சனி, 24 ஆகஸ்ட், 2019

காஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாத் ராஜினாமா!


மின்னம்பலம : காஷ்மீரில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு, அடக்குமுறையும் அமலில் இருப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று சொல்லி கேரளாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இது நாடு தழுவிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கண்ணன் கோபிநாத், கேரளாவைச் சேர்ந்த 2012 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி. இவர் இப்போது தாத்ரா நகர், ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மின்சாரம், மரபுசாரா எரிசக்தித் துறைச் செயலாளராக இருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த புதன் கிழமை (ஆகஸ்டு 21) தனது பதவியை ராஜினாமா செய்திருக்கும் கண்ணன் கோபிநாத் அதுகுறித்த காரணங்களையும் ஊடகங்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
“என் கருத்துரியை மீண்டும் நான் பெற விரும்புகிறேன். ஒரு நாளாவது நான் நானாக இருக்க ஆசைப்படுகிறேன். ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தன்னில் இருக்கும் ஒரு மாநிலம் முழுக்க தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது, அங்கே மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டிருகின்றன. இந்த நாட்டின் ஆட்சிப் பணி அதிகாரியாக இருக்கும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று யாராவது என்னிடம் கேட்டால் நான் அவர்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்பதால்தான் எனது ஐ.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்கிறேன்.

காவேரி தொலைக்காட்சி மூடப்படுகிறது .. ? ஊடகங்கள் மீது பாசிசம் படர்கிறது ?

Rajasangeethan : அண்ணாநகரில் உள்ள காவேரி தொலைக்காட்சி நிறுவனரின்
அலுவலகம் முன் ஊழியர்கள் தர்ணா.
கொடுக்கப்பட வேண்டிய ஊதிய பாக்கியை கேட்கச்சென்ற ஊழியர்களை தள்ளிவிட்டு, ‘என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ... எவன்கிட்ட வேணும்னாலும் சொல்லிக்கோ. இங்கேயே கிடந்தாலும் பரவால்ல. வாட்ச்மேனுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் எனக்கு மிச்சம்!’ என திமிருடன் பதிலளித்துவிட்டு, காரில் புறப்பட்டு சென்றிருக்கிறார்.
அநியாயமாகவும் சட்டத்துக்கு புறம்பாகவும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை ஒரு நாளில் வேலையை நிறுத்தியது மட்டுமல்லாமல், ஊதிய பாக்கியை கொடுக்க கேட்டதற்கு அலைக்கழிக்கப்பட்டிருக்கின்றனர்.
செய்திகளை கொடுக்கும் ஊடகத்தில் இருப்பவர்களை பற்றிய செய்தியே வெளியே தெரியாத நிலைதான் இங்கு யதார்த்தம்.
வேலை நிமித்தமாக இப்பிரச்சினையை இன்று பேச வராத எந்த ஊடகத்தினனுக்கும், ஒரு முதலாளி வீட்டுவாசலில் வாட்ச்மேனாக நிற்கும் வாய்ப்பு காத்திருக்கிறது.

புதிய கல்வி கொள்கையால் உரிமை பறிபோகிறது... நாடாளுமன்றம் 90 சதவீதம் காவிமயமாகி உள்ளது: புதுவை முதல்வர் பேச்சு

தினகரன் : திருச்சி: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் தேசிய கல்விக்கொள்கை-2019 வரைவறிக்கையை திரும்ப பெறக்கோரி கல்வி உரிமை மாநாடு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: புதிய கல்வி கொள்கையின் மூலம் நமது உரிமையை மத்திய அரசு பறிக்கிறது. தமிழ்மொழியை குழி தோண்டி புதைக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. நாடாளுமன்றம் தற்போது நூற்றுக்கு 90 சதவீதம் காவிமயமாகி உள்ளது. நாம் விழிப்புடன் இல்லையென்றால் தமிழ் மொழியை மட்டுமின்றி தமிழ்நாட்டையும் விழுங்கிவிடுவார்கள். நாம் இந்தி திணிப்பதை தான் எதிர்க்கிறோமே தவிர இந்தி படிப்பதை எதிர்க்கவில்லை.

ஏர் இந்தியா ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை: 100 சதவீத பங்குகளையும் விற்க அரசு முடிவு?

tamilthehindu : புதுடெல்லி ஏர் இந்தியா நிறுவனம்
100-stake-sale-in-cash-strapped-air-indiaகடும் நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாத நிலையில் சிக்கித் தவிக்கும் நிலையில் அந்நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்பனை செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. 4,500 கோடி ரூபாய் பாக்கிக்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய தொகையை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன.
நாட்டின் பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்திய கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
பல ஆயிரம் கோடி ரூபாய் கடனால் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இந்த நிறுவத்திற்கு மத்திய அரசு நிதி உதவி செய்துள்ளது. இருப்பினும் விமான எரிபொருள் வாங்கியதற்கான தொகையை கூட திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் உள்ளது.

தமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்

கோவை ரெயில் நிலையத்தில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்தமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்மாலைமலர் : தமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சரவணம்பட்டி சோதனை சாவடி
கோவை: கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கொடுங்கலூர் மாடவானாவை சேர்ந்தவர் ரகீம் கொலியல்(வயது 40). இவர் வளைகுடா நாட்டில் சூப்பர்வைசராக வேலைபார்த்து வந்தார். இவர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயங்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறி என்.ஐ.ஏ.வால் தேடும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தானை சேர்ந்த இலியாஸ் அன்வர் மற்றும் இலங்கையை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 6 பயங்கரவாதிகள் தமிழகத்துக்குள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை கருப்பாயி பாட்டி .. பொதுக்கழிப்பறையில் 19 வருடங்களாக வசித்து வருகிறார் ..

சமையல் மதுரை நகர் tamil.oneindia.com - hemavandhana.; பொது கழிப்பறையை வீடாக மாற்றி வசித்துவரும் கருப்பாயி-
மதுரை: கருப்பாயி பாட்டி பற்றி கேள்விப்பட்டீங்கன்னு வெச்சுக்குங்க.. டிஜிட்டல் இந்தியாவே பல்லிளித்துவிடும்! அந்த அவலத்துக்கு ஒரு நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கண்ணீர் பொது கழிப்பறை மோடி பதவிக்கு வந்த 2-வது வருஷம் ரொம்ப பெருமையாக அறிவித்த ஒரு திட்டம்தான் "எல்லோருக்கும் வீடு திட்டம்"என்ற திட்டம். ஆனால் இந்த திட்டம் மோடி 2-வது முறையாக பிரதமரான பிறகும் எல்லாருக்கும் போய் சேர்ந்ததா என்பது கோடி, கோடி கேள்வியே!
இப்படி வீடு இல்லாத ஏழைகள், நாடு முழுவதும் பரவி கிடக்கின்றனர்.. நம்ம மதுரையிலும் இந்த அவலம் உள்ளது. அதில் பாதிக்கப்பட்ட ஒரு பாட்டிதான் கருப்பாயி. 70 வயசு.
கருப்பாயி பாட்டிக்கு சொந்த ஊர் பனையூர் ரெட்டக்குளம்தான். கணவர் இறந்துவிட்டார்.. ஒரே ஒரு பெண்ணையும் கல்யாணம் செய்து தந்துவிட்டார். ஆனால் அந்த பெண் எங்கு இருக்கிறார் என்றே கருப்பாயிக்கு தெரியாதாம். பிழைப்புக்கு வழி இல்லாமல் மதுரை நகருக்கு வந்தார் பாட்டி.

ஜெய்ராம் ராமேஷுக்கு கே.எஸ்.அழகிரி : மோடியை துதிபாடி பிழைக்க நினைத்தால் காங்கிரஸிலிருந்து வெளியேறுங்கள்

tamilthehindu :சென்னை< ஜெய்ராம் ராமேஷ் போன்றவார்களின்
சந்தர்ப்பவாதமும், சுயநலமும் மோடிக்கு ஆதரவான கருத்துக்கள் மூலம் அம்பலமாகியுள்ளது என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.< இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில், பாஜக ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்குகளை பெறாமல் மதரீதியாக மக்களை திசை திருப்பி வாக்குகளை பெற்று ஆட்சி அமைத்தவர் நரேந்திர மோடி. ஆர்எஸ்எஸ் என்கிற நச்சு இயக்கத்தினால் இயக்கப்படுபவர் பிரதமராக பொறுப்பேற்றிருக்கிறார்.
1925 ஆம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்டது முதல் அதனுடைய சித்தாந்தத்தை எதிர்த்து கருத்து மோதலை காங்கிரஸ் கட்சி நடத்தி வருகிறது. பாஜகவின் சித்தாந்தமும், காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தமும் அடிப்படையில் முற்றிலும் வேறுபட்டவை. வேற்றுமையில் ஒற்றுமை காண்பது காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் மக்களை மதரீதியாக பிளவுபடுத்துவது பாஜகவின் சித்தாந்தம்.

BBC : தமிழ்நாடு இந்தியாவிலேயே குறைந்த மக்கள் தொகை வளர்ச்சியை நோக்கி செல்கிறது

ஷதாப் நாஸ்மி - விஷூவல் ஜெனலிசம் பிரிவு, பிபிசி : "இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது" என்று தனது சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்திருந்தார். ஆனால், தரவுகள் முற்றிலும் வேறுபட்ட பார்வையை வழங்குகின்றன. வருடாந்திர அடிப்படையில் பார்த்தோமானால், 1971ஆம் ஆண்டு முதலே இந்தியாவின் மக்கள்தொகை குறைந்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமின்றி, 2041ஆம் ஆண்டு வாக்கில் வருடாந்திர மக்கள் தொகை பெருக்கத்தில், இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் சராசரியைவிட அதிக குறைந்த நிலையை அடையும் வாய்ப்புள்ளது.
எனினும், தமிழ்நாட்டில் பிற மாநிலங்களில் இருந்து குடியேறுவோர் எண்ணிக்கை உயரும் பட்சத்தில் தமிழ்நாட்டில் மக்கள்தொகை குறையத் தொடங்கும் நிலை மாறலாம்
;மக்கள்தொகை கணிப்புகளை பொறுத்தவரை, இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி குறைந்துக்கொண்டே வரும் என்றும், குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், 2020-21ஆம் ஆண்டில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவும், 2031-41 வரையிலான காலக்கட்டத்தில் 0.5 சதவீதத்திற்கும் குறைவாகவே நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி இருக்குமென்றும் தெரிகிறது.

காஷ்மீர்: திருப்பி அனுப்பப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள்!


மின்னம்பலம் : காஷ்மீருக்கு. தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்யச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் மாநிலத்துக்குள் அனுமதிக்கப்படாமல்
திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கும், அம்மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதற்கும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அம்மாநில தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில் கடந்த 22ஆம் தேதி திமுக தலைமையில் 14 கட்சிகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்தநிலையில் எதிர்க்கட்சிகள் காஷ்மீருக்குச் சென்று ஆய்வு செய்யத் திட்டமிட்டிருந்தனர்.
அதன்படி இன்று (ஆகஸ்ட் 24) ராகுல் காந்தி தலைமையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, வேணுகோபால், திமுகவின் திருச்சி சிவா, திரிணமூல் காங்கிரசின் தினேஷ் திரிவேதி, தேசியவாத காங்கிரசின் மஜித் மேமன், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மனோஜ் ஜா, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குபேந்திர ரெட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, லோக் தந்திரி ஜனதா தளம் கட்சியின் சரத்யாதவ் உட்பட 12 பேர் UK 643 விமானத்தில் காஷ்மீர் சென்றனர். அங்கு தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து ஆய்வு செய்யவிருந்தனர். காஷ்மீர் தலைவர்களைச் சந்திக்க இருந்தனர்.

சென்னை 600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய என்ஜினீயர் கைது

maalaimalar.com : வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசி 600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த சென்னை என்ஜினீயரை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர். சென்னை: சென்னையில் உள்ள புகழ்பெற்ற சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ராஜ்செழியன் என்ற பிரதீப்.
இவரது மனைவியும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். பிரதீப் இரவு நேர பணிக்கு சென்று விட்டு காலையில்தான் வீடு திரும்புவார்.
ஆனால் பிரதீப்பின் மனைவி காலையில் பணிக்கு சென்று விட்டு மாலையில்தான் வீடு திரும்புவார். இதனால் பகலில் பெரும்பாலும் பிரதீப் வீட்டில் தனிமையில்தான் இருப்பார்.
அப்போது பொழுது போக்காக பெண்களின் தொலைபேசி எண்களை சேகரிக்க தொடங்கினார். தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றில் இருந்து அவர் இந்த தொலைபேசி எண்களை சேகரித்து வந்தார். அந்த தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பெண்களிடம் பேசி வந்தார்.
நாளடைவில் வேலை தேடிக்கொண்டிருக்கும் அழகான பெண்களை ஏமாற்றி அவர்களிடம் பணம் பறிக்க முடிவு செய்தார். அவரது இந்த திட்டத்துக்கு அவரது பெண் தோழிகளில் ஒருவரான அர்ச்சனா ஜெகதீஸ் என்பவர் உதவி செய்தார்.
முதலில் அர்ச்சனா வேலை தேடும் பெண்களிடம் போன் செய்து 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் முன் அறையில் அமர்ந்து பணிபுரிய அழகான பெண்கள் தேவைப்படுகிறது. லட்சக்கணக்கில் சம்பளம் கிடைக்கும். நீங்கள் அந்த வேலைக்கு வர விரும்புகிறீர்களா? என்று துண்டில் போடுவார்.

அருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ...பிரிந்தது

அருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்ததுமாலைமலர் : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று காலமானார்.
புது டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான கடந்த பா.ஜனதா ஆட்சியின் போது நிதி மந்திரியாக இருந்தவர் அருண்ஜெட்லி. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அருண்ஜெட்லி போட்டியிடவில்லை. கடந்த 9-ந்தேதி அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சுவாசப் பிரச்சனை மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட அவர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

பாஜகவுக்குச் சிரித்துக்கொண்டே செல்லும் சிறுத்தைகள்?

பாஜகவுக்குச் சிரித்துக்கொண்டே செல்லும் சிறுத்தைகள்? மின்னம்பலம:  கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் சோழவல்லியைச் சேர்ந்த ரங்கேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விசிகவில் இருந்து விலகி இருந்தவரை தூண்டில் போட்டு இழுத்த பாஜக, அவருக்கு இளைஞர் அணி மாநிலச் செயலாளர் பதவியையும் வழங்கியிருக்கிறது. கடவுள் மறுப்புக் கொள்கையில் தீவிரமாக இருந்த ரங்கேஷ், தற்போது ஆர்எஸ்எஸ்ஸில் தொடர்புகளை உருவாக்கிக்கொண்டு, பாஜகவுக்காகத் தீவிரமாக உறுப்பினர்களைச் சேர்த்து வருகிறார்.
விசிகவின் கோட்டை என்று அக்கட்சியினரால் அழைக்கப்படும் நெல்லிக்குப்பத்தில், ரங்கேஷ் தனது குழந்தைகளுக்குக் காதணி விழா ஏற்பாடு செய்து, அதற்காக பாஜக தலைவர் தமிழிசை மற்றும் முக்கிய பிரமுகர்களை அழைத்திருந்தார். அதன்படி, கடந்த 18ஆம் தேதி நடந்த காதணி விழாவில் தமிழிசை கலந்துகொண்டு குழந்தைகளை வாழ்த்தினார்.

இம்ரான் கான் : தென் இந்தியாவில் தீவிரவாதிகள் புகுந்ததாக செய்திகள் வருது.. பெரிய சதி

tamil.oneindia.com : . இஸ்லாமாபாத்: ஜம்மு-காஷ்மீருக்கு 370 வது சட்டப் பிரிவில் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்க இந்திய அரசு முடிவு செய்ததிலிருந்து, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பல மூவ்களை எடுத்து வைத்து வருகிறது. 
இப்போது இந்தியாதான், தீவிரவாதிகள் பெயரை சொல்லி, பாகிஸ்தானுக்கு எதிராக சூழ்ச்சி செய்வதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டிவிட்டரில் குமுறியுள்ளார். 
இம்ரான்கான் இன்று மதியம் வெளியிட்ட சில ட்வீட்டுகள், தற்போது இந்தியாவில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை எடுக்கப்படுவது தொடர்பானதாக உள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் தாக்குதல் எச்சரிக்கை வந்துள்ளதாக காவல்துறையும் உறுதி செய்துள்ளது. 
தென் மாநிலங்கள் இதுதொடர்பாக இம்ரான் கான் வெளியிட்ட ட்வீட்டில் கூறியுள்ளதாவது: ஆப்கானிஸ்தானில் இருந்து சில தீவிரவாதிகள், பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக காஷ்மீருக்குள் நுழைந்ததாகவும், மற்றவர்கள் இந்தியாவின் தெற்கு பிராந்தியங்களுக்குள் நுழைந்ததாகவும் இந்திய ஊடகங்கள் கூறுவதாக நாங்கள் கேள்விப்படுகிறோம். இந்த செய்திகள் இந்தியாவின் இன அழிப்பு மற்றும் இனப்படுகொலை திட்டத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பும் தந்திரம்.

கிரீன்லாந்து தேசத்தை வாங்க அமேரிக்கா முயற்சி ... நாடுகள் விற்பனை ?

 (தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)- soodram.com
காணிகளும் வீடுகளும் வாங்கி விற்கப்படுவது போல, நாடுகளும் வாங்கி விற்கப்படுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அவ்வாறு ஒரு நாட்டையோ, அதன் பகுதியையோ விலை பேசுவதும் விற்கச் சொல்லிக் கேட்பதும், அதற்காகத் தயாரித்திருக்கும் பேரமும் அபத்தமாகத் தெரியுமல்லவா? ஆனால், இன்றைய உலக அரங்கு, அபத்தமும் அவலமும் ஆபத்தும் கலந்த கலவையாய் இருக்கின்றது. இதை மெய்யாக்கும் கதை ஒன்றையே, நாம் இன்று பார்க்கவிருக்கிறோம்.
காணிகளையும் கட்டடங்களையும் வாங்கி விற்கும் வியாபாரி, தனது 19ஆம் நூற்றாண்டு நினைவுகளுடன் உலகின் பலம் பொருந்திய நாட்டின் ஜனாதிபதியாக இருந்தால், நிலைமை இவ்வாறுதான் இருக்கும் என்பதைச் சுட்டுகிறது இந்தக் கதை.
கடந்த வாரம், அமெரிக்காவிலிருந்து வெளியாகும் முக்கிய நாளிதழான ‘Wall Street Journal’ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்து நாட்டைக் கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார் என்ற அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டது.

அமேசன் காட்டுத்தீக்கு பிறேசில் அதிபர் பொல்சனாரூவா காரணம்?

ilangainet : பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் பற்றி எரிந்துக் கொண்டிருக்கின்றன. அதுவும் 'சர்வதேச நெருக்கடி' என்று விவாதிக்கப்படும் அளவுக்கு.பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் ஒரே சமயத்தில் ஆயிரம் இடங்களில் தீப்பற்றி எரிகிறது.முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அமேசான் மழைக் காடுகள் பலமுறை பற்றி எரிகிறது என எச்சரிக்கிறது பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
2018 தரவுகளோடு ஒப்பிடுகையில் இவ்வாண்டு இதுநாள் வரை மட்டும் அமேசான் மழைக் காடுகள் பற்றி எரியும் சம்பவம் 83 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை எச்சரிக்கிறது.பிரேசிலில் இந்த 8 மாதங்களில் மட்டும் 75,000 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி உள்ளன.குறிப்பாக பிரேசிலின் ரொரைமா, ஆக்ரி, ரோந்தோனியா மற்றும் அமசோனாஸ் ஆகிய பகுதிகள் இந்த காட்டுத் தீ சம்பவங்களால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன.

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

நேரடி நெல் விதைப்புக்கு ரூ.600 மானியம்: முதல்வர் உத்தரவு!

நேரடி நெல் விதைப்புக்கு ரூ.600 மானியம்: முதல்வர் உத்தரவு!மின்னம்பலம் : நேரடி நெல் விதைப்பு சாகுபடியினை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ.600 வீதம் உழவு மானியம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடியில் நடவு முறையே பாரம்பரியமாகக் கடைப்பிடித்து வருகின்றனர். அதற்கு அதிகமான நீர்த்தேவைப்படும் நிலையில், காவிரியிலிருந்து சமீப ஆண்டுகளாக தாமதமாகவே நீர் திறந்துவிடப்படுவதால் நெல் பயிரிடப்படுவதும் தாமதமாகிறது. மேலும், நடவுக்குத் தேவையான அதிக கூலி ஆட்கள் மற்றும் வயலை சமன்படுத்துவதற்கான அதிக சக்தி போன்றவை நடவு முறையில் பாதகமாக உள்ளன. இதனையடுத்து நடவு முறையிலிருந்து நேரடி நெல் விதைப்பு முறைக்கு மாறினால் விவசாயிகளுக்கு சாதகமாக இருக்கும் எனவும், தண்ணீரின் தேவையும் பெருமளவில் குறையும் என்று தமிழக அரசு தெரிவித்துவருகிறது. இதுதொடர்பாக விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.

எதிர்க்கட்சி தலைவர்கள் நாளை ஸ்ரீநகர் செல்கின்றனர் ... ராகுல் காந்தி உள்ளிட்ட


மாலைமலர் :  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஸ்ரீநகருக்கு நாளை செல்கின்றனர் என தகவல் வெளியானது. ஸ்ரீநகர்: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கும், அம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதற்கும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதற்கிடையே, இந்த நடவடிக்கைக்கு பிறகு காஷ்மீரின் தற்போதைய நிலவரத்தை நேரில் பார்த்து அறிவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீருக்கு சென்றனர். அப்போது, அவர்களை மேற்கொண்டு செல்ல விடாமல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
விமான நிலையத்தை விட்டு வெளியே போகக்கூடாது என்று தடை விதித்து டெல்லிக்கு திருப்பி அனுப்பினர். இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஸ்ரீநகருக்கு நாளை செல்கின்றனர் என தகவல் வெளியானது.

பழைய வாகனத்தை எக்ஸ்சேஞ்ச் செய்யுங்கள்.. புதிய வாகனம் வாங்குங்கள்... நாட்டுக்காக ... நிர்மலா சீதாராமன் கோரிக்கை!

எவ்வளவு பதிவுகட்டணம் என்ன பேட்டி /tamil.oneindia.com/authors/shyamsundar : வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு-வீடியோ டெல்லி: மக்கள் பழைய வாகனங்களை ஒப்படைத்துவிட்டு (Exchange) புதிய வாகனங்களை வாங்க வேண்டும், அப்போதுதான் ஆட்டோமொபைல் சரிவு வேகமாக சரியாகும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
என்ன மாற்றம் இந்தியா பொருளாதாரம் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது. அதிலும் இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான சரிவை சந்தித்துள்ளது.
இந்த பொருளாதார சரிவு இப்போதே ஆட்டோமொபைல் துறையில் எதிரொலித்துள்ளது. இதனால் ஆட்டோமொபைல் துறையில் பலர் வேலையை இழந்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று ஆட்டோமொபைல் துறைக்கான சீர்திருத்தங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவலா? உச்சபட்ச பாதுகாப்புப் பணியில் காவல்துறை

security_tnதினமணி : கோவை: தமிழகத்துக்குள் நாசவேலைகளைச் செய்ய 6 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாகக் கிடைத்தத் தகவலை அடுத்து கோவையில் உச்சபட்ச பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 13 முக்கிய மாவட்டங்களிலும் பாதுகாப்புப் படையினர் முக்கிய சோதனை மையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இலங்கையில் இருந்து 6 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் தமிழகத்துக்குள் ஊடுருவி இருப்பதாக காவல்துறைக்கு நேற்று இரவு கிடைத்தத் தகவலின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த 6 பேர் கொண்ட பயங்கரவாதக் குழுவில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும், மற்ற 5 பேரும் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் என்றும், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதியின் பெயர் இல்யாஸ் அன்வர் என்பதும் அந்த எச்சரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்பாத்திக்கு தொட்டுக்க உப்பா? உத்தரப்பிரதேச மதிய உணவில் சிறார்களுக்குக் கிடைக்கும் ஊட்டச்சத்து!

Mirzapur: Students at a primary school in Hinauta seen eating 'roti' with salt in mid-day meal. District Magistrate Anurag Patel says, "negligence happened at teacher & supervisor's level. The teacher has been suspended. A response has been sought from supervisor
midday_mealதினமணி : சிறார்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு கொடுக்க வேண்டும் என்று நாடு முழுவதும் அறிமுகப் படுத்தப்பட்டதுதான் மதிய உணவு திட்டம்.
ஆனால், இப்போது சில மாநிலங்களில் கொடுக்கப்படும் மதிய உணவு, அறிமுகப் படுத்தப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றுகிறதா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்லத்தோன்றும்.
அதாவது, உத்தரப்பிரதேசத்தில் மிர்ஸாபூர் மாவட்டத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளி ஒன்றில், சிறுவர், சிறுமிகளுக்கு தினமும் தலா ஒரு சப்பாத்தியும், அதற்கு தொட்டுக் கொள்ள உப்பும் கொடுக்கப்பட்டுள்ள செய்தி ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
பள்ளி வளாகத்தில் அமர்ந்து ரொட்டியை உப்பில் தொட்டுக் கொண்டு சிறார்கள் சாப்பிடும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

புதிய பொருளாதார சீர்திருத்தம் . நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ....

Nirmala Seetharamanvikatan.com -மலையரசு : உலக அளவிலான வர்த்தகம் தேக்கநிலையை அடைவது புதிது அல்ல. இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளன. அமெரிக்கா, ஜெர்மனி என வளர்ந்த நாடுகள்கூட பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளன. இந்தியாவில் பொருளாதார தேக்கநிலை உருவாகியுள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் மற்றும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ஷமிகா ரவி ஆகியோர், எதிர்க்கட்சிகள் சொல்வதை ஆமோதித்தனர். இருவரும் இந்தியாவில் பொருளாதார தேக்கநிலையில் உருவாகியுள்ளது என்பதை ஒப்புக்கொண்ட நிலையில், இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
நாட்டின் பொருளாதார சூழ்நிலை தொடர்பாக அவர் பேசினார். அதில், `சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமாகவே உள்ளது. உலக அளவிலான வர்த்தகம் தேக்கநிலையை அடைவது புதிது ஒன்றும் அல்ல. இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளன. அமெரிக்கா, ஜெர்மனி என வளர்ந்த நாடுகள்கூட பொருளாதார பின்னடைவைச் சந்தித்துள்ளன.

கனிமொழிக்கு புதிய பதவி; உதயநிதி தீவிர ஆலோசனை!

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழிக்கு புதிய பதவி; உதயநிதி தீவிர ஆலோசனை!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“தேசிய அளவில் அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், திமுகவில் உட்கட்சி ரீதியில் அதிரடி மாற்றங்களை செய்ய ஒரு ஆயத்தம் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கான ஆலோசனைகள், விவாதங்கள் வழக்கம்போல ‘இளைஞரணி’ வட்டாரத்தில் கன ஜோராக நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஆலோசனையால் மாவட்டச் செயலாளர்கள் வட்டாரம் மறுபடியும் சூடாகியிருக்கிறது.
அதாவது உதயநிதி வட்டாரத்தில் முக்கிய நபராக கருதப்படும் அன்பில் மகேஷ் இது தொடர்பாக உதயநிதியிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அந்த ஆலோசனையில் இளைஞரணி நிர்வாகிகள் சிலரும் கூட இருந்திருகின்றனர். பேசப்பட்டது என்னவென்றால், ‘சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கிட்டே இருக்கு. வேட்பாளர் யார் என்னன்னு நாம இப்ப தனியா ஒரு செலக்‌ஷன் நடத்திக்கிட்டிருந்தாலும் மாவட்டச் செயலாளர்களும், இப்பவே பட்டியல் தயாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதாவது அவங்கவங்க மாவட்டத்துல அவங்களுக்கு யார் தோதா இருப்பாங்கனு கேட்டு ஒரு பட்டியல் ரெடி பண்ணிக்கிட்டிருக்காங்க. இதுல முக்கியமான விஷயம், மாவட்டச் செயலாளர்கள் ரெடி பண்ற பட்டியல்ல இளைஞரணி அமைப்பாளர்களோ, நிர்வாகிகளோ இல்லை. ஏன்னா இப்ப மாவட்டச் செயலாளர்லாம் இளைஞரணி ஏதோ அவங்களுக்கு போட்டி அமைப்பு போல நினைச்சிக்கிட்டிருக்காங்க.

BBC ; ப.சிதம்பரத்தை 26 வரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை .. அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில்

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் வரும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) வரை ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது. இதனிடையே சிபிஐ வழக்கில் வழங்கப்பட்ட டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ப. சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை திங்கட்கிழமைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக,புதன்கிழமை இரவு ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை வரும் ஆகஸ்ட் 26 வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், வியாழக்கிழமை அனுமதியளித்தது. இன்று நீதிமன்றத்தில் என்ன நடந்தது?<""> சிதம்பரம் சார்பாக கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.

ப.சிதம்பரம் கைது.. சாலை மறியல் போலீசாருடன் தள்ளுமுள்ளு; காங்கிரஸ் கட்சியினர் கைது: எம்பி எம் எல் ஏக்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை ..

 தினகரன :  ப.சிதம்பரம் கைது கண்டித்து சாலை மறியல் போலீசாருடன் தள்ளுமுள்ளு; காங்கிரஸ் கட்சியினர் கைது: சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு< சென்னை: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து, சென்னை சத்தியமூர்த்தி பவன் முன்பு சாலைமறியல் செய்த 100க்கும் மேற்பட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர். அப்போது, காங்கிரசாருக்கும், போலீஸ்காரர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக பாஜ அரசு அவரை கைது செய்திருப்பதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, ப.சிதம்பரம் கைது கண்டித்து பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

வெள்ளத்தில் மூழ்கும் இந்தியா.. அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்.

chennai-floodதினமணி -C.P.சரவணன், வழக்குரைஞர் :  கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத், ஹிமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட இந்திய மாநிலங்கள் கடும் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், இனி வரும் காலங்களில் இதை விட பெரிய வெள்ளங்கள் இந்தியாவை தாக்கும் சூழல் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய வானிலை மாற்றங்கள் குறித்தான ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை காந்திநகர், ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி மாறிவரும் வானிலை மாற்றங்களால் இந்தியாவில் இனி அடிக்கடி மழை வெள்ள நிகழ்வுகள் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலை கண்டறிந்துள்ளனர். இப்படியே சென்றால் இன்னும் சில ஆண்டுகளில் நாட்டின் பெரும்பான்மை பகுதி மழை நாட்களில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பூமி வெப்பமடைவதையும், அதிக அளவிலான கார்பன் வெளியேற்றத்தையும் குறைத்தால் மட்டுமே அடுத்தடுத்த ஆண்டுகளில், வரவிருக்கும் மழை வெள்ளங்களை தடுக்க முடியும் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆண்டுக்கு 1.5 டிகிரிக்குள் வெப்பப்படுதலை கட்டுப்படுத்தாவிட்டால் மாபெரும் அழிவை இந்தியா சந்திக்க நேரிடலாம் எனவும் எச்சரித்துள்ளனர்.

காஷ்மீரில் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள்?

காஷ்மீரில் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள்?மின்னம்பலம் : கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பதற்றத்திலும் பாதுகாப்பு முற்றுகையிலும் இருக்கும் காஷ்மீருக்குள் ஆப்கானிஸ்தான் மற்றும் பஸ்துன் இன தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஊடுருவ விட்டிருப்பதாக உளவுத்துறை தகவல்கள் மத்திய அரசை எச்சரித்துள்ளன.
காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்த முடிவை சர்வதேச மயமாக்க பாகிஸ்தான் தொடர்ந்து முயன்று அதில் தோல்வி கண்டுள்ள நிலையில் கடைசி கட்டமாக எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக இந்த முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டிருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முயற்சியில் ஜெய்ஷி இ முகமது பயங்கரவாத இயக்கமும் ஈடுபட்டிருப்பதாகவும், இந்திய பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் நூறு பயங்கரவாதிகள் எல்லையில் தயார் நிலையில் இருப்பதாகவும் இதனால் பெரிய அளவிலான தாக்குதல்கள் நடக்கவும் வாய்ப்பிருப்பதாக அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

காஷ்மீர் பிரச்னையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்த்து கொள்ளவேண்டும் பிரெஞ்சு அதிபர் மக்கெயின்

காஷ்மீர் விவகாரத்தில் 3-வது நாடு தலையிடக்கூடாது: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்தினத்தந்தி : காஷ்மீர் விவகாரத்தில் 3-வது நாடு தலையிடக்கூடாது: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பாரீஸ். பிரதமர் மோடி, 2 நாள்கள் சுற்றுப்பயணமாக  பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு  நேற்று புறப்பட்டுச் சென்றார். சிறப்பு விமானம் மூலம் பாரீஸ் போய் சேர்ந்த பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
சாட்யூ டு சாண்ட்லி நகரில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது.  இரு தலைவர்களின் பேச்சு வார்த்தைக்கு பிறகு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தைக்கு கூட்டாக பத்திரிகையாளர்களை இரு தலைவர்களும் சந்தித்தனர். அப்போது, "காஷ்மீரில் அண்மையில் எடுக்கப்பட்ட   முடிவு பற்றி  பிரதமர் மோடி என்னிடம் விளக்கினார். காஷ்மீரில் எடுக்கப்பட்ட முடிவு இந்தியாவின் இறையாண்மையை காக்க எடுக்கப்பட்டதாகும்.
காஷ்மீர் பிரச்சினையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். 3-வது நாடு இந்த பிரச்சினையில் தலையிடக்கூடாது.

BBC.. பாஜகவுக்கு எதிராக தி.மு.க தலைமையில் டெல்லியில் திரண்ட எம்.பிக்கள் Ten Oppn parties attend DMK's J&K protest


Senior Congress leader Ghulam Nabi Azad, CPI(M) General Secretary Sitaram Yechury, Polit Bureau member Brinda Karat, CPI leader D Raja, RJD MP Manoj Jha and others during opposition parties protest, demanding the release of leaders detained in J&K, a...

deccanherald.com : updated: Aug 23 2019, 01:28am ist Senior Congress leader Ghulam Nabi Azad, CPI(M) General Secretary Sitaram Yechury, Polit Bureau member Brinda Karat, CPI leader D Raja, RJD MP Manoj Jha and others during opposition parties p...

Ten Opposition parties on Thursday joined the DMK protest in the national capital demanding immediate release of politicians detained in Jammu and Kashmir for the last three weeks, amid leaders mulling the option of extending such protests to state c...

BBC : காஷ்மீர் ..: திமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சித்தலைவர்கள்


காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட நிலையில், அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து திமுக சார்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஜந்தர் மந்தரில் நடைபெறும் இந்த போராட்டத்தில் 14 கட்சிகள் பங்கேற்கின்றன.
திமுக எம்பிக்கள் டி.ஆர் பாலு, திருச்சி சிவா, தயாநதி மாறன், வில்சன், சு.வெங்கடேசன் உள்ள பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், வசந்த குமார், கே.எஸ் அழகிரி உள்ளிட்ட பலரும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக கலந்து கொண்டனர். காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரமும் இதில் சிறிது நேரம் வந்து சென்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, பிருந்தா காரத் ஆகியோரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜாவும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ப.சிதம்பரம் கைது - 'அரசியல் பழிசவாங்கும் நடவடிக்கை' "சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து சிதம்பரத்தை கைது செய்ததை நானும் பார்த்தேன். இது அவமானகரமானது.

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

ப.சிதம்பரம் கைதுக்கு காரணமான இந்திராணி முகர்ஜி யார்? ... தன் மகளையே கொன்றவர் ...

indrani peterindirani mukherjeenakkheeran.in - ஆதனூர் சோழன் : ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் முறைகேடுகளில் தொடர்பு இருப்பதாகக் கூறித்தான் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்திய தொலைக்காட்சிகளில் புகழ்பெற்றவரான பீட்டர் முகர்ஜியும் அவருடைய இரண்டாவது மனைவியான இந்திராணி முகர்ஜியும் இணைந்து உருவாக்கியதே ஐஎன்எக்ஸ் மீடியா. இந்த மீடியா தனது பங்குகளை விற்பதற்கும், சட்டவிரோதமாக 305 கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு நிதியை பெறுவதற்கும் ப.சிதம்பரம் உதவியதாகத்தான் சிபிஐ மூலம் பாஜக அரசு குற்றம்சாட்டுகிறது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி 2018 ஜூன் மாதம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனுத்தாக்கல் செய்கிறார். அந்த மனு மீதான விசாரணை 2019 ஜனவரி 25 ஆம் தேதி முடிகிறது. ஆனால், தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதி கவுர் அறிவிக்கிறார். இதற்கிடையே பாஜக பெரும்பான்மை பலத்துடன் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. 2019 ஜூலை மாதம் ஐஎன்எக்ஸ் மீடியாவின் உரிமையாளர்களில் ஒருவரான இந்திராணி முகர்ஜி இந்த வழக்கில் அப்ரூவராக அதாவது அரசுத்தரப்பு சாட்சியாக மாற ஒப்புதல் அளிக்கிறார். அவர் இப்போது எங்கிருக்கிறார் தெரியுமா? மகளை கொலை செய்த வழக்கில் கணவர் பீட்டர் முகர்ஜியுடன் சிறையில் இருக்கிறார் என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும்.
இப்படிப்பட்ட ஒருவர் அரசுத்தரப்பு சாட்சியாக மாற ஒப்புக்கொண்டவுடன், ஆகஸ்ட் 20 ஆம் தேதி ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கிறார் கவுர். அதாவது, ஒரு முன் ஜாமீன் வழக்கில் சுமார் ஒரு ஆண்டு கழித்து தீர்ப்பு வெளிவருகிறது.

பார்ப்பனர்களின் பொற்காலம்! அரசியல் சட்டம் புனிதம்! நீதித்துறை புனிதம்! கோயில்கள் புனிதம் ..அதாவது பார்ப்பனர்கள்தான் புனிதம்....

Kandasamy Mariyappan : பார்ப்பணர்களுக்கு மீண்டும் கிடைத்தது
//குப்த பேரரசு//:
1912 முதல் தமிழ்நாட்டு அரசியலை அறிந்த பலருக்கு, ஃபாசிசம் எவ்வளவு காலமாக, எத்தனை சூழ்ச்சிகளோடு வேலை பார்த்துள்ளது என்பது புரியும்.
1. 1954 வரையில் அரசியல், அரசாங்கம், நீதிமன்றம், ஊடகம் அனைத்தும் புனிதம்.
காரணம் முதலமைச்சர் முதல், எல்லா இடங்களிலும் பார்ப்பணர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது.
2. 1954 - 67 வரையில் அரசியல் சுமார். காரணம் திரு. காமராஜர் மூலம் பார்ப்பணீயத்துடன் பெரியாரியம் கலந்து விட்டது. RSS, திரு காமராஜரை கொல்லவும் துணிந்தது.
ஆனால் அரசாங்கம், நீதிமன்றம், ஊடகம் புனிதமாக இருந்தது.
காரணம் அவை முழுவதும் பார்ப்பணர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது.
3. 1969 - 90 வரையில் அரசியல் ஒரு ஊழல் நாற்றமடித்த சாக்கடை. காரணம் அண்ணா, கலைஞர் போன்ற சாமாணியர்கள் அதிகாரத்திற்கு வந்து விட்டனர். அரசாங்கம் சுமார். காரணம் பார்ப்பணர்கள் மற்றும் தங்களை பார்ப்பணர்களாக கருதிக் கொண்ட பிள்ளைகள், முதலியார்கள், செட்டியார்கள் போன்றவர்கள் அதிகாரிகளாக இருந்தாலும் சமூகநீதி கோட்பாட்டின் மூலம் பறையரும் புழையரும் படித்துவிட்டு அதிகாரிகளாக வந்து விட்டனர்.
நீதிமன்றம், ஊடகங்கள் புனிதம். காரணம் அங்கே தங்களை பார்ப்பணர்களாக கருதிக் கொண்ட பிள்ளைகள், முதலியார்கள், செட்டியார்களை உள்ளடக்கிய பார்ப்பணீயம் ஆட்சி செய்தது.
4. 1990 க்குப் பிறகு எல்லாமே கெட்டுவிட்டது. காரணம் சமூகநீதி எல்லோரையும் எல்லா இடங்களிலும் அனுமதித்து விட்டது.
எனவே எந்த காமராஜரை கொல்லத் திட்டம் தீட்டினார்களோ அந்த காமராஜரை, திராவிட கட்சிகளுக்கு, குறிப்பாக கலைஞருக்கு, எதிராக உயர்த்தி பிடித்தது பார்ப்பணீயம். காரணம் கலைஞரை ஊழல் குற்றவாளியாகவும், ஒழுக்கமற்றவராகவும் மக்கள் மனதில் பதியவைக்க வேண்டும். என்பதற்காக.

சந்திரயான் 2 விண்கலம் எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு

சந்திரயான் 2 விண்கலம் எடுத்த நிலவின் முதல் புகைப்படம் வெளியீடு மாலைமலர் :  சந்திரயான் 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படத்தை இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது.

சந்திரயான் எடுத்த நிலவின் மேற்பரப்பு புகைப்படம்
 பெங்களூரு: நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் கடந்த மாதம் 22-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான் 2 விண்கலம், கடந்த புதன்கிழமை பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்கோட்டில் பயணிக்கத் தொடங்கியது.ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளை கொண்ட இந்த விண்கலம்,  ஆகஸ்ட் 20-ல் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வருகிறது.

உ.பி.யில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பரிதாப பலி

உயிரிழந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற காட்சிஉ.பி.யில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பரிதாப பலி  மாலைமலர் : உத்தர பிரதேச மாநிலத்தில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். உத்திர பிரதேசம் மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்துக்கு உள்பட்ட நன்ட்கிராம் என்ற பகுதியில் உள்ள கழிவு நீர் தொட்டியை துப்புரவு தொழிலாளர்கள் 5 பேர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது தொழிலாளர்கள் அனைவருக்கும் போதுமான பிராண வாயு கிடைக்காமால் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் 5 பேரும் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்த நபர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இம்ரான் கான் : இனி இந்தியாவுடன் பேசுவதில் அர்த்தமில்லை:

மின்னம்பலம் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா மீதான தனது விமர்சனத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370ஆவது சட்டப் பிரிவு நீக்கம் மற்றும் காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் தனது எதிர்ப்பை கடுமையாக தெரிவித்து வருகின்றது. கடந்த சில நாட்களாக இவ்விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்ய தான் வருதாக கூறியுள்ள நிலையில், இந்தியா அதற்கு மறுத்து வருகின்றது. அதே சமயம், பாகிஸ்தான் அமெரிக்காவின் தலையீட்டிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றது.
செவ்வாய்கிழமையன்று(ஆகஸ்ட் 20) வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டொனால்ட் ட்ரம்ப், இன்னும் சில நாட்களில் பிரான்ஸ் நாட்டில் நடக்கவுள்ள ஜி7 மாநாட்டில் காஷ்மீர் விவகாரம் குறித்து மோடியுடன் பேசவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சிதம்பரம் கைது .. நாக்பூரில் ஆர் எஸ் எஸ் தலைமையகத்தில் . எடுக்கப்பட்ட முடிவு .. சுப்பிரமணியன் சாமி ஆலோசனையாம்

டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்தைத் தப்பிக்க வைத்தவரும், சிக்க வைத்தவரும்!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. லொக்கேஷன் டெல்லி காட்டியது.
“முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று (ஆகஸ்டு 21) இரவில் கைது செய்யப்பட்டது தொடர்பாக பாஜகவுக்குள்ளேயே பல விதமான விவாதங்கள் நடந்து வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்து பாஜகவுக்கு கட்சிப் பணிக்காக அனுப்பப்பட்ட தமிழக பாஜக பொறுப்பாளர் ஒருவர் நேற்று இரவு தன் நண்பர்களிடம் இதுபற்றி விரிவாக பேசியிருக்கிறார்.
‘காங்கிரஸ்காரர்கள் அண்மைக் காலமாக தங்கள் கட்சிக்குள் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர்கள் ஊருடுவிவிட்டதாக வெளிப்படையாகவே பேசி வந்தார்கள். காஷ்மீர் விவகாரத்தில் பாஜக அரசு எடுத்த முடிவுக்கு சில காங்கிரஸ்காரர்கள் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்தனர். அவர்களைத்தான் காங்கிரஸுக்குள் இருக்கும் ஆர் எஸ் எஸ் காரர்கள் என்று காங்கிரஸுக்குள் அழைத்தனர்.

BBC : அமித் ஷா 2010-இல் கைது செய்யப்பட்டபோது நடந்தது என்ன?

தீமன் புரோஹித் -மூத்த பத்திரிகையாளர் - பிபிசி : குஜராத்திக்காக ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் முன்னாள் உள்துறை மற்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். முன்னதாக ப.சிதம்பரத்தை கைது செய்வதில் இருந்து இடைக்கால விலக்கு அளிக்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க மறுத்தது. அதை தொடர்ந்து, ஆகஸ்டு 21ஆம் தேதி, இரவு 9 மணிக்கு சிதம்பரம்
சதாசிவம் திருட்டு நீதிபதி
செய்தியாளர்களை சந்தித்தார். அதற்கு முன்பு வரை, 27 மணி நேரங்களுக்கு அவர் எங்கு இருந்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை. >தன் அறிக்கையை படித்த அவர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. செய்தியாளர் சந்திப்பு குறித்து அறிந்த சிபிஐ அதிகாரிகள், காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு விரைந்த நேரத்தில், சிதம்பரம்
தன்னுடைய டெல்லி இல்லத்தை அடைந்தார். செய்தியாளர்கள் அவரின் வீட்டில் வாசலில் இருந்த நிலையில், ப.சிதம்பரம் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். இதுவரை பார்த்திராத ஒரு நாடகத்தை தலைநகரம் அன்று பார்த்தது. அத்தனை பிரச்னைகளுக்கு நடுவே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவரின் கைது குறித்த காட்சிகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

சுடுகாட்டிற்கு செல்ல வழி மறுக்கப்பட்ட சம்பவம்: சில உண்மைகள் .. மறுத்தவரும் தலித்தான் .. ஏன் மறுத்தார் சில ...


LR Jagadheesan : This is a classic case of manufacturing outrage. The landowner who was accused of heartless casteist (who denied pathway for a Dalit dead body) is also a Dalit. Yes. DALIT LAND OWNER REFUSED PATHWAY TO A DALIT DEAD BODY THROUGH HIS FIELD. Here are the details. 
மின்னம்பலம் :சுடுகாட்டிற்கு செல்ல வழி மறுக்கப்பட்ட சம்பவம்: சில உண்மைகள் !
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் இறந்தவரின் சடலம் பாலத்தில் இருந்து கயிற்றைக்கட்டி இறக்கப்பட்ட சம்பவம் குறித்த சில உண்மைத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன். கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் விபத்து ஒன்றில் அவர் அகால மரணமடைந்தார். ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த அவரது உடலை எரிப்பதற்காக எடுத்துச் சென்றபோது, பிற சாதியினர் அனுமதி மறுத்ததாகவும் அதனால் வேறு வழியின்றி 20 அடி பாலத்தின் மேல் இருந்து அவரது உடலை கயிற்றில் கட்டி கீழே இறக்கியதாகவும் வீடியோகாட்சிகளுடன் பல ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி இருந்தது.
ஒருவர் மரணமடைந்த பின்னர் அவரது உடலை சுடுகாடு எடுத்துச் செல்ல அனுமதி மறுப்பதும், கயிற்றைக் கட்டி உடல் கீழே இறக்கும்படி செய்யப்படுவதும் மனிதம் மறைந்த கொடுஞ்செயல்களாகவே இருந்தாலும், இதற்கு சாதி தான் காரணம் என்று ஊடகங்கள் கூறி வரும்நிலையில் அது பெரும் கலவரத்திற்கு காரணமாக மாறிவிட வாய்ப்புள்ளது. இன்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பல தீண்டாமைக் கொடுமைகளும், ஆணவக் கொலைகளும் நடந்து வந்தாலும் நாராயணபுரத்தில் நடந்த இந்த சம்பவம் சாதி வேற்றுமையைக் காரணம் காட்டி நடந்தேறியது அல்ல என்கிறார், வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.சண்முக சுந்தரம்.

ப.சிதம்பரத்திற்கு 4 நாட்கள் சி பி ஐ காவல் .... 26 ஆம் தேதி வரை சி பி ஐ காவலில் இருப்பார் பிந்திய செய்தி

நக்கீரன் : ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி! பா. சந்தோஷ் 2007- ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் அடிப்படையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் நேற்றிரவு அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டு சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது ப.சிதம்பரத்திடம் 12 கேள்விகளை சிபிஐ எழுப்பியதாகவும், அந்த கேள்விகளில் 6- க்கு மட்டும் ப.சிதம்பரம் பதிலளித்ததாக சிபிஐ தெரிவித்துள்ளது. இதனையடுத்து டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று மதியம் 03.00 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டார்

திமுக தலைமையில் 13 கட்சிகள்.. டெல்லியில் களமிறங்கி போராட்டம்.. அதிரும் தலைநகர்

Shyamsundar/tamil.oneindia.com  :  திமுக பின் திரண்ட 13 கட்சிகள்.. காஷ்மீருக்காக டெல்லியில் போராட்டம்- வீடியோ டெல்லி: காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் தற்போது ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடந்து வருகிறது.. 
யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரிக்கவும் அதன் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யவும் கடந்த இரண்டு வாரம் முன் மத்திய அரசு முடிவு செய்தது. 
இதற்கான மசோதாவை இரண்டு அவையிலும் மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால் இதுவரை காஷ்மீர் விவகாரத்தில் எந்த கட்சியும் துணிந்து போராட்டத்தில் இறங்கவில்லை.
 திமுக அதை தற்போது கையில் எடுத்துள்ளது. அப்போதே எதிர்ப்பு அப்போதே எதிர்ப்பு தொடக்கத்தில் இருந்தே இந்த மசோதாவை இரண்டு அவையிலும் திமுகவும் திமுக கூட்டணி கட்சிகளும் மிக கடுமையாக எதிர்த்தது. திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக போன்ற கட்சிகளும் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தது. 
இப்போது போராட்டம் இப்போது போராட்டம் இதில் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் மிக உறுதியான நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர்.

பெங்களூரில் தமிழ் இசைக்கலைஞர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டம்!

Tamil musicians  Struggle IN PUDUCHERRY POST HEAD OFFICE  .nakkheeran.in - சுந்தர பாண்டியன் : பெங்களூரில் ஒரு கோயில் திருவிழாவில்  இன்னிசை கச்சேரி  நடைபெற்றது. அதில் தமிழ் ரசிகர்களின் விருப்பத்திற்காக  ஓரிரு தமிழ் பாடல்கள் பாடப்பட்டது. அதனால் ஆத்திரமடைந்து அங்கு வந்த கன்னட ரக்சன வேதிகை அமைப்பினர் இசைக்கலைஞர்களை தாக்கியதுடன் இசைக்கருவிகளை அடித்து உடைத்தனர். அதனால் இசை நிகழ்ச்சி பாதியிலேயே நின்றது. இந்நிலையில் இசைக்கலைஞர்களை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், உடைக்கப்பட்ட இசைக்கருவிகளுக்கு இழப்பீடு கோரியும் புதுச்சேரி அனைத்து மெல்லிசை கலைஞர்கள் சங்கங்கள் சார்பாக அஞ்சலகம் முன்பாக  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கர்நாடகா முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பும் நிகழ்ச்சியும் நடைபெற்றது

ஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்!!! பகுதி- 12

THODARGAL ATHANUR CHOZHAN BJP SCAM A TO Z PART 12THODARGAL ATHANUR CHOZHAN BJP SCAM A TO Z PART 12 nakkheeran.in - ஆதனூர் சோழன் : நூறுநாள் வேலைத் திட்ட நிதியை விழுங்கிய ஹரியானா பாஜக!- MGNREGA SCAM (HARYANA). ஹரியானா மாநிலத்தில் மகாத்மா காந்தி கிராமப்புற 100 நாள் வேலைத் திட்டத்தில் அம்பாலா மாவட்டத்தில் 2007 முதல் 2020 வரை 25 கோடி ரூபாய் ஊழல் செய்த நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை பாஜக அரசு காப்பாற்ற முயன்றது. இந்த ஊழல் அம்பலமாகி, ஏழைகளின் வயிற்றில் அடிக்க முயன்ற பாஜகவின் முகமூடி கிழிக்கப்பட்டது.

கும்பமேளா நடத்தியதிலும் கோடிக்கணக்கில் ஊழல்!- MAHA KUMBH MELA SCAM (UTTARAKHAND).



2010 ஆம் ஆண்டு கும்பமேளா நடத்துவதற்காக மத்திய அரசு 565 கோடி ரூபாயை ஒதுக்கியது. இந்த விழாவுக்காக அறிவிக்கப்பட்ட பல வேலைகள் முடிவுறாமல் அரைகுறையாக கைவிடப்பட்டு, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை பாஜக தலைவர்கள் விழுங்கி ஏப்பம் விட்டிருப்பது தெரியவந்தது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரமேஷ் சந்தர் சர்மா என்பவர் இந்த ஊழலை அம்பலப்படுத்தினார். 180 கோடி ரூபாய் மதிப்புள்ள 54 வேலைகள் இப்படி கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

திரு .சிதம்பரத்தை 14 நாள் காவலில் எடுக்க சிபிஐ முடிவு.. இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்

ஜாமீன் இல்ல tamil.oneindia.com - shyamsundar.: டெல்லி: நேற்று இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இன்று டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு யாருக்கும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகவும் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும்.
இது மும்பையை சேர்ந்த நிறுவனம். 2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்துள்ளது. இதில் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பர சிக்கி உள்ளார். இதில் கடந்த 14 மாதங்களாக இவரை கைது செய்ய டெல்லி கோர்ட் தடை விதித்தது இருந்தது. இந்த நிலையில் நேற்று முதல்நாள் டெல்லி ஹைகோர்ட் இவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்தது. அதன்பின் நேற்று உச்ச நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் அதை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

150 மருத்துவ மாணவர்களை மொட்டை அடித்து வணங்க வைத்த மூத்த மாணவர்கள் உத்தர பிரதேசம்


Muthu Selvan : உத்தரப் பிரதேசத்தில் சய்ஃபாய் ஏன்னுமிடத்தில் உள்ள மருத்துவப் பல்கலைக் கழகத்தில் 150 முதலாமாண்டு மொட்டையடிக்கப்பட்டு, வரிசையில் சென்று மூத்த வகுப்பு மாணவர்களை வணங்கச் செய்திருக்கும் கொடுமை நிகழ்ந்துள்ளது.
இந்தக் கொடு நிகழ்வைக் கண்டிக்காதது மட்டுமின்றி, இத்தகைய நிகழ்வு புது மாணாக்கர்க்கு ஓர் உந்தாற்தலாக அமையும் என்றும் நன்னடத்தைக்கு வழிவகுக்கும் என்றும் இது மாணாக்கர்களின் நிலையை உயர்த்தவே உதவும் என்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராச் குமார் கூறியுள்ளார். அவரைத் தூக்கி நிறுத்தும் முயற்சியில் பல்கலைக்கழக ஆளுமையும் இது ஒரு கேடான நடைமுறை அன்று என்றும், இது ஒரு நல்ல கரணமே (சடங்கு) என்றும் சான்றளித்து மகிழ்ந்துள்ளது (சிங் சப்).
இதனை உசாவுவதற்காக அமைக்கப்பட்ட இருவர் குழுவும் இதனை புது மாணாக்கர்களைப் பகடி செய்து வரவேற்கும் முறை (ragging) அல்ல என்றும் கூறியுள்ளது!

டொனால்ட் ட்ரம்ப் : மோடியை காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து வார இறுதியில் சந்திப்பேன்.. டிரம்ப் பரபரப்பு பேட்டி

பிரதமர் மோடியை வார இறுதியில் சந்திப்பேன்: காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் பரபரப்பு பேட்டி தினத்தந்தி :  காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்றும், பிரதமர் மோடியை வார இறுதியில் பிரான்சில் சந்திப்பேன் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.
 வாஷிங்டன், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த இந்திய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு அதிரடியாக ரத்து செய்து விட்டது. அத்துடன் அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து, தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது பாகிஸ்தானுக்கு பெருத்த அடியாக அமைந்து விட்டது. இதை சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முயற்சித்தாலும், இந்தியா இது உள்நாட்டு விவகாரம் என தெளிவுபடுத்தி விட்டது. உலக நாடுகளும் இதை புரிந்து கொண்டு விட்டன.

ஜெயலலிதா கைதும் சிதம்பரம் கைதும் ஒரு ஒப்பீடு .....

LR Jagadheesan : ”சிதம்பரம் கைது என்பது ஜெயலலிதாவை கருணாநிதி கைது செய்ததைப்போன்றது” என்று உளற ஆரம்பித்திருக்கும் அரசியல்
அரைவேக்காடுகளுக்கு ஒரு சின்ன நினைவூட்டல்.
ஜெயலலிதா கைது என்பது சென்னை உயர்நீதிமன்றத்தின் அன்றைய நீதிபதி சிவப்பாவின் பகிரங்க வற்புறுத்தலால் நடந்த செயல். அதுவும் தன் மீதான ஊழல் வழக்கு விசாரணைகளில் ஒத்துழைக்க மறுத்த ஜெயலலிதாவும் சசிகலாவும் இந்தியாவில் எங்குமே தங்களை கைதுசெய்யக்கூடாது என்று ஒட்டுமொத்தமாக தடைபிறப்பிக்கும்படி தலைக்கனத்தோடு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக, அவர்கள் மீதான குற்றப்புகார்கள் மற்றும் ஊழல் பட்டியலை பார்த்து அதிர்ந்துபோன நீதிபதி சிவப்பா இவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று நீதிமன்றத்திலேயே தமிழக அரசையும் தமிழக காவல்துறையையும் பகிரங்கமாக திட்டியபின் மறுநாள் பட்டப்பகலில் முறையாக முன் அறிவிப்பு கொடுத்து, ஜெயலலிதா காலை நேர பூஜை புனஸ்காரங்களை முடித்துவிட்டு தானாக வரும்வரை காத்திருந்து அவரை கைது செய்தது காவல்துறை. சிறைக்குள் சகல வசதிகளும் செய்யப்பட்டன.

டெல்லி திமுக போராட்டத்தில் 14 கட்சிகள்... அதிர்ச்சியில் பாஜக!

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம்ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, புரட்சிகர சோசலிஸ்ட், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளன.
dmk
நக்கீரன் : ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு 70 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த வாரம் நீக்கி நாடாளுமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டது. மேலும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் எனவும் தெரிவித்தது. காஷ்மீர் மாநிலம் தொடர்பான அனைத்து மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய நிலையில், இந்திய குடியரசுத்தலைவரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கினார்.
இந்த நிலையில் இதற்கு எதிர் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வந்தனர்.
மேலும் காஷ்மீரில் உள்ள அரசியல் தலைவர்களை வீட்டுக் காவலில் மத்தியஅரசு வைத்துள்ளதற்கு பெரும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு திமுக சார்பில் நாளை காலை 11.00 மணி அளவில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடக்கும் என திமுக தலைமை அறிவித்தது.

புதன், 21 ஆகஸ்ட், 2019

பாஜகவின் இலக்கு காஷ்மீரும் சிதம்பரமும் மட்டுமல்ல .. இந்திய ஜனநாயகத்தின் பெரும் வீழ்ச்சி ஆரம்பம்?

மென்மையான இலக்கை  தாக்குதல் என்பது ஒரு பேட்டை ரவுடிகளின் தந்திரமாகும் .தங்களை ஒரு  ரவுடியாக நிலை நிறுத்த அவர்கள் கையாளும் மிகப்பழமையான ஒரு தந்திரம் அது .
தமிழக அரசியலில் அது காலம் காலமாக நடைபெற்று வருவதுதான்.
ஈழப்பிரச்சனையிலும்  தமிழகத்தில் அதுதான் நடந்தது .
எம்ஜியாரை தாக்கி பேசினால் ஆபத்து எப்படியும் வந்தே தீரும். குறைந்த பட்சம் ஜஸ்டின் ஜேப்பியார் போன்ற தொண்டர்கள் வீடு தேடி வந்து குண்டு கட்டாக தூக்கி கொண்டு போய் ராமாவரத்தில் நிறுத்துவார்கள் ..  அங்கு புரட்சி தலைவரின் புரட்சி அரங்கேறும் .
ஜெயலலிதாவை கோபமூட்டினால்  நடுராத்திரி சிறைவாசம் .. ஏன் அசிட் அபிசேகம் கூட நடக்கலாம்.
இவர்களின் காலத்தில் கலைஞர் பற்றி எந்த நாயும் பேயும் நாக்கில் நரம்பு கொஞ்சம் கூட இல்லாமல் கடிச்சு குதறலாம் .. அவர் மனதிற்குள் நொந்து கொள்வார் .பின்பு ஆட்சிக்கு வரும் சந்தர்பங்களில் கூட எந்த பழிவாங்குதல் நடவடிக்கையும் எடுக்க மாட்டார் . அது மட்டுமல்ல உதவி கேட்டுவந்தால் முடிந்ததை செய்வார் . கேட்காமலும் செய்வார் .
எனவே கலைஞரை எவ்வளவு மூர்க்கமாக் தாக்கினாலும் அதனால் எந்த பாதிப்பும் வந்துவிடாது ..
இந்த எண்ணம்தான் கலைஞரை ஒரு மென்மையான இலக்காக அவர்கள் கருதியமைக்கு காரணம் .
தமிழர்களில் இந்த soft target மென்மையான இலக்கை கண்டதும் மூர்க்கமாக தாக்கும் பழக்கம் அதிகமாக உண்டு.
இது போலியாக தங்களை உயர்த்தி கொள்ளும் கயமை மனோ நிலையாகும்.  இந்த கயமை  வெறும் பேட்டை ரவுடிகளுக்கும் மட்டுமல்ல . படித்த பெரும் பெரும் பிரமுகர்களுக்கும் உண்டு..
கற்பனையான  2 ஜி  ஸ்பெக்ட்ரம் வழக்கின் போது முழுக்க முழுக்க  ஆ.ராசாவையும் கனிமொழியையும் திமுகவையும்  எவ்வளவு கேவலமாக தாக்கினார்கள்?
இதில் வேதனையான வேடிக்கை என்னவென்றால்  இது பற்றி முழுக்க தெரிந்த மன்மோகன் சிங் . சிதம்பரம் போன்றவர்கள் கூட நியாயத்தின் பக்கம் நிற்கவில்லை.

BBC : ப. சிதம்பரம் சிபிஐ காவலில் எடுக்கப்பட்டார்; வாயில் கதவை ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்


இந்தியாவின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்வதில் இருந்து இடைக்கால விலக்கு அளிக்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க இன்று மறுத்திருந்த நிலையில், அவர் இன்று, புதன்கிழமை இரவு, கைது செய்யப்பட்டுள்ளார். கைதுக்கு சற்றுமுன்புதான் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்திருந்தார்.
அவரது செய்தியாளர் சந்திப்புக்குப் பின் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்ததாக செய்திகள் வெளியாகின.
பின்னர் டெல்லியில் உள்ள சிதம்பரத்தின் இல்லத்திற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்களுடன், சிதம்பரத்தின் வீடு அமைந்துள்ள ஜோர் பாக் பகுதியில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த டெல்லி காவல் துறையினரும் வந்திருந்தனர்.
புதன்கிழமை இரவு சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிதம்பரம் நாளை, வியாழக்கிழமை டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

பா. சிதம்பரம் கைது வீடியோ .. வீட்டில் பத்திரிகையாளார் சந்திப்பில் ..P Chidambaram Being Arrested After CBI Team Manages To Enter His Home

நக்கீரன் :ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்தது சிபிஐ. கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் நாளை ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்ப்படுத்தவுள்ளனர்.

New Delhi: Former Union minister P Chidambaram's residence in posh South Delhi witnessed high drama as the senior leader - sought by investigative agencies for nearly 24 hours in connection with a corruption case -- appeared at the Congress headquarters this evening. As he reached home after addressing the media, teams of CBI and the Enforcement Directorate, though caught off guard, had converged outside. In their attempt to make their way inside the house, the CBI men were even seen scaling the boundary wall and running along the roof in full view of television cameras.
In his short address to the media at the party office, Mr Chidambaram pointed out that he has not been named an accused in the case. But he said he has faith in the law "even if it is applied by an unequal hand" by the investigative agencies.

பிக் பாஸ் தற்கொலை மிரட்டல்: மதுமிதா மீது விஜய் டிவி முறைப்பாடு !

தற்கொலை மிரட்டல்: மதுமிதா மீது விஜய் டிவி புகார்!மின்னம்பலம் : பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதாவின் செயல்பாடு கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக மதுமிதா, தனது கையை அறுத்துக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
“டாஸ்க்குக்குப் பின் நடைபெற்ற விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார். அவரின் இந்த செயல் பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து எறிவதாகும். எனவே, மதுமிதா பிக்பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார்” என்று நிகழ்ச்சி குழு தெரிவித்தது.
காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 50 நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து மதுமிதா அனுப்பிவைக்கப்பட்டார் இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 21) மதுமிதா மீது ஸ்டார் விஜய் டிவி-யின் சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஸ்டாலின் : ப.சிதம்பரம் ஒரு சட்ட வல்லுநர்; சட்ட ரீதியாக வழக்கை சந்திப்பார்: ஸ்டாலின்

hindutamil. :  ப.சிதம்பரம் தன் மீதான வழக்கை சட்ட ரீதியாக சந்திப்பார் என,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று (ஆக.21) மறுத்துவிட்டது.
ப.சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் தடுக்கும் வகையில் அமலாக்கப்பிரிவு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்க இயலாது, மனுவை தலைமை நீதிபதி அமர்வுக்கு அனுப்புவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துவிட்டார். இதனால் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் கிடைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. புதுடெல்லி, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து, உச்சநீதிமன்றத்தில்  ப.சிதம்பரம் தரப்பு இன்று காலை மேல்முறையீடு செய்தது. ஆனால், மனு பட்டியலிடப்படாததால், மனுவை இன்றைக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா,  தலைமை நீதிபதியை அணுகுமாறு  கூறினார். இதையடுத்து, அயோத்தி தொடர்பான வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி இடம் பெற்றிருந்ததால், அந்த வழக்கு விசாரணை முடிந்த பின், தலைமை நீதிபதியிடம் முறையிட ப.சிதம்பரம் தரப்பு  வழக்கறிஞர்கள் முடிவு செய்திருந்தனர்.

சட்டத்தில் இருந்து தப்பி ஓடி ஒளிய அவசியம் இல்லை - ப.சிதம்பரம் விளக்கம்

மாலைமலர் : நான் சட்டத்தில் இருந்து தப்பி ஓடி ஒளிய அவசியம் இல்லை என்று ப.சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறி உள்ளார்.
சட்டத்தில் இருந்து தப்பி ஓடி ஒளிய அவசியம் இல்லை - ப.சிதம்பரம் விளக்கம் ப சிதம்பரம் புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு முன் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. இதைதொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சுப்ரீம் கோர்ட் டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ப.சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து உள்ளார். இந்த மனுவில் ப.சிதம்பரம் கூறி இருப்பதாவது:- நான் சட்டத்தில் இருந்து தப்பி ஓடி ஒளிய அவசியம் இல்லை. முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் குறிப்பிடாத நிலையில் முன் ஜாமீன் மறுத்தது ஏன்? நான் விசாரணைக்காக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை முன்பு எந்த சூழ்நிலையிலும் ஆஜராகாமல் இருந்தது இல்லை. தப்பிச் செல்லவோ, சாட்சிகளை கலைக்க முயன்றதாகவோ என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. எம்.பி.யாக உள்ள என் மீது இதற்கு முன்பு எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இருந்ததும் இல்லை. இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்

ப.சிதம்பரம் விவகாரம்... ராகுல் காந்தி கடும் விமர்சனம்...

rahul gandhi
நக்கீரன் : கடந்த 2007- ம் ஆண்டு, ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க முடியாது என நேற்று டெல்லி நீதிமன்றம் அறிவித்தது. இது தொடர்பாக தற்போது சிதம்பரம் தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "பிரதமர் மோடியின் அரசு, அமலாக்கப்பிரிவு, சிபிஐ மற்றும் ஒருசில முதுகெலும்பில்லாத ஊடகங்களைப் பயன்படுத்தி ப.சிதம்பரத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கின்றது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் இந்த செயலை நான் கடுமையாக கண்டிக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.