சனி, 14 அக்டோபர், 2023

பாஜகவின் ஊழலை கண்டுபிடித்த 3 அதிகாரிகளுக்கும் இடமாற்றம்

Atoorva Sinha.

 M Mee Sundar :   : எதேச்சாதிகாரம்! மோடியின் அதிகார வெறித்தனத்தின் உச்சம்!
செப்டம்பர் 12.எல்லாரும் சி*ஏ*ஜி* சி*ஏ*ஜி என்று  அலறிக்கொண்டிருக்கிறோமே...
அதன் புது டெல்லி, தணிக்கை- உள்கட்டமைப்பு (PDA, Infrastructure) பிரிவின் முதன்மை இயக்குநர்  
அத்தூர்வ சின்ஹாவுக்கு - தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் வருகிறது.
பிரித்துப் பார்க்கிறார் :
'C*A*G அலுவலகத்தின் உத்தரவு 1901இன் படி நீங்கள் பணியிட மாற்றம் செய்யப்படுகிறீர்கள்.
கேரளத் திருவனந்தபுரம்  கணக்காளர் ஜெனரல் (A&E) சுனில் சோமராஜனுக்கு பதிலாக நீங்கள்
அந்தப் பணியில் நியமிக்கப்படுகிறீர்கள்!'
அதேநாளில் புது டெல்லி -AMG II தணிக்கை, மத்திய செலவினங்களின் பொது இயக்குநர் தத்தா ப்ரஸாத் சூர்யகாந்த்துக்கும்  கடிதம் ஒன்று வருகிறது.


'இதே அலுவலகத்தில்  தற்போது ஆளில்லாமல் காலியாக இருக்கும்  இயக்குநர் (சட்டம்) பொறுப்புக்கு
மாற்றப்படுகிறீர்கள்!'.
இன்னொரு கடிதம் - வட மத்திய பகுதி  பொது இயக்குநர் அசோக் சின்ஹாவுக்கு.
'நீங்கள் அரசாங்க மொழிப்பிரிவுக்கு  பொது இயக்குனராக மாற்றப்படுகிறீர்கள்.
அடுத்த உத்தரவு வரும் வரை - சிஏஜி அலுவலகத்தில் பொது இயக்குநர் (தேர்வு)
பதவியின் கூடுதல் பொறுப்பையும்  கவனிக்கவேண்டும்!'
இவர்கள் செய்த குற்றம் என்ன?
அண்மையில் நடந்து முடிந்த -
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் -
தாக்கல் செய்யப்பட்ட  மத்தியத் தணிக்கை அறிக்கைகளில்  -  Comptro*ller an_d Aud_itor General (C*A*G ) -
பன்னிரண்டு அறிக்கைகளில் -  
பல்வேறு விதமான ஊழல்கள் -
பல லட்சம் கோடி ரூபாய்கள் ஊழல்கள் -  நடந்திருக்கின்றன என்று  விசாரித்தறிந்து சொன்னதுதான்.
ஏறத்தாழ - ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல்!
என்னென்ன ஊழல்கள்? நீங்கள் தேடி வாசித்துத்
தெரிந்துகொண்டே ஆகவேண்டும்.
இல்லாவிட்டால் -அதற்குத்   தனிப்பதிவுதான் போடவேண்டும்.
ஊழல் இல்லாத பரிசுத்த வேடம் போட்ட  ஒன்றிய அரசின் முகமூடி -
இந்த மெகா ஊழலால் - சட்டென்று கிழிந்து தொங்கியிருக்கிறது.
நடவடிக்கை வேண்டுமென்று   எதிர்க்கட்சிகள் முழங்க  நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கைக்குழு அமைத்து
விசாரிக்க வேண்டுமென்று  ராகுல்காந்தி கூக்குரல் எழுப்பினார்.
ஊழல் செய்தவனே  அது குறித்து நடவடிக்கை எடுப்பானா?
ஆனால், இதோ  நடவடிக்கை எடுத்துவிட்டார் டிமோஜி!
குற்றத்தைக் கண்டுபிடித்த ஆபீஸர்ஸ்  மூவருக்கும் ட்ரான்ஸ்பர்!
பணியிட மாற்றம் !
இனி இவர்கள் மீது என்னென்ன களங்கங்கள்   கற்பிக்கப்படுமென்று எதிர்பார்த்திருக்கவேண்டும்!
பின்விளைவுகளைப் பொருட்படுத்தாமல் -  ஏன், உயிரையும்கூடப் பொருட்படுத்தாமல்,
ஓர் ஊழல் அரசாங்கத்தை எதிர்க்கத்  துணிந்திருக்கிறார்கள் இந்த அதிகாரிகள்!
இவர்களைப்  பாதுகாக்க வேண்டாமா?
நம்மால் இதனை அனைவருக்கும் பகிர்வு செய்ய முடியும்!
பாசிச பாஜகவின் மோடியின் முகத்திரையை கிழிக்க முடியும்!
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப முடியும்!!
---------------------------------
படத்தில் -
அத்தூர்வ சின்ஹா.
Atoorva Sinha.
Everyone
#CAG REPORTS.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக