வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் பிரச்னையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்த்து கொள்ளவேண்டும் பிரெஞ்சு அதிபர் மக்கெயின்

காஷ்மீர் விவகாரத்தில் 3-வது நாடு தலையிடக்கூடாது: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்தினத்தந்தி : காஷ்மீர் விவகாரத்தில் 3-வது நாடு தலையிடக்கூடாது: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பாரீஸ். பிரதமர் மோடி, 2 நாள்கள் சுற்றுப்பயணமாக  பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு  நேற்று புறப்பட்டுச் சென்றார். சிறப்பு விமானம் மூலம் பாரீஸ் போய் சேர்ந்த பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
சாட்யூ டு சாண்ட்லி நகரில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது.  இரு தலைவர்களின் பேச்சு வார்த்தைக்கு பிறகு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தைக்கு கூட்டாக பத்திரிகையாளர்களை இரு தலைவர்களும் சந்தித்தனர். அப்போது, "காஷ்மீரில் அண்மையில் எடுக்கப்பட்ட   முடிவு பற்றி  பிரதமர் மோடி என்னிடம் விளக்கினார். காஷ்மீரில் எடுக்கப்பட்ட முடிவு இந்தியாவின் இறையாண்மையை காக்க எடுக்கப்பட்டதாகும்.
காஷ்மீர் பிரச்சினையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். 3-வது நாடு இந்த பிரச்சினையில் தலையிடக்கூடாது.

வன்முறையை தூண்டும் வகையிலும் பேசக்கூடாது. ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவ வேண்டும்.  மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்.  சில தினங்களில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் பேச இருக்கிறேன். அப்போது, காஷ்மீர் விவகாரத்தை இரு தரப்பும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த உள்ளேன்” என்றார்.  மேலும், இந்தியாவுக்கு முதல் ரபேல் போர் விமானம் அடுத்த மாதம் ஒப்படைக்கப்படும் என்றும் மேக்ரான் தெரிவித்தார். 

இதற்கு பிறகு பேசிய பிரதமர் மோடி,  இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையேயான நட்புறவு எந்த சுயநலத்தையும் அடிப்படையாக கொண்டது இல்லை. ஆனால், 'சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்' ஆகியவற்றின் அடிப்படையில்   அமைந்தது. 

இருநாடுகளும் பயங்கரவாதத்தை தொடர்ந்து எதிர்கொள்கின்றன. மதிப்பு மிக்க ஆதரவு அளித்தமைக்காக பிரான்ஸ் அதிபருக்கு எனது நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன். பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில்  ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நாங்கள் விரும்புகிறோம்” என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக