சனி, 14 அக்டோபர், 2023

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் பயணம்!

ஜாப்னா முஸ்லீம் : இந்தியா - நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட கப்பல் இலங்கை - காங்கேசன்துறையை நோக்கி வருகைதந்துள்ளது.
50 பயணிகளுடன் இந்தியா - நாகபட்டினத்தில் இருந்து புறப்பட்ட கப்பல் இலங்கை - காங்கேசன்துறையை நோக்கி இன்று (14.10.2023) மதியம் 12.15 மணியளவில் வந்தடைந்தது.
மீண்டும் இன்று பி.ப 2.00 மணியளவில் 31 பயணிகளுடன் இந்தியா - நாகபட்டினம் நோக்கி சென்றது.
விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து நிகழ்வு ஆரம்பமானது. பின்னர் கப்பலில் பயணித்த பயணிகளுக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. இந்த கப்பல் பயணமானது மிகவும் சௌகரியமாகவும், பாதுகாப்பானதாகவும், பிரியோசனமாகவும் அமைந்ததாக பயணிகள் தெரிவித்தனர்.
நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்குமிடையிலான கப்பலில் பயணம் மேற்கொள்வதற்கு ஒருவருக்கு ஒருவழிக் கட்டணமாக 27,000 ரூபாவும் இருவழிக்கட்டணமாக 53,500 ரூபாவும் அறவிடப்படவுள்ளதுடன், 50 கிலோகிராம் வரை இலவசமாக பொருட்களை எடுத்துச்செல்லலாம்.

இறுதியாக 1984 ஆம் ஆண்டு தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் கப்பல் சேவை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  40 வருடங்களின் பின்னர் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே இந்த கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக