புதன், 15 ஆகஸ்ட், 2012

விஜயகாந்த் (மாறி மாறி) மக்களுடன் மட்டும்தான் கூட்டணி

 தற்போது மக்களுடன் என்பதை திமுகவுடன் என்று விளங்கி கொள்ளவும்  வளவளக்காமல்  வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு சொல்லியே விட்டார் விஜயகாந் !Viru News

தேர்தலில் கூட்டணி விஷயத்தில், “வரும்.. ஆனா வராது” பாணியில் எப்போதும் கருத்துச் சொல்லும் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், ஒரு தீர்மானத்துக்கு வந்திருப்பார் போலிருக்கிறது. “வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்திற்கு நன்மை செய்யும் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்” என இப்போதே கூறிவிட்டார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தமது கட்சி எம்.எல்.ஏ. செந்தில்குமார் அலுவலகத்தில், இன்று காலை சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியேற்றி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோதே, கூட்டணி பற்றிய தமது கருத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கவும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார் அவர்.
“தமிழக அரசு தினம் ஒரு இலவச அறிவிப்புகளை வெளியிடுகிறது. கஜானா காலி என்றவர்கள் எப்படி இதை நிறைவேற்றுவார்கள்? அதைப்பற்றி தமிழக அரசு கவலைப்படுவதாக தெரியவில்லை. குவாரியில் ரூ.35 ஆயிரம் கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
1993-ம் ஆண்டில் இருந்தே குவாரிகளில் முறைகேடு நடைபெற்று வருகிறது. இதில் தொடர்புடைய கிராம நிர்வாக அதிகாரி முதல் கனிம வள அதிகாரி வரை வழக்கு போட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். குவாரி அதிபர்களிடமிருந்து சொத்துக்களை மீட்டு, பொதுமக்களிடம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”
அதன்பின், நாடாளுமன்ற தேர்தல் பற்றி குறிப்பிட்ட அவர், “நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கண்டிப்பாக மாறும். தமிழகத்திற்கு நன்மை செய்யும் கட்சியுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும்” என்றார்.
டெசோ மாநாடு பற்றி பட்டும் படாமலுமே பதில் சொன்னார் அவர். “இதை (டெசோ மாநாட்டை) கருணாநிதி கடந்த ஆட்சியிலேயே செய்திருக்க வேண்டும். அப்போது அவர்கள் இதைப் பற்றி யோசிக்காமல், இப்போது மாநாடு நடத்துவதால் என்ன பிரயோசனம்” என்பதே அவரது கருத்து.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றிய அவரது கருத்தையும், டெசோ மாநாடு பற்றிய கருத்தையும், முடிச்சுப் போட்டு பார்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக