சனி, 18 ஆகஸ்ட், 2012

Shreya:என்ன பண்றது... பீல்டுல நிக்கணுமே.. அதனால்தான்

சென்னை: போட்டியைச் சமாளிக்கவும், தொடர்ந்து சினிமாவில் நிலைக்கவுமே அரை நிர்வாண போஸ் கொடுக்க வேண்டி வந்தது, என்று நடிகை ஸ்ரேயா பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
மேக்சிம் இதழுக்காக நடிகை ஸ்ரேயா இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார். மேலாடை இல்லாமல் படுக்கையில் படுத்தபடி இருக்கும் இந்த புகைப்படங்கள் இந்தி, தமிழ், தெலுங்கு படவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவர்ச்சியாக போஸ் கொடுத்தது மட்டுமின்றி தனது சினிமா வாழ்க்கையில் இதுதான் சிறந்த போட்டோ ஷூட் என்றும் ஸ்ரேயா

மதுரை கிரானைட் அதிபர் பி.ஆர். பழனிச்சாமி போலீசில் சரண்

 Granite Baron Palanisamy Surrenders மதுரை: தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பல ஆயிரம் கோடி கிரானைட் மோசடி புகாரில் சிக்கிய மலைவிழுங்கி பி.ஆர்.பழனிச்சாமி மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் சரணடைந்திருக்கிறார்.
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரத்தில் அரசு கொடுத்த அனுமதியை மீறி சட்டவிரோதமாக கிரானைட் வெட்டி எடுத்தது தொடர்பாக கடந்த இரண்டுவார காலத்துக்கும் மேலாக அப்பகுதிகளில் தொடர்ச்சியாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பி.ஆர்.பி. கிரானைட் உரிமையாளர் பழனிச்சாமி, மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி உள்ளிட்ட 18 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களது பாஸ்போர்ட்டுகள் முடக்கப்பட்டன. மேலும் சட்டவிரோத கிரானைட் குவாரிகளை நடத்திய பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்டோரின் சொத்துகளை முடக்கும் நடவடிக்கையும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

மாணவிகளுடன் தொடர்பை கண்டித்த மனைவியை கொன்ற பேராசிரியருக்கு குண்டாஸ்

நாமக்கல்: பல பெண்களுடனான தொடர்பை கண்டித்த மனைவியை கொடூரமான முறையில் குத்தி கொலை செய்த கல்லூரி பேராசிரியர், குண்டர் சட்டத்தின் கீ்ழ் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்த நடுப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன். இவரது மகள் விஜயலட்சுமிக்கும்(21), சென்னையில் கல்லூரி போராசிரியராக பணியாற்றி வந்த நடராஜன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
கல்லூரியில் படித்து வந்த விஜயலட்சுமி திருமணத்திற்கு பிறகு நாமக்கலில் உள்ள தாய் வீட்டில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில் கணவன் நடராஜனை சந்திக்க சென்னை சென்ற விஜயலட்சுமி கொலை செய்யப்பட்டார்.

Jeyalalitha பங்கேற்கும் சினிமா விழா நடிகர்கள் ஐஸ் தயாரிப்பில் மும்மரம்

போலீஸ் திருமதி ஒய்.ஜி.பி. பக்கமே செல்லவில்லை

சென்னை செல்வாக்கு பள்ளி மரணம்: முதல்வர் ஷீலா கைதும்.. உடனடி ஜாமீனும்!

Viru News
நீச்சல் பயிற்சியின் போது 4-ம் வகுப்பு மாணவன் ரஞ்சன் பலியான சம்பவம் தொடர்பாக சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் ஷீலா ராஜேந்திரன் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். உடனே, இரவோடு இரவாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
சென்னை கே.கே.நகர் அழகிரிசாமி தெருவில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த இந்த துயர சம்பவம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணையை முடித்துள்ளனர் கே.கே.நகர் போலீஸார். அதையடுத்து, ஜாமீனில் வெளியில் வரக் கூடிய இந்திய தண்டனை சட்டம் 304 ஏ என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அசாம் கலவரம் : சிக்கியது வீடியோ ஆதாரம்




அசாம் மாநிலத்தின் கோக்ராஜர் மாவட்டத்தில் தொடங்கிய கலவரம், மாநிலம் முழுவதும் பரவி பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இந்த மோதல்களில் 77 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

நாட்டையே உலுக்கிய இந்த மோதல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அசாம் வந்த சிபிஐ அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்கு சென்று கலவரத்திற்கு மூல காரணம் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில் கலவரம் ஆரம்பித்த கோக்ராஜர் மாவட்டத்தில் வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது. ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் செல்போன்களில் பதிவு செய்திருந்த வீடியோக்களை பெற்றுள்ளனர்.

கோசைகானில் உள்ள ஒரு விடுதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் அந்த வீடியோக்களில் பதிவாகியி ருப்பதாகவும், அதன்மூலம் கலவரத்திற்கு காரணமான வர்களை அடையாளம் காண முடியும் என்றும் சிபிஐ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பத்மசேஷாத்திரி கல்வியின் லாபவெறி

பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் ஷீலா ராஜேந்திரன் கைதாகி பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
பள்ளி முதல்வரை உடனடியாக கைது செய்வது போல் பாவனை காட்டிவிட்டு உடனேயே ஜாமீனில்  செய்து விட்டது அரசு .பள்ளி உரிமையாளரான திருமதி YGP யை நெருங்கவே இல்லை, சமசீர் கல்வியை அழிக்க முயற்சித்த அம்மையார் தோழியல்லவா?

பத்மா சேஷாத்திரி திருமதி ஒய்ஜிபியை கைது செய்து கொலை வழக்கு போடு!

கொலையான மாணவன் ரஞ்சன் – பத்மா சேஷாத்ரி பள்ளியின் தாளாளர் திருமதி ஒய்ஜிபி
திருமதி ஒய்ஜிபி-யின் பத்மா ஷேசாத்திரி பள்ளி சென்னையில் இருக்கும் பிரபலமான மேட்டுக்குடி பள்ளியாகும். இதன் கேகேநகர் கிளையில் நேற்று காலை நீச்சல் பயிற்சியின் போது நான்காம் வகுப்பு மாணவன் ரஞ்சன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கிறான். வகுப்பு நடக்கும் போது முறையான பயிற்சியாளர் எவரும் அருகிலில்லை. இத்தகைய பள்ளிகள் மேட்டுக்குடியினரிடம் அதிக பணம் வாங்கி நடத்தபடுபவை என்றாலும் இலாபம் என்பதுதான் அவர்களது உயிர் மூச்சு. அதன்படி எதற்கு முறையான நீச்சல் பயிற்சியாளர் என்று அந்தப் பதவிகளை வெட்டி இருக்கக் கூடும்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப்பள்ளியின் ஆசிரியர்கள் குறைந்த சம்பளத்தில் கொடுமைப்படுத்தப்படுவதை எதிர்த்து போராடியதை இங்கே நினைவுபடுத்திக் கொள்வோம். ஆசிரியர்களுக்கே இதுதான் கதியென்றால் நீச்சல் பயிற்சியாளரெல்லாம் உரிய தகுதிகளுடன், அதிக சம்பளத்துடன் நிச்சயம் இருக்கமாட்டார்கள் என்பது திண்ணம்.

பௌத்த தம்மத்தை போதிக்கும் ‘போதி நிலைக்கு’ உயர்ந்தார்



 போதிதர்மர் / அத்தியாயம் 4
வீரத்திலும் சரி, அறிவாற்றலிலும் சரி போதி தர்மர் தனது மூத்த சகோதரர்கள் இருவரையும்விட திறமைசாலி என்பது உண்மைதான். ஆனாலும் சகோதரர்கள் பயந்ததுபோல அவர்களை வீழ்த்தி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளவேண்டும் என்கிற ஆசையெல்லாம் அவருக்கு இருந்ததில்லை.
சகோதரர்களின் மேற்படி பயத்தைப் பற்றி அறிந்துகொண்ட போதிதர்மர், அவர்கள் தன்னையே கொல்ல நினைக்கும் அளவுக்கு மாறிப்போனதை நினைத்து மனம் வருந்தினார். ஆசையானது தன் சகோதரர்களை கொலைகாரர்களாக ஆக்கும் ஆற்றல் படைத்தது எனக் கண்டுகொண்டார். சொந்தம், பந்தம் அனைத்தும் ஆசைக்கு முன் மண்டியிட்டுக் கிடக்கும் மாயைகளே என்பதை உணர்ந்தார். இத்தனைநாள் தான் அனுபவித்த துன்பத்துக்கும் மன உளைச்சலுக்கும்கூடக் காரணம் ஆசையே என்பதை இனம் கண்டுகொண்டார். தன்னிடத்தில் ஆசை இருப்பதாலேயே துன்பம் இருக்கின்றது; ஆசைப்படுவதை நிறுத்திக்கொண்டால் துன்பப்படுவதும் நின்றுவிடும். உலகத்தின் மீது ஆசைப்படுவதை நிறுத்த உலகையே துறக்க வேண்டும் என்று உணர்ந்த போதி தர்மர், அவ்வாறே துறப்பதற்கும் தயாரானார். அடுத்த கணம் கொஞ்சமும் யோசிக்காமல், கௌதமர் சென்ற பாதையிலேயே தானும் நடக்கத் தொடங்கிவிட்டார்.

புதிதாக 20 IIT க்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி: நாட்டில் புதிதாக, 20 ஐ.ஐ.டி.,க்கள் அமைக்க வகை செய்யும் மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இதில், பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட உள்ள, சில முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டில் புதிதாக, 20 ஐ.ஐ.டி.,க்களை துவக்கவும், ஐ.ஐ.டி.,க்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கவும் வகை செய்யும், மசோதாவுக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு ஐ.ஐ.டி.,யும், 128 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இந்த செலவில், 50 சதவீதத்தை மத்திய அரசும், 35 சதவீதத்தை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும், மீதமுள்ள 15 சதவீதத்தை, தொழில் நிறுவனங்களும் ஏற்றுக் கொள்ளும். அடுத்ததாக, தெருவோர வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. "தெருவோர வியாபாரிகள் கட்டுப்பாடு மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு சட்டம்' என்ற, இந்த சட்ட மசோதா அமலுக்கு வந்தால், 18 வயதிற்கு மேற்பட்ட, தெருவோர வியாபாரிகள் அனைவரும் உள்ளூர் நிர்வாகத்தினரிடம் பதிவு செய்வது

கீத்திகா தற்கொலை: இன்று EX.அமைச்சர் போலீஸில் சரண்!

Viru News

விமானப் பணிப்பெண் கீத்திகா சர்மா தற்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர், இன்று (சனிக்கிழமை) அதிகாலை டில்லி போலீஸில் சரணடைந்தார். சரணடைந்த உடனே, இவரை கைது செய்தது போலீஸ்.
23 வயதான் விமானப் பணிப்பெண் கீத்திகா தற்கொலை செய்துகொண்டபோது, எழுதி வைத்த துண்டுச் சீட்டு ஒன்றில், “எனது தற்கொலைக்கு காரணம், கோபால் காண்டா” என்று எழுதப்பட்டிருந்தது. (விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) அதையடுத்து, காண்டாவை போலீஸ் தேடத் துவங்கியது.
கோபால் காண்டா பணபலம், மற்றும் அரசியல் பலம் கொண்டவர். பல ஹோட்டல்கள், மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர். கீத்திகா தற்கொலை செய்தபோது, ஹரியானாவில் அமைச்சராக இருந்தார். விவகாரம் பெரிதாகவே, அமைச்சு பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலைமறைவானார். http://namathu.blogspot.com/2012/08/air-hostess-ex.html

ரிலையன்ஸ்க்கு சலுகை 29 ஆயிரத்து 33 கோடி,GMRக்கு 3,415 கோடி....

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த மெகா ஊழலை மிஞ்சும் வகையில், தற்போது மேலும் பல ஊழல்கள் நடந்திருப்பது, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகத்தின் அறிக்கை மூலம், வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில், 1.86 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கும்,  அளவுக்கும், டில்லி விமான நிலைய பணிகளில், தனியார் நிறுவனத்துக்கு சலுகை அளித்ததில், 3,415 கோடி ரூபாய் அளவுக்கும், ஊழல் நடந்து உள்ளது தெரியவந்துள்ளது. மத்திய கணக்கு தணிக்கை அலுவலகத்தின் அறிக்கை மூலம், வெளிச்சத்துக்கு வந்தது. ஸ்பெக்ட்ரம் ஊழலை மிஞ்சும் அளவுக்கு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் கைது

சென்னை கே.கே. நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி நீச்சல் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் ரஞ்சன் பலியான சம்பவத்தில்,  பள்ளி நீச்சல் பயிற்சியாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மாணவன் பலியான வழக்கில்,  கே.கே. நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் ஷீலா ராஜேந் திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

இந்தியாவில் பெண்களே அதிக சிகரட் பிடிக்கிறார்கள் அதிர்ச்சி விபரம்

இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் சிகரெட் பிடிக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு ஆண்கள் 6 சிகரெட் பிடி்ததால் பெண்கள் 7 சிகரெட் பிடிக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
இது குறித்து மருத்துவ பத்திரிக்கை ஒன்றில் வெளியான செய்தி வருமாறு, 
இந்தியாவில் 21 சதவீத ஆண்களும், 3 சதவீத பெண்களும் தினமும் புகை பிடிக்கின்றனர். 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 47.9 சதவீதம் பேர் அதாவது ஆண்களில் கிட்டத்தட்ட பாதி பேர் புகையிலை உட்கொள்கின்றனர். சுமார் 206 மில்லியன் இந்தியர்கள் புகையிலை மெல்லும், மூக்குப் பொடி போடும் பழக்கம் உள்ளவர்கள். இதில் 32.9 சதவீதம் பேர் ஆண்கள். புகையிலை பயன்படுத்தும் 5 பெண்களில் ஒருவர் புகையிலை மெல்லும், மூக்குப் பொடி போடும் பழக்கமுள்ளவர். அதுவே 10ல் ஒருவர் தான் புகை பிடிக்கின்றனர்.
சராசரி இந்திய பெண் 17.5 வயதில் புகை பிடிக்க ஆரம்பிக்கிறார். அதுவே ஆண்கள் 18.8 வயதில் புகை பிடிக்கும் பழக்கத்தை துவங்குகின்றனர்.

பெரிய இடத்து’ பள்ளி மரணம்: வழக்கு இன்றே கோர்ட் செல்லும் மர்மம்!

Viru News கைது கோரிக்கையை எழவிடாமல் தடுக்க மேட்டுக்குடி  மேலிடம்  முயற்சி 
சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியின் நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் பலியான சம்பவம், இன்றே கோர்ட்டுக்கு செல்கிறது. இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி கார்த்திக் ராஜா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக இன்று மதியம் 12 மணிக்கு சிறப்பு விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி இக்பால் அறிவித்திருந்தார். ஆனால் வழக்கு ஆவணங்கள் உரிய நேரத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து, விசாரணையை வரும் செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி இக்பால் கூறியிருந்தார்.

24,000 கோடி நிலத்தை GMR க்கு 100 rupeesக்கு கொடுத்துள்ள அரசு.





டெல்லி: ரூ. 24,000 கோடி மதிப்புள்ள நிலத்தை ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ. 100க்கு குத்தகைக்குக் கொடுத்துள்ளது மத்திய அரசு. இதன்மூலம் நாட்டுக்கு ரூ. 24,000 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய கணக்குத் தணிக்கை அமைப்பான சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பான சிஏஜியின் அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்து. அதில்,
டெல்லியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு 239 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ. 24,000 கோடியாகும். ஆனால், அதை ஆண்டுக்கு ரூ. 100க்கு குத்தகைக்குத் தந்துள்ளனர்.
இந்த விமான நிலையம் மூலம் அடுத்த 60 ஆண்டுகளில் ரூ. 1.64 லட்சம் கோடி ஈட்ட முடியும் என்ற நிலையில், இவ்வளவு குறைந்த குத்தகைக் கட்டணத்துக்கு நிலம் தரப்பட்டது ஏன்?.
இவ்வளவு குறைந்த விலைக்கு நிலம் கிடைத்தும் கூட அந்த விமான நிலையத்தில் ஒவ்வொரு பயணியிடமும் விமான நிலைய மேம்பாட்டுக் கட்டணம் என்ற பெயரில் பணத்தை வசூலித்து வருகிறது ஜிஎம்ஆர் நிறுவனம். இந்த கட்டணம் மூலம் மட்டும் இதுவரை அந்த நிறுவனம் ரூ. 3,415 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
விமான நிலையம் கட்ட முதலில் ஒப்பந்தம் போடப்பட்டபோது விமான நிலைய மேம்பாட்டுக் கட்டணம் குறித்து அதில் எந்த விவரமும் இல்லை. ஆனால், பின்னால் அதை விமானப் போக்குவரத்துத்துறை சேர்த்து ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு உதவியுள்ளது.
இவ்வாறு சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராணா - த்ரிஷா காதல் அடுத்த ஆண்டு திருமணம்!!

டி.ராமாநாயுடுவின் பேரனும், தெலுங்கு நடிகருமான ராணாவும், நடிகை த்ரிஷாவும் காதலிப்பது குறித்து ஏற்கெனவே எழுதியிருந்தது நினைவிருக்கலாம். இப்போது இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்கள்.
'லேசா லேசா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், த்ரிஷா. தமிழ்-தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தனது 50 வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.

சுரங்க ஊழல்: அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு: CAG குற்றச்சாட்டு

 டெல்லி: கடந்த 2004-2009ம் ஆண்டில் நாட்டின் 57 நிலக்கரி சுரங்கங்களை ஏலமே விடாமல் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கியதில் தேசத்துக்கு ரூ. 1.86 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கைத் துறை (Comptroller and Auditor-General- CAG) குற்றம் சாட்டியுள்ளது.
இது தொலைத் தொடர்புத்துறையில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்ட ரூ. 1.76 லட்சம் கோடியை விட அதிகமாகும்.
இது தொடர்பான அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 2004-2009ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் மட்டும் ரூ.186 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர், டாடா நிறுவனமும் தென் ஆப்பிரிக்காவின் சசோல் நிறுவனமும் இணைந்து தொடங்கிய ஸ்டேடர்ஜி எனர்ஜி டெக் சிஸ்டம்ஸ், அனில் அகர்வாலின் நிறுவனங்கள், அதானி குரூப், ஆர்சலர் மிட்டல், எஸ்ஸார் குரூப், லான்கோ ஆகிய நிறுவனங்கள் பெரும் லாபம் அடைந்துள்ளன.
சுமார் 44 பில்லியன் டன் நிலக்கரி கொண்ட சுரங்கங்களை ஏலமே விடாமல் மிக மிகக் குறைவான விலைக்கு இவர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கித் தந்துள்ளது என்று சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது.

Ramdas:பள்ளி நிர்வாகிகளை(Mrs.YGP) கைது செய்ய வேண்டும்


சென்னை தனியார் பள்ளி மாணவன் சாவு: பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்< பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் படித்து வந்த  ரஞ்சன் என்ற நான்காம் வகுப்பு மாணவன் நீச்சல் பயிற்சியின் போது குளத்தில் மூழ்கி உயிரிழந்தான் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
லட்சம் லட்சமாக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மாணவர்களின் பாதுகாப்பில் எந்த அக்கறையும் செலுத்துவதில்லை என்பதையே இது  போன்ற விபத்துகள் காட்டுகின்றன.

பொதுமக்கள் கோபத்திலிருந்து தப்பிக்க பத்மா சேஷாத்ரி நிர்வாகம் இரங்கல் - விடுமுறை!

சென்னை: நிர்வாகத்தின் அலட்சியத்தால் மாணவன் நீச்சல் குளத்தில் விழுந்து இறந்ததால் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான சூழலை சமாளிக்கும் விதமாக, பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் இன்று விடுமுறை அறிவித்துள்ளது. 
இறந்த மாணவனுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளது.
 Mrs Ygp Condoles Ranjan Death Announced Leave பிள்ளையை இழந்த சோகத்தில் தவிக்கும் பெற்றோரும் உறவினரும், பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்று கோரி வரும் சூழலில், பள்ளியில் பணியாற்றிய 5 பேரை மட்டும் போலீஸ் கைது செய்துள்ளது.
இதனால் ஆத்திரத்தில் உள்ள பெற்றோர், திருமதி ஒய்ஜிபி, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்டோரை கைது செய்யக் கோரி வருகிறார்கள்.
இந்த சூழலில், பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் சார்பில் திருமதி ஒய்ஜிபி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வட கிழக்கு மாநிலத்தவர்கள் பீதியடைய வேண்டாம்- முஸ்லீம் தலைவர்கள் வேண்டுகோள்

Sudha Don T Go Away Muslim Leaders Appeal To Ne Migrants
பெங்களூர்: வட கிழக்கு மாநிலத்தவர்களுக்கு முஸ்லீம்களால் எந்தவிதமான ஆபத்தும் இல்லை. எனவே அவர்கள் கர்நாடகத்தை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இல்லை. போக வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று முஸ்லீம் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பெங்களூர் நீலசந்திரா பகுதியில் நேற்று முஸ்லீம் அமைப்பான மெக்கா மஸ்ஜித் கமிட்டி சார்பில் ஒரு அமைதிக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய முஸ்லீம் தலைவர்கள் பலரும் வட கிழக்கு மாநிலத்தவர்கள் கர்நாடகத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.
கமிட்டித் தலைவர் முகம்மது சமியுல்லா கூறுகையில், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். பெங்களூரில் உள்ள அனைத்து சமுதாயத்தினரும் பாதுகாப்புடன்தான் உள்ளனர். யாருக்கும், எந்தவிதமான மிரட்டலும் இல்லை.

கைதாவாரா திருமதி ஒய்ஜிபி?பள்ளி நீச்சல் குளத்தில் மாணவன் பலி

 சென்னை ஜியோன் பள்ளிப் பேருந்தில் பயணித்த மாணவி ஸ்ருதி, பேருந்தின் ஓட்டையிலிருந்து கீழே விழுந்து இறந்த சம்பவத்தில் அப்பள்ளியின் நிர்வாகி விஜயன் கைது செய்யப்பட்டதைப் போல, சென்னை பத்மா சேஷாத்திரி பாலபவன் சீனியர் செகண்டரி பள்ளியின் நிர்வாகியான ராஜலட்சுமி ஒய்ஜி பார்த்தசாரதி என்கிற திருமதி ஒய்ஜிபியும் கைது செய்யப்படுவாரா, அவர் மீது கொலை வழக்கு பாயுமா என்ற கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அடுத்தடுத்து பள்ளி மாணவ மாணவியர் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்து வருவது தமிழக மக்களை பதறடித்து வருகிறது. அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

அட்டக்கத்தி - சமரசங்கள் இல்லாமல் திரையில்


இதுவரை பார்க்காத சென்னையை இதில் பார்க்கலாம் என்பதில் சந்தேகமில்லை. சென்னையை சுற்றியுள்ள கிராம பகுதியின் மக்கள் வாழ்வை பிரதிபலிக்கிறது அட்டகத்தி என்ற திரைப்படம். அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களின் கதையை சமரசங்கள் எதுவும் இல்லாமல் திரையில் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். கதாபாத்திர தேர்வு, காட்சிபடுத்திய விதம் என அனைத்தும் கச்சிதம். ஆனால் கதை சொல்லப்பட்ட விதம் தான் சில இடங்களில் குழம்ப வைக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் ஹீரோவை மட்டுமில்லாமல் பார்வையாளர்களையும் ஏமாற்றிவிடுவது மிகப் பெரிய ஏமாற்றம்! ஃபெயிலாகி விட்டு டுடோரியல் காலேஜில் படிக்கும் தீனா என்கிற தினகரன். எப்படியாவது ஒரு பெண்ணை கரெக்ட் பண்ணி காதலிக்க வேண்டும் என்பது இவர் லட்சியம். தினமும் பேருந்தில் பயணம் செய்து படிக்கப்போகிறார் தினகரன். பாக்குற ஒரு பொண்ண விடறதில்ல.

ஜெயேந்திரர் மீது வீரமணி அவதுறு வழக்கு


திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன், தமிழர் தலைவர் கி.வீரமணி, வழக்கறிஞர் த. வீரசேகரன், தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் செய்தியாளர்கள் கூட்டத்தில் உள்ளனர். (சென்னை - 16.8.2012)
  • அக்டோபர் 5 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகும்படி இருவருக்கும் நீதிமன்றம் உத்தரவு
  • செய்தியாளர்கள் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் அறிவிப்பு
சென்னை, ஆக.16-  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் வாழ்விணையரும் தம்பியும் தம்மைச் சந்தித்ததாக காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி பேசியதாக தினமலர் செய்தி வெளியிட்டு இருந்தது.

தமிழகத்தில் கொத்தடிமை முறை குறைவு


மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் கொத்தடிமை முறை குறைவாக உள்ளது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது என தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இணக்க தொடர் பாளர் டாக்டர் லட்சுமிதர் மிஸ்ரா தெரிவித்தார்.
சர்வதேச நீதிக்குழு (அய் ஜேஎம்) சர்வதேச நீதிக்குழுவின் சார்பில் கொத்தடிமை குற்றத் திற்கு எதிரான பிரசாரம் குறித்த விழிப்புணர்வு விவாதம் சென் னையில் நடைப்பெற்றது.

புராதன சின்னங்களை துண்டு துண்டாக வெட்டி காசு பார்த்த குவாரி உரிமையாளர்கள்

 மதுரை மாவட்டம், மேலூர் அருகே, சமணர் படுகைகள், கல்வெட்டுக்கள் நிறைந்த மலைகளையும், குவாரி உரிமையாளர்கள் விட்டு வைக்காதது, அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில், பாமியான் புத்தரை சிதைத்த தலிபான் செயல் போல, இங்கே கொடுமை நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
மேலூர் அருகே, கீழவளவு பகுதியில் உள்ள, மூன்று மலைகளும், அரிட்டாபட்டியில் உள்ள ஏழு மலைகளும் மற்றும் திருவாதவூர் மலைகளில் உள்ள, சமணர் படுகைகள், தமிழ் பிராமி எழுத்துக்கள், குடவறை கோவில்கள், புத்தர், மகாவீரர் மற்றும் ஜெயின் சிற்பங்கள் உள்ளன. இவற்றில் பல இடங்கள், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இச்சின்னங்கள் நிறைந்த பகுதிகளில், கிரானைட் கற்கள் கிடைத்ததால், படிப்படியாக அவற்றை அழித்து, குவாரி உரிமையாளர்கள், கற்களை வெட்டி எடுத்துள்ளனர். இதில், கீழையூர் ரங்கசாமிபுரத்தில், டாமின் கட்டுப்பாட்டில் உள்ள, சமணர் படுகை மலை மற்றும் புறாக்கூட்டு மலை முற்றிலும் சிதைந்தன. சர்க்கரை பீர் மலை எனப்படும், பொக்கிஷ மலையை, "கேக்' வெட்டுவது போல் துண்டு துண்டாக வெட்டிய போது, ஊர் மக்கள் எதிர்ப்பாலும், கோர்ட் உத்தரவாலும், பணி, பாதியில் நிறுத்தப்பட்டது.

மம்தா பானர்ஜி மீது அவதூறு வழக்கு Contempt of court

கோல்கட்டா: "நீதித்துறையை விமர்சித்த, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது, கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக்கோரி, கோல்கட்டா ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், "மம்தாவின் பேச்சு தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திகள் உண்மையானவையா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்' என, இரண்டு "டிவி' சேனல்களுக்கும், பத்திரிகைகளுக்கும் உத்தரவிட்டனர்.
மேற்கு வங்க சட்டசபையின் ஆண்டு விழாவையொட்டி, கோல்கட்டாவில், நடந்த விழாவில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, "இன்று ஒரு சில தீர்ப்புகள், விலை கொடுத்து வாங்கப்படுகின்றன; பணம் வாங்கிக் கொண்டு, பணம் கொடுத்தவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்படுகிறது' என்று தெரிவித்தார். நீதித்துறையை விமர்சிக்கும் வகையிலான, மம்தாவின் இந்தப் பேச்சுக்கு, பல தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

சத்துணவில் அரசு கைவைக்கிறது? முட்டை குறைக்க OR தவிர்க்கப்படுகிறது

 சத்துணவில் தக்காளி சாதம், பெப்பர் முட்டை தர திட்டம்: விரைவில் அறிவிப்பு
சென்னை: சத்துணவுத் திட்டத்தில், பல வகை உணவுகளைச் சேர்ப்பது குறித்த அறிவிப்பு, அண்ணாதுரை பிறந்த தினத்தன்று வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. சத்துணவில், இனி, பெப்பர் முட்டை,  கறிவேப்பிலை சாதம் போன்றவை வினியோகிக்க வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.
தமிழகத்தில், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, தேவையான அளவில் சத்தான உணவு அளிப்பதன் மூலம், அவர்கள் உடல் தரத்தை உயர்த்தி, கல்வி கற்பதை ஊக்குவித்து, கல்வி விகிதாச்சாரத்தை உயர்த்துவதுடன், ஊட்டச்சத்து குறைபாட்டையும் நீக்குவதற்காக, சத்துணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம், 1984ம் ஆண்டு முதல், 10 முதல், 15 வயதுள்ள குழந்தைகளுக்கும் விரிவு படுத்தப்பட்டது.

மறைக்கப்பட்ட இந்தியா / அத்தியாயம் 4


www.tamilpaper.net
பஞ்சாபின் பாரம்பரியக் கல்வி மிகவும் சிறப்பாக இருந்ததற்கு முக்கியமான ஒரு காரணம் மகாராஜா ரஞ்சித் சிங் மேற்கொண்ட விசேஷ முயற்சிகள்தான். History of Indigenous Education in the Punjab என்ற புத்தகம் டாக்டர் லெயிட்னரால் (Gottlieb William Leitner) எழுதப்பட்டிருந்தது. லாகூரில் இருந்த ஓரியண்டல் கல்லூரி, அரசு கல்லூரி ஆகியவற்றின் பிரின்சிபாலாக இருந்தவர் இவர். டைரக்டர் ஆஃப் பப்ளிக் இன்ஸ்ட்ரக்ஷன் ஆகவும் சிறிது காலம் இருந்திருக்கிறார்.
அவர் தன்னுடைய நூலில் வேதனையுடன் ஒரு விஷயத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
‘பஞ்சாபின் உண்மையான பாரம்பரிய கல்வி கழுத்து நெரிக்கப்பட்டு, கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது. அதை ஆரோக்கியமான முறையில் மறுமலர்ச்சி அடையச் செய்யவும் வளர்த்தெடுக்கவும் இருந்த வாய்ப்புகள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டன. அல்லது திரிக்கப்பட்டன. தனி நபர்களை இதற்குக் காரணமாகச் சொல்ல முடியாது. இது நம் (பிரிட்டிஷ் அரசின்) நிர்வாகத்தின் ஒட்டு மொத்த தோல்வியையே காட்டுகிறது.’

அசாஞ்சேவைக் கைது செய்ய ஈக்வடார் தூதரகம் மீது நடவடிக்கை

equator
விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் அசாஞ்சேவுக்கு ஆதரவாக லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகம் முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் செய்த நபர்களைக் கைது செய்யும் போலீஸார் குவிட்டோ, ஆக. 16: விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவைக் கைது செய்வதற்காக லண்டனில் உள்ள தங்கள் நாட்டுத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப் போவதாக பிரிட்டன் மிரட்டியதாக ஈக்வடார் குற்றம் சாட்டியுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே, விக்கிலீக்ஸ் என்ற இணையதளத்தை நிறுவி, அதில் பல்வேறு நாடுகளின் அரசு ரகசியங்களை வெளியிட்டார். அவற்றில் பெரும்பாலும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகளின் அரசு மற்றும் ராணுவங்களின் ரகசிய ஆவணங்கள் இடம்பெற்றன.

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

PRP யின் 15 பஸ்கள் பறிமுதல்..கிரானைட் முறைகேடு

 பி.ஆர்.பி நிறுனத்திற்கு சொந்தமான 15 பஸ்களை போலீசார் பறிமுதல் கிரானைட் முறைகேடு செய்த உரிமையாளர்களின் வீடுகளில் நடந்த சோதனையை தொடர்ந்து அவர்களின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் துவக்கியுள்ளனர். 
மதுரை மாவட்டத்ல் உள்ள கிரானைட் குவாரிகளில் ரூ.16 ஆயிரம் கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது குறித்து 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 15 நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரானைட் அதிபர்கள், பங்குதாரர்கள் வீடுகள், அலுவலகம் உள்ளிட்ட 22 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழு ஈடுபட்டுள்ளது. சிக்கிய ஆவணங்களை ஆய்வு செய்ததில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கான பத்திரங்கள், பட்டாக்கள் இருந்தன.

வடகிழக்கு மாநிலத்தவர் 5 ஆயிரம் பேர் பெங்களூரிலிருந்து வெளியேற்றம்

பெங்களூர் :அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் தாக்குதலுக்குப் பயந்து பெங்களூரை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர். இதனால் நேற்று பெங்களூர் ரயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இது குறித்து  தகவல் அறிந்து பிரதமர் மன்மோகன் சிங், கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெளிமாநிலத்தவருக்கு உரிய பாதுகாப்பு  அளிக்க உத்தரவிட்டார். சாமில் கடந்த மாதம் போடோ பழங்குடியினருக்கும் வங்க தேசத்திலிருந்து சட்டவிரோதமாக அசாமில் குடியேறிய முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இது பெரும் கலவரமாக மாறியது. 77 பேர் கொல்லப்பட்டனர். 4 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். கலவரம் ஓய்ந்து பல நாட்கள் ஆகியும் 3 லட்சம் பேர் இன்னும் நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனர். மீண்டும் தாக்குதலுக்கு ஆளாவோமோ என்ற பயத்தில் சொந்த கிராமங்களுக்கு திரும்ப தயங்கி வருகின்றனர்.

அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் நடப்பது என்ன?

 One Killed As Violence Erupts Assam Again குவஹாத்தி: அஸ்ஸாமில் மீண்டும் இனக் கலவரம் வெடித்துள்ளதால் மாநில அரசும், மத்திய அரசும் பெரும் கவலை அடைந்துள்ளன. இந்தக் கலவரம் நாடு முழுவதும் பெரும் கலவரத்தைத் தூண்டி விடும் அபாயமும் கூடவே எழுந்திருப்பதால் அஸ்ஸாம் கலவரத்தைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுப்பது குறித்து யோசிக்கப்பட்டு வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பு வரை அஸ்ஸாமில் பெரும் இனக் கலவரம் தலைவிரித்தாடியது. இந்தக் கலவரத்தை அடக்க அஸ்ஸாம் மாநில அரசு திணறிப் போனது. மத்திய அரசு சுதாரிக்காமல் இருந்ததாலும், ராணுவம் வரத் தாமதம் ஆனதாலும் இந்த நிலைமை.
இந்த நிலையில் சற்றே அடங்கியிருந்த இனக் கலவரம் தற்போது மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது. அஸ்ஸாமின் சிராங் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் கலவரத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார், 3 பேர் காயமடைந்தனர். பூடான் எல்லைப் பகுதியில் கலவரம் நடந்த பகுதி உள்ளது.
காஷ்மீருக்கு அடுத்து இந்தியாவில் அழகான ஒரு பகுதி அஸ்ஸாம்தான் என்று வர்ணித்திருந்தார் சுவாமி விவேகானந்தர். ஆனால் இந்த இரு அழகான பூமிகளும் இன்று அக்னிப் பிழம்பாக மாறி நிற்கின்றன. காஷ்மீர் பிரச்சனை தெரிந்ததுதான். அஸ்ஸாமில் இனப் பிரச்சினை பெரிய அளவில் தலைவிரித்தாடி வருகிறது.

பள்ளியின் அலட்சியத்துக்கு மகன் பலியாகிவிட்டானே.. - சினிமா இயக்குநர் கண்ணீர்

Carelessness The School Killed My Child

"குழந்தையை பயிற்சிக்கு கூட்டிச் சென்றவர்கள், அவன் மூழ்கிவிட்டது கூட தெரியாமல் அலட்சியமாக இருந்துள்ளனர். அந்த அலட்சியம் என் மகனின் உயிரைப் பறித்துவிட்டது. இவர்களின் அலட்சியத்துக்கு என் மகனைப் பறிகொடுத்து நிற்கிறேன்..." என்று கதறினார் ரஞ்சனின் தந்தை மனோகர்.
பள்ளி நீச்சல் குளத்தில் ரஞ்சன் உள்ளிட்ட 26 மாணவர்கள் நீச்சல் பயிற்சி மேற்கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ராஜசேகர் என்ற ஒரே ஒரு பயிற்சியாளர் மட்டுமே பயிற்சி அளித்துள்ளார். 15 மாணவர்களுக்கு ஒரு பயிற்சியாளர், 2 கண்காணிப்பாளர்கள் உதவியுடன் பயிற்சியளிக்க வேண்டிய இடத்தில் ஒரே ஓரு பயிற்சியாளர் மட்டுமே இருந்துள்ளார். போதிய அளவில் பயற்சியாளர்கள் இல்லாததே விபத்துக்கு காரணம் என புகார் கூறும் பொதுமக்கள் பள்ளி நிர்வாகம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை: பள்ளியின் அலட்சியப் போக்கால் என் மகன் அநியாயமாக இறந்துவிட்டான், என்று திரைப்பட இயக்குநர் மனோகர் கண்ணீர் விட்டு கதறினார்.
கேகே நகர் பத்மா சேஷாத்ரி பள்ளியின் நீச்சல் குளத்தில் மூழ்கி பலியான மாணவன் ரஞ்சன், பிரபல இயக்குநர் மனோகரின் மகன் ஆவார்.
சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய மாசிலாமணி மற்றும் வேலூர் மாவட்டம் படங்களை இயக்கியவர் மனோகர். இப்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

ஆளும்கட்சி என்றால் ஆக்ரமிப்பில் இருந்து தப்பலாம்!

திருவண்ணாமலை நகரில் முதல் கட்டமாக முக்கிய சாலைகளில் ஆக்ரமிப்பு பகுதிகள் இடிக்கப்பட்டு கால்வாய் கட்டப்பட்டு வருகிறது. மத்தலாங்குளத்தெரு, அண்ணாசாலை பகுதிகளில் அந்த பணி நடந்தது.தற்போது சன்னதி தெருவில் ஆக்ரமிப்புகள் இடிக்கப்பட்டு வருகின்ற இந்த தெருவில் தான் நகராட்சி அலுவலகம் உட்பட பல முக்கிய கட்டிடங்கள் உள்ளன. குடியிருப்புகளும், பல கடைகளும் உள்ளன. இந்த சாலையில் அரசு கட்டிடங்கள் தவிர மற்றவையெல்லாம் 10 அடி சாலை பகுதியை ஆக்ரமித்தே கட்டப்பட்டுள்ளன.இதனை இடித்த அதிகாரிகள் ஒரு வீட்டின் அருகே வந்தபோது அந்த வீட்டின் ஆக்ரமிப்பு பகுதியை மட்டும் இடிக்காமல் விட்டுவிட்டனர். நீண்ட யோசனைக்கு பின் ஒரே ஒரு படிக்கட்டை மட்டும் இடித்துள்ளனர்.

India 44000 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்

மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் இந்தியாவில் சுமார் 44000  குழந்தைகள் வருஷத்தில்  காணாமல் போனது குறித்து பதில் அளிக்குமாகு மத்திய அரசுக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. an average 44000 children are reported missing every year
இந்தியாவில் இதுவரை44,000 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்குழந்தைகளின் நிலை என்னவென்று இதுவரை எந்த விவரமும் இல்லை.காணாமல் போகும் குழந்தைகள் பற்றி வரும் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்த காவல்நிலையங்கள் தவறிவிட்டன என்றும், கடத்திச் செல்லப்படும் குழந்தைகளின் உடல் பாகங்கள் பிடுங்கப்பட்டு அவை பிச்சை எடுக்கும் கொடுமைக்கு உட்படுத்தப்படலாம் அல்லது கடத்தல், விபச்சாரம், தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படலாம் என்று பொது நலன் மனுவை தாக்கல் செய்த சர்வ மித்ரா தனது மனுவில் கூறியுள்ளார்.

ராமதாஸ்: ஜெயலலிதாவின் வழக்கை வாய்தா வாங்காமல் சந்திப்பேன்

 I M Ready Face Jayalalithaa S Cases Ramadoss
 சென்னையில் காலராவுக்கு 29 பேர் இறந்ததாக தெரிவித்த அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர், முதல்வர் ஜெயலலிதா தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவித்ததாக கூறி என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது கட்சி அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் போல் எதிர்க்கட்சியினரும் நடந்து கொள்ள வேண்டும் என்று கருதுகிறார் போலும்.
என் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாய்தா வாங்காமல் சட்டப்படி சந்திப்பேன்.

ரஜினி குடும்பத்து பள்ளியில் நீச்சல் குள மரணம்!

திருமதி ஒய்.ஜி.பி.யால் நிறுவப்பட்ட ‘செல்வாக்கு’ பள்ளியில் நீச்சல் குள மரணம்! சமசீர் கல்வியை ஒழித்துகட்ட அமைக்கப்பட்ட குழுவை சேர்ந்த இந்த திருமதி YGP  நடிகர் ரஜினியின் மனைவி லதாவுக்கு சொந்த மாமியாவார் .இதே பள்ளியில் தான் சினிமா பிரபலங்கள் போன்ற மேட்டுக்குடி சிறுவர்கள் படிக்கிறார்கள் இவர்கள் அதிமுகவை ஆதரித்தது இதுபோன்ற மேட்டுக்குடி லாபநோக்கு கல்வி வியாபரத்தை காப்பதற்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Viru News
சென்னை தனியார் பள்ளி ஒன்றின் நீச்சல் குளத்தில் மாணவன் மூழ்கி மரணமடைந்தது, பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் பாடசாலையை முற்றுகையிட்டு நீதி கேட்டபடி உள்ளனர்.
சென்னை கே.கே. நகரில் உள்ள பத்மசேஷாத்ரி பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்த ரஞ்சன் என்ற மாணவனே, இன்று நீச்சல் பயிற்சி எடுத்த போது நீச்சல் குளத்தில் மூழ்கி பலியானான். ரஞ்சன் நீச்சல் பயிற்சி செய்து கொண்டிருந்த போது, அவனுடன் 26 மாணவர்கள் நீச்சல் பயிற்சி மேற்கொண்டிருந்தனர் என்று கூறப்படுகிறது.
உயிரிழந்த ரஞ்சன், தமிழ் திரைப்பட இயக்குநர் மனோகரனின் மகன் என்று தெரியவருகிறது.

Pakistan அணு ஆயுத முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

இஸ்லாமாபாத் :பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள் பாதுகாக்கப்பட்டு வரும் விமான படை முகாமில், தீவிரவாதிகள் இன்று அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தினர். மூன்று மணி நேர கடும் சண்டைக்கு பிறகு 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 
இந்த தாக்குதலில் ஒரு வீரர் பரிதாபமாக இறந்தார். விமான படை முகாமில் தீவிரவாத தடுப்பு கமாண்டோக்கள் உள்பட ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது கம்ரா நகரம். இங்கு விமான படை தளம் உள்ளது. இங்கு உதிரி பாகங்களை இணைத்து ஜேஎப்.17 ரக ஜெட் போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா உளவு விமானம் டிரோன்கள் அசம்பிள் செய்கின்றனர். மேலும் இங்குதான் அணு ஆயுதங்கள் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா உள்பட பல நாடுகள் கூறி வருகின்றன. இந்த விமான படை தளத்தில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பல கட்ட பாதுகாப்பை கடந்துதான் உள்ளே செல்ல முடியும். இந்நிலையில், Ôதீவிரவாத ஒழிப்பில் பாகிஸ் தான் அரசு ஒத்துழைப்பு வழங்காததால், என்றாவது ஒரு நாள் தீவிரவாதிகளின் கைகளுக்கு அணு ஆயுதங்கள் செல்ல கூடும்Õ என்று அமெரிக்க ராணுவ அமைச்சர் லியோன் பனேட்டா நேற்றுமுன்தினம்தான் எச்சரித்து இருந்தார்.

Facebookகில் ஆபாசமாக எழுதியதால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

Raksha Sharma
A first-year student in Jalandhar, India was found hanging from a ceiling fan in her hostel room yesterday morning. According to The Times of India, a suicide note discovered in her hostel blames two schoolmates and their insulting Facebook comments for her death.
பஞ்சாப் :பேஸ்புக்கில் தன்னை பற்றி ஆபாசமாக எழுதியதால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் ரக்ஷா (18). இவருக்கு ஒரு வயது இருக்கும்போது, இவரது பெற்றோரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். தாக்குதல் நடத்திய நேரத்தில் ரக்ஷாவும், அவரது அக்காவும் வீட்டில் இல்லை. எனவே இருவரும் உயிர் பிழைத்தனர். தாய், தந்தையரை இழந்த இருவரும் ஜம்முவில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்தனர். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் விடுதியில் தங்கி ரக்ஷா படித்து வந்தார்.இக்கல்லூரியின் முன்னாள் மாணவர் லவ்பிரீத்துடன் ரக்ஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அதன்பிறகு ரக்ஷா, லவ்பிரீத்துடன் பேச்சை நிறுத்தினார். இதனால் லவ்பிரீத்தும் அவரது நண்பர் தீபக்கும், ரக்ஷா பற்றி பேஸ்புக்கில் ஆபாசமாக எழுதினர். இதைபார்த்த அவர் கடும் அதிர்ச்சியும் அவமானமும் அடைந்தார்.

கோழியை (ஈமு) காட்டிவிட்டு, பணத்துடன் பறந்துவிட்ட மயில் (சாமி)!

சீசனுக்கு சீசன் மிஸ்டர் பொதுஜனம் யாரிடமோ பணத்தைக் கொண்டுபோய் கொட்டி ஏமாந்து போவது வழக்கம். இம்முறை ஈமு கோழி ரூபத்தில் வந்துள்ளது ஏமாற்றும் தந்திரம். முதலீட்டாளர்களிடம் ரூ.100 கோடி வரை மோசடி செய்த குற்றச்சாட்டில், ஈமு பண்ணை உரிமையாளர்களை 5 தனிப்படைகள் தீவிரமாக தேடி வருகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் மட்டும், 166 புகார்கள், சுசி ஈமு, குயின் ஈமு, அல்மா ஈமு, டி.வி.எஸ் ஈமு ஆகிய 4 நிறுவனங்கள் மீது கொடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் எஸ்.பி. வெண்மதி புகார்கள் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தார். அதையடுத்தே, தலைமறைவாகியுள்ள ஈமு பண்ணை உரிமையாளர்களை, தேடுவதற்கு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெங்களூரை விட்டு வெளியேறும் மக்கள் ஆயிரக் கணக்கில்!

Viru News
பெங்களூருவை திடீரென ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் வதந்தி காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் தமது பெட்டி படுக்கைகளுடன் பெங்களூருவை விட்டு வெளியேறியபடி உள்ளனர். “அசாம் பாணியிலான கலவரம் பெங்களூருவில் துவங்கப் போகின்றது” என்பதே, வதந்தி.
“அசாம் பாணியிலான கலவரம்” என்று கூறப்பட்டுள்ளதால், வட கிழக்கு மாநில மக்களை குறிவைத்த கலவரம் என்பதே வதந்தியின் அர்த்தம். நகரை விட்டு இரவோடு இரவாக வெளியேறிக் கொண்டுள்ளவர்களும், வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களே. இதில், பெங்களூருவில் படிக்கும் வட கிழக்கு மாநில மாணவர்கள், ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் அடக்கம்.
நேற்றிரவு பரவத் துவங்கியது இந்த வதந்தி. “கர்நாடக மாநிலத்தில் வாழும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தோர் மீது ஆகஸ்ட் 20-ந் தேதி ரம்ஜான் நோன்புக்குப் பிறகு அசாமில் நடத்தப்பட்டது போன்று மிகப் பெரும் தாக்குதல் நடத்தப்படும்” என்றபதை தவிர வேறு விபரம் ஏதும் கிடையாது. செல்போன் எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக், டிவிட்டர் மூலமாக இந்த வதந்தி காட்டுத் தீயாகப் பரவியது.

மதுரை மலைவிழுங்கி பி.ஆர்.பி. அதிபரின் சொத்து முடக்க அரசு தீவிரம்

மதுரை: ரூ16 ஆயிரம் கோடி கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்ட பி.ஆர்.பி. நிறுவன அதிபர் பழனிச்சாமியின் சொத்துகளை முடக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரங்களில் கிரானைட் குவாரிகளில் ரூ16 ஆயிரம் கோடிக்கு அளவுக்கு பி.ஆர்.பி. நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டது அம்லபமானது. இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில் கடந்த 2 வாரங்களாக சோதனை தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. கிரானைட் குவாரி முறைகேட்டில் ஈடுபட்ட 18 பேர் தலைமறைவாகிவிட்டனர். இவர்களில் பி.ஆர்.பி. கிரானைட் குவாரி அதிபர் பழனிச்சாமி, மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்ளிட்டோர் முக்கியமானவர்கள். இவர்களில் 6 பேர் பாஸ்போர்ட்டுகள் ஏற்கெனவே முடக்கப்பட்டுள்ளன.

Alchemists இல்லையென்றால் அமிலங்கள், காரங்கள், உப்புகள் நமக்குக் கிடைத்திருக்காது.


மேட்டர் / அத்தியாயம் 4
ஆரம்பகாலத்தில் தாதுக்களிலிருந்து உலோகத்தைப் பிரித்தெடுத்தவர்கள், ஈயத்தைத் தங்கமாக்க முயற்சி செய்த ரசவாதிகள் ஆகியோர் மிக மிக முக்கியமான வேதியியல் விஞ்ஞானிகள்.
இவர்களுடைய விடாமுயற்சியாலும் எண்ணற்ற பரிசோதனைகளாலும்தான் வேதியியல் துறை வெகுவாக முன்னேறியது. 19-ம் நூற்றாண்டு ஆரம்பித்ததும் வேதியியல், வலுவான சித்தாந்தப் பின்னணியுடன் ஒரு முழுமையான அறிவியல் துறையாக மாற ஆரம்பித்தது. அதிலிருந்துதான் பொருள்கள் பற்றிய புரிதல் வர ஆரம்பித்தது. அவற்றையெல்லாம் விரிவாகப் பார்க்கப்போகிறோம்.
அதற்குமுன், 18-ம் நூற்றாண்டில் இறுதிவரையில் நம் பரிசோதனை வேதியியல் விஞ்ஞானிகள் என்னவெல்லாம் செய்திருந்தனர் என்பதைப் பார்த்துவிடுவோம்.

புதிய தலைமுறை டிவி.யை முடக்க முயற்சி?

சென்னை: எஸ் சி வி எனப்படும் சன் குழும நிறுவனத்தின் கேபிள் இணைப்பு பெற்றவர்களால் புதிய தலைமுறை தொலைக்காட்சியை காண இயலவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
சென்னையின் ஒரு பகுதியில் எஸ்.சி.வியில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சேவை தெரியவில்லை என்று நேயர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து எஸ்சிவி நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டும் சரியான விளக்கம் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எஸ்.ஆர்.எம் குழுமத்தினரால் தொடங்கப்பட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி சேனல் பல்வேறு செய்திகளை உடனுக்குடன் ஒளிபரப்பி வருகிறது. புதிய தலைமுறை டிவியில்  மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை போன்ற செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

அ.தி.மு.க அடிமைகள் கூட்டமே ஜெயாவின் காலில்

முகுல்-ராய்-சிவப்பு-கம்பள-வரவேற்புபிணங்களுக்கும் பரிதாபத்துக்குரிய மரண ஓலங்களுக்கும் மத்தியில் அதனை துக்கம் விசாரிக்க வந்தவருக்கு பன்னீர் தெளித்து பால் பாயாசம் கொடுத்து விருந்தோம்பும் கேவலம் தமிழர்களின் உன்னதப் பண்பாட்டைக் காட்டுகிறதா?








சொகுசு இரயிலும் – சிவப்பு கம்பளமும்
ஜூலை மாத இறுதியில் நடந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 32 பேர் கருகி பலியானது நினைவிருக்கிறதா? தீயணைப்புக் கருவிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேன்மக்கள் பயணம் செய்யும் பெட்டிகளுக்குத்தான் என்பது அவ்விபத்தை ஒட்டி வெளிவந்த பல செய்திகளின் மூலமே தெரியவந்தது. முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு வேறுபாடு என்பது ஏழை உயிருக்கும் பணக்கார உயிருக்குமான வேறுபாடாகவும் இருப்பதை அறிந்து பலர் கொதித்தனர்.

புதன், 15 ஆகஸ்ட், 2012

விஜயகாந்த் (மாறி மாறி) மக்களுடன் மட்டும்தான் கூட்டணி

 தற்போது மக்களுடன் என்பதை திமுகவுடன் என்று விளங்கி கொள்ளவும்  வளவளக்காமல்  வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு சொல்லியே விட்டார் விஜயகாந் !Viru News

தேர்தலில் கூட்டணி விஷயத்தில், “வரும்.. ஆனா வராது” பாணியில் எப்போதும் கருத்துச் சொல்லும் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், ஒரு தீர்மானத்துக்கு வந்திருப்பார் போலிருக்கிறது. “வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்திற்கு நன்மை செய்யும் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்” என இப்போதே கூறிவிட்டார்.

நித்தி ஆட்களால் அறைக்குள் அடைபட்டார் மூத்த ஆதீனம்!

நித்தியானந்தா, தாம் மதுரையில் இல்லாத நேரத்தில்கூட, தமக்கு பிடிக்காதவர்களை மதுரை ஆதீனம் சந்திக்க கூடாது என்று செய்துவிட்டுப் போன ஏற்பாடுகள், பக்காவாகவே வேலை செய்கின்றன. மூத்த ஆதீனத்தை பார்ப்பதற்காக வந்திருந்த கர்நாடகா சாமியாரை சந்திக்காதபடி, மதுரை ஆதீனம் வெற்றிகரமாக தடுக்கப்பட்டார்.
மதுரை வந்த கர்நாடகா சாமியார், “மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், நித்தியானந்தா அடியாட்களால் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். அவரைப் பார்க்காமல் நான் இங்கிருந்து கிளம்ப மாட்டேன்” என்று மதுரையில் முகாமிட்டிருக்கிறார்.
கர்நாடகத்தில் இருந்து வந்துள்ள சாமியாரின் பெயர், ரிஷிகுமார். தம்மை மதுரைக்கு வருமாறு அழைத்ததே மூத்த ஆதீனம் அருணகிரிநாதர்தான் என்கிறார் இவர்.

கொடநாடு பற்றி பேசுவோமா?”ஜெ. கிணறு வெட்ட, கருணாநிதி காட்டிய பூதம்

Viru News,



லாஸ்ட் ஆர்டரில் வந்த பேட்ஸ்மேன் கண்ணை மூடிக்கொண்டு பேட்டை வீசுவதுபோல, வாயை திறப்பவர்கள் அனைவர் மீதும் அவதூறு வழக்குகளை முதல்வர் போட்டுத் தள்ளிக் கொண்டிருக்க, விவகாரமான விஷயம் ஒன்றை கையில் எடுத்திருக்கிறார், தி.மு.க. தலைவர் கருணாநிதி!
“நம் அனைவர் மீதும் அவதூறு வழக்குகள் போடப்படுவது, கொடநாடு எஸ்டேட் பற்றி பேசுவதை வைத்துதானே… சரி. கோர்ட்டில் இந்த கொடநாடு எஸ்டேட் பற்றி கொஞ்சம் பேசுவோமா?” என்று கேட்டிருக்கிறார் கருணாநிதி.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் எந்தவொரு முதலமைச்சராவது பதவியில் இருக்கும்போதே, இரண்டுமாத காலத்திற்கு ஓய்வு என்று ஏதோ ஒரு ஊரில் தங்கியது உண்டா? இந்த கேள்வியைத்தான் பாமக நிறுவனர் ராமதாஸும் கேட்டுள்ளார். அதற்கு நான் கொடுத்த பதிலில், ‘அந்த அளவிற்கு அவர்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அதைப் பற்றிய கவலை அவருக்கு வாக்களித்தவர்களுக்கு அல்லவா ஏற்பட வேண்டும்?’ என்று கூறியிருந்தேன்.

6 துணை நடிகைகள் உள்பட 23 இளம்பெண்கள் மீட்பு

சென்னை: நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படவிருந்த 23 இளம்பெண்களை போலீசார் மீட்டனர்.
கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் அருகே உள்ள சர்தார் பட்டேல் ரோட்டில் ஒரு சொகுசு பஸ் நிற்பதாகவும் அதற்குள் இளம்பெண்கள் பலர் இருப்பதாகவும் சி.பி.சி.ஐ.டி. விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த இடத்திற்கு சென்று பஸ்ஸை சுற்றி வளைத்து விசாரணை நடத்தியதில் அதில் இருந்த பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டது தெரிய வந்தது.
பேருந்தில் திருவான்மியூரைச் சேர்ந்த சாய்சாது, ஆவடியைச் சேர்ந்த தமீம் அன்சாரி, பூந்தமல்லியைச் சேர்ந்த கற்பகம், ஸ்டெல்லா மற்றும் 7 பெண் புரோக்கர்கள் இருந்தனர். மேலும் 23 இளம்பெண்கள் இருந்தனர். விசாரணையில் அந்த புரோக்கர்கள் அதிக சம்பளத்தில் நல்ல வேலை வாங்கித் தருவதாகக் கூறி அந்த இளம் பெண்களை ஏமாற்றி அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தவிருந்தது தெரிய வந்தது.

நீதிபதிகளில் Few ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள்.மம்தா பானர்ஜி

மேற்கு வங்காள மாநில சட்டசபை ஆண்டுவிழாவையொட்டி, சட்டசபையில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பேசுபவர்கள் பட்டியலில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பெயர் இல்லாத போதிலும், அவர் சபாநாயகரிடம் அனுமதி பெற்று பேசினார். அப்போது, நீதித்துறையை சரமாரியாக விமர்சித்தார்.மம்தா பானர்ஜி பேசியதாவது:நீதிபதிகளில் ஒரு பிரிவினர் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள். பணம் வாங்கிக்கொண்டு, சாதகமான தீர்ப்பு அளிக்கிறார்கள். அதாவது, தீர்ப்பு, விலைக்கு வாங்கப்படுகிறது. இதை சொல்ல எனக்கு வருத்தமாக இருக்கிறது. இதற்காக என் மீது அவதூறு வழக்கு தொடரப்படலாம். நான் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படலாம். ஆனால், இதை இங்கேயோ அல்லது வேறு எங்கேயோ நான் சொல்லியே ஆக வேண்டும்.

தமன்-நயன்-த்ரிஷா கூட்டணி பீல்டில் நீடிக்க Strategy

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
சென்னை: முன்னணி இடத்துக்கு முன்னேறும் நடிகைகளின் போட்டியை சமாளிக்க சீனியர் நடிகைகள் திடீர் கூட்டணி அமைத்துள்ளனர்.
காஜல் அகர்வால், சமந்தா, ஹன்சிகா மோத்வானி என இளம் நடிகைகள் தற்போது முன்னணி இடத்தை கைப்பற்றி கோலிவுட், டோலிவுட்டில் கலக்குகின்றனர். இதனால் சீனியர் நடிகைகள் த்ரிஷா, நயன்தாரா, தமன்னா, ஸ்ரேயா உள்ளிட்டோர் கலக்கத்தில் உள்ளனர். இளம் நடிகர்கள், புதுமுகங்கள் ஜோடி சேர்க்க வேண்டுமென்றால் வளரும் நடிகைகளையே இயக்குனர்கள் விரும்புகிறார்கள்.
இந்த போட்டியை சமாளிப்பது எப்படி என்று சீனியர் நடிகைகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தால் மட்டுமே பீல்டில் நீடிக்க முடியும் என்பதை  த்ரிஷா, நயன்தாரா, தமன்னா புரிந்துகொண்டுள்ளனர்.

கையெழுத்துப் பத்திரிகையிலிருந்து ட்விட்டர் வரை

உரையாடல் சுகம். உரையாடுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணமிருக்கிறது. ஒன்றை நாம் ஏற்றுக்கொள்கிறோமோ, ஆட்சேபிக்கிறோமோ.. எதுவாக இருந்தாலும் அதற்கு உரையாடல் அவசியம். 
உரையாடுவதற்கான மனப்போக்கு நமக்கு எப்போதும் வாய்ப்பதில்லை. அல்லது நம்மெதிரே உரையாடுவதற்கு எப்போதும் ஆள் கிடைப்பதில்லை. உரையாடல் பலருக்கும் ஒரு கட்டத்தில் சலித்து விடுகிறது. ஒருவேளை ஏற்கனவே உரையாடியதையே திரும்ப உரையாட வேண்டி இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது உரையாடலுக்காக செலுத்த வேண்டிய உழைப்பு அயர்ச்சியைத் தரலாம். எது எப்படியோ எல்லோருமே ஏதோ ஒரு காலக்கட்டத்தில் மற்றவர்களுடனான நம்முடைய உரையாடலை, ஏதோ ஒரு காரணத்தால் நிறுத்திக் கொள்கிறோம். இப்படிப்பட்ட நிலையில் எழுபத்தைந்து ஆண்டு காலமாகவே யாருடனேயோ, எதற்காகவோ எப்போதும் உரையாடிக் கொண்டேயிருப்பது எத்துணை பெரிய சாதனை?

பிரதிபா பாட்டீல் Luxury விமானத்தில் 255 முறை பயணம் செய்துள்ளார்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபுதுடெல்லி; கடந்த 2008ம் ஆண்டு முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் ஜனாதிபதியாக இருந்த பிரதிபா பாட்டீல் 255 முறை விமான பயணம் செய்துள்ளார். இந்த காலகட்டத்தில் 108 முறை மட்டுமே பிரதமர் மன்மோகன்சிங் விமான பயணம் செய்துள்ளார். பிரதிபா பாட்டீல் ஜனாதிபதியாக இருந்தபோது அடிக்கடி குடும்பத்தாருடன் வெளிநாடு பயணம் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அவர் மறுத்தார். அயல்நாடுகளுடனான உறவை பலப்படுத்த இந்த பயணங்கள் மிக அவசியம் என ஜனாதிபதி அலுவலகம் தரப்பில் பதில் தரப்பட்டது. பச்சை பொய்யை ஒரு சாதாரண அரசியல்வாதி சொல்வதை புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் ஒரு ஜனாதிபதி என்பவர் இந்த அளவு தரம் தாழ்ந்து இருப்பதை என்ன சொல்வது ?
இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் அதிக அளவில் பிரதிபா பாட்டீல் விமான பயணம் செய்திருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது.

மெரினாவில் மூழ்கி ஒரே மாதத்தில் 10-க்கும் மேற்பட்டோர் பலி

-மெரினாவில் மூழ்கி ஒரே மாதத்தில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மெரினா கடற்கரைக்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர். இங்கு குளிப்பவர்கள் பலர் அலையில் சிக்கி பலியாகின்றனர். 
இதை தடுக்க அபாய பகுதியாக இருப்பதால் இங்கு குளிக்க தடை விதிக்கப்படுகிறது என்று காவல்துறையினர் மெரினாவில் போர்டு எழுதி வைத்துள்ளனர்.
அதையும் மீறி குளிப்பவர்களை காவல்துறையினர் கட்டுப்படுத்துகின்றனர். வார விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மெரினாவில் குவிகின்றனர்.

தாவூத் விருந்தில் பங்கேற்றேன்: சுப்ரீம் கோர்ட்டில் சஞ்சய்தத் ஒப்புதல்

புதுடில்லி: மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், ஆறு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத், உச்சநீதிமன்றத்தில் நேற்று நடந்த அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையின் போது, "நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், மும்பையில் கொடுத்த விருந்தில் பங்கேற்றது உண்மை தான். ஆனால், அவருடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை,'' என்று தெரிவித்துள்ளார்.
மும்பையில், கடந்த 1993ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி முதல் 13ம் தேதி வரை, தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில், 200 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர்.

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

கலைஞர்:பல உண்மைகள் வெளியே வரும் வழக்கை சந்திக்க தயார்

தமிழகத்தில் எந்தவொரு முதலமைச்சராவது பதவியில் இருக்கும்போதே, இரண்டுமாத காலத்திற்கு ஓய்வு என்று ஏதோ ஒரு ஊரில் தங்கியது உண்டா என்ற கேள்விக்கு தாம் அளித்த பதிலை குறிப்பிட்டுள்ளார்.
 இதே கேள்வியைத்தான் பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டிருப்பதாகவும், அந்த அளவிற்கு அவர்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்றும் அதைப் பற்றிய கவலை அவருக்கு வாக்களித்தவர்களுக்கு அல்லவா ஏற்பட வேண்டும் என்றும் தாம் பதிலளித்ததை கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.இந்தப் பதிலில் முதலமைச்சர் ஜெயலலிதாவை களங்கப்படுத்துவது போல ஏதாவது உள்ளதா என்பதைத் தமிழ்நாட்டு மக்கள், நடுநிலையாளர்கள்தான் கூறவேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் பேச்சுரிமை உண்டு, எழுத்துரிமை உண்டு. ஆனால் என் மீது வழ:ககு, மு.க.ஸ்டா-ன் மீது வழக்கு, டாக்டர் ராமதாஸ் மீது வழக்கு, பத்திரிகைகள் மீதெல்லாம் வழக்கு என எத்தனை வழக்குகள்? என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்? திமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த என்னைப் பற்றியும், திருமதி சோனியா காந்தி, வாஜ்பாய், அத்வானி, நரசிம்மராஜ் ஆகியோரை தரக்குறைவாக ஜெயலலிதா பேசினார். மூப்பனார், சென்னரெட்டி, ஜானகி எம்.ஜி.ஆர் ஆகியோர் மீது பழி சுமத்தினார். இப்படியெல்லாம் பேசிய அகில உலகப் புகழ் பெற்றவர்தான், தாம் எழுதியதால் களங்கம் ஏற்பட்டு விட்டதாக வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை சந்திக்க தயார். வழக்கு வரட்டும் அப்போது இந்த உலகத்திற்கு சொல்லப்பட வேண்டிய பல செய்திகள் வெளியே வரும். முதலமைச்சரே சென்று மாதக்கணக்கில் தங்கும் கொடநாடு எஸ்டேட் யாருடையது. அது எப்படி வாங்கப்பட்டது. என்ன விலை. முதலமைச்சர் தங்கும்போது அதிகாரிகள் செல்வதற்கான செலவு யாருடைய பணம். இந்த கேள்விகளுக்கெல்லாம் விடைக்காண்பதற்காக, வழக்கை எதிர்நோக்க தயார்.

ஆச்சார்யா ராஜினாமா! ஜெயாவுக்கு இது நல்ல சேதியா, கெட்ட சேதியா

Viru News
முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் திடீரென ஒரு அதிரடித் திருப்பம். அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராகி வாதாடி வந்த ஆச்சார்யா திடீரென பதவி விலகியுள்ளார். கர்நாடக மாநில உள்துறை செயலாளருக்கு தமது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ள ஆச்சார்யா, ‘மன உளைச்சல்’ காரணமாகவே தாம் ராஜினாமா செய்வதாகக் காரணம் குறிப்பிட்டுள்ளார்.
நிஜக்காரணம் பயமா மிரட்டலா என்பது தெரியவில்லை .எதற்கும் வக்கீல் விஜயன் மற்றும் அசிட் விக்டிம் சந்திரகலா போன்றோரிடம் கன்சல்ட் பண்ணவேண்டும் 
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதாவுக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கு பலத்த இழுபறிகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்பதே குற்றச்சாட்டு.

மும்பை ஐஐடி மாணவி கற்பழிப்பு காபியில் மயக்க மருந்து கொடுத்து

மும்பை ஐஐடியில் பி.ஹெச்.டி. ஆய்வு செய்து வரும் மாணவியை தமது வீட்டுக்கு அழைத்துச் சென்று காபியில் மயக்க மருந்து கொடுத்து அதே கல்வி நிலையத்தின் ஊழியர் கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மும்பை ஐஐடியில் பிஹெச்டி ஆய்வு செய்து வரும் ஒரு மாணவியும் அந்த கல்வி நிலைய பணியாளர் ஒருவரும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் ஒன்றாக பாட்மிண்டன் விளையாடியது முதல் இந்த நட்பு தொடர்ந்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து நேற்று அந்த மாணவியை தமது வீட்டுக்கு வருமாறு அந்த ஊழியர் அழைத்திருக்கிறார். இந்த மாணவியும் அவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது அவர் கொடுத்த காபியை குடித்தது மட்டும்தான் அம் மாணவிக்கு நினைவு....
நினைவு திரும்பிய போது ஊழியரின் படுக்கை அறையில் அலங்கோலமாக தாம் இருப்பதைக் கண்டு பதறிப் போய் தமது தோழிக்கு அழைத்து விவரத்தை சொல்லியபடியே மயங்கி விழுந்திருக்கிறார் அவர்.

Chennai விலாஸ்ராவ் தேஷ்முக் கிச்சை பலனின்றி உயிரிழந்தார்



கல்லீரல் புற்றுநோய் மற்றும் சிறுநீரகப் பிரச்சினையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் இன்று (14/08/2012) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 67. ஒரு வார காலத்துக்கும் மேலாக தனியார் மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விலாஸ்ராவின் கல்லீரலில் புற்றுநோய் தாக்கியதில் உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய நிலையில் இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக், இன்று மதியம் காலமானார்.

அசாம் நிவாரணம்: ரூ5 கோடியில் இருந்து ரூ.50,000... பாஜக எம்பிக்களின் "தாராளம்"

அசாம் மாநிலத்தில் இன மோதலால் பாதிக்கப்பட்டோருக்கும் உத்தர்காண்ட் மாநிலத்தில் நிலச்சரிவால் இடம்பெயர்ந்தோருக்கும் உதவுவதற்காக பாஜக எம்.பிக்கள் ஒவ்வொருவரும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ5 கோடியில் ரூ50 ஆயிரம் "மட்டும்" கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாராந்திரக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் எப்படி செயல்படுவது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது பாஜகவின் ராஜ்யசபா எம்.பி.யான வி.பி.சிங் பஹத்னோ, அசாம் இன மோதலில் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண நிதிக்காக பாஜக எம்.பிக்கள் தங்களது ஊதியத்திலிருந்து கொடுக்கலாம் என்று யோசனையை தெரிவித்தார். ஆனால் இதனை மற்ற உறுப்பினர்கள் ஏற்கவில்லை. பின்னர் ஒருவழியாக பாஜக எம்.பி.க்கள் அனைவரும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ50 ஆயிரத்தை நிவாரண நிதிக்கு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

மன உளைச்சலால் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா திடீர் ராஜினாமா

 Acharya Resigns As Special Public Prosecutor
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வாதாடிவரும் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா திடீரென தமது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். 

கர்நாடக மாநில உள்துறை செயலருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ள ஆச்சார்யா, மன உளைச்சல் காரணமாகவே தாம் ராஜினாமா செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்ற புகாரின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு பல்வேறு தடைகளைத் தாண்டி உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2ம் வகுப்பு பெட்டியில் சென்றாலும் ஐ.டி. கார்டு கட்டாயம்

சென்னை: ரயிலில் ஏ.சி.பெட்டியைப் போன்று இனி 2ம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்ய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்படுகிறது.
ரயிலில் ஏ.சி. பெட்டியில் பயணிப்பவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இந்நிலையில் இனி 2ம் வகுப்பு அதாவது தூங்கும் வசதியுடன் கூடிய பெட்டியில் பயணம் செய்வோரும் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என்ற புதிய திட்டம் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது.