செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

மும்பை ஐஐடி மாணவி கற்பழிப்பு காபியில் மயக்க மருந்து கொடுத்து

மும்பை ஐஐடியில் பி.ஹெச்.டி. ஆய்வு செய்து வரும் மாணவியை தமது வீட்டுக்கு அழைத்துச் சென்று காபியில் மயக்க மருந்து கொடுத்து அதே கல்வி நிலையத்தின் ஊழியர் கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மும்பை ஐஐடியில் பிஹெச்டி ஆய்வு செய்து வரும் ஒரு மாணவியும் அந்த கல்வி நிலைய பணியாளர் ஒருவரும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் ஒன்றாக பாட்மிண்டன் விளையாடியது முதல் இந்த நட்பு தொடர்ந்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து நேற்று அந்த மாணவியை தமது வீட்டுக்கு வருமாறு அந்த ஊழியர் அழைத்திருக்கிறார். இந்த மாணவியும் அவர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது அவர் கொடுத்த காபியை குடித்தது மட்டும்தான் அம் மாணவிக்கு நினைவு....
நினைவு திரும்பிய போது ஊழியரின் படுக்கை அறையில் அலங்கோலமாக தாம் இருப்பதைக் கண்டு பதறிப் போய் தமது தோழிக்கு அழைத்து விவரத்தை சொல்லியபடியே மயங்கி விழுந்திருக்கிறார் அவர்.

தோழியும் சக மாணவர்களுடன் சென்று அந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவியை கெடுத்த ஊழியரை அவர்கள் தேடியபோது எதுவுமே நடக்காதது போல் அலுவலகப் பணியில் இருந்திருக்கிறார். பின்னர் வேறு என்ன? நாலு சாத்து சாத்தி நையப் புடைத்து உண்மையை கக்க வைத்து அந்த ஊழியரை போலீசாரிடம் மாணவர்கள் ஒப்படைத்திருக்கின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக