சனி, 24 ஆகஸ்ட், 2019

இம்ரான் கான் : தென் இந்தியாவில் தீவிரவாதிகள் புகுந்ததாக செய்திகள் வருது.. பெரிய சதி

tamil.oneindia.com : . இஸ்லாமாபாத்: ஜம்மு-காஷ்மீருக்கு 370 வது சட்டப் பிரிவில் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்க இந்திய அரசு முடிவு செய்ததிலிருந்து, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பல மூவ்களை எடுத்து வைத்து வருகிறது. 
இப்போது இந்தியாதான், தீவிரவாதிகள் பெயரை சொல்லி, பாகிஸ்தானுக்கு எதிராக சூழ்ச்சி செய்வதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டிவிட்டரில் குமுறியுள்ளார். 
இம்ரான்கான் இன்று மதியம் வெளியிட்ட சில ட்வீட்டுகள், தற்போது இந்தியாவில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை எடுக்கப்படுவது தொடர்பானதாக உள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் தாக்குதல் எச்சரிக்கை வந்துள்ளதாக காவல்துறையும் உறுதி செய்துள்ளது. 
தென் மாநிலங்கள் இதுதொடர்பாக இம்ரான் கான் வெளியிட்ட ட்வீட்டில் கூறியுள்ளதாவது: ஆப்கானிஸ்தானில் இருந்து சில தீவிரவாதிகள், பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக காஷ்மீருக்குள் நுழைந்ததாகவும், மற்றவர்கள் இந்தியாவின் தெற்கு பிராந்தியங்களுக்குள் நுழைந்ததாகவும் இந்திய ஊடகங்கள் கூறுவதாக நாங்கள் கேள்விப்படுகிறோம். இந்த செய்திகள் இந்தியாவின் இன அழிப்பு மற்றும் இனப்படுகொலை திட்டத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பும் தந்திரம்.
எச்சரிக்கை ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதிலிருந்தும், மனித உரிமை மீறல்களில் இருந்து கவனத்தை திசை திருப்பவும் இந்தியத் தலைமை ஒரு தவறான நடவடிக்கைக்கு முயற்சிக்கும் என்று சர்வதேச சமூகத்தை எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 
 இம்ரான் கான் இந்தியா பற்றி இவ்வாறு எச்சரிக்கைவிடுப்பதாக கருத்து கூறுவது இது முதல் முறை கிடையாது. பாலகோட் பகுதியில் தீவிரவாதிகள் முகாமை இந்தியா தாக்கிய பிறகு, மீண்டும், தேர்தலுக்கு முன்பாக அப்படி ஒரு தாக்குதலை இந்தியா நடத்தும். தேர்தல் மைலேஜ் கிடைக்க மோடி விரும்புவார் என இம்ரான்கான் தெரிவித்தார். 
ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. 
இந்த நிலையில், தென் மாநிலங்களில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக, வெளியாகியுள்ள எச்சரிக்கையை, போலியான செய்தி என இப்போது இம்ரான்கான் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து ஹேசியம் கூறுவது இம்ரான்கானின் வழக்கமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக