வியாழன், 2 மார்ச், 2023

ஈரோடு கிழக்கில் இளங்கோவன் வெற்றி 91 ஆயிரம் வாக்குகள் தென்னரசு 36 ஆயிரம் வாக்குகள் நாம் தமிழர் டெபாசிட் காலி

 மாலை மலர் :   ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 51,168 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
அதிமுக வேட்பாளர் 32,360 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார்.
தற்போதுவரை வெளியான 11 சுற்றுகள் முடிவில் 83,528 வாக்குகள் பெற்றுள்ள இளங்கோவனின் வெற்றி உறுதியாகியுள்ளது.
அவர் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 51,168 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் 32,360 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 5,666 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 836 வாக்குகளும் பெற்றுள்ளனர்.


ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி உறுதியானதை அடுத்து கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

Live Updates 2 மார்ச் 2023 5:05 AM ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் என தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார்.
அவர் சுமார் 76,834 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.வேட்பாளர் கேஎஸ் தென்னரசு 28,637 வாக்குகளை பெற்று டெபாசிட்டை தக்கவைத்துக்கொண்டார்.

 9-வது சுற்று முடிவு: காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 70,299 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை விட 45, 314 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு 24,985 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 3,830, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 560 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

 ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 7 வேட்பாளர்கள் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. 73-வது வேட்பாளரான ராஜேந்திரன் என்பவர் ஒரு வாக்கு கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 8-வது சுற்று முடிவிலும் முன்னிலை வகிக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன் 61,182 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை விட 38, 834 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் இதைவிட பெரிய வெற்றியை மக்கள் வழங்குவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஈரோடு இடைத்தேர்தல்: 7-வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 19,936, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 3,006, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 492 வாக்குகளை பெற்றுள்ளனர்.

7-வது சுற்று முடிவிலும் முன்னிலை வகிக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன் 53,548 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை விட 33, 612 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக