வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

ராணா - த்ரிஷா காதல் அடுத்த ஆண்டு திருமணம்!!

டி.ராமாநாயுடுவின் பேரனும், தெலுங்கு நடிகருமான ராணாவும், நடிகை த்ரிஷாவும் காதலிப்பது குறித்து ஏற்கெனவே எழுதியிருந்தது நினைவிருக்கலாம். இப்போது இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்கள்.
'லேசா லேசா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், த்ரிஷா. தமிழ்-தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தனது 50 வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.

பிரபல பட அதிபர் டி.ராமாநாயுடுவின் பேரன் ராணாவுடன் ஒரு தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தபோது, இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.
அந்த நட்பு பின்னர் காதலாக மலர்ந்தது. இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். இந்த நட்சத்திர காதல், கல்யாணத்தில் முடிய இருக்கிறது. த்ரிஷாவும், ராணாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்கள்.
ராணாவுக்கு ஒரே ஒரு தங்கை இருக்கிறார். அவருக்கு திருமணம் முடிவாகியிருக்கிறது. நிச்சயதார்த்த நிகழ்ச்சி, ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில், த்ரிஷாவும் கலந்து கொண்டார்.
ராணா தங்கையின் திருமணம், வருகிற டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. தங்கை திருமணம் முடிந்ததும், த்ரிஷாவை திருமணம் செய்து கொள்ள ராணா திட்டமிட்டு இருக்கிறார். இவர்களின் திருமணத்துக்கு இரண்டு பேர்களின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள்.
அடுத்த வருடம் ஆரம்பத்தில், ஜனவரி அல்லது பிப்ரவரியில் த்ரிஷா-ராணா திருமணம் நடைபெறும் என்று த்ரிஷா தரப்பில் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக