வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

புதிய பொருளாதார சீர்திருத்தம் . நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ....

Nirmala Seetharamanvikatan.com -மலையரசு : உலக அளவிலான வர்த்தகம் தேக்கநிலையை அடைவது புதிது அல்ல. இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளன. அமெரிக்கா, ஜெர்மனி என வளர்ந்த நாடுகள்கூட பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ளன. இந்தியாவில் பொருளாதார தேக்கநிலை உருவாகியுள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் மற்றும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ஷமிகா ரவி ஆகியோர், எதிர்க்கட்சிகள் சொல்வதை ஆமோதித்தனர். இருவரும் இந்தியாவில் பொருளாதார தேக்கநிலையில் உருவாகியுள்ளது என்பதை ஒப்புக்கொண்ட நிலையில், இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
நாட்டின் பொருளாதார சூழ்நிலை தொடர்பாக அவர் பேசினார். அதில், `சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமாகவே உள்ளது. உலக அளவிலான வர்த்தகம் தேக்கநிலையை அடைவது புதிது ஒன்றும் அல்ல. இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளன. அமெரிக்கா, ஜெர்மனி என வளர்ந்த நாடுகள்கூட பொருளாதார பின்னடைவைச் சந்தித்துள்ளன.

சர்வதேசப் பொருளாதார ஜிடிபி 3.2% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. உலகிலேயே வேகமாக முன்னேறிவரும் நாடான இந்தியாவில், அமெரிக்கா, சீனா போன்ற பிற நாடுகளைவிட பொருளாதார சூழ்நிலை நன்றாகவே உள்ளது. சர்வதேச அளவில் ஒப்பிட்டால் இந்தியாவின் பொருளாதார நிலை சீராக உள்ளதுடன், தொடர்ந்து வேகமான வளர்ச்சியில் இருந்துவருகிறது. இதனால் பொருளாதார மந்தநிலையை இந்தியா சந்தித்துவருவதாகக் கூறுவது தவறு.<
மற்ற நாடுகளைவிட இந்தியா வளர்ச்சியை நோக்கித்தான் செல்கிறது. பொருளாதார வளர்ச்சியைப் பெருக்க துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். பொருளாதார சீர்திருத்தம் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கும். இந்த நடவடிக்கை இனி வரும் காலகட்டங்களிலும் தொடரும். பிரதமர் சொன்னதை மீண்டும் சொல்ல விரும்புகிறேன். செல்வத்தை உருவாக்குபவர்களை நாங்கள் மதிக்கிறோம். வரி கட்டுவதை எளிமையாக்கியுள்ளோம். ஒவ்வொரு துறையையும் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுசெல்ல வழி செய்யப்பட்டுவருகிறது. ஜிஎஸ்டி வரிவிகிதங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக