மென்மையான இலக்கை தாக்குதல் என்பது ஒரு பேட்டை ரவுடிகளின் தந்திரமாகும் .தங்களை ஒரு ரவுடியாக நிலை நிறுத்த அவர்கள் கையாளும் மிகப்பழமையான ஒரு தந்திரம் அது .
தமிழக அரசியலில் அது காலம் காலமாக நடைபெற்று வருவதுதான்.
ஈழப்பிரச்சனையிலும் தமிழகத்தில் அதுதான் நடந்தது .
எம்ஜியாரை தாக்கி பேசினால் ஆபத்து எப்படியும் வந்தே தீரும். குறைந்த பட்சம் ஜஸ்டின் ஜேப்பியார் போன்ற தொண்டர்கள் வீடு தேடி வந்து குண்டு கட்டாக தூக்கி கொண்டு போய் ராமாவரத்தில் நிறுத்துவார்கள் .. அங்கு புரட்சி தலைவரின் புரட்சி அரங்கேறும் .
ஜெயலலிதாவை கோபமூட்டினால் நடுராத்திரி சிறைவாசம் .. ஏன் அசிட் அபிசேகம் கூட நடக்கலாம்.
இவர்களின் காலத்தில் கலைஞர் பற்றி எந்த நாயும் பேயும் நாக்கில் நரம்பு கொஞ்சம் கூட இல்லாமல் கடிச்சு குதறலாம் .. அவர் மனதிற்குள் நொந்து கொள்வார் .பின்பு ஆட்சிக்கு வரும் சந்தர்பங்களில் கூட எந்த பழிவாங்குதல் நடவடிக்கையும் எடுக்க மாட்டார் . அது மட்டுமல்ல உதவி கேட்டுவந்தால் முடிந்ததை செய்வார் . கேட்காமலும் செய்வார் .
எனவே கலைஞரை எவ்வளவு மூர்க்கமாக் தாக்கினாலும் அதனால் எந்த பாதிப்பும் வந்துவிடாது ..
இந்த எண்ணம்தான் கலைஞரை ஒரு மென்மையான இலக்காக அவர்கள் கருதியமைக்கு காரணம் .
தமிழர்களில் இந்த soft target மென்மையான இலக்கை கண்டதும் மூர்க்கமாக தாக்கும் பழக்கம் அதிகமாக உண்டு.
இது போலியாக தங்களை உயர்த்தி கொள்ளும் கயமை மனோ நிலையாகும். இந்த கயமை வெறும் பேட்டை ரவுடிகளுக்கும் மட்டுமல்ல . படித்த பெரும் பெரும் பிரமுகர்களுக்கும் உண்டு..
கற்பனையான 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் போது முழுக்க முழுக்க ஆ.ராசாவையும் கனிமொழியையும் திமுகவையும் எவ்வளவு கேவலமாக தாக்கினார்கள்?
இதில் வேதனையான வேடிக்கை என்னவென்றால் இது பற்றி முழுக்க தெரிந்த மன்மோகன் சிங் . சிதம்பரம் போன்றவர்கள் கூட நியாயத்தின் பக்கம் நிற்கவில்லை.
அதற்காக அவர்கள் கொடுத்த விலை மிக அதிகம் ..
அந்த கட்டுகதை குற்றச்சாட்டு அவர்களை மட்டும் பாதிக்கவில்லை , முழு நாட்டையும் பாதித்து விட்டது.
பாஜகவின் கைகளில் நாடு சிக்கியதற்கு அதுவே முக்கிய காரணம் .
திமுகவுக்கு பாடம் கொடுக்க எண்ணி இன்று முழு நாடும் பாடம் படித்து கொண்டிருக்கிறது.
இது நடந்து முடிந்த கதை.
இன்று பா.சிதம்பரம் மீதான தாக்குதலும் இதுபோன்ற ஒரு விடயம்தான்.
இன்று ப.சிதம்பரம் ஒரு மென்மையான இலக்கு ..soft target !
அன்று திமுக மீதும் ஆ ராசா , கனிமொழி மீதும் கட்டி எழுப்பிய போலியான குற்றச்சாட்டுக்களுக்கு பின்னால் ஒரு கபட நோக்கம் இருந்தது.
இது பற்றி புரிந்தாலும் பலரும் அந்த போலியான குற்றச்சாட்டை நம்புவது போல நடித்து அதற்கு வலுவூட்டினார்கள் .
தமிழர்களின் சாபக்கேடு இதுதான் . காரணமே இல்லவிடினும் அல்லது வலுவான காரணங்கள் இல்லாவிடினும் ஒரு மென்மையான இலக்கை கண்டுகொண்டால் போதும் லட்டு உண்வது போல முழக்கமிட தொடங்கி விடுவார்கள்.
தர்மநியாயம் எல்லாம் பேசுவார்கள் . இல்லாத பொல்லாத பொய்யெல்லாம் பேசி தங்கள் மேதா விலாசத்தை பறை சாற்றுவார்கள் .
தங்களை மகா கொள்கையாளர்கள் போன்று காண்பிக்க இந்த சந்தர்ப்பத்தை முழுக்க முழுக்க பயன்படுத்துவார்கள் .
ஈழ விவகாரத்தில் சீமான் நெடுமாறன் வைகோ தமிழருவி மணியன் , தியாகு , ராமதாஸ் மற்றும் அத்தனை அதிமுக பாஜக தொண்டர் குண்டர் கமிஷன் ஏஜெண்டுகள் , எல்லாவற்றிலும் மேலாக பாட்டாளி வர்க்க சர்வாதிகார கம்யுனிஸ்டுகள் எல்லாரும் சேர்ந்து பாடிய கோரஸ் இருக்கிறதே .. என்று வாய்க்கும் இப்படிப்பட மென்மையான் இலக்கு என்று தங்களால் முடிந்த அளவுக்கு தங்களை புராஜெக்ட் பண்ணினார்கள் .
இவர்களின் சேவையால் தமிழகம் இன்று மீண்டும் எழுந்து வர முடியுமா என்ற சந்தேகம் வரக்கூடிய அளவு மோசமான பள்ளத்தில் விழுந்து கொண்டிருகிறது.
இதே கண்கொண்டுதான் திரு .ப.சிதம்பரத்தின் கைதையும் பார்க்கவேண்டும்.
இன்றய தேதியில் சிதம்பரம் தோற்றால் ..
இந்திய ஜனநாயகத்துக்கு ஈடு செய்ய முடியாத ஒரு வீழ்ச்சி ஆரம்பம் என்றுதான் கொள்ளவேண்டும்.
இன்று சிதம்பரத்தை நோக்கி வீசப்படும் கணைகள் பாஜகவுக்கு பேருதவி செய்யும் அம்புகள் என்றே கருதவேண்டும் .
பாஜகவின் இலக்கு காஷ்மீரும் சிதம்பரமும் மட்டுமல்ல .. இது தொடரும்.
எவராலும் தாங்கி கொள்ள முடியாத அளவு கொடூரமாக இருக்கும் .
இன்று முழு இரவும் அவரை விசாரிக்க போகிறர்களாம்.
அவரது வயது உடல் ஆரோக்கியம் எல்லாம் இவற்றை தாங்குமா? மிகவும் யோசிக்க படவேண்டிய விடயம் .
ஹிட்லர் இடி அமின் பொல்பொட் முசோலினி எல்லாம் ஒன்றாக சேர்ந்து வருகிறது..
அவற்றை விட மோசமான பாசிசம் இது . இந்த பாசிசம் ஆயிரமாண்டு அனுபவம் உள்ள இந்துத்வா பாசிசம் ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக