வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

சப்பாத்திக்கு தொட்டுக்க உப்பா? உத்தரப்பிரதேச மதிய உணவில் சிறார்களுக்குக் கிடைக்கும் ஊட்டச்சத்து!

Mirzapur: Students at a primary school in Hinauta seen eating 'roti' with salt in mid-day meal. District Magistrate Anurag Patel says, "negligence happened at teacher & supervisor's level. The teacher has been suspended. A response has been sought from supervisor
midday_mealதினமணி : சிறார்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு கொடுக்க வேண்டும் என்று நாடு முழுவதும் அறிமுகப் படுத்தப்பட்டதுதான் மதிய உணவு திட்டம்.
ஆனால், இப்போது சில மாநிலங்களில் கொடுக்கப்படும் மதிய உணவு, அறிமுகப் படுத்தப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றுகிறதா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்லத்தோன்றும்.
அதாவது, உத்தரப்பிரதேசத்தில் மிர்ஸாபூர் மாவட்டத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளி ஒன்றில், சிறுவர், சிறுமிகளுக்கு தினமும் தலா ஒரு சப்பாத்தியும், அதற்கு தொட்டுக் கொள்ள உப்பும் கொடுக்கப்பட்டுள்ள செய்தி ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
பள்ளி வளாகத்தில் அமர்ந்து ரொட்டியை உப்பில் தொட்டுக் கொண்டு சிறார்கள் சாப்பிடும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
ஆனால் பள்ளி வளாகத்தில் இருக்கும் மதிய உணவுப்பட்டியலோ பருப்பு, சாதம், ரொட்டி, காய்கறிகள் என்று நீண்டிருக்கிறது. அதுமட்டுமா, வாரத்தில் சில நாட்கள் மட்டும் சிறார்களுக்கு பாலும், பழமும் வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது பற்றி, சிறார்களின் பெற்றோர் தங்களது அடையாளத்தை வெளியிட விரும்பாமல் கூறியிருக்கும் தகவல் என்னவென்றால், பெரும்பாலான நாட்களில் சிறார்களுக்கு ரொட்டியும் தொட்டுக் கொள்ள உப்பும், சில நாட்களில் சாதமும் அதற்கு தொட்டுக் கொள்ள உப்பும்தான் அளிக்கப்படுகிறது.
யாராவது முக்கியப் பிரமுகர்கள் வந்தால் மட்டுமே குழந்தைகளுக்கு பால் மற்றும் உரிய உணவு வழங்கப்படுகிறது என்கிறார்கள் செய்வதறியாது.
இது குறித்து மாவட்ட நீதிபதி அனுராக் பட்டேலிடம் முறையிட்டதில், இது உண்மை என்று தெரியவந்தால், விசாரணைக்கு உத்தரவிடப்படும். இதற்கு முதற்கட்டமாக ஆசிரியர்களும், மதிய உணவு நிர்வாகிகளுமே காரணமாக இருப்பார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இருவருமே பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் 1.5 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடி குழந்தைகள் பயனடைகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஆண்டுக்கு குறைந்தபட்சம் 200 நாட்களாவது மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட வேண்டும். மதிய உணவு என்பது பிள்ளைகளுக்கு தலா 450 கலோரிகள் நிறைந்த உணவாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம். அதில் 12 கிராம் அளவுக்கு புரோட்டீன் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
ஆனால், ஒரு சப்பாத்தி மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் உப்பில் இவ்வளவும் இருக்கிறதா என்பதை ஆராய்ச்சி செய்துதான் பார்க்க வேண்டும்<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக