நக்கீரன் : கடந்த
2007- ம் ஆண்டு, ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா
என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி
அளித்ததில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம்
சாட்டியது.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்காததால்
சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க முடியாது என நேற்று டெல்லி நீதிமன்றம்
அறிவித்தது. இது தொடர்பாக தற்போது சிதம்பரம் தரப்பு உச்சநீதிமன்றத்தை
நாடியுள்ள நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து
தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "பிரதமர் மோடியின் அரசு, அமலாக்கப்பிரிவு,
சிபிஐ மற்றும் ஒருசில முதுகெலும்பில்லாத ஊடகங்களைப் பயன்படுத்தி
ப.சிதம்பரத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கின்றது. அதிகாரத்தை
துஷ்பிரயோகம் செய்யும் இந்த செயலை நான் கடுமையாக கண்டிக்கிறேன்" என
பதிவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக