nakkheeran.in - ஆதனூர் சோழன் :
நூறுநாள் வேலைத் திட்ட நிதியை விழுங்கிய ஹரியானா பாஜக!- MGNREGA SCAM (HARYANA).
ஹரியானா மாநிலத்தில் மகாத்மா காந்தி கிராமப்புற 100 நாள் வேலைத்
திட்டத்தில் அம்பாலா மாவட்டத்தில் 2007 முதல் 2020 வரை 25 கோடி ரூபாய் ஊழல்
செய்த நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை பாஜக அரசு காப்பாற்ற முயன்றது. இந்த ஊழல்
அம்பலமாகி, ஏழைகளின் வயிற்றில் அடிக்க முயன்ற பாஜகவின் முகமூடி
கிழிக்கப்பட்டது.
2010 ஆம் ஆண்டு கும்பமேளா நடத்துவதற்காக மத்திய அரசு 565 கோடி ரூபாயை ஒதுக்கியது. இந்த விழாவுக்காக அறிவிக்கப்பட்ட பல வேலைகள் முடிவுறாமல் அரைகுறையாக கைவிடப்பட்டு, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை பாஜக தலைவர்கள் விழுங்கி ஏப்பம் விட்டிருப்பது தெரியவந்தது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரமேஷ் சந்தர் சர்மா என்பவர் இந்த ஊழலை அம்பலப்படுத்தினார். 180 கோடி ரூபாய் மதிப்புள்ள 54 வேலைகள் இப்படி கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
தொழில் அதிபர் விஜய் மல்லையாவை சிபிஐ தீவிரமாக தேடிவந்த நிலையில் அவர் நாட்டை விட்டு தப்ப பாஜக அரசு உதவியது. மல்லையாவுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்து, நோட்டிஸும் அனுப்பப்பட்ட நிலையில் அவர் தப்பினார். சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அவர் கடன் செலுத்த வேண்டியிருப்பதால் பல்வேறு பொதுத்துறை வங்கிகள் மல்லையா நாட்டைவிட்டு செல்வதை தடுக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்திருந்தன.
மகாராஸ்டிரா மாநிலத்தில் தேசிய சுகாதார சேவையின் கீழ் மருந்து கொள்முதல் செய்து வினியோகிக்க ஏற்படுத்தப்பட்ட விதிமுறைகளை அந்த மாநில அரசு மீறியது. அவசர அவசரமாக 549 வகையான மருந்துகளை 297 கோடி ரூபாய் அளவுக்கு கொள்முதல் செய்தது. 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி கொள்முதல் செய்ததில் பெருமளவு ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
கும்பமேளா நடத்தியதிலும் கோடிக்கணக்கில் ஊழல்!- MAHA KUMBH MELA SCAM (UTTARAKHAND).
2010 ஆம் ஆண்டு கும்பமேளா நடத்துவதற்காக மத்திய அரசு 565 கோடி ரூபாயை ஒதுக்கியது. இந்த விழாவுக்காக அறிவிக்கப்பட்ட பல வேலைகள் முடிவுறாமல் அரைகுறையாக கைவிடப்பட்டு, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை பாஜக தலைவர்கள் விழுங்கி ஏப்பம் விட்டிருப்பது தெரியவந்தது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரமேஷ் சந்தர் சர்மா என்பவர் இந்த ஊழலை அம்பலப்படுத்தினார். 180 கோடி ரூபாய் மதிப்புள்ள 54 வேலைகள் இப்படி கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மோடி கேட் ஊழல்!- MODIGATE.
2010 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்
முடிந்தவுடன் அதன் சேர்மன் லலித் மோடியை பிசிசிஐ சஸ்பெண்ட் செய்தது. ஐபிஎல்
கிரிக்கெட்டில் ஏராளமாக முறைகேடு செய்ததாக அவர் மீது குற்றம்
சாட்டப்பட்டது. அவர் மீது அமலாக்கத்துறை விசாரணை தொடங்கவிருந்தது.
இதையடுத்து அவர் லண்டனுக்கு தப்பிச் சென்றார். 2010 ஆண்டு அவருடைய
பாஸ்போர்ட்டை அன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசு முடக்கியது. அதை
எதிர்த்து அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவருக்காக
பாஜக அமைச்சர் சுஷ்மா சுவராஜின் கணவரும் மகளும் வழக்காடினார்கள். 2011 ஆம்
ஆண்டு மற்றொரு பாஜக தலைவரான வசுந்தரா ரஜே லலித் மோடிக்கு ஆதரவாக, அவர்
பிரிட்டனுக்கு குடியேறுவதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டார்.
ராஜஸ்தான் சுரங்க ஊழல்!- MINING SCAM (RAJASTHAN).
சுரங்கங்களுக்கான நிலம் ஒதுக்கும்
ஒப்பந்தங்களில் ராஜஸ்தான் மாநில வசுந்தரா ரஜே அரசு கையெழுத்திட்டது. 2014
அக்டோபர் 30 ஆம் தேதி முதல் 2014 ஆம் ஆண்டு ஜனவரி 12 தேதிக்கு இடையில் 45
ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்த ஒப்பந்தங்கள் இருந்தன. கடைப்பிடிக்க
வேண்டிய ஏல விதிமுறைகளை மீறி இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சுமார் 22
ஆயிரத்து 86 ஹெக்டேர் நிலத்தில் 63 சுரங்கங்கள் தோண்டுவதற்கான
லெசென்சுகளும், குத்தகை உரிமங்களும் கையெழுத்திடப்பட்டதாக
குற்றம்சாட்டப்பட்டது.
மல்லையா தப்ப உதவி!- MALLYA ESCAPE.
தொழில் அதிபர் விஜய் மல்லையாவை சிபிஐ தீவிரமாக தேடிவந்த நிலையில் அவர் நாட்டை விட்டு தப்ப பாஜக அரசு உதவியது. மல்லையாவுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்து, நோட்டிஸும் அனுப்பப்பட்ட நிலையில் அவர் தப்பினார். சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அவர் கடன் செலுத்த வேண்டியிருப்பதால் பல்வேறு பொதுத்துறை வங்கிகள் மல்லையா நாட்டைவிட்டு செல்வதை தடுக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்திருந்தன.
மருந்து வாங்கியதிலும் ஊழல்!- MEDICINE PURCHASE SCAM (MAHARASHTRA).
மகாராஸ்டிரா மாநிலத்தில் தேசிய சுகாதார சேவையின் கீழ் மருந்து கொள்முதல் செய்து வினியோகிக்க ஏற்படுத்தப்பட்ட விதிமுறைகளை அந்த மாநில அரசு மீறியது. அவசர அவசரமாக 549 வகையான மருந்துகளை 297 கோடி ரூபாய் அளவுக்கு கொள்முதல் செய்தது. 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி கொள்முதல் செய்ததில் பெருமளவு ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக