திங்கள், 7 ஜனவரி, 2013

விஸ்வரூபம் அவாள் இவாள் என்று பிராமண தமிழை தூக்கி பிடித்து

கமலஹாசன் தான் ஒரு கைதேர்ந்த நடிகன் என்பதை தனது pro  பார்ப்பனியத்தை மறைப்பதில் நன்றாகவே காட்டுகிறார் அவரது விஸ்வரூபம் வழக்கம்போல அவாள் இவாள் என்று பிராமண தமிழை தூக்கி பிடித்து பலூன் ஊதும் வேலையை அழுத்தமாக காட்டியுள்ளது , தனது பார்பனிய பற்று பாசத்தை மறைக்கவே இவர் சமயத்தில் பகுத்தறிவு வேஷம் போடுகிறார் அதிலும் தற்போது முஸ்லிம்களின் எதிர்ப்பை வேறு சமாளிக்க தந்தை பெரியாரை விட தான் எதோ கடவுள் மறுப்பாளன் பகுத்தறிவு வாதி என்றெல்லாம் விஜய் டிவியில் பிலிம் காட்டுகிறார்
அய்யா கடவுள் எங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை பார்ப்பனீயம் தான் பிரச்சனை . அதற்குள் ஒழிந்து கொண்டிருக்கும் ஜாதி வெறி தான் பிரச்சனை அதை மேலும் மேலும் போற்றி வளர்த்துகொண்டிருக்கும் கேவலத்தை தந்திரமாக செய்கிறார் கமலஹாசன் , பிராமண தமிழ் பேசுவோர் தொகை மிக சிறிய அளவுதான் ஆனால் தமிழ் சினிமாவில் அந்த கொச்சை தமிழை பயன்படுத்தும் அளவு இருக்கிறதே கொடுமை .
பாலசந்தர் தொடக்கம் உள்ள எல்லோரும் அதே நரிதந்திரத்தை அரங்கேற்றுகிறார்கள் .கமலஹாசனின் விஸ்வரூபத்திலும் அதேதான் பார்ப்பானியம் எப்பொழுதும் முஸ்லிம்களுடன் பகைமையை வளர்த்து அப்பாவி மக்களை தள்ளிவிட்டு தான் குளிர் காய்கிறது , 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக