வியாழன், 10 ஜனவரி, 2013

சினிமா துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

;அனைத்திந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி அகில இந்திய தலைவர் டி.கே. சத்தியசீலன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,தமிழகத்தில் நிலவி வரும் மின்சார பற்றாக்குறை, காவிரி பிரச்னை மற்றும் விவசாயிகளின் வேதனைகளை பற்றி கண்டு கொள்ளாத சினிமா துறையினர் தங்கள் சுயநலத்துக்காக மத்திய அரசின் சேவை வரியை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்து ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நடிகர், நடிகைகள் நடித்த படத்தை பார்க்கும் பொதுமக்களே கேளிக்கை வரி செலுத்தும்போது இவர்கள் ஏன் செலுத்த கூடாது.
சினிமா துறையில் இருக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் சினிமா துறையினர் எவ்வளவு பேர் வருமான வரி கட்டுகின்றனர். எத்தனை படம் நடித்துள்ளனர், எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள். எவ்வளவு செலவு காட்டினார்கள்.
இதில், பொதுமக்களுக்கு செய்ததாக எவ்வளவு கணக்கு காட்டி உள்ளனர், எவ்வளவு அரசுக்கு வரி கட்டி உள்ளனர் என்ற விவரத்தை ஆர்டிஐ மூலம் கேட்க உள்ளோம். இது கிடைத்தவுடன் தமிழக சினிமா துறையினரின் அரசுக்கு கட்டும் வரியை பற்றி பொதுமக்களுக்கு தெரியப்படுத்த உள்ளோம்.
பொதுமக்கள் வரி பணத்தில் சுமார் ரூ.700 கோடியில் கட்டப்பட்ட புதிய சட்டமன்ற வளாகத்தை பொதுமக்கள் நலன் கருதி உடனே திறக்க வேண்டும்.
இந்த இடத்தை வேறு உபயோகத்துக்கு மாற்றக்கூடாது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி 21ம் தேதி சென்னை மெமோரியல் ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக