புதன், 1 மார்ச், 2023

மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 அறிவிப்பு .. பட்ஜெட் தாக்கல்!

 மாலை மலர்  :; மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. அரசு இப்போதே தயராகி வருகிறது.
இந்த நிலையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான ரூ.3.14 லட்சம் கோடி மதிப்பில் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தது அரசு.
நிதி மந்திரி ஜெகதீஷ் தேவ்தா 2023-24 ஆம் ஆண்டிற்கான ரூ.3.14 லட்சம் கோடி பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
தேர்தல் வருவதால், இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, பட்ஜெட்டில், பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்திற்கு ரூ.459 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான முதலமைச்சரின் ஸ்கூட்டி திட்டத்தையும் மாநில அரசு முன்மொழிந்துள்ளது, இதன் கீழ் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவிகளுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும் என நிதிமந்திரி அறிவித்துள்ளார்.


பழங்குடியின வகுப்பினருக்காக செயல்படுத்தப்படும் உணவு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 'முக்யமந்திரி லட்லி பெஹ்னா யோஜனா' திட்டத்தின் கீழ், வருமான வரி செலுத்தாத பெண்களின் வங்கிக் கணக்கில் மாதம் 1000 ரூபாய் டெபாசிட் செய்யப்படும். ஊட்டச்சத்துக் குறைபாட்டைச் சமாளிக்க, பிற்படுத்தப்பட்ட பழங்குடியினரான பைகா, பரியா மற்றும் சஹாரியா குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் வங்கிக் கணக்கில் ஆதார் அனுதய யோஜனாவின் கீழ் ரூ.1000 டெபாசிட் செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக