வெள்ளி, 11 ஜனவரி, 2013

பாம்பே ஜெயஸ்ரீக்கு ஆஸ்கார் நாமினேஷன்! தமிழ் பாடலுக்காக!


Viruvirupu
ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்காரை ஜெயித்து வந்ததுபோல இந்த ஆண்டு மற்றொருவரும் தமிழகத்துக்கு ஆஸ்காரை அள்ளிவர சான்ஸ் அமைந்துள்ளது. இந்த ஆண்டு பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் பெயர், ஆஸ்கார் விருதுக்காக நாமினேட் பண்ணப்பட்டுள்ளது. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மானைவிட இந்த நாமிநேஷன் மகா விசேஷம்!
காரணம், பாம்பே ஜெயஸ்ரீக்கு ஆஸ்காருக்காக நாமினேட் பண்ணப்பட்டுள்ளது, ஒரு தமிழ் பாடல்!
கனடா நாட்டு இசையமைப்பாளர் Mychael Dannaவின் இசையில், Life of Pi படத்தில் இடம்பெறும் “கண்ணே கண்மணியே கண்ணுறங்காய்” என்ற தமிழ் பாடலுக்காக பாம்பே ஜெயஸ்ரீ ஆஸ்காருக்காக நாமினேட் பண்ணப்பட்டுள்ளார்! இந்தப் பாடலை எழுதியதும் பாம்பே ஜெயஸ்ரீயே! மிகவும் அட்டகாசமான தாலாட்டு பாடல்!
ஆஸ்காரில் இந்தப் பிரிவில், 5 பேரே நாமினேட் பண்ணப்பட்டுள்ளார்கள். இதனால் பாம்பே ஜெயஸ்ரீக்கு, ஜெயிப்பதற்கு மினிமம் 20 சதவீத சான்ஸ் உள்ளது. அதேநேரத்தில், Life of Pi சவுன்ட் ட்ராக்குகள் வட அமெரிக்காவில் (அமெரிக்கா, கனடா) ரொம்ப பிரபலம் என்பதால், அதிக சான்ஸ் உள்ளது. வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக