சனி, 14 அக்டோபர், 2023
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் பயணம்!
50 பயணிகளுடன் இந்தியா - நாகபட்டினத்தில் இருந்து புறப்பட்ட கப்பல் இலங்கை - காங்கேசன்துறையை நோக்கி இன்று (14.10.2023) மதியம் 12.15 மணியளவில் வந்தடைந்தது.
மீண்டும் இன்று பி.ப 2.00 மணியளவில் 31 பயணிகளுடன் இந்தியா - நாகபட்டினம் நோக்கி சென்றது.
விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து நிகழ்வு ஆரம்பமானது. பின்னர் கப்பலில் பயணித்த பயணிகளுக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. இந்த கப்பல் பயணமானது மிகவும் சௌகரியமாகவும், பாதுகாப்பானதாகவும், பிரியோசனமாகவும் அமைந்ததாக பயணிகள் தெரிவித்தனர்.
மகளிர் உரிமை மாநாட்டில் திமுக எம்.பி. கனிமொழி உரை |
திமுக மகளிர் அணி சார்பில் இன்று சென்னையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறுகிறது.
நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடக்கும் இந்த மாநாட்டில் தேசியளவிலும் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
மேலும், பிரியங்கா காந்தி, சுப்ரியா சுலே என பல தலைவர்களும் கலந்து கொண்டனர்.
திமுக மகளிர் உரிமை மாநாடு- பிரமாண்டமான மக்கள் அணிதிரள்வு
திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டிற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகித்து வருகிறார்.
சென்னை வந்த சோனியாகாந்தி, பிரியங்கா காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உற்சாக வரவேற்பு..!
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் என திமுக மகளிர் அணி அறிவித்துள்ளது.
இந்த மாநாட்டில் மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்த மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமை தொடர்பான கருத்துரையாடல்கள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜகவின் ஊழலை கண்டுபிடித்த 3 அதிகாரிகளுக்கும் இடமாற்றம்
Atoorva Sinha. |
M Mee Sundar : : எதேச்சாதிகாரம்! மோடியின் அதிகார வெறித்தனத்தின் உச்சம்!
செப்டம்பர் 12.எல்லாரும் சி*ஏ*ஜி* சி*ஏ*ஜி என்று அலறிக்கொண்டிருக்கிறோமே...
அதன் புது டெல்லி, தணிக்கை- உள்கட்டமைப்பு (PDA, Infrastructure) பிரிவின் முதன்மை இயக்குநர்
அத்தூர்வ சின்ஹாவுக்கு - தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் வருகிறது.
பிரித்துப் பார்க்கிறார் :
'C*A*G அலுவலகத்தின் உத்தரவு 1901இன் படி நீங்கள் பணியிட மாற்றம் செய்யப்படுகிறீர்கள்.
கேரளத் திருவனந்தபுரம் கணக்காளர் ஜெனரல் (A&E) சுனில் சோமராஜனுக்கு பதிலாக நீங்கள்
அந்தப் பணியில் நியமிக்கப்படுகிறீர்கள்!'
அதேநாளில் புது டெல்லி -AMG II தணிக்கை, மத்திய செலவினங்களின் பொது இயக்குநர் தத்தா ப்ரஸாத் சூர்யகாந்த்துக்கும் கடிதம் ஒன்று வருகிறது.
1000 மகளிர் உரிமை தொகை திட்டத்தை தடை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு மதுரை கே கே ரமேஷ் தாக்கல்
கடந்த சட்டசபைத் தேர்தல் திமுக சார்பில் பல வாக்குறுதிகளை முன்வைக்கப்பட்டது. குறிப்பாக அனைத்து மகளிருக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்ற திட்டத்தைத் தமிழ்நாடு அரசு முன்வைத்தது.
Writ petition has been filed against Magalir Urimai thogai scheme in Supreme court
இதற்கு அப்போதே மிகப் பெரியளவில் வரவேற்பு இருந்தது.
தேர்தல் களத்திலும் கூட இந்த மகளிர் உரிமை தொகை திட்டம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
எனவே திமுக ஆட்சி அமைந்தது முதலே இத்திட்டம் குறித்து பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
வெள்ளி, 13 அக்டோபர், 2023
பிரிட்டன் கடற்படையிடம் சிக்கிய கன்னியாகுமரி மீனவர்கள் 32 பேர் என்ன ஆனார்கள்? -
தமிழ்நாட்டில் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் கடந்த 2015ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு முன்பு வரை மீனவர்கள் விசைப்படகில் கடலுக்குள் சென்று இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே தங்கி மீன் பிடித்து கரைக்குத் திரும்பி வந்துவிடுவர்.
ஆனால், ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு 30 நாள் முதல் 45 நாட்கள் வரை தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு கடலுக்குச் சென்று மீன்கள் இருக்கும் திசையை அறிந்து அங்கு சென்று மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.
கீதாசாரம் அல்ல இது பௌத்த சாரம்
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
உண்மையில் இவை பௌத்த போதனைகள்தான்
குண்டலகேசியில் மட்டுமல்லாமல் பல பௌத்த போதனைகளின் சாரமே இதுதான்
Dor ( தோர் ) ஹிந்தி இந்து முஸ்லீம் பிரச்சனைகளை அழகியலோடு காட்சி படுத்தி இருக்கிறார்கள்
ராதா மனோகர் : dor ( தோர் ) ஹிந்தி திரைப்படம்! வெளியான ஆண்டு 2006
இந்து முஸ்லீம் மதங்கள் சார்ந்த சில சிக்கலான பிரச்சனைகளை,
மனித மாண்பு குறையாமல் அழகியலோடு காட்சி படுத்தி இருக்கிறார்கள்
இமாச்சல பிரதேசத்தின் பச்சை புல்வெளிகள் மலைகள் அழகிய பள்ளத்தாக்குகள்.
எந்தவித
ரசனையும் அற்றவர்களை கூட மயங்க வைக்கும் இயற்கை அழகை பிரபஞ்சம் அந்த
மாநிலத்திற்கு அளவுக்கு அதிகமாகவே கொடுத்திருக்கிறது,
அங்கே உள்ள ஒரு சின்னஞ்சிறு தம்பதிகளின் வாழ்வில் அடித்தது மிகபெரும் புயல்.
சவுதி அரேபியாவுக்கு சென்ற அவளின் ( ஜீனத்) கணவன் செய்யாத ஒரு கொலைகுற்றச்சாட்டில் தூக்குதண்டனையை எதிர்நோக்குகிரான்.
அவனின் கூட்டாளியின் மரணத்திற்கு அவனையே குற்றவாளியாக நீதிமன்றம் தீர்மானித்து விட்டது,
பணத்தைப் பிடி... படம் பிடி! திமுகவை நோக்கி தீவிரமாகும் ED வேட்டை!
மின்னம்பலம் Aara : “2022 இல் மேற்கு வங்காள முதலமைச்சரான மம்தா
பானர்ஜி அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி,
அவருக்கு நெருக்கமான அபிர்தா சாட்டர்ஜி உள்ளிட்டோரை குறிவைத்து கடந்த 2022 இல் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
அப்போது இருவர் தொடர்புடைய இடங்களில் கட்டுக் கட்டாக, கத்தை கத்தையாக பணமும், கொத்துக் கொத்தாக தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன.
இதை இ.டி. அதிகாரிகளே வீடியோ எடுத்து, அது சமூக தளங்களில் பரவியது.
இந்த உத்தியைதான் இப்போது தமிழ்நாட்டில் பின்பற்றத் திட்டமிட்டு தீவிரமாக களமிறங்கியிருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள்.
கடந்த மே மாதம் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.
வியாழன், 12 அக்டோபர், 2023
மத்திய பிரதேச பா.ஜ.க ஆட்சியில் 1.5 லட்சம் இளம் பெண்களை காணவில்லை! பிரியங்கா காந்தி!
இதையடுத்து, 18 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவை எப்படியாவது வீழ்த்தித் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரஸ் கட்சி பரப்புரை மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் இந்தியா கூட்டணி சார்பில் தேர்தலைச் சந்திப்பதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல், தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.கவும் தீவிரமாகப் பரப்புரை செய்து வருகிறது. ஆனால் 18 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பதால் மக்கள் மத்தியில் பா.ஜ.க மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
சவுதி இளவரசர்- ஈரான் அதிபர் போன் உரையாடல்: இஸ்ரேல்-ஹமாஸ் போரில் திருப்பம்!
மின்னம்பல -Aara : சவுதி இளவரசர்- ஈரான் அதிபர் போன் உரையாடல்: இஸ்ரேல்-ஹமாஸ் போரில் திருப்பம்!
ஹமாஸ் அமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தாக்குதல் காசா நகரையே சிதைத்து சின்னாபின்னமாக்கியுள்ள நிலையில்…
கடைசி ஹமாஸ் பயங்கரவாதி அழியும் வரை எங்கள் போர் தொடரும் என்று கூறியுள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு.
மேலும் போர் காலம் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு போர் அமைச்சரவையும் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் நெதன்யாஹுவின் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரும் இணைக்கப்பட்டுள்ளார்.
இன்போசிஸ் ஒரே நாளில் பல கோடிகளை சுருட்டிய நாராணயமூர்த்தி குடும்பம்..!!
tamil.goodreturns.in - Prasanna Venkatesh : 19 ரூபாய் அறிவிப்பு.. ஒரே நாளில் பல கோடிகளை அள்ளிய நாராணயமூர்த்தி குடும்பம்..!!
இன்போசிஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் லாபத்தில் 3 சதவீத உயர்வுடன் 6212 கோடி ரூபாயும், வருவாயில் 7 சதவீதம் உயர்வுடன் 38,994 கோடி ரூபாயும் பெற்றுள்ளது.
இன்போசிஸ் நிர்வாகம் தனது வருவாய் வளர்ச்சியை 2024 ஆம் நிதியாண்டில் 1.0-2.5 சதவீதமாக குறைத்துள்ளது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
இந்த நிலையில் இன்போசிஸ் முதலீட்டாளர்களுக்கு லாபம் கொடுக்கும் வகையில் இன்போசிஸ் நிர்வாகம் தனது வருவாய் வளர்ச்சியை 2024 ஆம் நிதியாண்டில் 1.0-2.5 சதவீதமாக குறைத்துள்ளது.
இது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்த நிலையில் முதலீட்டாளர்களை சமாதானப்படுத்த ஒரு பங்கிற்கு சுமார் 18 ரூபாய் ஈவுத்தொகையை அறிவித்துள்ளது இன்போசிஸ்
நிர்வாகம்.
இந்த ஈவுத்தொகை அறிவிப்பு மூலம் பெரும் தொகை இன்போசிஸ் நிறுவனங்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஜாக்பாட் ஆக உள்ளது. காரணம் இன்போசிஸ் நிறுவனத்தின் 15.14 சதவீத பங்குகள் அதன் ப்ரோமோட்டர் மற்றும் ப்ரோமோட்டர் குரூப் மத்தியில் மட்டுமே உள்ளது.
நாமல் ராஜபக்சா : தமிழகத்தில் ப ஜ க வெற்றி பெறும்போது இலங்கை வடக்கு கிழக்கில் எமது கட்சி வெற்றி பெறும்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அன்று நாட்டை விட்டு வெளியேறியமை தவறு என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இந்திய தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே நாமல் ராஜபக்ச எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டின் அரசியல், பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்புக் கூற வேண்டி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியமையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் அல்லது அந்த நிலைப்பாட்டை சரியென நினைக்கிறீர்களா?' என்று தந்தி டி.வி.யின் நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த நாமல் எம்.பி.,
தமிழ்நாட்டுக்கு ரூ.2.08 லட்சம் கோடி, உ.பி-க்கு ரூ.9.04 லட்சம் கோடி..” : வஞ்சிக்கும் ஒன்றிய அரசு ! ஒன்றிய அர
kalaingar seythikal reshma : ஒன்றிய அரசுக்கு வரியாக தமிழ்நாடு செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் நமக்கு 29 பைசாதான் திரும்பக் கிடைப்பதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் அக்.9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் தமிழ்நாடு அரசின் முதல் துணை மதிப்பீடுகளை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். மேலும் அன்றைய தினமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த காவிரி விவகாரம் தொடர்பான தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பின்னர் இரண்டாவது நாளான நேற்று நடைபெற்ற கூட்டத் தொடரில், வரி மதிப்பீட்டு ஆண்டில் ரூபாய் ஐம்பதாயிரத்திற்குக் குறைவாக வரி, வட்டி, அபராதத் தொகை செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு இந்நிலுவைத் தொகையானது முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என விதி 110-ன்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது! ஜீவன் தொண்டமான்
hirunews.lk 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது!
இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இன்று (11) முக்கிய சந்திப்புகளில் ஈடுப்பட்டதுடன், ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில், முதன்மையாக 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இலங்கை சார்பில் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.
திமுகவில் இருந்து எம்ஜியாரை பிரித்ததில் மோகன் குமாரமங்கலம் பாலதண்டாயுதம் ஆகியோரின் பங்கு என்ன?
: 1972 இல் மறைந்த மத்திய அமைச்சர் திரு மோகன் மங்கலம் அவர்கள் திமுகவை நாம் வீழ்த்த தேவை இல்லை .. அவர்களே தங்களை தோற்கடித்து கொள்வார்கள் என்று கூறிய சில மாதங்களிலேயே எம்ஜியார் திமுகவை விட்டு வெளியேறி அதிமுகவை தொடங்கினார்
இதன் பின்னணியில் மோகன் குமரமங்கலமும் கம்யூனிஸ்டு தலைவர் பாலதண்டாயுதமும் இருப்பதாக அப்போது பொதுவெளியில் பேசப்பட்டது.
இதன் பின்பு சென்னையில் இருந்து விமானம் மூலம் இருவரும்
டெல்லிக்கு விமானத்தில் பறந்தார்கள்.
அவர்கள் சென்ற விமானம் டெல்லியில் இறங்கும்போது தரையோடு மோதி சுக்குக்கு நூறாகி நொறுங்கியது
அந்த விபத்தில் மோகன் குமரமங்கலமும் கம்யூனிஸ்ட்டு தலைவர் திரு பாலதண்டாயுதம் உட்பட சுமார் 49 பேர்களுக்கும் உயிரிழந்தார்கள் Indian Airlines Flight 440 on May 31, 1973,அப்போது திரு மோகன் குமரமங்கலத்தின் வயது 56.
திரு வே .பலதண்டாயுதத்தின் வயது 55..
இவர்கள் இருவருமே எம்ஜியார் பிரிவுக்கு சூத்திரதாரிகள் என்று அப்போது பேசப்பட்டது இது பற்றி கலைஞர் அவர்கள் 2015 இல் இந்து பத்திரிகைக்கு கொடுத்த ஒரு பேட்டி பின்வருமாறு
tamil.oneindia.com Tuesday, July 7, 2015 : எம்.ஜி.ஆரை பயன்படுத்தி தி.மு.க.வை உடைத்தார் இந்திரா ! மோகன் குமாரமங்கலம்,
Minister of steel in the Indira Gandhi government, Kumaramangalam was killed in a plane crash in New Delhi May 30, 1973சென்னை: எம்.ஜி.ஆர். மூலம் தி.மு.க.வை இந்திரா காந்தி உடைத்ததாக தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி மறைமுகமாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கலைஞர் கருணாநிதி கூறியுள்ளதாவது:
புதன், 11 அக்டோபர், 2023
மகளிர் உரிமை தொகைக்கு இதுவரை விண்ணப்பிக்கலையா? சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின்!
அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை அதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.
இந்த தீர்மானத்தின் மீது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ நாகை மாலி, "திமுக தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத்தொகை என வாக்குறுதி அளித்தபடி 1.06 கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் தகுதியானவர்கள் பலருக்கும் கூட மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை." என்றார்.
செவ்வாய், 10 அக்டோபர், 2023
தயாநிதி மாறனின் கணக்கை ஹேக் செய்து பணம் திருட்டு! டிஜிட்டல் இந்தியாவில் தனிப்பட்ட விவரங்களுக்கு பாதுகாப்பில்லை..
இதுகுறித்து தயாநிதி மாறன் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: டிஜிட்டல் இந்தியாவில் எங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் பாதுகாப்பாக இல்லை. ஞாயிற்றுக்கிழமை அன்று என்னுடைய ஆக்சிஸ் வங்கியில் (joint account) உள்ள தனிப்பட்ட சேமிப்பு கணக்கிலிருந்து ரூ 99,999 திருடப்பட்டுள்ளது.
இஸ்லாமிய நாடுகள் ஹமாஸ் இயக்கத்தை முழுமையாக ஆதரிக்காதது ஏன்?
BBC Tamil : இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல் மற்றும் இஸ்ரேலின் அடுத்தடுத்த பதிலடி நடவடிக்கை குறித்து மேற்கத்திய நாடுகள் ஒரே குரலில் பேசுவதாகத் தெரிகிறது.
ஆனால், பொதுவாக பாலத்தீனத்திற்கு தங்களது ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்கும் இஸ்லாமிய நாடுகள், இந்த முறை எச்சரிக்கையுடன் நடந்து கொள்கின்றன. இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் இந்த நாடுகளின் நிலைப்பாட்டில் முரண்கள் உள்ளன.
இந்த நாடுகள் சுதந்திரமான பாலத்தீனிய அரசை ஆதரித்துள்ளன, ஆனால் முன்பைப்போல, இஸ்ரேலை கடுமையாக விமர்சிப்பதைத் தவிர்த்து வருகின்றன.
ஈரானைத் தவிர, பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் ஹமாஸை வெளிப்படையாக ஆதரிப்பதைத் தவிர்த்துள்ளன.
இஸ்ரேலுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஹமாஸின் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இஸ்ரேல் ஹைபா துறைமுகம் அதானி கட்டுப்பாட்டில் மோடியின் இஸ்ரேல் காதலுக்கு இதுதான் காரணம்
தினமலர் : இஸ்ரேல் துறைமுகத்தில் பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: அதானி குழுமம்
புதுடில்லி : இஸ்ரேலின் 'ஹைபா' துறைமுகத்தில் வேலை செய்து வரும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது வரை அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசா மலைக்குன்று பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த சனிக் கிழமை முதல் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆ.ராசாவின் 15 சொத்துகள் பறிமுதல்” : அமலாக்கத் துறை!
minnambalam.com - Kavi : திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 சொத்துகளை கையகப்படுத்தியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா எம்.பி., மீது சிபிஐ 2015ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்குப் பதிவு செய்தது. தொடர்ந்து ஆ.ராசாவுக்குத் தொடர்புடைய இடங்களிலும் சோதனை செய்தது.
இதையடுத்து அமலாக்கத் துறையும் ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்தது.
இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ் குமார், நண்பர் கிருஷ்ண மூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியோர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
அரியலூர்: பட்டாசு ஆலை வெடி விபத்து 11 பேர் உயிரிழந்தனர்! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
இதனை ராஜேந்திரன், மருகன், அருண்குமார் அகியோர் நடத்தி வருகின்றார். இந்நிலையில். இந்த ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் வெடி மளமளவென வெடிக்கத் தொடங்கிய நிலையில்,
வெடிகள் சுமார் 3 மணி நேரம் வெடித்துச் சிதறியது. .இதில் ஆலை முழுவதும் சேதமடைந்தது.
இந்நிலையில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர் 4மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
ராஜஸ்தான், தெலங்கானா, மபி, சட்டீஸ்கர், மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் தேதி நவ. 7 - 30 வரை வாக்குப்பதிவு
இதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படும். ராஜஸ்தான், தெலங்கானா, மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் அடுத்தாண்டு ஜனவரியிலும்,
மிசோரம் மாநில சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் டிசம்பர் 17ம் தேதியுடனும் முடிவடைகிறது.
இதனால் இந்த 5 மாநிலங்களுக்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
பலமுறை எச்சரித்தோம்; இஸ்ரேல் நிராகரித்தது: எகிப்து உளவுத் துறை!...
தினமணி : ஹமாஸ் படையினரின் தாக்குதலுக்கு முன்பு கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை இஸ்ரேல் அரசு நிராகரித்துவிட்டதாக எகிப்து உளவுத் துறை அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.
காஸா எல்லைப்பகுதிக்கு பதிலாக ஜோர்டானை ஒட்டியுள்ள வெஸ்ட் பேங்க் பகுதியில் மட்டுமே இஸ்ரேல் அரசு கவனம் செலுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக ஆங்கில ஊடகத்தில் பேசிய எகிப்து உளவுத் துறை அதிகாரி, இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த காஸா பகுதிக்குட்பட்ட பகுதியில் திட்டம் தீட்டப்படுவதாக பலமுறை இஸ்ரேலுக்கு எச்சரிக்கப்பட்டது. எனினும் அது குறித்து விரிவாக பரிசீலிக்காமல் ஜெரூசலேம் அதனை நிராகரித்துவிட்டது.
காஸா எல்லைக்கு பதிலாக வெஸ்ட் பேங்க் பகுதியில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கவனம் செலுத்திவந்தார்.
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் ஆயிரக்கணக்கானோ உயிரிழப்பு 2000 பேர் உயிரிழப்பு?
ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் நேற்று பிற்பகல் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.3 ஆக பதிவாகி இருந்தது. ஹெராட் என்ற பகுதியில் வடமேற்கில் 40 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொன்டிருந்தது.
இதேபோல அடுத்தடுத்து 5 முறை அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.3 முதல் 4.6 வரை பதிவாகி இருந்தது.
இந்நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளிடையே பொதுமக்கள் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். வீடுகளை விட்டு வெளியேறி ஓடிவந்த பொதுமக்கள் தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
திங்கள், 9 அக்டோபர், 2023
5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் – தேதி அறிவிப்பு.. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா நவம்பர் மாதம்..
BBC News தமிழ் : சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், மற்றும் தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 7 மற்றும் 17-ஆம் தேதிகளிலும், மத்தியப் பிரதேசத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 17-ஆம் தேதியும், மிசோரம் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 7-ஆம் தேதியும், ராஜஸ்தான் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 23-ஆம் தேதியும், இறுதியாக தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 30-ஆம் தேதியும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ.க்களுக்கு பூஸ்ட்: அமைச்சர்களுக்கு உதயநிதி வைத்த செக்!
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பணி பளு அதிகமாக இருப்பதால் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்வதாக உத்திரவாதம் கொடுத்து அனுப்புகிறார்
உதயநிதி தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
ராஜஸ்தான்.. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவுள்ளதாக ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு அறிவிப்பு !
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது இறுதியாக 1931-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருந்தது. இதன் காரணமாக மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பை பீகார் அரசு நடத்தியது. அதன் முடிவுகள் த சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதில், 4 கோடியே 70 லட்சத்து 80 ஆயிரத்து 514 பேர் (36.0148 %) பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (EBC) சேர்ந்தவர்கள். 3 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 936 பேர் (27.1286 %) பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (BC) சேர்ந்தவர்கள். 2 கோடியே 56 லட்சத்து 89 ஆயிரத்து 820 பேர் (19.6518 %) பேர் பட்டியல் இனத்தைச் (SC) சேர்ந்தவர்கள்
அதிமுக கூட்டணியில் இருந்து அழைப்பா? ஸ்டாலினை சந்தித்த கே.பாலகிருஷ்ணன் பதில்!
மின்னம்பலம் - Aara : அதிமுக கூட்டணியில் இருந்து அழைப்பா? ஸ்டாலினை சந்தித்த கே.பாலகிருஷ்ணன் பதில்!
திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினை இன்று (அக்டோபர் 8) மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார்கள்.
அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணியை உருவாக்கியிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியாக அது செயல்பட்டு வருகிறது.
இந்த கூட்டணியில் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் திமுக தலைவரான ஸ்டாலினை தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள்.
பொன் மாணிக்கவேலைப் போன்ற ஒரு நாடக நடிகரை பார்க்கவே முடியாது
savukkuonline.com :பொன் மாணிக்கவேல் தேவதூதனா ?
இன்று பொன் மாணிக்கவேல் பணியிலிருந்து ஓய்வு பெறும் கடைசி நாள். அவருக்கு 60 வயது நிறைவடைந்து விட்டது. பணி நிறைவடைகையில் அவர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் தலைவராக இருந்தார். இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தபோதுதான், யானை ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்.
அதில், சிலை கடத்தல் தொடர்பான பல்வேறு வழக்குகள் சரியாக விசாரிக்கப்படவில்லை என்றும், வழக்கு தொடுக்கிறார்.
அந்த வழக்கில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, ரயில்வே ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேலை நீதிமன்றம் முன்பு ஆஜராகச் சொல்லி உத்தரவிடுகிறார் நீதிபதி மகாதேவன். அப்போது பொன் மாணிக்கவேல் சொன்னதாக கீழ்கண்டவாறு எழுதுகிறார் மகாதேவன்.
It was pointed out by the upright officer that all efforts were being taken to nab the accused delinquent officer Khader Basha.
காதர் பாட்சா அதுவரை கைது செய்யப்படவில்லை என்பது உண்மைதான். பொன்.மாணிக்கவேல் நேர்மையான அதிகாரி என்பது நீதிபதி மகாதேவனுக்கு எப்படி தெரியும் ?
பொன் மாணிக்கவேல் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும். அவ்வாறு 21 ஜுலை 2017 அன்று உத்தரவிடுகிறார்.
ஞாயிறு, 8 அக்டோபர், 2023
பீகாரில் விபத்தில் பலியானவரின் உடலை ஆற்றில் வீசி சென்ற போலீசார்.. வீடியோ!
போலீசாரின் இந்த இரக்கமற்ற செயல் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் முசாபர்பூர் அருகே உள்ள பகுலி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 22ல் விபத்து ஒன்று நடைபெற்றது.
டிரக் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். அந்த நபரின் சடலம் அப்படியே சாலையில் கிடந்தது. இது குறித்து அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது. அதன்பேரில் தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார், நிகழ்விடத்திற்கு வந்து சாலையில் கிடந்த சடலத்தை அப்புறப்படுத்தினர்.
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை! பயண கட்டணம் வெளியீடு!
நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குவதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அக்டோபர் 10 ஆம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது.
இந்த கப்பலுக்கு ‘செரியா பாணி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்தைத் தொடங்குவதற்காக கொச்சியில் கட்டப்பட்ட செரியா பாணி பயணிகள் கப்பல் நேற்று நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திற்கு வந்தது.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவு நாள் அக்டோபர் 8, 1959
ஏப்ரல் 13, 1930 - மறைந்த தேதி அக்டோபர் 8, 1959
தினமணி : பட்டுக்கோட்டையார் என்னும் சிறப்புக் குரியவர், சிறந்த தமிழ் அறிஞர், பொதுவுடைமைச் சிந்தாந்தி, சிந்தனையாளர் இவர் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியதுதான் இவருடைய சிறப்பு. இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இன்றும் இவருடைய பாடல்கள் மனிதர்களின் எண்ணங்களில் தேரேறி இதங்களில் குடியேறி உள்ளங்களில் உறவாடி வருகின்றன.
பிறப்பு: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் பெற்றோர் அருணாச்சலம் - விசாலாட்சி ஆகியோரின் இளையமாக 13.04.1930 இல் பிறந்தார். இவருக்கு கணபதி சுந்தரம் என்கின்ற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர்.
பிரதமர் மோடி : இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும்!
tamil.samayam.com - ஜே. ஜாக்சன் சிங் : "இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும்".. பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.. குவியும் ஆதரவு
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி: இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர் பயங்கர தாக்குதலை நிகழ்த்தி இருக்கும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
இதன் மூலமாக இஸ்ரேலுக்கு ஆதரவாக அணி திரளும் நாடுகளில் இநதியாவும் இணைந்திருக்கிறது.
இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் செயல்பட்டு வரும் ஹமாஸ் தீவிரவாத படையினர் நடத்தியுள்ள தாக்குதல் உலக நாடுகளையே அதிரச் செய்திருக்கிறது.
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்: இரு தரப்பிலும் 200 பேர் பலி, 2,000 பேர் காயம் - என்ன நடக்கிறது
இஸ்ரேல் விமானப்படைகள் காசா மீது குண்டுமழை பொழிகின்றன. இதில், நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகி விட்டதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலோ, ஹமாஸ் குழுவினரின் மறைவிடங்களையே குறிவைத்து தாக்கி வருவதாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதல்
இஸ்ரேல் - பாலத்தீனம் இடையே நூறாண்டுகளுக்கும் மேலாக பிரச்னை நீடித்து வருகிறது. இதனால், அங்கே குண்டுவெடிப்புகளும், துப்பாக்கிச் சூடுகளும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. எனினும், 2021-ம் ஆண்டு இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான 11 நாள் போருக்குப் பிறகு ஒப்பீட்டளவில் பெரிய அளவில் அங்கே மோதல்கள் நடக்கவில்லை. அதற்கு ஹமாஸ் அமைப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.