சனி, 12 ஜனவரி, 2013

இந்திய வீரர்கள் கொலை U N விசாரணைக்கு தயார் பாகிஸ்தான் அமைச்சர் ஹினா ரப்பானி சொல்கிறார்

காஷ்மீரில் உள்ள கட் டுப்பாட்டு எல்லை அருகே இந்திய ராணுவ வீரர்கள் 2 பேரை பாகிஸ்தான் ராணுவத்தி னர் படுகொலை செய் துள்ளனர். இறந்த வீரர் களில் ஒருவரின் தலையை எடுத்துச்சென்றுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இந் தியா தனது கடும் கண் டனத்தைத் தெரிவித்தது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல் மான் குர்ஷித், இந்தியா வில் உள்ள பாகிஸ்தான் தூதரை அழைத்து இது பற்றி கண்டனத்தை தெரி வித்தார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பாகிஸ் தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப் பானி கர், இந்திய வீரர் கள் கொல்லப்பட்டதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை என்று தெரி வித்தார். இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் தனது பதிலை ஏற்கெனவே கூறிவிட்டது. 2003இல் போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்கவே விரும்புகிறோம். எனவே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது. நாங்கள் விசா ரணை நடத்தியதில், அதுபோன்ற சம்பவத் தில் பாகிஸ்தான் வீரர் கள் ஈடுபடவில்லை என தெரியவந்துள்ளது. இதுபோன்ற கொலைச் செயல் பாகிஸ்தானின் கொள்கையல்ல. இந்த தாக்குதல் தொடர்பாக மூன்றாவது தரப்பு விசாரணைக்கு தயாராக இருக்கிறோம். அய்.நா. பார்வையாளர் கள் வந்து இதுபற்றி முழு விசாரணை நடத்தலாம் என்று ரப்பானி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக