.nakkheeran.in - சுந்தர பாண்டியன் :
பெங்களூரில்
ஒரு கோயில் திருவிழாவில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. அதில் தமிழ்
ரசிகர்களின் விருப்பத்திற்காக ஓரிரு தமிழ் பாடல்கள் பாடப்பட்டது. அதனால்
ஆத்திரமடைந்து அங்கு வந்த கன்னட ரக்சன வேதிகை அமைப்பினர் இசைக்கலைஞர்களை
தாக்கியதுடன் இசைக்கருவிகளை அடித்து உடைத்தனர். அதனால் இசை நிகழ்ச்சி
பாதியிலேயே நின்றது.
இந்நிலையில் இசைக்கலைஞர்களை தாக்கியவர்களை
கைது செய்ய வலியுறுத்தியும், உடைக்கப்பட்ட இசைக்கருவிகளுக்கு இழப்பீடு
கோரியும் புதுச்சேரி அனைத்து மெல்லிசை கலைஞர்கள் சங்கங்கள் சார்பாக
அஞ்சலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து
கர்நாடகா முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பும் நிகழ்ச்சியும் நடைபெற்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக