வியாழன், 12 அக்டோபர், 2023

இன்போசிஸ் ஒரே நாளில் பல கோடிகளை சுருட்டிய நாராணயமூர்த்தி குடும்பம்..!!

 tamil.goodreturns.in - Prasanna Venkatesh : 19 ரூபாய் அறிவிப்பு.. ஒரே நாளில் பல கோடிகளை அள்ளிய நாராணயமூர்த்தி குடும்பம்..!!
இன்போசிஸ் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் லாபத்தில் 3 சதவீத உயர்வுடன் 6212 கோடி ரூபாயும், வருவாயில் 7 சதவீதம் உயர்வுடன் 38,994 கோடி ரூபாயும் பெற்றுள்ளது.
இன்போசிஸ் நிர்வாகம் தனது வருவாய் வளர்ச்சியை 2024 ஆம் நிதியாண்டில் 1.0-2.5 சதவீதமாக குறைத்துள்ளது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
இந்த நிலையில் இன்போசிஸ் முதலீட்டாளர்களுக்கு லாபம் கொடுக்கும் வகையில் இன்போசிஸ் நிர்வாகம் தனது வருவாய் வளர்ச்சியை 2024 ஆம் நிதியாண்டில் 1.0-2.5 சதவீதமாக குறைத்துள்ளது.
இது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்த நிலையில் முதலீட்டாளர்களை சமாதானப்படுத்த ஒரு பங்கிற்கு சுமார் 18 ரூபாய் ஈவுத்தொகையை அறிவித்துள்ளது இன்போசிஸ் நிர்வாகம்.

19 ரூபாய் அறிவிப்பு.. ஒரே நாளில் பல கோடிகளை அள்ளிய நாராணயமூர்த்தி குடும்பம்..!!

இந்த ஈவுத்தொகை அறிவிப்பு மூலம் பெரும் தொகை இன்போசிஸ் நிறுவனங்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஜாக்பாட் ஆக உள்ளது. காரணம் இன்போசிஸ் நிறுவனத்தின் 15.14 சதவீத பங்குகள் அதன் ப்ரோமோட்டர் மற்றும் ப்ரோமோட்டர் குரூப் மத்தியில் மட்டுமே உள்ளது.

இந்த நிலையில் ஈவுத்தொகை மூலம் ஒவ்வொருவரும் வைத்திருக்கும் பங்குகளுக்கு தலா 19 ரூபாய் அளிக்கப்படும் காரணத்தால் இன்போசிஸ் ப்ரோமோட்டர் மற்றும் ப்ரோமோட்டர் குரூப் பெரும் தொகையை பெற உள்ளனர்.

இன்போசிஸ் நிறுவனத்தில் குறிப்படத்தக்க பங்குகளை நாராயணமூர்த்தி, அவருடைய மனைவி சுதா மூர்த்தி, மகன் ரோஹன் மூர்த்தி, பிரிட்டன் அதிபர் ரிஷி சுனக்-ன் மனைவியும் நாராணயமூர்த்தி-யின் ஓரே மகளான அக்ஷதா மூர்த்தியும் வைத்துள்ளனர். இந்த நிலையில் 19 ரூபாய் ஈவுத்தொகை இவர்களுக்கும் வரும் நிலையில் ஓரே நாளில் நாராணயமூர்த்தி, ரிஷி சுனக் குடும்பம் பல கோடி சம்பாதிக்க உள்ளனர்.

இந்த ஈவுத்தொகை மூலம் நாராயணமூர்த்தி குடும்பம் மட்டுமே சுமார் 286.83 கோடி ரூபாய் லாபம் அடைய உள்ளனர். இன்போசிஸ் நிறுவனத்தில் சுமார் 1.67 சதவீத பங்குகளை கொண்டு இருக்கும் ஹோஹன் மூர்த்தி மட்டும் சுமார் 115 கோடி ரூபாய் ஈவுத்தொகை பெற உள்ளார்.

இவரை தாண்டி ஆக்ஷதா மூர்த்தி வைத்திருக்கும் 1.07 சதவீத பங்குகளுக்கு 74.018 கோடி ரூபாயும், சுதா மூர்த்தி வைத்திருக்கும் 0.95 சதவீத பங்குகளுக்கு 65.64 கோடி ரூபாயும், இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி வைத்திருக்கும் 0.46 சதவீத பங்குகளுக்கு 31.62 கோடி ரூபாயும் ஈவுத்தொகை வருமானமாக பெற உள்ளார்.

இன்போசிஸ் ப்ரோமோட்டர்-களின் பங்கு இருப்பு விபரம்

  • சுதா கோபாலகிருஷ்ணன் - 2.62% பங்குகள் வைத்துள்ளார். அப்படியானால் 95357000 பங்குகள்.
  • ரோஹன் மூர்த்தி - 1.67% பங்குகள் வைத்துள்ளார். அப்படியானால் 60812892 பங்குகள்
  • எஸ் கோபாலகிருஷ்ணன் - 1.15% பங்குகள் வைத்துள்ளார். அப்படியானால் 41853808 பங்குகள்
  • நந்தன் எம் நிலேகனி - 1.12% பங்குகள் வைத்துள்ளார். அப்படியானால் 40783162 பங்குகள்
  • அக்ஷதா மூர்த்தி - 1.07% பங்குகள் வைத்துள்ளார். அப்படியானால் 38957096 பங்குகள்
  • ஆஷா தினேஷ் - 1.06% பங்குகள் வைத்துள்ளார். அப்படியானால் 38579304 பங்குகள்
  • சுதா என் மூர்த்தி - 0.95% பங்குகள் வைத்துள்ளார். அப்படியானால் 34550626 பங்குகள்
  • ரோகினி நிலேகனி - 0.94% பங்குகள் வைத்துள்ளார். அப்படியானால் 34335092 பங்குகள்
  • தினேஷ் கிருஷ்ணசாமி - 0.89% பங்குகள் வைத்துள்ளார். அப்படியானால் 32479590 பங்குகள்
  • ஷ்ரேயாஸ் ஷிபுலால் - 0.65% பங்குகள் வைத்துள்ளார். அப்படியானால் 23704350 பங்குகள்
  • நாராயண மூர்த்தி - 0.46% பங்குகள் வைத்துள்ளார். அப்படியானால் 16645638 பங்குகள்
  • கௌரவ் மஞ்சந்தா - 0.38% பங்குகள் வைத்துள்ளார். அப்படியானால் 13736226 பங்குகள்
  • நிஹார் நிலேகனி - 0.35% பங்குகள் வைத்துள்ளார். அப்படியானால் 12677752 பங்குகள்
  • ஜான்ஹவி நிலேகனி - 0.24% பங்குகள் வைத்துள்ளார். அப்படியானால் 8589721 பங்குகள்
  • தீக்ஷா தினேஷ் - 0.21% பங்குகள் வைத்துள்ளார். அப்படியானால் 7646684 பங்குகள்
  • திவ்யா தினேஷ் - 0.21% பங்குகள் வைத்துள்ளார். அப்படியானால் 7646684 பங்குகள்
  • சரோஜினி தாமோதரன் ஷிபுலால் - 0.16% பங்குகள் வைத்துள்ளார். அப்படியானால் 5814733 பங்குகள்
  • குமாரி ஷிபுலால் - 0.14% பங்குகள் வைத்துள்ளார். அப்படியானால் 5248965 பங்குகள்
  • மேகனா கோபாலகிருஷ்ணன் - 0.13% பங்குகள் வைத்துள்ளார். அப்படியானால் 4834928 பங்குகள்
  • ஷ்ருதி ஷிபுலால் - 0.08% பங்குகள் வைத்துள்ளார். அப்படியானால் 2737538 பங்குகள்

ஈவுத்தொகை விபரம்

  • சுதா கோபாலகிருஷ்ணன் - 2.62% பங்குகளுக்கு 181.1783 கோடி ரூபாய் ஈவுத்தொகை பெற உள்ளார்.
  • ரோஹன் மூர்த்தி - 1.67% பங்குகளுக்கு 115.5444948 கோடி ரூபாய் ஈவுத்தொகை பெற உள்ளார்.
  • எஸ் கோபாலகிருஷ்ணன் - 1.15% பங்குகளுக்கு 79.5222352 கோடி ரூபாய் ஈவுத்தொகை பெற உள்ளார்.
  • நந்தன் எம் நிலேகனி - 1.12% பங்குகளுக்கு 77.4880078 கோடி ரூபாய் ஈவுத்தொகை பெற உள்ளார்.
  • அக்ஷதா மூர்த்தி - 1.07% பங்குகளுக்கு 74.0184824 கோடி ரூபாய் ஈவுத்தொகை பெற உள்ளார்.
  • ஆஷா தினேஷ் - 1.06% பங்குகளுக்கு 73.3006776 கோடி ரூபாய் ஈவுத்தொகை பெற உள்ளார்.
  • சுதா என் மூர்த்தி - 0.95% பங்குகளுக்கு 65.6461894 கோடி ரூபாய் ஈவுத்தொகை பெற உள்ளார்.
  • ரோகினி நிலேகனி - 0.94% பங்குகளுக்கு 65.2366748 கோடி ரூபாய் ஈவுத்தொகை பெற உள்ளார்.
  • தினேஷ் கிருஷ்ணசாமி - 0.89% பங்குகளுக்கு 61.711221 கோடி ரூபாய் ஈவுத்தொகை பெற உள்ளார்.
  • ஷ்ரேயாஸ் ஷிபுலால் - 0.65% பங்குகளுக்கு 45.038265 கோடி ரூபாய் ஈவுத்தொகை பெற உள்ளார்.
  • நாராயண மூர்த்தி - 0.46% பங்குகளுக்கு 31.6267122 கோடி ரூபாய் ஈவுத்தொகை பெற உள்ளார்.
  • கௌரவ் மஞ்சந்தா - 0.38% பங்குகளுக்கு 26.0988294 கோடி ரூபாய் ஈவுத்தொகை பெற உள்ளார்.
  • நிஹார் நிலேகனி - 0.35% பங்குகளுக்கு 24.0877288 கோடி ரூபாய் ஈவுத்தொகை பெற உள்ளார்.
  • ஜான்ஹவி நிலேகனி - 0.24% பங்குகளுக்கு 16.3204699 கோடி ரூபாய் ஈவுத்தொகை பெற உள்ளார்.
  • தீக்ஷா தினேஷ் - 0.21% பங்குகளுக்கு 14.5286996 கோடி ரூபாய் ஈவுத்தொகை பெற உள்ளார்.
  • திவ்யா தினேஷ் - 0.21% பங்குகளுக்கு 14.5286996 கோடி ரூபாய் ஈவுத்தொகை பெற உள்ளார்.
  • சரோஜினி தாமோதரன் ஷிபுலால் - 0.16% பங்குகளுக்கு 11.0479927 கோடி ரூபாய் ஈவுத்தொகை பெற உள்ளார்.
  • குமாரி ஷிபுலால் - 0.14% பங்குகளுக்கு 9.9730335 கோடி ரூபாய் ஈவுத்தொகை பெற உள்ளார்.
  • மேகனா கோபாலகிருஷ்ணன் - 0.13% பங்குகளுக்கு 9.1863632 கோடி ரூபாய் ஈவுத்தொகை பெற உள்ளார்.
  • ஷ்ருதி ஷிபுலால் - 0.08% பங்குகளுக்கு 5.2013222 கோடி ரூபாய் ஈவுத்தொகை பெற உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys Narayanamurthy family getting richer in single by 19 rupee per share dividend of q2 infosys

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக