பெண் களுக்கு எதிரான
குற்றங்கள் தொடர்புடைய வழக்கு களில் விரைவான தீர்ப்பு களை வழங்க இந்தியா
முழுவதும் மாவட்ட நீதிமன் றங்களை ஏற்படுத்திட மத்திய அரசு முடிவு செய்
துள்ளது.
டில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி
ஒருவர் பாலி யல் பலாத்காரம் செய்யப் பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
தொடர்ந்து 10 நாட்களுக்கு மேல் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. இதன்
தொடர்ச்சி யாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு மற்றும் தண்டனைகள்
அதிகரிக்க வேண்டும் என்பதில் விழிப் புணர்வு ஏற்பட்டுள்ளது. புதிய சட்ட
திருத்தங்களும் விரை வில் கொண்டு வர மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
தமிழகத்திலும் பெண் களுக்கு எதிரான
குற்றங்களை தடுக்க மாநில அரசு தரப்பிலும் நடவடிக்கை தீவிரமடைந்துள் ளது.
தற்போது பெண்களுக்கு எதிராக பதிவாகும் வழக்கு களை விசாரிப்பதற்கு சென்னை,
செங்கல்பட்டு, சேலம், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய நகரங்களில்
மட்டும் பிரத்யேக நீதிமன்றங் கள் செயல்படுகின்றன.
கூடுதல் அமர்வு நீதிமன்ற அந்தஸ்தில் இந்த
நீதிமன்றங் கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. பெண்களுக்கு எதிரான குற்ற
வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்து வரு வதையடுத்து மாவட்டத்திற்கு ஒரு விரைவு
மகளிர் நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான
பூர்வாங்க பணிகள் ஏற்கனவே துவங்கியுள்ளன.
தமிழகத்தில் ஏற்கனவே பெரும்பாலான மாவட்டங்
களில் வழக்குகளை விரைந்து முடிக்க வசதியாக விரைவு நீதிமன்றங்கள் கூடுதலாக
ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் விரைவு மகளிர் நீதிமன்றங்களும் அமைக்க
உத்தேசிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கும் போது மத்திய
அரசின் நிதியுதவியும் வழங்குவது அவசியம். கட்டமைப்பு, நீதிபதிகள் நியமனம்
போன்றவற்றுக்கு நிதி ஆதாரம் தேவை. இவற்றை கணக்கில் கொண்டு மாவட்டம் தோறும்
விரைவு நீதிமன்றங்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பதிவாகியுள்ள வழக்குகள் எண்ணிக்கை
குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இதில் தமிழகத்தில் மட்டும் கடந்த
அக்டோபர் வரை 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்ற விசாரணையில்
உள்ளது.
இதில் 5 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள
வழக்குகள் எண்ணிக்கை மட்டும் 6400க்கு மேல் உள்ளன. சிறப்பு நீதிமன்றங்கள்
அமைக்கும் போது குறிப்பிட்ட காலவரையறைக்குள் வழக்குகள் முடிவுக்கு கொண்டு
வரமுடியும். வழக்கு எண்ணிக்கை அதிகமாக உள்ள மாவட்டங்களில் முதல் கட்டமாக
விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். அதன் தொடர்ச்சியாக மற்ற மாவட்டங்களில்
அமையும் எனவும் நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. viduthalai,in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக