சனி, 4 மார்ச், 2023
மலையக தலைவர் தொண்டமானும் தனிப்பெரும் தலைவர் ஜி ஜி பொன்னம்பலமும்
: திரு சௌமியமூர்த்தி தொண்டைமானும் திரு ஜி ஜி பொன்னம்பலமும்
குட்டாப்பிடி என்ற தோட்ட கிராமத்தில் நடந்த ஒரு கொலை வழக்கு பற்றிய செய்தி இது
அங்குள்ள தோட்டத்தில் நடந்த கலவரத்தில் தோட்டத்தை சேர்ந்த ஒருவர் கொலைசெய்யப்பட்டார்
அந்த கொலையில் சந்தேகத்தின் அடிப்படையில் எட்டு மலையக தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
எட்டு தொழிலாளர்களும் கூட்டம் கூடி திடடமிட்டு இந்த கொலையை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது
தொழிலாளர்கள் பதறிப்போய்விட்டார்கள்
எட்டு பேர்களும் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கத்தின் தலைவரிடம் போய் உதவி கேட்டு மன்றாடினார் குடும்பத்தினர்
அந்த தொழிற்சங்க தலைவர் ஒரு சிங்கள வழக்கறிஞரை அணுகி இது பற்றி பேசினார் . அவர் இந்த வழக்கை கையிலெடுப்பதற்கு 5000 ரூபாய் கேட்டார் . இந்த தொகைக்கு தொழிலாளரக்ள் எங்கு போவார்கள்?
அந்த தொழிற்சங்க தலைவரும் கையை விரித்து விட்டார்
பின்பு இந்த இவர்கள் கொழும்புக்கு போய் திரு தொண்டைமானை சந்தித்து நிலமையை எடுத்து சொன்னார்கள்
கவனமாக கேட்ட தொண்டைமானுக்கு இந்த எட்டு பேர்களும் குற்றவாளிகள் அல்ல என்று தோன்றியது
அழகிரி வீட்டில் ஸ்டாலின் லஞ்ச்? மதுரை அறிகுறி!
minnambalam.com - Aara : வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கள ஆய்வு நிகழ்ச்சிக்காக மதுரை செல்ல இருக்கும் தகவல்கள் இன்பாக்ஸில் வந்தன.
அவற்றை ஒரு பார்வை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அரசின் திட்டப் பணிகள் செம்மையாக நடைபெறுகின்றனவா என்று கண்காணிக்கவும், அரசு அலுவலகங்கள் மக்கள் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்கின்றனவா என்பதை கண்காணிக்கவும் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற பயணத்தை கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கினார்.
முதல் கட்டமாக வேலூரை மையமாகக் கொண்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாரிகளிடம் அரசு திட்டங்கள் பற்றி ஆய்வு செய்தார். அடுத்து பிப்ரவரி மத்தியில் சேலத்தை தலைமை இடமாகக் கொண்டு சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.
வடமாநிலத்தவர் தாக்கப்படுவது போன்று போலி வீடியோ பரப்பிய 4 பேர் மீது வழக்கு
மாலைமலர் :சென்னை தமிழகத்தில் பணிபுரியும் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களை சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோக்கள் யூடியூப் உள்ளிட்ட வலைதளங்களில் பரவியது.
இந்த வீடியோக்களின் அடிப்படையில் இந்தி பத்திரிகைகள் சிலவற்றிலும் செய்திகள் வெளியானது.
அதில் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாகவும்,
இதனால் வடமாநிலத்தவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டு உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்பட்டன.
தமிழ்நாட்டில் பிகாரிகள் தாக்கப்பட்டது பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி மறுப்பு வதந்திகளைப் பரப்புவதே பாஜகவின் வேலை:
தினமணி : தமிழ்நாட்டில் பிகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான விடியோ குறித்து அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் பணியாற்றும் பிகாா் இளைஞா்கள், உள்ளூா் மக்களால் தாக்கப்படுவதுபோல இரு விடியோக்கள் சில நாள்களாக சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வந்தது.
முக்கியமாக இந்த விடியோக்கள் பிகாா், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் வேகமாக பரவியது. இதனால் அந்த மாநிலங்களில் வசிக்கும் மக்களிடம் தவறான எண்ணம் ஏற்படும் நிலை ஏற்பட்டது.
இதையறிந்த தமிழக காவல்துறை, அந்த விடியோக்களுக்கு மறுப்பு தெரிவித்தது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தில் 2 பேரை நியமித்தது ரத்து- மதுரை உயர்நீதி மன்றம்
மாலை மலர் : குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரபு, ஜெயபாலன் ஆகியோரை தமிழக அரசு அர்ச்சகர்களாக நியமித்தது.
தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோவில்களில் பல அர்ச்சகர்கள் சம்பளம் பெறாமலேயே, கோவில்களில் தங்களின் பணியை செய்து வருகின்றனர். மதுரை: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் குமாரவயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில், தமிழ்நாடு அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின்கீழ் ஜெயபாலன், பிரபு ஆகியோரை அர்ச்சகர்களாக நியமித்து உத்தரவிடப்பட்டது.
இதை ரத்து செய்து, அந்த கோவிலில் நீண்ட காலமாக பணியாற்றும் தங்களை அர்ச்சகர்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி கார்த்திக், பரமேசுவரன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
வெள்ளி, 3 மார்ச், 2023
ஈழத்தமிழர் போராட்டத்தை கலைஞர் எதிர்ப்பாகவே கட்டமைத்து புலிகளுக்கு தவறான வழியை காட்டிய துரோகிகள்" பட்டியலிட்ட தொல். திருமாவளவன்
இலங்கை தமிழர்களின் போராட்டத்தை முதலில் இருந்து இறுதி வரை கலைஞர் எதிர்ப்பு பிரசாரமாகவே மடைமாற்றி புலிகளுக்கு தண்ணி காட்டிய குற்றவாளிகள் இப்போதாவது அம்பலமாகிறார்களே!
தமிழ்நாட்டில் புலிகளை அன்றில் இருந்து இன்றுவரை ஆதரிப்பதாக கூச்சல் போடும்,
நெடுமா வைகோக்களை காலம் கடந்தாவது அம்பலப்படுத்திய திருமாவளவன் னுக்கு நன்றிகள்!
சுப.மோகன் ராஜ் : 2009ல் கலைஞர் எதிர்ப்பரசியலை வைத்து ம.நடராசன் ஒரு சூழ்ச்சி விளையாட்டை ஆரம்பித்தார்...
காலந்தோறும் கலைஞர் மீது வன்மம் கொண்ட பழ.நெடுமாறனை முன் வைத்து வைகோ,தா.பா போன்றவர்கள் துணையுடன் அது நடந்தேறியது...
ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கமாக பெயர் பெற்றிருக்க வேண்டிய பழ.நெடுமாறன் தலைமையிலான அணி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கமாக பெயர் பெற்றது முதல் அக்காலங்களில் நடந்தவற்றை தெளிவாக விளக்கியிருக்கிறார் முனைவர் தொல்.திருமா அவர்கள்...
என்ன ம.ந கூட்டணி தேன்நிலவுக்காலம் எல்லாம் முடிந்து தற்போது அவர் சொன்னதில் சற்று வருத்தம்...
பரவாயில்லை காலம் கடந்தாவது சொல்லியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகாரைச் சேர்ந்த 12 பேர் தூக்கிலிடப்பட்டதாக பரவும் வதந்தி -
BBC News தமிழ் : தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அதில் 12 பேர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டதாக வட இந்தியாவிலிருந்து வெளியாகும் பிரதான செய்தி நிறுவனங்களே போலிச் செய்திகளை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் நேற்று பிற்பகலில் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டார்.
அந்த ட்வீட்டில், "தமிழ்நாட்டில் உள்ள பிகார் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து செய்தித்தாள்கள் மூலம் அறிந்துகொண்டேன்.
எடப்பாடியை தூக்கி எறிந்தால் தான் அதிமுகவை காப்பாற்ற முடியும்: பண்ருட்டி ராமச்சந்திரன்
மின்னம்பலம் - christopher : எடப்பாடியை தூக்கி எறிந்தால் தான் அதிமுகவை காப்பாற்ற முடியும்: பண்ருட்டி ராமச்சந்திரன்
கழகத்தின் ஒற்றுமைக்கு யார் இடையூறாக இருக்கிறார்களோ, அவர்களை தொண்டர்கள் தூக்கி எறிய வேண்டும் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ்.இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று 66,575 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று (மார்ச் 2) செய்தியாளர்களை சந்தித்தார்.
இலங்கை விவசாயிகளுக்கு இன்று முதல் இலவச எரிபொருளுக்கான டோக்கன் .. சீனா உபயம்
வீரகேசரி : விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் வழங்குவது தொடர்பான டோக்கன்கள் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று (02) முதல் விவசாயிகள் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வகையில் டோக்கன்களை வழங்குவதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்துவதற்காக சீன அரசாங்கம் 6.98 மில்லியன் லீற்றர் டீசலை இலவசமாக வழங்கியிருந்தது.
விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் பல மாவட்டங்களுக்கு உரிய டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன், இன்று கொழும்பு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு எரிபொருள் டோக்கன்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
வியாழன், 2 மார்ச், 2023
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நானும் MLA-வாக பங்குபெறுவதில் பெருமை".. EVKS இளங்கோவன் பேட்டி!
கலைஞர் செய்திகள் - Lenin : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் நானும் எம்.எல்.ஏ-வாக பங்குபெறுவதில் பெருமையாக உள்ளது என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி நடைபெற்றது. இதற்காக, 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில், 1,430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 310 விவிபேட் கருவிகள், 286 கட்டுப்பாட்டுக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
286 முதன்மை அலுவலர்கள், 858 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் 62 அலுவலர்கள் என மொத்தம் 1,206 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். இடைத்தேர்தலில் 82 ஆயிரத்து 138 ஆண்கள், 88 ஆயிரத்து 37 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர்.
ஈரோடு கிழக்கில் இளங்கோவன் வெற்றி 91 ஆயிரம் வாக்குகள் தென்னரசு 36 ஆயிரம் வாக்குகள் நாம் தமிழர் டெபாசிட் காலி
மாலை மலர் : ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 51,168 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
அதிமுக வேட்பாளர் 32,360 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார்.
தற்போதுவரை வெளியான 11 சுற்றுகள் முடிவில் 83,528 வாக்குகள் பெற்றுள்ள இளங்கோவனின் வெற்றி உறுதியாகியுள்ளது.
அவர் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 51,168 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் 32,360 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 5,666 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 836 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா சையத் சுட்டுக்கொலை! என்ன நடந்தது?
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் மீது ஆஸ்திரேலியா சிட்னி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் உயிரிழந்தார்.
ஆஸ்திரேலியா நாட்டில் சிட்னி நகரில் அபர்ன் ரயில் நிலையம் உள்ளது. நேற்று (பிப்ரவரி 28) ரயில் நிலையத்தில் இருந்த ஒருவர், அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த 28 வயது நபர் ஒருவரைக் கத்தியால் குத்தி தாக்கியிருக்கிறார்.
இதனால் தூய்மை பணியாளருக்கு ரத்த காயம் ஏற்பட்ட நிலையில், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கத்தியால் குத்திய நபரைப் பிடிக்க முயன்றனர்.
அப்போது அவர் காவல்துறையினர் மீதும் கத்தியை கொண்டு தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்தை வெல்லப்போவது யார்? இன்று வாக்கு எண்ணிக்கை
tamil.oneindia.com - Noorul Ahamed Jahaber Ali : டெல்லி: திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல்கள் நடந்து முடிந்து இருக்கும் நிலையில் இன்று காலை 8 மணியளவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதை தொடர்ந்து கடந்த 27 ஆம் தேதி மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்டது.
புதன், 1 மார்ச், 2023
ஸ்டாலின் போலீசா? அமித் ஷா போலீசா? ராஜினாமா மூடில் திருமாவளவன்: சிறுத்தையின் சீற்றப் பின்னணி
minnambalam.com - Aara : கூட்டணிக்குள் இருந்தே தோழமை சுட்டுதல் என்ற பாணியில் தொடர்ந்து திமுக அரசின் நிர்வாக குளறுபடிகளையும், திமுக என்ற கட்சியின் அரசியல் போக்கையும் சுட்டிக் காட்டுவதில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தொடர்ந்து வேகத்தோடு செயல்பட்டு வருகிறார்.
அதன் உச்சகட்டமாகத்தான் பிப்ரவரி 28 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விடுதலைச் சிறுத்தைகளின் ஆர்பாட்டத்தில் பேசியிருக்கிறார் திருமாவளவன்.
தமிழ்நாட்டில் வன்முறையைத் தூண்ட பாஜகவினர் திட்டமிட்டு வருகிறார்கள் என்றும் அதைக் கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (பிப்ரவரி 28 ) மாலை விடுதலைச் சிறுத்தைகள் ஆர்பாட்டம் நடத்தியது.
பிபிசி அலுவலகங்களில் நடந்த வரி ஆய்வு: இந்திய அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய பிரிட்டன் வெளியுறவு அமைச்சர்
bbc.com : பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளெவர்லி டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்தபோது, பிபிசியின் மும்பை, டெல்லி அலுவலகங்களில் வருமான வரித்துறை நடத்திய ஆய்வு குறித்த பிரச்னையை எழுப்பியதாக ராய்ட்டரஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, "பிரிட்டன் அமைச்சரிடம் இந்தியாவில் செயல்படும் அனைத்து நிறுவனங்கள் நாட்டில் அமலில் உள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு முழுமையாக இணங்க வேண்டும் என்று உறுதிபட கூறப்பட்டது" என்று இந்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை மேற்கோள்காட்டி ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 அறிவிப்பு .. பட்ஜெட் தாக்கல்!
மாலை மலர் :; மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. அரசு இப்போதே தயராகி வருகிறது.
இந்த நிலையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பில் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தது அரசு.
நிதி மந்திரி ஜெகதீஷ் தேவ்தா 2023-24 ஆம் ஆண்டிற்கான ரூ.3.14 லட்சம் கோடி பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
தேர்தல் வருவதால், இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, பட்ஜெட்டில், பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்திற்கு ரூ.459 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான முதலமைச்சரின் ஸ்கூட்டி திட்டத்தையும் மாநில அரசு முன்மொழிந்துள்ளது, இதன் கீழ் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவிகளுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும் என நிதிமந்திரி அறிவித்துள்ளார்.
திரிபுரா மாடல் தேர்தல் வன்முறை : பாசிஸ்டுகள் கற்றுத்தரும் பாடம் என்ன?
vinavu.com : திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பை ஒன்றிய தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி 18 அன்று வெளியிட்டது.
பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ள திரிபுராவில்,
கடந்த 2018 ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதல் தொடர்ச்சியாக வன்முறைகளில் ஈடுபட்டு எதிர்க்கட்சிகளை முடக்கி வருகிறது.
இந்நிலையில், “வன்முறையில்லா தேர்தல்” என்பதே இலக்கு என அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
தேர்தல் அறிவிப்பு வெளியான சில மணிநேரத்திற்குள்ளாகவே எதிர்க்கட்சிகள் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தி, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பைக் கால்தூசுக்குச் சமமாகக் கூட மதிக்கவில்லை என்பதை நிரூபித்திருக்கிறது பாசிச பா.ஜ.க கும்பல்.
மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள மஜிலிஸ்பூர் தொகுதியில் இரு சக்கரவாகனப் பேரணி சென்ற காங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியது பா.ஜ.க குண்டர்படை.
சிறப்புபள்ளி குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய முதலமைச்சர்!
Kalaignar Seithigal - Prem Kumar : சென்னை அண்ணா சாலையில் உள்ள பார்வைத் திறன் பாதிப்பு, காது கேளாதோர், வாய் பேச முடியாத குழந்தைகளுக்கான லிட்டில் ஃப்ளவர் சிறப்பு பள்ளியில் உள்ள குழந்தைகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்துடன் தனது 70ம் பிறந்தநாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேக் வெட்டி கொண்டாடினர்.
முன்னதாக அச்சிறப்பு பள்ளி மாணவர்கள் மேல தாளங்கள் முழங்க தமிழ்நாடு முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். பின் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி குறித்த அப்பள்ளி மாணவர்கள் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தினர். இதை பார்த்து ரசித்து கவனித்த முதலமைச்சர், அம்மாணவர்களுக்கும், அதற்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மோடியின் இல்லத்தில் உதயநிதி ஸ்டாலின்..அமித்ஷா உடனும் சந்திப்பு டெல்லியில் பரபரக்கும் அரசியல் களம்
tamil.oneindia.com - Noorul Ahamed Jahaber Ali : டெல்லி: தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்டோரையும் அவர் சந்தித்து பேசி தனது துறை சார்ந்த முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளரும், சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அமைச்சராக பதவியேற்றார்.
தமிழ்நாடு விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலத்துறை இலாக்கா அவருக்கு ஒதுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விளையாட்டுத்துறை சார்ந்த பல்வேறு திட்டங்களை அவர் செயல்படுத்தி வருகிறார்.
செவ்வாய், 28 பிப்ரவரி, 2023
அண்ணாமலை ரூ.100 கோடி ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் கையூட்டு
நக்கீறன் : நிதி நிறுவன குற்றச்சாட்டில் தேடப்பட்டு வரும் முக்கியக் குற்றவாளிக்கு பாஜகவில் பொறுப்பு கொடுத்ததுடன் டெல்லியில் தங்க வைத்து பாதுகாப்பு கொடுக்க நூறு கோடி ரூபாய் வரை, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அன்பளிப்பு வாங்கியுள்ளதாக வெளியான தகவல்தான் தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
சென்னையை தலைமை இடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்ட் ட்ரேடிங் எனும் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இது கவர்ச்சிகரமான பல விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றியதாக புகார் எழுந்தது.
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் ராஜினாமா
மாலைமலர் : டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக, துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவிடம் விசாரணை
பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத் துறையால் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு இருக்கிறார். டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும், அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் தங்களது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.
இருவரது ராஜினாமா கடிதங்களையும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக் கொண்டார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக, துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவிடம் சிபிஐ விசாரணை நடத்திய பின் கைது செய்தனர்.
இலங்கை தில்லையாற்றங்கரையை காப்பியடித்து அயலியாக்கிய 'அயலி' இயக்குநர் முத்துக்குமார்
BBC - சிவகுமார் ராஜகுலம் : தமிழில் வெளியாகி, நாடு முழுவதும் பரவலாக கவனம் ஈர்த்துள்ள அயலி இணையத் தொடரின் கதை தன்னுடையது என்று இலங்கைத் தமிழ் எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன் உரிமை கோரியுள்ளார். தன்னுடைய கதை களவாடப்பட்டுள்ளது என்பது அவரது குற்றச்சாட்டு. இதனை மறுத்துள்ள அயலி இயக்குநர் முத்துக்குமார், அயலி கதையை உருவாக்கியதன் பின்னணி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
'அயலி' இணையத்தொடரின் கதை என்ன?
கடவுள் நம்பிக்கை, சமூகப் பழக்கவழக்கம் என்பன போன்ற கட்டுகளை உடைத்து லட்சியத்தை நோக்கி நடைபோடும் பெண்ணை மையமாகக் கொண்ட அயலி தொடரின் கதை 1990களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. கிராமத்துப் பெண் ஒருத்தி வெளியூர் இளைஞருடன் காதல்வயப்பட்டு, உடன்போக்கு சென்றுவிட, சிறிது காலத்தில் அந்த ஊரே இயற்கையால் வஞ்சிக்கப்படுகிறது. இதனால் துரத்தப்பட்ட அவ்வூர் மக்கள் ஒட்டுமொத்தமாக அலைந்து, திரிந்து வேறோர் இடத்தில் குடிபெயர்கின்றனர்.
இலங்கைக்கு சி.ஐ.ஏ. தலைவரின் வருகை நீடிக்கும் மர்மம்
வீரகேசரி : “உலகெங்கும் பல படைத் தளங்களை அமெரிக்கா கொண்டிருந்தாலும், இப்போது, இலங்கையின் முக்கிய தளங்களை தேவைக்குப் பயன்படுத்தக் கூடிய வசதிகளை ஏற்படுத்துவது தான் அதன் இலக்கு”
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் கொழும்பு அரசியலில் மீண்டும் பேசுபொருளாக மாறத் தொடங்கியிருக்கிறது.
கடந்த ஆண்டு நடுப்பகுதியில் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்துக்குப் பின்னால், அமெரிக்கத் தூதுவர் இருந்தார் என்ற குற்றச்சாட்டு,
ஆளும் தரப்பில் இருந்தவர்களால் சுமத்தப்பட்டது.
ராஜபக்ஷவினர் இந்தக் குற்றச்சாட்டை வெளிப்படையாக முன்வைக்கவில்லை.
துருக்கியில் மீண்டும் 5.6 நிலநடுக்கம்: கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல்
மாலை மலர் : துருக்கியில் மீட்பு பணிகள் முடிந்து புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. துருக்கியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது.
துருக்கியில் கடந்த 6 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் 10 மாகாணங்கள் உருக்குலைந்தன.
கட்டிடங்கள் இடிந்து பல ஆயிரக்கணக்கான உயிர் சேதத்தை ஏற்படுத்தியது.
பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது.
தற்போது மீட்பு பணிகள் முடிந்து புனரமைக்கும் பணிகள் துருக்கியில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
திங்கள், 27 பிப்ரவரி, 2023
இந்தியாவிலேயே கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்க காரணம் திராவிட மாடல்": அமைச்சர் பொன்முடி
Kalaignar Seithigal - Lenin : தமிழ்நாடு இந்தியாவிலேயே உயர்கல்வி துறையில் தமிழ்நாடு 53% பெற்று முதலிடத்தில் இருப்பதற்கு, திராவிட மாடல் தான் காரணம் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
சென்னை பாரதி மகளிர் கல்லூரியின் 52-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், 1428 மாணவிகளுக்குப் பட்டம் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, "தமிழ்நாட்டில் எந்த பள்ளிகளை எடுத்துக்கொண்டாலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் படிக்கக் காரணம் பெரியார், அண்ணா, கலைஞர் உருவாக்கி திராவிட மாடல்தான். அரசியலுக்கானது அல்ல திராவிட மாடல். சமூக நீதிக்கானதுதான் திராவிட மாடல்.
டெல்லியில் உதயநிதி - பிரதமரை நாளை சந்திக்க திட்டம் - என்ன பின்னணி?
BBC News தமிழ் : டெல்லியில் அமைச்சர் உதயநிதி: முதல்வர் போல மரியாதை, 'பிஸி' ஆக நகரும் நிகழ்ச்சி - பிரதமரை நாளை சந்திக்க திட்டம் - என்ன பின்னணி?
டெல்லி விமான நிலையத்தில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்கும் தமிழ்நாடு இல்ல டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன்
டெல்லிக்கு இரண்டு நாட்கள் பயணமாக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்துள்ளார். அவருக்கு மாநில அமைச்சரவையில் முதல்வருக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த அமைச்சருக்கு தரப்படும் மரியாதை போல வரவேற்பும் நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டு வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பூ நியமனம்
நக்கீரன் : தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினாரான குஷ்பு தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து பெண்களின் உரிமைக்காக போராடுவேன் என குஷ்பு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குஷ்பூவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இது பெண்கள் உரிமைக்காக தொடர்ந்து போராடி வரும் குஷ்பூவுக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் பாராட்டியுள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இனி ஒலிபரப்பு கிடையாது டிஜிட்டல் அறிவிப்புக்கள் மட்டுமே
மாலை மலர் : சென்னை இந்தியாவில் முதல் முறையாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் நேற்று முதல் அமைதியான ரெயில் நிலையமாக மாறியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் 150 ஆண்டுகள் பழமையான ரெயில் நிலையம் ஆகும். இங்கிருந்து தமிழகத்தின் பிற பகுதிகள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
தினமும் 46 ஜோடி ரெயில்கள் உள்பட 200 எக்ஸ்பிரஸ் ரெயில்களை சென்ட்ரல் ரெயில் நிலையம் கையாளுகிறது. தினமும் சராசரியாக 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர்.
ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் வசதிக்காக புறப்படும் ரெயில்களின் எண்., சேரும் இடம், புறப்படும் நேரம் மற்றும் நடைமேடை எண் போன்ற தகவல்கள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வந்தது.
EWS சட்டம் - உயர்கல்வியில் பார்ப்பன ஆதிக்கத்தை உச்சத்துக்கு கொண்டு செல்லும்
Marudhamuthu Radhakrishnan : பிரபாகரன், தமிழ்த் தேசியம், தமிழர் என்று மட்டுமே ஓயாமல் உணர்ச்சி பொங்கப் பேசி அரசியல் நடத்தும் பெரியவர் நெடுமாறனும், சிறியவர் சீமானும் ஒரு அடிப்படையான கோட்பாட்டில் ஒன்றாகவே இணைந்து பயணிப்பவர்கள்.
அது என்னவென்றால் இவர்களின் தமிழ்த் தேசிய வரையறுப்பில் பார்ப்பனருக்கு முழுமையான இடம் உண்டு என்பது தான்.
இதற்கேற்ப இந்த குருவும் சீடரும் திராவிடக் கருத்தியலையும், அரசியலையும் (பெரியாரையும், அண்ணாவையும், கலைஞரையும், ஸ்டாலினையும்) முற்றாக வெறுத்து ஒதுக்கித் தள்ளி வந்துள்ளார்கள்.
இப்போது கூட நெடுமாறன் அவர்கள் தனது நேர்காணலில் திராவிடம் என்பதற்கு எந்தப் பொருளும் இல்லை என்றும் அதைத் தேவையில்லாமல் தொடர்ந்து உச்சரித்து வருகிறார்கள் என்றும் (ஆர்.எஸ்.எஸ்./பாஜக பாணியில்) தெரிவித்துள்ளார்.
ஆனால் திராவிடமும், பெரியாரும், அம்பேத்கரும் தலைமை தாங்காத தமிழ்த் தேசியம் நூற்றுக்கு நூறு போலியானது.
யாழ்ப்பாணத்தை 1694 முதல் 1697 வரை ஆண்ட Holland தளபதி Hendrick Zwaar- decroon யின் அரிய வரலாற்று குறிப்பு
Hendrick Zwaar- decroon |
தாய்வீடு : ஓர் ஒல்லாந்தத் தளபதியின் யாழ்ப்பாண நினைவுத்திரட்டு - மணி வேலுப்பிள்ளை
1667 ஜனவரி 26-ம் திகதி ரொட்டர்டாமில் பிறந்த ஹென்றிக் சுவார்தகுரூன் (Hendrick Zwaar- decroon) 1694 முதல் 1697 வரை யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்த தளபதியாக விளங்கியவர். மூன்றே மூன்று ஆண்டுகளுக்குள் அவர் வட - கீழ் இலங்கை முழுவதையும் கண் காணித்து, தனது பின்னவர்களுக்கு வழிகாட்டவென விட்டுச்சென்ற நினைவுத்திரட்டு அரியதொரு வரலாற்று ஆவணமாகும்.
தனது தாய்மொழியில் அவர் எழுதிய நினைவுத்திரட்டு பிரித்தானிய ஆட்சியாளரால் ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டு, இலங்கை அரசாங்க அச்சகத்தில் அச்சிடப்பட்டு, 1911-ல் வெளியிடப்பட்டது. அதன் படப்பிரதி ஒன்று கலிபோர்ணியா பல்கலைக்கழக நூலகத்திலிருந்து திரு. பத்மநாப ஐயர் ஊடாக அண்மையில் எமக்குக் கிடைத்தது. ஆங்கில மொழிபெயர்ப்பில் 95 பக்கங்கள் கொண்டது.
பஞ்சாப் சிறையில் சித்து கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2 பேர் கொலை
பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள கோவிந்த்வால் சாகிப் மத்திய சிறைச்சாலையில் இன்று பயங்கர மோதல் ஏற்பட்டது.
இரு குழுவினரிடையே ஏற்பட்ட இந்த சண்டையில் 2 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் பலத்த காயமடைந்தார். கொலை செய்யப்பட்ட இருவரும் பாடகர் சித்து மூஸ் வாலா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்.
மூன்று பேரும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் மீது இந்த கொலை வழக்கு தவிர மற்ற சில வழக்குகளும் இருப்பதாகவும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு குர்மீத் சிங் சவுகான் கூறினார்.
இத்தாலியில் புலம்பெயர்ந்தோர் சென்ற படகு பாறையில் மோதி 43 பேர் பலி
மாலை மலர் : ரோம் இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரைக்கு அருகே புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானது.
இதுபற்றி தகவல் அறிந்த இத்தாலி கடலோர காவல்படை மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலை நிலவரப்படி 43 சடலங்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். 80 பேர் உயிர் பிழைத்தனர். அவர்களில் சிலர் படகு விபத்துக்குள்ளானதும் நீந்தி கரைக்கு வந்துள்ளனர்.
கலப்ரியா பிராந்தியத்தின் ரிசார்ட் அருகே கடற்கரைக்கு சில மீட்டர் தொலைவில் உள்ள பாறைகள் மீது படகு மோதியதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. வேறு யாரேனும் உயிர் பிழைத்திருக்கிறார்களா? என கடற்பகுதியில் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு மீனவர்களுக்கு இலங்கை கடலுக்குள் அனுமதியா? போராடத் தயாராகும் யாழ் மீனவர்கள்
BBC News, தமிழ்- ரஞ்சன் அருண் பிரசாத் : இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்க தீர்மானிக்க ப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது என, இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களின் சிறு படகுகளை இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதிக்கின்றமை தொடர்பில் வெளியான செய்தி குறித்து, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பிபிசி தமிழ் வினவிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கை கடற்பரப்புக்குள் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி பத்திரம் விநியோகிக்கப்படுகின்றமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது கலந்துரையாடப்படும் என இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேற்கோள்காட்டி, இலங்கை மற்றும் இந்திய ஊடகங்கள் சில அண்மையில் செய்திகளை வெளியிட்டிருந்தன.
செறிவூட்டப்பட்ட அரிசி என்பது கலப்பட அரிசியே!
இதற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. ஏற்கனவே அயோடின் கலந்த உப்புத் திணிப்பால் ஏற்பட்டுள்ள விளைவுகள் என்ன?
இதன் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன்கள் என்ன..? என விளக்குகிறார் இயற்கை வேளாண் ஆய்வாளர் பாமயன்.
அது என்ன செறிவூட்டப்பட்ட அரிசி ((fortified rice) இந்தியக் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் அனீமியா எனப்படும் ரத்தசோகை, நுண்ணூட்டச் சத்துக் குறைபாடு உள்ளதால்,
அவர்களுக்காக அதில் இரும்புச் சத்து, வைட்டமின், ஃபோலிக் அமிலம் போன்ற ரசாயனங்களைச் சேர்த்து சத்து உண்டாக்கி செயற்கை அரிசியை உருவாக்கி,
ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023
10 கிலோ 450 கிராம் தேயிலை கொழுந்தைப் பறித்து முதலிடத்தைப் பிடித்த சீதையம்மா.
tamil mirror : களனிவெளி, தலவாக்கலை, ஹொரணை ஆகிய பெருந்தோட்ட நிறுவனங்களுக்குரிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் பங்குபற்றுதலுடன் சிறந்த கொழுந்து பறிப்பவர்களைத் தெரிவு செய்வதற்கான இறுதிப் போட்டி நேற்று (25) ரதல்ல தோட்டத்தில் நடைபெற்றது.
ஹேலீ்ஸ் குழுமத்தின் தலைவர் மோகன் பண்டிதகே மற்றும் தோட்டக் கம்பனிகளின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ரொஷான் ராஜதுரை ஆகியோரின் தலைமையில்
இப்போட்டிகள் இடம்பெற்றன.
பாகிஸ்தான் மருத்துவமனைகளில் இன்சுலின், டிஸ்பிரின் மருந்துகள் தீர்ந்துவிட்டன..கடும் நிதி நெருக்கடி
மாலை மலர் : பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால், ஆபத்தான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. மேலும், டாலர் அழுத்தத்தையும் எதிர்கொள்கிறது.
இதனால் நாட்டில் முடிந்த வரையில் செலவினங்களை குறைக்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் நிதி நெருக்கடியால் பாகிஸ்தானின் சுகாதாரத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் அத்தியாவசிய மருந்துகள் கூட கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால், தேவையான மருந்துகள் அல்லது உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது,
பாம்பன் ரயில் பாலம் சேவை நிறுத்தம்.. 109 வயது ஆன நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக..
BBC News தமிழ் - பிரபுராவ் ஆனந்தன் : ராமேஸ்வரம் அருகே கடலின் குறுக்கே அமைந்துள்ள 109 வயதான பாம்பன் பழைய தூக்கு பாலத்தில் ரயில் போக்குவரத்து திடீரென நிறுத்தப்பட்டதால் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மீனவ மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
உடனடியாக பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் சேவையை துவக்க வேண்டும் என வலுவான கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களில் ஒன்று பாம்பன் ரயில் பாலம். இந்த ரயில் பாலம் தமிழ்நாட்டின் பெருநிலப் பரப்பையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. இது இந்தியாவின் முதல் கடல் பாலம். சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இப்பாலம் இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் என்ற பெருமையை கொண்டது.
பிகார் மாநாட்டில் லாலு பிரசாத் சூழுரை .. பாஜகவை நூறு சீட்டுக்களுக்குள் முடக்குவோம்
minnambalam.com - Kavi : 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று தொடர்ந்து பேசி வரும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், “பாஜகவை 100 சீட்டுக்குள் முடங்கச் செய்ய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும்” என்று கூறினார்.
கடந்த ஆண்டு பாஜக உடனான கூட்டணியை நிதிஷ் குமார் முறித்துக்கொண்டார். இந்த கூட்டணி முறிவைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அமித் ஷா இன்று பீகார் சென்றுள்ளார்.
2024ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவரது இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இன்று(பிப்ரவரி 25) பீகாருக்கு சென்றுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
தியாகராய நகர் மாம்பலம் ரயில் நிலையம்- ஆகாய நடைபாதை உள்ளிட்ட 3 மேம்பாலங்கள் விரைவில்
அதுமட்டுமல்லாது சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து தியாகராய நகரை சுற்றியுள்ள பகுதிகளுக்கு, வேலைக்குச் செல்வோரும், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியரும் அதிகளவில் வந்து செல்வதால் எப்போதும் பரபரப்பிற்கு பஞ்சமில்லாத பகுதியாக தியாகராயநகர் விளக்குகிறது. மாம்பலம் இரயில் நிலையத்தில் இறங்கி, தியாகராயநகர் பேருந்து பணிமனைக்கோ அல்லது பணிமனையிலிருந்து இரயில் நிலையத்திற்கோ செல்வது என்பது தற்போதைய சூழலில் அவ்வளவு எளிதல்ல. ரெங்கநாதன் தெரு, பனகல் பார்க், பாண்டியபஜார், சத்யா பஜார், உஸ்மான் சாலை என பரபரப்பான வணிகபகுதிக்கு வருவோரும் இவ்வழியாக தான் செல்ல வேண்டும்.