியலில் தீவிரம் காட்டப்போகிறார்” என்று கூறியுள்ளார்.

          போங்கய்யா.. நீங்களும், லோக்கல் பாலிட்டிக்ஸூம்…
          மேலும், “அவர் விரும்பினால் எம்.பி. தேர்தலில் நிறுத்தப்படுவார்” என்றும் கூறியுள்ளார்.

          Amala Paul போலீஸாக வந்து காட்சிகளில் கவர்ச்சிக் கன்னியாக

          நடிகை அமலாபால் தமிழ், தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர். நடுவில் சொற்ப படங்கள் சொதப்பினாலும், மற்ற படங்கள் கொடுத்த பெரிய ஹிட் இன்று தமிழ், தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அமலாபால். தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருக்கும் அமலாபால் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். போலீஸ் கதாபாத்திரத்தில் நடிகை என்றால் அது விஜயசாந்தி தான் என்ற எண்ணம் இன்றுவரையிலும் ரசிகர்களிடத்திலிருந்து அகலவில்லை. 80-களில் விஜயசாந்தி போலீஸ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்தது தான், இன்றுவரை எந்த நடிகையும் அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை. அமலாபால் போலீஸ் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிப்பேன் என்று கூறி கடின பயிற்சி எடுத்து வருகிறாராம்.ஒரு சில காட்சிகளில் மட்டும் போலீஸாக வந்து தனது கடின உழைப்பை காட்டிவிட்டு, மீதிக் காட்சிகளில் கவர்ச்சிக் கன்னியாக ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கிறாராம் அமலாபால். படத்தில் ஒரு சில காட்சிகளில் போலீஸ் உடையில் வருவதற்கே இவ்வளவு அலப்பறைகள் கொடுப்பதாக கோடம்பாக்கத்தில் கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்களாம்.

          பெண்களுக்கு எதிரான வழக்குகள் 14 ஆயிரம் நிலுவையில்

          பெண் களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்புடைய வழக்கு களில் விரைவான தீர்ப்பு களை வழங்க இந்தியா முழுவதும் மாவட்ட நீதிமன் றங்களை ஏற்படுத்திட மத்திய அரசு முடிவு செய் துள்ளது.
          டில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் பாலி யல் பலாத்காரம் செய்யப் பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. இதன் தொடர்ச்சி யாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு மற்றும் தண்டனைகள் அதிகரிக்க வேண்டும் என்பதில் விழிப் புணர்வு ஏற்பட்டுள்ளது. புதிய சட்ட திருத்தங்களும் விரை வில் கொண்டு வர மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
          தமிழகத்திலும் பெண் களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மாநில அரசு தரப்பிலும் நடவடிக்கை தீவிரமடைந்துள் ளது. தற்போது பெண்களுக்கு எதிராக பதிவாகும் வழக்கு களை விசாரிப்பதற்கு சென்னை, செங்கல்பட்டு, சேலம், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய நகரங்களில் மட்டும் பிரத்யேக நீதிமன்றங் கள் செயல்படுகின்றன.

          மாணவி பலாத்காரம் : அப்ரூவராக மாற இருவர் விருப்பம்

          புதுடில்லி : டில்லியில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட, ஆறு பேரில், இரண்டு பேர், அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்துள்ளனர். மற்ற இரண்டு பேர் சட்ட உதவி வேண்டும் என, கோரியுள்ளனர்.டில்லியில், கடந்த மாதம், 16ம் தேதி, ஓடும் பஸ்சில், 23 வயது மருத்துவ மாணவியை, ஆறு பேர் பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக தாக்கி, தூக்கி வீசினர். மாணவியின் ஆண் நண்பரும் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில், பலத்த காயமடைந்த மாணவி, சிங்கப்பூரில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கோர்ட்டில் ஆஜர் : இந்த பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், நான்கு பேரின், 14 நாள் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து, அவர்கள் நேற்று, டில்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில், மாஜிஸ்திரேட் ஜோதி கெலரின் அறையில், அவர் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது, நான்கு பேரில் இருவரான, பவன் குப்தா மற்றும் வினய் சர்மா என்ற இருவரும், தங்களுக்கு சட்ட உதவி தேவையில்லை என்றும், வழக்கில், அப்ரூவராக மாற விரும்புவதாகவும், மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்தனர்.
          அதேநேரத்தில், மற்ற இருவரான ராம்சிங் மற்றும் அவரின் சகோதரர் முகேஷ் ஆகியோர், தங்களுக்கு சட்ட உதவி வேண்டும் என, கேட்டனர். இதையடுத்து, நான்கு பேரின் நீதிமன்ற காவலையும், வரும், 19ம் தேதி வரை நீட்டித்த மாஜிஸ்திரேட், அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையை பரிசீலித்த கோர்ட், ஏற்கனவே பிறப்பித்துள்ள, "வாரன்ட்' அடிப்படையில், இன்று கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டார்.

          ஞாயிறு, 6 ஜனவரி, 2013

          கனிமொழி :தி.மு.க. தலைவர் ஸ்டாலின் என்று அப்பா சொன்னார்

          Viruvirupu
          “எனக்குப் பின் ஸ்டாலின் இருக்கிறார்” என்ற கருணாநிதியின் பேச்சால், “தி.மு.க.வின் அடுத்த தலைவர் ஸ்டாலின் என்று கருணாநிதி அறிவித்து விட்டார்” என தி.மு.க.வின் ஒரு தரப்பினராலும், “சேச்சே தலைவர் பொதுப்படையாக சொன்னதை பெரிதாக்குகிறார்கள்” என்று மற்றொரு தரப்பினராலும் சூடாக விவாதிக்கப்படும் நிலையில், கனிமொழி அதிரடியாக ஒரு கருத்து தெரிவித்துள்ளார்.
          “தி.மு.க.வின் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று எனது அப்பா கருணாநிதி அறிவித்துள்ளார். ஸ்டாலினின் சகோதரி என்ற வகையில் இந்த அறிவிப்பு எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது” என்பதே அவர் கூறியுள்ள கருத்து.
          சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள தனது வீட்டில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய கனிமொழி எம்.பி. தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மேலே கூறப்பட்டதையும் கூறிவிட்டு, “தற்போது நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறும்” என்றார்.
          கருணாநிதி தனக்கு பிறகு தி.மு.க. தலைவர் பதவி ஸ்டாலினுக்கு தான் என்ற கருத்துப்பட தெரிவித்தது குறித்து கருத்து தெரிவித்த மு.க. அழகிரி, “வாரிசுகளை தலைவராக நியமிக்கும் அளவுக்கு தி.மு.க. ஒரு மடம் அல்ல. இதை நான் சொல்லவில்லை. ஏற்கனவே தலைவர் கருணாநிதி கூறியிருக்கிறார். இதனால், ஸ்டாலின்தான் அடுத்த தலைவரா என்ற உங்கள் கேள்வியை அரவிடம் போய் கேளுங்கள்” என்றார் கடும் கோபத்துடன்!
          கனிமொழியோ, “தற்போது நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்” என்கிறார். அஞ்சாநெஞ்சரிடம் ஒரு வார்த்தை பேசிவிட்டு சொல்லியிருக்கலாமே.

          Jyoti Singh Pandey ..Delhi Gang Rape Victim பெயர் தெரியவந்துள்ளது

          டெல்லியில் பாலியல் வன்முறைக்கு பலியான இளம் மாணவியின் பெயர் ஜோதி சிங் பாண்டே என்பதாகும் . அவரின் தந்தை பத்ரி சிங் பாண்டே தற்போது தனது மகளின் பெயரை வெளியிட்டு உள்ளார் . அவரின் பெயர் பெண்கள் மீதான வன்கொடுமைக்கு எதிராக போராடுபவர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும் என்ற காரணத்தால் தான் தனது மகளின் பெயரை தற்போது வெளியிடுவதாக தெரிவித்து உள்ளார் 
           http://www.mirror.co.uk/news/world-news/india-gang-rape-victims-father-1521289

          பக்தி ஒரு மார்க்கெட்(டு)! அதற்கும் ஒழுக்கத்துக்கும் சம்பந்தமே யில்லை

          வியாபாரிகள் கொள்ளை அடிக் கின்றனர் என்று வீராவேசமாகப் பேசுவதுண்டு. விலைவாசிகள் விண்ணை முட்டுகின்றனவே என்று வியர்க்க வியர்க்க ஆர்ப்பாட்டம் நடைபெறுவதும் உண்டு.
          ஆனால் பரலோகம் அனுப் புவதாகச் சொல்லப்படும் பக்தி _ கர்மவினை யிலிருந்து காப்பாற்றுவதாக நம்பப்படும் கடவுள் பக்தி என்பது  மிகப் பெரிய வியாபாரமாக, முதலில்லா சந்தையாக கொடி கட்டிப் பறக்கிறதே - அதைப்பற்றி ஏன் எவரும் பேசுவதில்லை?
          முதல் இல்லையா -_ மக்களின் முட் டாள்தனம் தானே மூலதனம் என்று பகுத்தறிவுவாதிகள் சொல்லுவதை வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம்.
          கோயில் கட்ட பணம் தேவை யில்லையா - அதுவும் ஒரு வகையில் முதல் தானே - முதலீடு தானே என்று முந்திரிக்கொட்டை போல எதிர்க் கேள்வி போடலாம்.
          அந்த முதலீடு _ மூலதனம்கூட எந்தப் பார்ப்பான் வீட்டிலிருந்து வந்தது? நமது அரசர்கள் அண்டை நாட்டோடு போர் தொடுத்து ஆயிரக்கணக்கான வீரர்களைப் பலி கொடுத்து,  கொள்ளை யடித்து வந்த பொருளையும், பொன் னையும் கொட்டி கோயில்களை உருவாக்கினர்.
          இப்பொழுதோ கோயில் கட்டுவதற்கென்று மக்களிடம் சென்றால் கொட்டிக் கொடுக்கிறார்கள். போதும் போதாதற்கு அரசும் அள்ளிக் கொடுக்கிறது என்றாலும் அதுவும் மக்கள் பணம்தான். ஆனால் இவ்வளவும் செய்தபிறகு கும்பாபிஷேகத்தன்று குரங்கு போல் கோபுரத்தின் உச்சியில் குந்திக் கொண்டு மழைக் காலத்துத் தவளை போல புரியாத மொழியில் ஏதோ உளறியபின், - அந்தக் கோயிலின் அதிபதியாக ஆகிறவன் பார்ப்பான் தானே? கோயில் கட்ட ஒரு செங்கல்லை எடுத்துக் கொடுத்திருப் பானா? ஒரு சட்டி மண்ணைத் தூக்கிக் கொடுத்திருக்குமா அந்தக் கூட்டம்?

          5000 ஆயிரம் ரூபாய்க்கு வழி இல்லாதவர் 28000 கோடி ரூபாய் சம்பாதித்த இந்திய சாதனை

          தாராபுரம்: சென்னையில் வருமான வரித்துறையினரின் விசாரணையை முடித்துவிட்டு நேற்று தாராபுரம் வந்த தொழிலதிபர் ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியது: நிலக்கடலை, கொப்பரை, சாக்கு போன்ற வியாபாரங்களைச் செய்து இந்த தொகையை நான் சம்பாதிக்கவில்லை. நான் யாரையும் ஏமாற்றவில்லை. ஏமாற்ற வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது. என்னிடம் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் 10 மணிநேரம் விசாரணை செய்தனர். உண்மையை நிரூபிக்கும் வகையில் பதிலளித்துள் ளேன். அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  வரும் 11.1.2013 வெள்ளிக்கிழமை காலை 10-15க்கு மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளனர். நிச்சயம் கலந்து கொள்வேன்.
          கடந்த 31.12.2012 அன்று வருமான வரித்துறை அதிகாரிகள் என்வீட்டை சோதனையிட்டனர். அப்போது என்னி டமிருந்த  இன்டர் நேஷனல் பில் ஆப் எக்சேன்ஜ் (ஐபிஓஇ) ல் பெறப்பட்ட 5 பில்லியன் (யுஎஸ்ஏ) டாலர் மதிப்புள்ள (இந்திய முகமதிப்பு தொகையில் ரூ.27,500 கோடி) பில்லை  எடுத்துச் சென்றுள்ளனர். மொத்தம் 5 பில்கள். ஒரு பில் ஒரு பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது. அனைத்தும் எனது சொந்த பெயரில் அதாவது திருமலையம்மாள் மயில்சாமி ராமலிங்கம் என்ற பெயரில் உள்ளது. (முதலில் வருவது அம்மா, அப்பா பெயர்) அனைத்து தொகையும் எனக்கு சொந்தமானது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த டேனியல் என்பவருடன் எனக்கு தொடர்பு இருப்பது உண்மை. அவர் எனது நண்பர் அல்ல. வியாபார ரீதியான தொடர்பு மட்டுமே உள்ளது.

          குழந்தைகள் காலை உணவையே சாப்பிட முடியாத நிலை

          14தமிழக அரசின் பள்ளி நேர மாற்றம்; மாணவர்களை மயக்கமடைய செய்யும்

          Chennai பெருங்குடி அருகே கந்தன்சாவடியில் அரசு பஸ் படிக்கட்டில் பயணம் செய்த நான்கு மாணவர்கள் பலியானார்கள். இதை பொதுநல வழக்காக எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
          அதன் காரணமாக தமிழக அரசு நேற்று உயர்நீதி மன்றத்தில், ‘பள்ளி துவங்கும் நேரம் காலை 7.30 மணிக்கு மாற்றப்படும்; வரும் ஜூன் மாதம் துவங்கி அடுத்த கல்வியாண்டு முதல் அமலாகும் என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
          அரசின் இந்த அறிவிப்பு, கூட்ட நெரிசலை குறைப்பதற்கும், மாணவர்களைத் தவிர ‘மற்றவர்’ நிம்மதியாக பயணம் செய்வதற்கும் ஏற்ற வகையில் இருக்கிறது.
          அதாவது ‘மாணவர்களுக்கு தண்டனை.’ என்கிற பாணியில் அமைந்திருக்கிறது. பஸ்சில் நசுங்கி சாகும் மாணவர்களை பாதுக்காக்க வந்த அரசு, பள்ளிகளுக்கு செல்வதையே ஒரு தண்டனைபோல் அறிவித்திருக்கிறது.
          இந்த நேர மாற்றம், அரசு பஸ்சில் வருகிற குழந்தைகளை கணக்கில் வைத்துதான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 15 லிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து வருகிற குழந்தைகள்தான் சென்னை நகரத்திற்குள் உள்ள பள்ளிகளுக்கு பஸ்சில் வருகிறார்கள். காரணம், சென்னை நகரத்தின் செயற்கை வாடகை உயர்வின் காரணமாக நகரத்திலிருந்து தொழிலாளர்களும், நடுத்தர மக்களும் அப்புறப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.
          சென்னையில் சொந்த வீடு வைத்திருந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலர், ‘நல்ல விலைக்கு கேட்டாங்க கொடுத்துட்டேன்’ என்று சென்னையின் புறநகர் பகுதியில் குடியேறிவிட்டார்கள்.
          ஆகவே, நீண்ட தூரத்திலிருந்து பள்ளிக்கு வருகிற குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
          காலை 8.30 மற்றும் 9.00 மணி என்று இப்போது உள்ள பள்ளியின் நேரத்திற்கே, தொலைவில் இருந்து வரும் மாணவர்கள், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு வரும் தொலைதூர மாணவர்கள், வீட்டிலிருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட வேண்டியிருக்கிறது.
          அதனால் அவர்கள் காலை உணவை 6.00 மணியிலிருந்து 6.15 முன் முடிக்க வேண்டியதாகிறது. இப்போது காலை 7-30 மணிக்கு என்று மாற்றியமைத்தால் குழந்தைகள் காலை உணவையே சாப்பிட முடியாத நிலை ஏற்படும்.
          குழந்தைகளுக்கு இரண்டு வேளை உணவை தயாரிக்க தாய்மார்கள் காலை 4 மணிக்கும் முன்னதாகவே எழுந்திருக்க வேண்டும். ‘தன் குழந்தை சாப்பிட்டால் போதும்’ என்ற எண்ணம் உள்ளவர்களான தாய்மர்கள் அதை ஒரு சுமையாக கருதமாட்டார்கள் என்றாலும்; குழந்தைகளால் காலை 5.15 மணிக்கெல்லாம் எப்படி உணவை சாப்பிட இயலும்?
          அதனால், காலை – மதியம் என்று இரண்டு வேளைக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வரவேண்டிய பாரமும் ஏற்படும். காலை உணவை நிம்மதியாக பள்ளியில் வைத்து சாப்பிடடவும் முடியாது. அதற்கான நேரமும் கிடைக்காது. அது ஏதோ தடை செய்யப்பட்ட, ‘ரகசிய உணவு’ என்கிற முறையில்தான் அவர்கள் அதை மறைத்து வைத்து சாப்பி வேண்டிவரும். அதனால் குழந்தைகள் காலை உணவை தவிர்த்துவிடுவார்கள்.
          காலை உணவை மாணவர்கள் சாப்பிடாமல் பட்டினியாக இருந்தால், அவர்கள் உடல் பலவீனமடைய கூடும்.