திங்கள், 7 ஜனவரி, 2013

Amala Paul போலீஸாக வந்து காட்சிகளில் கவர்ச்சிக் கன்னியாக

நடிகை அமலாபால் தமிழ், தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர். நடுவில் சொற்ப படங்கள் சொதப்பினாலும், மற்ற படங்கள் கொடுத்த பெரிய ஹிட் இன்று தமிழ், தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அமலாபால். தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருக்கும் அமலாபால் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். போலீஸ் கதாபாத்திரத்தில் நடிகை என்றால் அது விஜயசாந்தி தான் என்ற எண்ணம் இன்றுவரையிலும் ரசிகர்களிடத்திலிருந்து அகலவில்லை. 80-களில் விஜயசாந்தி போலீஸ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்தது தான், இன்றுவரை எந்த நடிகையும் அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை. அமலாபால் போலீஸ் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிப்பேன் என்று கூறி கடின பயிற்சி எடுத்து வருகிறாராம்.ஒரு சில காட்சிகளில் மட்டும் போலீஸாக வந்து தனது கடின உழைப்பை காட்டிவிட்டு, மீதிக் காட்சிகளில் கவர்ச்சிக் கன்னியாக ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கிறாராம் அமலாபால். படத்தில் ஒரு சில காட்சிகளில் போலீஸ் உடையில் வருவதற்கே இவ்வளவு அலப்பறைகள் கொடுப்பதாக கோடம்பாக்கத்தில் கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்களாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக