சனி, 18 ஆகஸ்ட், 2012

அசாம் கலவரம் : சிக்கியது வீடியோ ஆதாரம்




அசாம் மாநிலத்தின் கோக்ராஜர் மாவட்டத்தில் தொடங்கிய கலவரம், மாநிலம் முழுவதும் பரவி பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இந்த மோதல்களில் 77 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

நாட்டையே உலுக்கிய இந்த மோதல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அசாம் வந்த சிபிஐ அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்கு சென்று கலவரத்திற்கு மூல காரணம் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில் கலவரம் ஆரம்பித்த கோக்ராஜர் மாவட்டத்தில் வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது. ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் செல்போன்களில் பதிவு செய்திருந்த வீடியோக்களை பெற்றுள்ளனர்.

கோசைகானில் உள்ள ஒரு விடுதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் அந்த வீடியோக்களில் பதிவாகியி ருப்பதாகவும், அதன்மூலம் கலவரத்திற்கு காரணமான வர்களை அடையாளம் காண முடியும் என்றும் சிபிஐ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


மேலும் இந்த மோதல் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் எந்நேரமும் தெரிவிக்கலாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுதவிர கலவரப் பகுதிகளில் மத்திய தடயவியல் ஆய்வக அதிகாரிகள் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக