வியாழன், 2 மார்ச், 2023

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்தை வெல்லப்போவது யார்? இன்று வாக்கு எண்ணிக்கை

 tamil.oneindia.com  - Noorul Ahamed Jahaber Ali  : டெல்லி: திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல்கள் நடந்து முடிந்து இருக்கும் நிலையில் இன்று காலை 8 மணியளவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதை தொடர்ந்து கடந்த 27 ஆம் தேதி மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்டது.


இந்த நிலையில் இன்று 3 மாநிலங்களிலும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் காவல்துறை மற்றும் துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
மேகாலயா தேர்தல்- சாதிக்க போவது எந்த 'சங்மா'? மேற்கு வங்கம் போல வெற்றி வாகை சூடுவாரா மமதா பானர்ஜி? மேகாலயா தேர்தல்- சாதிக்க போவது எந்த 'சங்மா'? மேற்கு வங்கம் போல வெற்றி வாகை சூடுவாரா மமதா பானர்ஜி?

பலத்த பாதுகாப்பு
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு நேரடி வாக்குகள் எண்ணப்படும். மேகாலயா மாநிலத்தில் 13 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. ஸ்டிராங் ரூம்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மேகாலயா வாக்கு எண்ணிக்கை
மேகாலயா மாநில முதலமைச்சரும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான கான்ராட் சங்மா தேர்தலை ஒட்டி அசாம் மாநில முதலமைச்சரும் பாஜகவை சேர்ந்தவருமான ஹிமந்தா பிஸ்வா சங்மாவை கவுஹாத்தியில் சந்தித்து பேசினார். மேகாலயாவில் பாஜக, என்பிபி கட்சிக்கு இடையே மோதல் போக்கு நீடித்த நிலையில் அந்த மாநில தேர்தல் முடிவுகள் உற்று நோக்கப்படுகின்றன.

திரிபுராவில் பாதுகாப்பு
பாஜக ஆளும் திரிபுரா மாநில தேர்தல் முடிவுகளும் இன்று எண்ணப்பட உள்ளன. இதன் காரணமாக வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் மாநில எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக அசாம் மற்றும் மிசோரம் ஆகிய மாநில எல்லைகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதேபோல் திரிபுராவில் 856 கிலோ மீட்டர் நீள இந்தியா - வங்கதேச எல்லையிலும் பாதுகாப்பை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.

நாகாலாந்து
நாகாலாந்து மாநிலத்திலும் 4 மாவட்டங்களிலும் மறு தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டதை தொடர்ந்து வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அங்குள்ள 59 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அம்மாநிலத்தில் சிஆர்பிஎப் படை மூன்று அடுத்து பாதுகாப்பு வழங்குகிறது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்கள் அருகிலும் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

As the assembly elections for the 3 northeast states of Tripura, Meghalaya and Nagaland are going on, the votes will be counted at around 8 am today amid tight security.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக