வெள்ளி, 3 மார்ச், 2023

இலங்கை விவசாயிகளுக்கு இன்று முதல் இலவச எரிபொருளுக்கான டோக்கன் .. சீனா உபயம்

 வீரகேசரி : விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் வழங்குவது தொடர்பான டோக்கன்கள் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று (02) முதல் விவசாயிகள் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வகையில் டோக்கன்களை வழங்குவதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்துவதற்காக சீன அரசாங்கம் 6.98 மில்லியன் லீற்றர் டீசலை இலவசமாக வழங்கியிருந்தது.
விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் பல மாவட்டங்களுக்கு உரிய டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன், இன்று கொழும்பு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு எரிபொருள் டோக்கன்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.


இதன்படி, இன்று முதல் அனைத்து விவசாயிகளும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக