வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

பொதுமக்கள் கோபத்திலிருந்து தப்பிக்க பத்மா சேஷாத்ரி நிர்வாகம் இரங்கல் - விடுமுறை!

சென்னை: நிர்வாகத்தின் அலட்சியத்தால் மாணவன் நீச்சல் குளத்தில் விழுந்து இறந்ததால் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான சூழலை சமாளிக்கும் விதமாக, பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் இன்று விடுமுறை அறிவித்துள்ளது. 
இறந்த மாணவனுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளது.
 Mrs Ygp Condoles Ranjan Death Announced Leave பிள்ளையை இழந்த சோகத்தில் தவிக்கும் பெற்றோரும் உறவினரும், பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்று கோரி வரும் சூழலில், பள்ளியில் பணியாற்றிய 5 பேரை மட்டும் போலீஸ் கைது செய்துள்ளது.
இதனால் ஆத்திரத்தில் உள்ள பெற்றோர், திருமதி ஒய்ஜிபி, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்டோரை கைது செய்யக் கோரி வருகிறார்கள்.
இந்த சூழலில், பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் சார்பில் திருமதி ஒய்ஜிபி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "மாணவன் ரஞ்சன் மறைவு எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. இந்த மரணம் துரதிருஷ்டவசமானது, மிகப்பெரிய துயரம் தரும் இழப்பு.
பத்மா சேஷாத்ரி குழுமம், தன் ஒவ்வொரு மாணவனையும் குடும்ப உறுப்பினர் போலத்தான் கருதுகிறது.
எங்கள் அன்புக்குரிய ரஞ்சன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (17 ஆகஸ்ட்) பள்ளிக்கு முழு விடுமுறை அறிவிக்கிறோம்.
இந்த கொடுந்துயரிலிருந்து ரஞ்சனின் குடும்பத்தார் மீண்டு வரும் வல்லமையைத் தர பிரார்த்திக்கிறோம். - அன்புடன் திருமதி ஒய்ஜி பார்த்தசாரதி".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக