சனி, 24 ஆகஸ்ட், 2019

தமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்

கோவை ரெயில் நிலையத்தில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்தமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்மாலைமலர் : தமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சரவணம்பட்டி சோதனை சாவடி
கோவை: கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கொடுங்கலூர் மாடவானாவை சேர்ந்தவர் ரகீம் கொலியல்(வயது 40). இவர் வளைகுடா நாட்டில் சூப்பர்வைசராக வேலைபார்த்து வந்தார். இவர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயங்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறி என்.ஐ.ஏ.வால் தேடும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தானை சேர்ந்த இலியாஸ் அன்வர் மற்றும் இலங்கையை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 6 பயங்கரவாதிகள் தமிழகத்துக்குள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்துக்குள் ஊருடுவிய 6 பயங்கரவாதிகளுக்கு என்.ஐ.ஏ.வால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ரகீம் கொலியல் அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து உளவுப்பிரிவு போலீசார் ரகீமின் படத்தை வைத்து அவர் திருட்டுத்தனமாக வளைகுடா நாட்டில் இருந்து தப்பி வந்து கேரளா, தமிழகத்தில் பதுங்கி இருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவர் கைது செய்யப்பட்டால் தமிழகத்தில் தாக்குதல் நடத்த வந்த பயங்கரவாதிகள் யார், எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும் என போலீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக